Published:Updated:

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

Published:Updated:
இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

து மிகப்பெரிய தொழில் நிறுவனம். முன்தினம் தொழில்நுட்பக் கோளாரினால் உற்பத்தி ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பேசவே அடுத்த நாள் அலுவலகத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலதிகாரி பிரச்னையின் காரணம் கேட்டார். ஒவ்வொருவரும் இன்னொருவரைக் கைகாட்டினார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “நான் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்” என்றவர், சொல்ல ஆரம்பித்தார்.

“காலை வேளையில் இரண்டு சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரின் கைகளிலும் வாழைப்பழம் வைத்திருந்தனர். யார் வாழைப்பழத் தோலினை  அதிகத் தொலைவு வீசுவது என்று இருவருக்கும் போட்டி. இருவரும் மாற்றி மாற்றி வீசிவிட்டுச் சென்றார்கள்.

ஒரு முதியவர், அந்தச் சிறுவர்களிடம், ‘தோலை ரோட்டுல போட்டுட்டு போறீங்களே... குப்பைத்தொட்டியில போடலாமில்ல’ என்றார்.  ‘அக்கறை இருந்தா நீயே எடுத்துப் போடு தாத்தா’ என்றனர் சிறுவர்கள். 

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த முதியவருக்குக் கோபம் அதிகமாகியது.   தன் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காத காரணத்தால், அவர் அந்த வாழைப்பழத் தோலினை, தன் காலால்  எத்திவிட்டுச் சென்றார். அந்தத் தோல் அவருக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகில் சென்று விழுந்தது. அந்தப் பெண் சட்டென்று ஒரு கணம் பயந்து, பின்பு திரும்பிப் பார்த்தாள். அந்த முதியவர் எதுவும் நடக்காததுபோல் வந்து கொண்டிருந்தார். அருகில் வந்ததும், ‘ஐயா, இந்தமாதிரி வாழப்பழத் தோலை நடுரோட்டுல போடுறீங்களே... யாராவது வழுக்கி விழுந்தா என்னாகும்’ என்றாள்.

‘நடந்தது என்னன்னு தெரியாம பேசாதம்மா... வேணுமுன்னா நீ எடுத்துக் குப்பைத்தொட்டியில போட்டுக்க...’ என்று கூறிவிட்டு  நகர்ந்தார்.

அந்தப் பெண்ணிற்குக் கோபம் வந்துவிட்டது. ‘இவரு போட்டதை நான் எடுத்துப் போடணுமாம்’ என்று சொல்லிவிட்டு, அந்த வாழைப்பழத் தோலை மிதித்துக் கோபத்தை வெளிப்படுத்தினாள்.

அவ்வழியாக வந்த இளைஞன் செல்போனில் பேசிக்கொண்டே,  வாழைப்பழத் தோலின்மீது காலை வைக்கவும் வழுக்கிவிட, பின்பு சுதாரித்து நின்றான். ‘எவன் இதை இங்கே போட்டது’ என்று திட்டிக்கொண்டே நகர்ந்து விட்டான்.

அவருக்குப் பின்னால் கண் தெரியாத மாற்றுத் திறனாளி ஒருவர்,  தடியைத்  தட்டிக்கொண்டே வந்தார். தடி அந்தத் தோலின்மீது பட்டு கொஞ்சம் தடுமாறினார்.  கீழே குனிந்து அது என்னவென்று தடவினார். அது வாழைப்பழத் தோல் என உணர்ந்ததும், ‘யாரோ வாழைப்பழத் தோலை இங்கே போட்டு வச்சிருக்காங்களே... இந்த வழியில எத்தனை ஸ்கூல் பசங்க போவாங்க... வயசானவங்க வாக்கிங் போவாங்க... எத்தனை பேர் வேலைக்கு அவசரமாப் போவாங்க. யாராவது இதை மிதிச்சு கீழே விழுந்துட்டா...’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டவர், அதனை எடுத்து அருகில் வந்த நபரிடம் குப்பைத் தொட்டி எங்குள்ளது எனக் கேட்டு, அதில் போட்டுவிட்டுச் சென்றார்” என்ற உயரதிகாரி, மேற்சொன்ன சம்பவத்தில் தவறு யார்மீது..? என்றார்.

“முதலில் தோலினைத் தூக்கியெறிந்த பையன்கள்மீதா,  அதற்கடுத்து வந்த முதியவர்மீதா அல்லது அவருக்கடுத்து வந்த அப்பெண்ணின்மீதா அல்லது அதற்கடுத்து வந்த இளைஞனின் மீதா...?” என்று கேட்டார்.

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!


உடனே அனைவரும் “அந்த பையன்கள் மீதுதான்” என்றார்கள்.

அதற்கு அந்த உயர் அதிகாரி, “அப்ப அந்த முதியவர்மீது தப்பில்லையா? சின்னப் பையன்கள் போட்டார்கள். இவர் அட்வைஸ் பண்ணியும், அவர்கள் அதைக் கேட்கவில்லை. அதற்காக அவர் அப்படிப் பண்ணலாமா? அவராவது எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாமே” என்று கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டவுடன், “ஆமாம், இவராவது எடுத்துப் போட்டிருக்கலாம்” என்றனர். ஆனால், ஒரு சிலர் அதெப்படி... அந்த பசங்க போட்டாதை இவரு எடுத்துப்போட முடியுமா..? அந்த பசங்க மேலதான் தப்பு” என்றனர்.

உடனே அந்த உயர் அதிகாரி, “சரி, அந்தப் பையன்கள் மீதும், முதியவர் மீதும்தான் தவறு உள்ளதா..? அந்தப் பெண்மீது  தப்பில்லையா..?” என்று கேட்டார்.

அதற்கு சிலர், “அந்த பொண்ணு மேல என்ன தப்பு..?” என்றனர். சிலர் தப்பில்லை என்றனர். சிலர் என்ன சொல்வதென விழித்தனர். சிலர் “அவளோட தப்பு முழுமையானது இல்லைன்னாலும், அவள் செஞ்சதும் தப்புதான் என்றனர்.

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

“அப்படியானால் அந்த இளைஞன்...” என்று கேட்டார் உயரதிகாரி. “அவன் என்ன செய்வான்... அவன்மீது எந்தத் தவறும் இல்லை” என்றனர்.

அந்த உயர் அதிகாரி பதில் தரத் தொடங்கினார். “நான் இவர்கள் நால்வரில் ஒருவர்மீது மட்டும்தான் தப்பு என்று சொல்லமாட்டேன். ஏனென்றால், இவர்கள் அனைவரின் மீதும் தவறு உள்ளது. அந்தச் சிறுவர்கள் முதியவர் எடுத்துச்சொன்ன பின்பும் குப்பைத் தொட்டியில் போடவில்லை. சரியென்று, இவர் எடுத்துப் போட்டுவிட்டு, பிறகு கூட அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். அல்லது அந்தப் பெண்ணாவது, எடுத்துப் போட்டிருக்கலாம். அதுவும் இல்லை. அடுத்து வந்த இளைஞன் எடுத்துப் போட்டிருக்கலாம். அவனும் செய்யவில்லை. இப்போது சொல்லுங்கள். தவறு யார் மீது..?” என்று கேட்டார்.

அனைவரும், “ஆம், அனைவரின் மீதும் தவறு இருக்கிறது” என்று சொன்னார்கள்.

“இதேபோலத்தான் நம் தொழிற்சாலையிலும் ஒருவர் தவறு செய்கிறார் என்றால், அந்தத் தவறினைச் சரி செய்யுங்கள். பிறகு தவறு செய்தவருக்கு அதை எடுத்துச்சொல்லிப் புரிய வையுங்கள். அந்தத் தவறு மீண்டும் ஏற்படாது” என்றார்.

இன்று எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் விஷயம் இதுதான். நடந்த விஷயம் கெட்டதாக இருந்தால், அதற்கு நான் காரணம் இல்லை; அடுத்தவர்கள்தான் என்று எப்போதும்  நாம் அனைவருமே அடுத்தவர்களைச் சுட்டிக் காட்டுகிறோம்.

நீங்கள் உங்கள் ஆள்காட்டி விரலை நீதான் என்று நீட்டும்போது, மீதம் மூன்று விரல்கள் உங்களை நோக்கி இருக்கிறது; கட்டைவிரல் மேலே நடுநிலையாக இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு செயல் நடைபெறுவதற்கு முன்பு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால், அந்தச் செயல் நடந்து முடிந்தபிறகு அதற்கான தீர்வை மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும்.

தவறு என்பது தெரியாமல் தவறிச் செய்வது. தப்பு என்பது தெரியாமல் செய்த தவறினை திருத்திக்கொள்ளாமல் தெரிந்தே திரும்பச் செய்வது. ஆதலால், தவறுதல் தப்பில்லை. ஆனால், தப்பு தப்புதான். தவறுகளைத் திருத்தி, தப்புகளைத் தவிர்த்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

(காலம் வெல்லும்)

படங்கள் : ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

“அம்மா தாயி, என்னோட ஆதார் கார்டை செக் பண்ணிட்டு பிச்சை போடுங்க!”

“பிச்சையெடுக்கக்கூட ஆதார் கார்டா?!”

“இல்லைன்னா திருடன்னு நினைச்சுடுறாங்க தாயி!”

-தெ.சு.கவுதமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism