Published:Updated:

இந்தியாவின் முதல் பிட்காய்ன் ஏ.டி.எம் தொடங்கியவர் கைது!

இந்தியாவின் முதல் பிட்காய்ன் ஏ.டி.எம் தொடங்கியவர் கைது!
இந்தியாவின் முதல் பிட்காய்ன் ஏ.டி.எம் தொடங்கியவர் கைது!

பெங்களூரிலுள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில் இந்தியாவிலேயே முதன்முறையாக பிட்காய்ன் ஏ.டி.எம்மை தொடங்கியதற்காக ஹரீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர், யுனோகாய்ன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ளார். பிட்காய்ன் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள சூழலில், எவ்வித முன்அனுமதியும் பெறாமல் இந்த பிட்காய்ன் ஏ.டி.எம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்மில் பணத்தை டெபாசிட் செய்து, யுனோகாய்ன் நிறுவனத்தில் பிட்காய்ன்களை வாங்க முடியும். இந்த ஏ.டி.எம்மில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யமுடியும். இந்த ஏ.டி.எம் சேவையை மும்பை, டெல்லி என மேலும் சில நகரங்களுக்கு விரிவுபடுத்த இருந்த சூழலில், ஹரீசை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட ஹரீஷிடமிருந்து ஒரு டெல்லர் மெஷின், இரண்டு லேப்டாப்புகள், 3 கிரெடிட் கார்டுகள், 5 டெபிட் கார்டுகள், ஒரு மொபைல் போன், பாஸ்போர்ட், 5 யுனோகாய்ன் நிறுவன சீல், கிரிப்டோகரன்ஸி இயந்திரம் மற்றும் 1.8 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன. ஹரீஷ் கைதுசெய்யப்பட்டது குறித்து யுனோகாய்ன் நிறுவனத்தின் சி.இ.ஓ. சாத்­விக் விஸ்­வ­நாத் கூறும்போது, ``பிட்காய்ன் பயன்பாடு சட்டபூர்வமானது இல்லை என்றுதான் நிதி அமைச்சர் கூறியிருக்கிறாரே தவிர சட்டவிரோதம் என்று சொல்லவில்லை. எனவே, பிட்காய்ன் பரிவர்த்தனையைக் குற்றமாகக் கருத முடியாது எனப் புதுமையான விளக்கம் கூறினார். தற்போது கைது நடவடிக்கையின்மூலம் பிட்காய்ன் பரிவர்த்தனைக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.