Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

அவந்தி ஃபீட்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: AVANTIFEED)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி டிராக்கிங்

அவந்தி ஃபீட்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: AVANTIFEED)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்
கம்பெனி டிராக்கிங்

விசாகப்பட்டினத்தைப் பதிவு அலுவலக மாகவும், ஹைதராபாத்தைத் தலைமையகமாகவும் கொண்டு செயல்படும் நிறுவனம் அவந்தி ஃபீட்ஸ் லிமிடெட்.  1993-ம் ஆண்டு தாய்வானைச் சேர்ந்த பின்டகி என்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்துடன் கூடிய தொழில்நுட்ப ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

கம்பெனி டிராக்கிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


அவந்தி நிறுவனம் தாய்லாந்தைச் சேர்ந்த  உலக அளவில் மிகப்பெரிய மீன்களுக்கான தீவனம் தயாரிப்பு, இறால் வளர்ப்பு, கடல்சார் உணவினைப் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தாய் யூனியன் ப்ரோசன் புராடக்ட்ஸ் பிஎல்சி எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தாய் ஃபீட்ஸ், அவந்தி நிறுவனத்தில் பங்குகள் வைத்திருத்தல், தொழில்நுட்பக் கூட்டணி மற்றும் மார்க்கெட்டிங்கிற்கான உத்திகளைத் தருதல் போன்ற பல விஷயங்களிலும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் இறால் மற்றும் மீன்களுக்கான தீவனங்கள் தயாரிப்பதற்காக நான்கு உற்பத்தி வசதிகளை தன்வசத்தே கொண்டுள்ளது.  ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் கொவ்வூர், வேமுலூரு, பந்தாபுரம் போன்ற இடங்களில் தலா ஒன்றும்,  குஜராத்தில் வல்சத் மாவட்டத்தில் இருக்கும் பார்டி எனும் இடத்தில் ஒன்றுமாக நான்கு உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது. இந்த நான்கு உற்பத்தி மையங்கள் மூலம் சுமார் நான்கு லட்சம் மெட்ரிக் டன் அளவிலான இறால் மற்றும் மீன் களுக்கான தீவனத்தை உற்பத்தி செய்கிறது.

கம்பெனி டிராக்கிங்

இறால் பண்ணைகளில் உற்பத்தியாகும் இறால்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் கோபாலபுரம் எனும் இடத்தில் தனிப்பட்ட பதப்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் வசதிகள் மேலைநாட்டு உணவு உற்பத்தி அங்கீகாரங்களான  ஹெச்.ஏ.சி.சி.பி,  அமெரிக்க எஃப்.டி.ஏ, ஐரோப்பிய  யூனியன் அரசாங்கத்தின் அங்கீகாரங்கள், பி.ஆர்.சி குளோபல் ஸ்டாண்டர்டு போன்ற நிறுவன அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், மீன் வளர்ப்பு முறைகளில் சிறந்ததொரு தரச் சான்றிதழான அமெரிக்க அக்வா கல்ச்சர் கவுன்சிலிடமிருந்து மீன்வளர்ப்பு தரத்திற்கான சான்றிதழையும் பெற்றுள்ளது. 

தலைசிறந்த தொழில்நுட்பம், தரம் குறித்த சீரிய உணர்வு நிலை, வெகுசிறப்பான சேமிப்புக் கிடங்கு வசதிகள், தயாரித்த பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசெல்ல சிறப்பான லாஜிஸ்டிக்ஸ் திட்டங்கள், குறித்த காலத்தில் பொருள்களைக் கொண்டுசேர்ப்பதில் இருக்கும் சிறந்த நற்பெயர், வாடிக்கையாளர்களின்  தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற சீரிய எண்ணம் போன்ற அனைத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதால் மட்டுமே அவந்தி நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணிலடங்கா வாடிக்கை யாளர்களைப் பெற்றுள்ளது. 

கம்பெனி டிராக்கிங்

   தொழில் பிரிவுகள்

தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், இறால் களுக்கான தீவனம் தயாரிப்பு, மீன்களுக்கானத் தீவனம் தயாரிப்பு, கடல் நண்டுகளுக்கான தீவனம் தயாரிப்பு போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். இறால்களுக்கான தீவன வகைகளை ப்ரோஃபீட், டைட்டான், மனாமெய், சேம்ப் (PROFEED, TITAN, MANAMEI, CHAMP) போன்ற பிராண்டுகளிலும், கடல் நண்டுகளுக்கான தீவன வகைகளை கிளாசிக் மற்றும் ஸ்கேம்ப்ரோ (CLASSIC, SCAMPRO) என்ற பிராண்டுகளிலும், மீன்களுக்கான தீவனங் களை மெர்மெய்ட் (MERMAID) என்ற பிராண்டிலும் விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

உலகத்தரம் வாய்ந்த மூலப் பொருள்களைப் பயன்படுத்துவ தாலும், ஊட்டச்சத்து சமன் படுத்தப்பட்ட வகைத் தீவனங் களாக இருப்பதாலும்,  நீருடைய அடிப்படை குணாதிசயங்கள் மாறாதவகையில் இருக்கும் தீவனங்களாக இருப்பதாலும், அதிக பசியார்வம் (apetite), வேகமான வளர்ச்சி மற்றும் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு, இறக்காமல் இருக்கும்படி வைத்திருக்க உதவும் ரகமாகவும் இருப்பதாலும் இந்த நிறுவனத்தின் தீவனங்களுக்கு வாடிக்கையா ளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  இருக்கின்றன.

கம்பெனி டிராக்கிங்

வெறுமனே தீவனம் விற்பனை செய்யும் நிறுவனமாக மட்டும் இல்லாமல், மீன் பண்ணைகள் வைத்திருக்கும் நபர்களுக்குத் தண்ணீரைப் பரிசோதித்துத் தருதல், மண் பரிசோதனை செய்து தருதல் மற்றும் இறால் மீன் வளர்ப்புக்கானப் பயிற்சி களைத் தன்னுடைய அனுபவமிக்க பணியாளர்கள் மூலமாக வழங்குதல் மற்றும் நண்டுகளை வளர்த்து அவற்றை அவந்தி நிறுவனத்திற்கே விற்பதற்கான வாய்ப்புகளை வழங்குதல் போன்ற இந்தத் துறை சார்ந்த பல்வேறு தொழில் நுட்பச் சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கிவருகிறது.

இறால்களைப் பதனிட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்தல் என்ற துறையிலும் அவந்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே சொன்னபடி, பல்வேறு உலக உணவுக் கட்டுப்பாட்டு வாரியங் களின் சான்றிதழ்களுடன் இந்த பிராசஸிங் யூனிட்டுகள் செயல் பட்டுவருகின்றன. 

பதப்படுத்தப்பட்ட இறால் களை (உடனடியாக உட்கொள்ளும் வகை மற்றும் சமைத்துச் சாப்பிடும் வகை) ‘ப்ரான் கிங்’ என்னும் பிராண்டில் உள்நாட்டில் விற்பனை செய்து வருகிறது. ப்ரான் மற்றும் மீன் வகைகள் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படும்போது அவற்றில் நுண்கிருமிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.

கம்பெனி டிராக்கிங்

மனிதர்களின் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் கிருமிகள் இறால் மற்றும் மீன்களில் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பதற்காகத் தனிப்பட்ட ஆய்வகங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். இதன்மூலம் கிருமிகளோ, ஆன்ட்டிபயாடிக்குகளோ அல்லது ஸ்டீராய்டுகளோ இவற்றில் இருப்பதற்கான வாய்ப்பினை மிகவும் குறைக்க இந்த நிறுவனம் தேவையான முயற்சிகளைச் செய்துவருகிறது.

இறால் மற்றும் மீன்களை வாடிக்கையாளர் களிடம் பாதுகாப்பாகவும், கெட்டுப்போகாமலும் கொண்டுபோய் சேர்க்கத் தேவையான  குளிரூட்டப்பட்ட வாகனங்களையும், ஏற்றுமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட மீன் உணவு வகைகளைத் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வாகனங்களையும் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

   ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

இறால் மற்றும் மீன் வளர்ப்பு என்பது உயிரின வளர்ப்பு துறையாகும். எனவே, உயிரினங்கள் சம்பந்தப்பட்ட (வியாதிகள் போன்ற) ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்திற்கு இருக்கவே செய்கிறது.

இந்த நிறுவனம் பெருமளவில் ஏற்றுமதி  செய்துவருவதால், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதலும் ஒரு ரிஸ்க்காகவே இருக்கும். அதே போல், தொழில்ரீதியான போட்டி அதிகரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்ததாக இல்லாமல், தட்பவெப்பச் சூழ்நிலை எதிர்பாராத அளவில் மாறுதல் போன்றவையும் இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு ரிஸ்க்காகவே கருதப்படவேண்டும்.

கம்பெனி டிராக்கிங்

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும்  நீண்ட தொழில் அனுபவத்தினையும், வாடிக்கை யாளர்கள் மத்தியில் நன்மதிப்பினையும் பெற்ற இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏதாவது ஒரு காரணத்தினால் சந்தை மிகவும் கடுமையான இறக்கத்தைச் சந்திக்கும்போது வரும் நல்லதொரு விலை இறக்கத்தில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி, ஐந்தாண்டு காலத்திற்கு மேலாக வைத்திருக்கும்படியான போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதற் காகத் தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம்.

ஏற்கெனவே இந்த வகை தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை அதிகமாக வைத்திருக்கும் வாசகர்களும், இந்தப் பங்கினை வாங்கியபின் தாங்களாகவே இந்தத் துறையின் செயல்பாட்டினை ட்ராக் செய்துகொள்ள முடியாத வாசகர்களும் இந்தப் பங்கினை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol (AVANTIFEED)/name of company/time duration)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism