Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்த வாரம், இந்தியப் பங்குச் சந்தையில் நிலையான போக்கு காணப்பட்டதால் பெரும்பாலான டிரேடர்கள் பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், இது முதலீட்டாளர்களும் சந்தைக்குத் திரும்ப உதவிகரமாக அமைந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இந்த வாரத்தின் அனைத்து வர்த்தக நாள்களிலும் சந்தை உயர்ந்தே காணப்பட்டதைப் பார்த்தோம். இதனால், கேண்டில் சார்ட்டில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஏற்றமான போக்கைக் கொண்டிருக்கிறோம். நிஃப்டி, தனது லெவல்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. வார இறுதியில் நிஃப்டி  10480 என்ற புள்ளிகளில் நிலை பெற்றது. பேங்க் நிஃப்டி 25000 புள்ளிகளுக்கு மேலே தக்க வைத்துக்கொண்டது. மேலும், சர்வதேச அளவில், குறிப்பாக அமெரிக்கா  - சீனா இடையேயான வர்த்தக போர் காரணமாக வெளிப்பட்ட சீற்றங்களையெல்லாம் நமது பங்குச் சந்தை இந்த வாரம் கண்டுகொள்ளவில்லை. சர்வதேச நிகழ்வுகளினால் சந்தையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறையத் தொடங்கியுள்ளதோடு, சந்தை உள்ளூர் நிகழ்வுகளின்மீது குறிப்பாக நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள்மீது கவனத்தைத் திருப்பத் தயாராகிவிட்டதையும் காண முடிகிறது.

வரும் வாரத்திலிருந்து சந்தையில் சம்பாதிப்பதற்கான நல்ல வியாபார தருணங்கள் தொடங்கத் தயாராக உள்ளன. இந்தப் போக்குகள் ஏற்கெனவே ஓரளவு தொடங்கிவிட்டபோதிலும், சமீப நாள்களில் சந்தையில் நிலவிய அதிக ஏற்ற இறக்கப் போக்கைச் சமாளிக்க முடியாமல் டிரேடர்கள் தங்களது வியாபாரத்தைக் குறைவாக வைத்துக்கொண்டதால், சந்தை மீதான சாதகமான கண்ணோட்டம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. இது பங்குகளின் விலையில் நல்ல விதமாகவோ அல்லது மோசமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, முக்கியமான பங்குகளின் விலையைப் பார்த்து நாம் பெரிய அளவில் பதில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தைக் குறியீடுகள் சில குறுகிய கால ‘டார்கெட் ஷோன்’களை  நெருங்கி உள்ளதால், நிறுவனங்களின் செய்திகள் மற்றும் அறிவிப்புகள்தான் அதன் போக்கைத் தீர்மானிக்கும். அந்த வகையில், ஒட்டுமொத்தக் குறியீட்டின் போக்கைக் கவனிப்பதற்குப் பதில் தனிப்பட்ட பங்குகளின் விலைப் போக்கைக் கவனிக்க வேண்டும்.

லார்ஜ் கேப் பங்குகள் நல்ல முறையில் செயல்படுவதால் அது, நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்க உதவக்கூடும். ஆனால், இண்டெக்ஸில் இடம்பெறாத நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், ஒரு நல்ல சந்தையை நாம் பார்க்க முடியும். ஆனால், அப்போது இண்டெக்ஸ் ஆதாயங்கள் குறிப்பிட்ட அளவே இருக்கும். ஐ.டி இண்டெக்ஸ், நல்ல விலைக்கான குறியீட்டைக் காட்டுகிறது. எனவே, இப்போதைக்கு நிஃப்டி புள்ளிகளின் உயர்வு எதிர்பார்ப்பை 10300 என்ற வரம்புக்குள் நாம் வைத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சுதர்ஸன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (SUDARSHAN CHEM)

தற்போதைய விலை: ரூ.508.90

வாங்கலாம்

சந்தையின் முன்னணி முதலீட்டாளர் களால் விரும்பி வாங்கப்படுகிற இந்த ரசாயன நிறுவனப் பங்கு, அண்மையில்  ரூ.475 என்கிற விலையில் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்பட்டது. கடந்த வாரம் இந்தப் பங்கின் விலை, இந்த விலையைத் தாண்டி ஏற்றம் கண்டது. தற்போது பங்கின் விலை உயர்வதற்கான ஒரு நல்ல ஆதரவான நிலையை உருவாக்கி உள்ளது. இந்த ஏற்றம் நீடித்து இந்தப் பங்கின் விலை     ரூ.575 வரை உயரக்கூடும். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.490 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜிண்டால் ஸா ( JINDAL SAW )

தற்போதைய விலை ரூ.131.45

வாங்கலாம்

கடந்த வாரம் பைப் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. அவற்றில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளின் விலை, மீண்டு வருவதற்கான தொடக்கமாக அமைந்தது. குறிப்பிட்ட விலை வரம்புக்குள்ளேயே வர்த்தகமான ஜிண்டால் ஸா பங்கு விலை, அந்தப் போக்கிலிருந்து வெளியேறி மீண்டு வருவதற்கான ஒரு முயற்சி இப்போது காணப்படுகிறது. ஜிண்டால் ஸா பங்குக்கு நல்ல ஆதரவான போக்கு காணப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். அதன் விலை ரூ.155 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.120 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிராவிட்டா இந்தியா  (GRAVITA)

தற்போதைய விலை ரூ.182.30

வாங்கலாம்

நல்ல மிட்கேப் பங்குகள் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் படிப்படியாக வாங்கப்பட்டு வருகின்றன. அவற்றில், ஒன்றாக கிராவிட்டா  நிறுவனப் பங்கு உள்ளது. இந்த நிறுவனத்தின் அடிப்படை மேம்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பங்கின்மீது அதிக முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மூன்று மாதங்களாகச் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட இந்தப் பங்கின் விலை மீண்டும் ஏற்றமான போக்கை நோக்கிச் செல்லத் தயாராக உள்ளது. அதன் முந்தைய உச்சமான ரூ.190-க்கு நெருக்கமான விலையை மீண்டும் தொடுவதற்கான அறிகுறி தெரிகிறது. சில சின்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எளிதில் புதிய விலை உயர்வை அடைய வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.174 வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை குறுகிய காலத்தில் புதிய இலக்கான ரூ.200-ஐ எட்டக்கூடும்.

தொகுப்பு: பா.முகிலன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism