Published:Updated:

ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

“மாலையில் முக்கியமான மீட்டிங் இருக்கு.  கேள்விகளை போனிலேயே கேளுங்கள்” என ஷேர்லக் மதியமே தகவல் அனுப்ப, நாம் கேள்விகளைத் தயார் செய்துவிட்டு அவருக்கு போன் செய்தோம்.

என்.எஸ்.இ-யில் நிபந்தனை வர்த்தகத்துக்குள் பல பங்குகள் வந்திருக்கின்றவே?

என்.எஸ்.இ, 15 பங்குகளை நிபந்தனை வர்த்தகத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த பங்குகளின் விலை ஒரு நாளில் அதிகபட்சம் 5 சதவிகிதம்தான் ஏற்றம் காணவோ, இறக்கம் காணவோ அனுமதிக்கப்படும். ஆதித்ய பிர்லா மணி, பர்ன்பூர் சிமென்ட், கேன்டபில் ரீடெயில் இந்தியா, தரணி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ், டி-லிங் (இந்தியா), சூப்பர் ஸ்பின்னிங் மில்ஸ், ஷில்பி கேபிள்ஸ், டன்லா சொல்யூஷன்ஸ் மற்றும் டெரா சாஃப்ட்வேர் போன்றவை குறிப்பிடத்தக்கப் பங்குகளாகும்.

இதேபோல், 5 நிறுவனங்களின் பங்குகளின் ‘சர்க்கியூட் லிமிட்’டை பி.எஸ்.இ மாற்றி அமைத்துள்ளது. ரெஸ்பான்ஸிவ் இண்டஸ்ட்ரீஸ் (10%), சுமீத் இண்டஸ்ட்ரீஸ் (5%), எஸ்கார்ட்ஸ் ஃபைனான்ஸ்(2%), அல்லையன்ஸ் இன்ட கிரேட்டட் மெட்டாலிக்ஸ் (2%) மற்றும் எஸ்.சி அக்ரோடெக் (2%) ஆகிய நிறுவனங்களின்  ‘சர்க்கியூட் லிமிட்’  மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஷேர்லக்: கடன் சுமையில் கம்பெனிகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

அதிக கடன்களைக்கொண்ட நிறுவனங்களின் பங்கு விலை அதிக இறக்கத்தைச் சந்தித்துள்ளனவே?

2018-ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதக் காலத்தில் என்.எஸ்.இ 500 நிறுவனங்களில் சுமார் 375 நிறுவனப் பங்குகளின் விலை இறக்கம் கண்டுள்ளன. இதில் 80 நிறுவனங்களின் பங்கு விலை 20 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சிக் கண்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அதிக கடன் சுமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, பாம்பே ரேயான் ஃபேஷன்ஸ், வக்ராங்கி, ஜெயபிரகாஷ் பவர், ஜே.பி.எஃப் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளின் விலை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சிக் கண்டுள்ளன. குவாலிட்டி, பல்ராம்பூர் சினி மில்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், ரிலையன்ஸ் நேவல், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி ஆகிய பங்கிகளின் விலை 40 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்துள்ளன. சிறு முதலீட்டாளர்கள் அதிக கடன் கொண்டுள்ள கம்பெனி பங்குகளில் மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.

டிஷ் டிவி பங்குகள் ஒரேநாளில் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதே?

டிஷ் டிவி நிறுவனத்தின் புரமோட்டர்கள் பொது மக்களிடமிருந்து 50.01 கோடி பங்குகளை ரூ.3,701 கோடி கொடுத்து வாங்குகிறது. இது நிறுவனத்தின் 26% பங்குகளாகும். பங்கை வாங்கும் விலை ரூ.74 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வியாழக்கிழமை நிலவரப்படி, சந்தை விலையை விட சுமார் 3 சதவிகிதம் குறைவாகும். அன்றைய தினம் பங்கின் விலை 8.13% உயர்ந்து ரூ.79.8-ஆக அதிகரித்தது. ஆனால், வெள்ளிக்கிழமை பங்கின் விலை இறக்கம் காண ஆரம்பித்தது. 

ரஷ்ய நிறுவனமான ருஷல், அமெரிக்காவின் தடை விதிப்புக்கு உள்ளாகி இருக்கிறதே?

ரஷ்யாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலுமினியம் தயாரிப்பு நிறுவனமான ருஷல் (RUSAL) நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் தடை  நீடித்து சப்ளை பாதிக்கப்பட்டால், இந்தியாவைச் சேர்ந்த ஹிண்டால்கோ, நால்கோ மற்றும் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் பயனடையும்.

இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவு எப்படி?


அனலிஸ்ட்கள் எதிர்பார்த்ததை ஒட்டியே, மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் சேவைகள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸின் நிதி நிலை முடிவுகள் அமைந்துள்ளன. நிகர லாபம் 2.4%, வருமானம் 5.6% அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக்ஸிஸ் வங்கியை, கோட்டக்  மஹிந்திரா வங்கி வாங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதுபோல் தெரிகிறதே?

ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஷிக்கா சர்மாவுக்கு நான்காவது முறையாகப் பதவி நீட்டிப்பு செய்தது குறித்து அதிருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி, அவரது  பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்காமல் கால தாமதப்படுத்தி வந்தது. இந்த நிலையில், டிசம்பருடன் ஷிக்கா சர்மா பதவி விலக உள்ளார். இந்தச் சூழலைப் பயன்டுத்திக்கொண்டு, அந்த வங்கியை வாங்கும் முயற்சியில் கோட்டக் மஹிந்திரா வங்கி முயற்சி மேற்கொள்ளலாம் எனப் பங்கு தரகு நிறுவனமான நோமுரா குறிப்பிட்டுள்ளது.  இந்த வங்கிகள் இணையும்பட்சத்தில் அதுதான் இந்தியாவின் மிக அதிகமான, கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய தனியார் வங்கியாக உருவெடுக்கும்.

சென்செக்ஸ், நிஃப்டி இலக்கு குறைக்கப் பட்டுள்ளதே?


சிட்டி குரூப் மற்றும் சி.எல்.எஸ்.ஏ நிறுவனங்கள்,  2018-ம் ஆண்டுக்கான தங்களது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகளின் இலக்குகளைக் குறைத்துள்ளன. சிட்டி குரூப், இந்த ஆண்டு டிசம்பருக்கான  சென்செக்ஸ் இலக்கை, அதன் முந்தைய இலக்கான 36900 புள்ளி களிலிருந்து 35700 புள்ளிகளாகக் குறைத்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு 2018-ம் ஆண்டு இன்னொரு  ஏற்ற இறக்கம் கொண்ட ஆண்டாகவே இருக்கலாம் என்று சிட்டி குரூப் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் நிஃப்டி 11400 புள்ளிகளைத் தொடும் என்று கூறியிருந்த சி.எல்.எஸ்.ஏ, அந்த இலக்கைக் குறைத்து  நிஃப்டி 11000  புள்ளிகளைத் தாண்டாது எனக் கூறியிருக்கிறது. இந்தியச் சந்தைகளுக்கு வரும் முதலீடு குறையலாம் என்கிற கணிப்பில் இந்த மதிப்பீடு குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

பணப்புழக்கம் சுருங்குவதால், 2018-ம் ஆண்டின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 33500 மற்றும் 10700 புள்ளிகள் என்ற  நிலைமைக்குச் செல்லலாம் என்று ‘எம்.கே குளோபல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்’ என்ற நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது” என்றவர், “அடுத்த வாரம்  காலாண்டு முடிவுகளுக்கேற்பவே சந்தையின் போக்கு இருக்கும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் பங்குகள்: முதல் நாளில் 28% உயர்வு!

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், அதன்  வெளியீட்டு விலையான  56 ரூபாயைக் காட்டிலும்  10 சதவிகிதம் கூடுதலாக 61.60 ரூபாய் என்ற விலையில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், வர்த்தக முடிவில் அதன் விலை 28% அதிகரித்து, 71.60 ரூபாயாகக் காணப்பட்டது. மிரே அஸெட் ஏசியா நிறுவனம், லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்  நிறுவனத்தின்  51.5 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்றின் விலை ரூ.65.61 என்ற விலைக்கு மொத்தமாக வாங்கியது. டி.பி இன்டர்நேஷனல்  ஏசியா நிறுவனம், இந்த நிறுவனத்தின் 44.6 லட்சம் பங்கு களை, பங்கு விலை ரூ.62.07 என்ற விலைக்கு விற்றது. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், பாரத் டைனமிக்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஆகியவற்றின் பங்குகள், பங்குச் சந்தையில் சமீபத்தில் பட்டியலிடப்பட்டபோது அவற்றின் வெளியீட்டு விலையைவிடக் குறைவான விலையிலேயே பட்டியலிடப்பட்டன. இதற்கு மாறாக லெமன் ட்ரீ  ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், நல்ல விலைக்கு வர்த்தகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism