Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் மினி

தங்கம், தொடர்ந்து பல மாதங்களாக ஒரு பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்ததைப் பார்த்தோம்.  ஆனாலும்,  இந்த முறை தடையை உடைத்து ஏற முயற்சி செய்துள்ளது. ஆனால், அந்த ஏற்றத்தை நிலைநிறுத்த முடியவில்லை.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


கடந்த இதழில் சொன்னது... “தங்கம் ஓர் இறக்கத்திற்கு மாறிய நிலையில், தற்போதைய உடனடி ஆதரவான 30400-ஐ தக்கவைக்குமா என்று பார்க்கவேண்டும். இந்த ஆதரவு தக்க வைக்கப்பட்டால், காளைகள் மீண்டும் மேலே திருப்புவார்கள். அது 30800-ஐ நோக்கி நகரும்.’’

தங்கம் கடந்த வாரங்களில், கீழே 30400-ஐ ஆதரவாகவும், மேலே 30800-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வந்தது.  சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று கீழ் எல்லையான 30400-ல் இருந்து எழ ஆரம்பித்தது.   இந்த ஏற்றம் தங்கத்தை 30675 வரை கொண்டு சென்றது. அடுத்து புதனன்று தங்கம் மிக மிக வலிமையான ஏற்றத்தைக் காட்டி முந்தைய தடைநிலையான 30800-ஐ உடைத்து ஏறியது.  பலநாள்களின் தடைநிலையான 30800-ஐ உடைத்தவுடன், மிக அதிக வேகமெடுத்து ஏறி, 31422 என்ற உச்சத்தைத் தொட்டு, பின் இறங்கி 31226-ல் முடிவடைந்தது. அடுத்து வியாழனன்று இந்த ஏற்றத்தைத் தக்கவைக்க முடியாமல் இறங்க ஆரம்பித்தது. மீண்டும் ஒரு தேக்கநிலை வந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் வலிமையாக ஏறி, பின் அதே வலிமையுடன் இறங்க ஆரம்பித்தாலும், முந்தைய தடையான 30800-ஐ உடைத்து ஏறிய நிலையில், தற்போது அதுவே ஆதரவு நிலையாக உள்ளது. இது உடைக்கப்பட்டால் வலிமையான இறக்கம் நிகழலாம். மேலே 30150 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி மினி

வெள்ளி இந்த முறை, தங்கத்தைப் போலவே ஏறினாலும், தங்கத்தைவிட சற்றே வலிமையாக ஏற ஆரம்பித்தது. பின் தங்கத்தைபோலவே இறங்கி உள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “வெள்ளியின் இறக்கம் தொடர்ந்தால், அடுத்த மிக முக்கிய ஆதரவான 38000-ஐ சோதிக்கலாம். அது உடைக்கப்பட்டால் கடும் வீழ்ச்சி வரலாம்.  மேலே 38700 என்பது உடனடித் தடைநிலை, அடுத்து 39200 வலிமையான தடைநிலை ஆகும்.’’

தங்கம் கடந்தவாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று மிதமான ஏற்றத்தில் இருந்தபோது, வெள்ளி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக் கொண்டு இருந்தது. முந்தைய தடைநிலையான 38700-ஐயும் உடைத்தது.

அடுத்த நாள் புதனன்று, தங்கம் காட்டிய வலிமையான ஏற்றத்தைப் போலவே, வெள்ளியும் 38700-ஐ உடைத்து ஏற ஆரம்பித்தவுடன் அதிக வேகமெடுத்து ஏற ஆரம்பித்தது.  இந்த ஏற்றமானது உச்சமாக 39478-ஐ தொட்டு, அதன் பின் அதைத் தக்கவைக்க முடியாமல் 39201-ல் முடிந்துள்ளது. வியாழனன்று கணிசமாக இறங்கி, முந்தைய தடை நிலையான 38700-க்கு அருகே முடிந்துள்ளது.  தற்போது இந்த புள்ளியைத்தான் வெள்ளி சோதித்து வருகிறது.

இனி என்ன நடக்கலாம்? தற்போது 38550 என்ற புள்ளியில் ஆதரவு எடுக்க முயற்சி செய்கிறது.  இது உடைக்கப்பட்டால் இறக்கம் கடுமையானதாக இருக்கலாம். மேலே 38950 என்பது உடனடித் தடைநிலையாகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் மினி

கச்சா எண்ணெயை, விலை உயர்ந்த பிளாக் மெட்டல் என்றும் சொல்வர். அதனால்தான் என்னவோ, தங்கமும் வெள்ளியும் ஏறிய அன்று அந்த வேகத்திற்கு இணையாக கச்சா எண்ணெயும் ஏறியது.

சென்ற இதழில் சொன்னது... “வரும் வாரத்தில் தற்போதைய ஆதரவான 4111 என்ற எல்லையைத் தக்கவைத்து ஏறுமா அல்லது உடைத்து வலிமையாக இறங்குமா என்று பார்க்கவேண்டும்.”

கச்சா எண்ணெய்,  4111 என்ற எல்லைக்குச் சற்றே கீழே இறங்கி சுமார் 4000 என்ற எல்லையில் ஆதரவு எடுத்து, பின் மிக வலிமையான ஏற்றத்திற்குத் தாவியது. 

கடந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என்று தொடர்ந்து புதிய புதிய உச்சங்களைத் தோற்றுவித்து, அதிகபட்சமாக 4395-ஐ தொட்டது.   அதன் பின் இரண்டு நாளும் இந்த உச்சத்தைத் தாண்ட முயன்று, திணறிக்கொண்டு இருக்கிறது.

இனி என்ன நடக்கலாம்? இப்போதைக்கு 4290 என்ற எல்லை ஆதரவாக உள்ளது. உடைத்தால் நன்கு இறங்கலாம். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: https://bit.ly/2HzZFPO

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism