Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ்!(NSE SYMBOL: KEI)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி டிராக்கிங்

கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ்!(NSE SYMBOL: KEI)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: KEI) நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.  

கம்பெனி டிராக்கிங்

ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக 1968-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்ப காலத்தில் தொலைத்தொடர்புத் துறைக்கான ஸ்விட்ச் போர்டு கேபிள்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 1992-ம் ஆண்டில் பங்குகளைச் சந்தையில் வெளியீடு செய்து, பங்குச் சந்தையில் பட்டியலிட்டது கே.இ.ஐ நிறுவனம். தற்சமயம் மின்சாரத்தினைக் கொண்டு செல்லும் கேபிள்கள் தயாரிப்பில் இந்தியாவில் ஆர்கனைஸ்டு செக்டாரில் செயல்படும் நிறுவனங்களின் மத்தியில் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது கே.இ.ஐ நிறுவனம்.

முக்கியமான தயாரிப்புகள்

தயாரிப்புகள் என்று பார்த்தால், கூடுதல் உயர் மின் அழுத்த (எக்ஸ்ட்ரா ஹைவோல்டேஜ்) கேபிள்கள்,  உயர்மின் அழுத்த (ஹைவோல்டேஜ்) கேபிள்கள், குறைந்த மின் அழுத்த (லோ வோல்டேஜ்) கேபிள்கள், இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் இயந்திரங்களைக் கட்டுப்பாடு செய்வதற்கான கேபிள்கள், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் சிக்னல் கேபிள்கள், தெர்மோகப்பிள் எக்ஸ்டென்ஷன் மற்றும் காம்பென்செட்டிங் கேபிள்கள், சிலிக்கன் ரப்பர் ஃப்ளெக்சிபிள் கேபிள்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்சார கேபிள்கள், பி.வி.சி வைண்டிங் வயர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வயர்கள், மெரைன் மற்றும் ஆஃப்ஷோர் கேபிள்கள், கப்பல்கள் மற்றும் விசைப்படகு களுக்கான கேபிள்கள், சோலார் பவர் கேபிள்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி டிராக்கிங்



இது தவிர, இ.பி.சி என்றழைக்கப்படும் இன்ஜினீயரிங், ப்ரெக்யூர்மென்ட் மற்றும் கான்ட்ராக்டுகள் தொழிற்பிரிவில் லே-அவுட்களை அமைத்துத் தருதல், சப்ஸ்டேஷன்    இன்ஜினீயரிங் கணக்கீடுகளைச் செய்துதருதல், தர உத்தரவாதத்திற்கான அமைப்புமுறைகளை வழங்குதல், பாதுகாப்பு மேலாண்மைக்கான சேவைகளை வழங்குதல், புராஜெக்ட் மானிடரிங் சிஸ்டம் போன்ற சேவைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் வர்த்தகம்

தொழில் ரீதியாகப் பார்த்தால், உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு  வர்த்தகம், நிறுவனங்களுக்கான பொருள்கள் உற்பத்தி மற்றும் வீட்டுப் பயன் பாட்டுக்கான பொருள்கள் உற்பத்தி, தனியார் மற்றும் அரசாங்கத்திற்கான சப்ளை என எல்லாக் கோணங்களிலும் நல்லதொரு டைவர்சிஃபைடு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.  

கம்பெனி டிராக்கிங்

உலக அளவில் பார்த்தால், மின்சார கேபிள் களின் தேவை என்பது 2003-2013 என்ற பத்து ஆண்டுகளுக்கான கால அளவில் 4.7% (சி.ஏ.ஜி.ஆர்) அளவில் வளர்ந்து வந்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்தத் துறையின் வளர்ச்சி 2 - 3  சதவிகித அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்க லாம். அகில இந்திய ரீதியாக 2013-ம் ஆண்டு அளவீட்டில் மூன்று பில்லியன் அளவில் இருந்தது. இந்தியாவில் இந்த வளர்ச்சி அதே காலகட்டத்தில்  10% (சி.ஏ.ஜி.ஆர்) அளவீட்டில் இருந்துவந்தது.   

கம்பெனி டிராக்கிங்

வியாபார வாய்ப்புகள்

மேலும், அரசாங்கங்கள் மின் விநியோகத்திற்கும், மின்சார விநியோகத்திற்கான கட்டுமானத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கேபிள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வியாபார வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும் என எதிர்பார்க்கலாம்.  மேலும், பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் ஸ்டீல், சிமென்ட், ஆயில் & கேஸ் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வளர்ச்சியும் கேபிள் தயாரிப்பு நிறுவனங்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவும்.  

கம்பெனி டிராக்கிங்

தயாரிப்பு வசதிகள்

தன்னுடைய தயாரிப்புகளுக்கான உற்பத்தி வசதிகளை ராஜஸ்தானில் பிவாடி, யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் உள்ள சில்வாசா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சொபான்கி என்ற மூன்று இடங்களில் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளுக்கான தரக்கட்டுப்பாடுகளில் சீரிய கவனம் செலுத்தி வருவதால், லாயிட்ஸ் ரிஜிஸ்டர், இ.ஐ.எல்,  இ. ஆர்.டி.ஏ, பி.டி.ஐ.எல் போன்ற பல நிறுவனங்களின் தரத்திற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டு திகழ்கிறது. இதுவே இந்த  நிறுவனம் உபயோகிக்கும் டெக்னாலஜி, உற்பத்தி முறை மற்றும் தரம்தனில் செலுத்தும் கவனம் போன்ற வற்றிற்கு சான்றாகத் திகழ்கிறது.  

கம்பெனி டிராக்கிங்

ஆராய்ச்சி வசதிகள்

தன்னுடைய தயாரிப்புகளைத் தொடர்ந்து முன்னேற்றுவதற்கான ஆராய்ச்சி வசதிகளையும் தன்வசம் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இதுபோன்ற ஆராய்ச்சி வசதிகளில் செய்துள்ள முதலீடு களினாலேயே வாடிக்கையாளர் களின் தேவைக்கேற்ப தயாரிப்பு களை மாற்றியமைக்கும் வசதி, தீப்பிடித்தலில் இருந்து காக்கும் வகையிலான கேபிள்கள், தீப்பிடித்தால் ஹாலோஜன் அறவே வெளியேறாத ஜீரோ ஹாலோஜன் கேபிள்கள் போன்ற வற்றை முனைப்புடன் உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

சிறப்பு அம்சங்கள்

கூடுதல் உயர் அழுத்த வகை கேபிள்கள் தயாரிப்பில் இறங்கி யுள்ளதாலும், 400 கிலோவாட் அளவிலான மின்சாரத்தைக்  கடத்தக்கூடிய திறன்கொண்ட கேபிள்கள் தயாரிப்பில்  (சோதனை நிலையில்) இறங்கி யுள்ளதாலும் பெரிய அளவிலான மின்சார உற்பத்தி நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற் கான ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும். 

கம்பெனி டிராக்கிங்

இன்ஜினீயரிங், ப்ரெக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் இ.பி.சி வகை ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கேற்பதன் மூலமாக இந்த நிறுவனத்தின் பல்வேறு வகை கூடுதல் மற்றும் உயர் அழுத்த மின்சார கேபிள்களுக்கான விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல், ரீடெயில் சந்தையிலும் கால் பதித்துள்ள இந்த நிறுவனம், அந்த வாடிக்கை யாளர்கள் மத்தியில் பிராண்ட்டை முக்கியத்துவம் பெறச் செய்வதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.  உற்பத்தி செய்யும் பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான விற்பனை நெட்வொர்க்கை அகில இந்திய ரீதியாக இந்த நிறுவனம் கொண்டுள்ளது. அதேபோல், ஏற்றுமதி வர்த்தகத்திலும் கால்பதித்துள்ள இந்த நிறுவனம் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகளில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. 

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?


மின்சார கேபிள்கள் தயாரிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் சார்ந்து இயங்கும் துறையாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தினால் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டாலோ அல்லது எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சி இல்லாதுபோனாலோ இந்த நிறுவனத்தின் வியாபார அளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், பெருமளவிலான வியாபாரம் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் நடப்பதால், போட்டியாளர்கள் நிர்ணயிக்கும் விலையும் இந்த நிறுவனத்தின் லாபத்தினை ஓரளவு பாதிக்கலாம். மேலும், இ.பி.சி ஒப்பந்தங் களில் வரக்கூடிய லாபமும் அதிக அளவிலான மாறுதல்களுக்கு உட்பட்டது. இதை ஒரு ரிஸ்க்காகவே நாம் கருத வேண்டும். 

கம்பெனி டிராக்கிங்

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் தொழில் ரீதியாக நீண்ட அனுபவத்தினையும் வாடிக்கை யாளர்கள் மத்தியில் பெற்றிருக்கும் நன்மதிப்பையும் கருத்தில்கொண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை மூன்று முதல் ஐந்து ஆண்டுகால முதலீட்டிற்காக, சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் நல்லதொரு சரிவை சந்திக்கும்போது வரும் கணிசமான விலை இறக்கத்தில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாங்குவதற்காகத் தொடர்ந்து ட்ராக் செய்யலாம்.

ஏற்கெனவே இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளைக்கொண்ட  போர்ட் ஃபோலியோவை வைத்திருக்கும் வாசகர்களும், பங்கினை வாங்கியபின்னால் இந்த நிறுவனம் மற்றும் துறையின் செயல்பாட்டைத் தாங்களாகவே ட்ராக் செய்துகொள்ள முடியாத வாசகர்களும் இந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: KEI)  /name of company/time duration)