Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

மதிப்புக் கூட்டல் தொடர் - 19

மிழ்நாட்டில் அதிகமாக மதிப்புக் கூட்டல் செய்யப்படும் பயிர்களில் முக்கியமான இடம் நிலக்கடலைக்கு உண்டு. சிறிய பெட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட்டுகள் வரை நிலக்கடலை மதிப்புக் கூட்டல் பொருள்களாக வரிசைக் கட்டி நிற்கின்றன. பொருள்களின் தேவைக்கேற்றவாறு நிலக்கடலையில் மதிப்பு கூட்டுவோரும் தமிழகத்தில் அதிகமாக இருக்கத்தான் செய் கிறார்கள். மதிப்பு கூட்டப்பட்ட  நிலக்கடலை யானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

நிலக்கடலை பற்றிய மதிப்புக் கூட்டல் தகவல்களை விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன்.

ஏன் மதிப்புக் கூட்டல் செய்ய வேண்டும்?

எத்தனையோ பயிர்கள் இருந்தாலும், நிலக்கடலையில் மதிப்புக் கூட்டுவது  லாபகரமான தொழில்களுள் ஒன்று. அதிகமாக விற்பனையாகக் கூடிய ஒன்றும்கூட. மற்ற பயிர்களில் மதிப்புக் கூட்டல் செய்யும்போது மார்க்கெட்டிங்கிற்கு அதிகமான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நிலக்கடலையில் மதிப்புக் கூட்டல் செய்யும்போது மார்க்கெட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை.  நாம் கையில் வைத்திருக்கும் வியாபாரிகளையும், கடைக்காரர் களையுமே தக்க வைத்துக் கொண்டால் மட்டும் போது மானது. இதுதவிர, நாம் சப்ளை செய்யும் பொருள்கள் சந்தைகளில் ரெகுலராக கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் கிடைக்காவிட்டால் வாடிக்கையாளர்கள் வேறு கம்பெனிப் பொருள்களுக்கு மாறி விடுவார்கள். 

என்ன செய்ய வேண்டும்?

நிலக்கடலையை உபயோகித்து மதிப்புக் கூட்டல் செய்யும்போது அதன் சுவை மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சூப்பர் மார்க்கெட்டுகளில் சில வாடிக்கை யாளர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி பொருள்களை வாங்குவார்கள். பிராண்டைப் பொறுத்தவரை, பெரிய கடைகளில் மட்டும்தான். சிறிய கடைகளில் மக்கள் வாங்கும் நிலக்கடலை பொருள்களில் பிராண்டுகளைப் பார்ப்பதில்லை.

சூப்பர் மார்க்கெட்டுகள் முதல் பெட்டிக்கடைகள் வரை நாம் தினசரி விநியோகிக்கும் நிலக்கடலை பொருள்களின் விற்பனை தடைபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிலக்கடலையில் கடலைமிட்டாய் என்ற ஒன்றை மட்டும் மதிப்புக் கூட்டாமல் வெவ்வேறு பொருள்களாக மதிப்புக் கூட்ட வேண்டும்.

என்னென்ன வடிவங்களில் மதிப்புக் கூட்டலாம்?

நிலக்கடலையைப் பொடி யாகவோ, எண்ணெய்யாகவோ மற்றும் மிட்டாய்களாகவோ மதிப்புக் கூட்டலாம். கடலை மிட்டாய், கடலை உருண்டை மற்றும் இடித்த கடலை மிட்டாய் என்று மூன்று வகையான பொருள்களைத் தயார் செய்து வருகிறேன். மூன்று பொருள்களின் தயாரிப்பிலும் அடிப்படை ஒன்று தான். அதன் வடிவம் மட்டுமே  வேறு.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

இதுபோல, வாடிக்கையாளர் களைக் கவர தொழில் வாய்ப்பு களையும், தொழில்நுட்பங்களையும் பெருக்க மதிப்புக் கூட்டலில் வித விதமான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு பொருளிலும் 10 கிராமிலிருந்து 200 கிராம் வரைக்கும் பாக்கெட் செய்து விற்பனை செய்கிறேன்.

முதலீடு

ஒரு நபர் தினமும் 200 கிலோ நிலக்கடலையை மதிப்புக் கூட்டல் செய்ய வேண்டுமானால், தினசரி சுமார் 3,000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். 700 சதுர அடி நிலமுள்ள இடத்தில் சொந்தமாக ஆரம்பிக்கக் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் இருந்தாலே போதும்.

இதில் 10 ஆயிரம் ரூபாய் பொருள்கள் அட்வான்ஸ் கொடுத்ததுபோக, 10 ஆயிரம் ரூபாய் பொருள்களை மதிப்புக் கூட்டவும், மீதம் இருக்கும் 10 ஆயிரம் ரூபாய் பொருள்களைச் சந்தையில் விற்பனை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சந்தை வாய்ப்புகள்


விற்பனை வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், நிலக்கடலையைப் பொறுத்தவரை, நாம் செல்லும் இடங்களுக்கு முன்னர் அங்கே ஒருவர் விற்பனைக்காகக் காத்துக்கொண்டிருப்பார். அதில் தரம்தான் நம்மை முன்னோக்கி இழுத்துச் செல்லும்.

புதிதாக ஆரம்பிக்கும்போது சந்தையில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புதிதாகப் பொருளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தபின்னர் மூன்று வருடங்களுக்கு நிதிச் சுமையைத் தாக்கு பிடிக்கக்கூடிய நிலையைத் தொழில்முனைவர் பெற்றிருக்க வேண்டும்.   

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

இன்னொரு முக்கியமான விஷயம், கடலை மிட்டாய் விற்காத இடமே தமிழகத்தில்  இல்லை என்று சொல்லிவிடலாம். நாங்கள் பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்கிறோம். அதற்குக் காரணம், பெரிய அளவில் பொருளை உற்பத்தி செய்யும்போது வேலையாள் களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் செலவினங்கள் கூடும். அதனால் பொருள்களின் லாபத்திற்காக அதிக விலை வைத்து விற்பனை செய்ய வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் நிலக்கடலை அதிகமாக விற்பனையாவதும் ஒரு காரணம். இதுபோக, சவுதி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறேன். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டீலர்களை நிறுவ  ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

லாபம் 

ஒரு லட்சம் ரூபாய்க்குப் பொருள்கள் விற்பனை யாகும்போது 85 ஆயிரம் செலவுபோக (போக்கு வரத்து, மூலப்பொருள்கள், வேலையாள்கள்) 15 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். லாபம் மாதத்திற்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும்.

வேறு என்ன வகையில் மதிப்புக் கூட்டலாம்?


மதிப்புக் கூட்டப்பட்ட நிலக்கடலைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிகமாக நிலக்கடலை மதிப்புக் கூட்டப்படுகிறது. பீனட் பட்டர் என்று சொல்லக்கூடிய பொருளைத் தயாரித்து அதிலிருந்து சாக்லேட், ஐஸ்கிரீம் எனப் பல பொருள்களைத் தயாரித்துவருகிறார்கள்.

மதிப்புக் கூட்டும் பயிற்சிகள்

நிலக்கடலையில் மதிப்புக் கூட்டும் தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால், தொழில் செய்யும்  நிறுவனங்களில் சேர்ந்து தரமான பயிற்சியைப் பெறலாம். நிறுவனங்களில் கிடைக்கும் அனுபவமே மிகச் சிறந்ததாக இருக்கும். 

வரவேற்பு


நிலக்கடலையைத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாங்கிக்கொள்கிறேன். தமிழ்நாட்டு நிலக்கடலைக்குச் சந்தையில் அதிகமான வரவேற்பு உண்டு. மக்கள் மத்தியில் நிலக் கடலைக்கான நுகர்வு கடந்த இரண்டு ஆண்டு களாக அதிகரித்தபடி இருக்கின்றன. எல்லா வியாபாரிகளும் தங்கள் பொருள்கள் விற்பனை யாவதாகத்தான் சொல்கிறார்கள். எதையுமே தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்க வேண்டும். அதேபோலத்தான் நிலக்கடலை மதிப்புக் கூட்டலிலும் தொடர்ச்சியாகப் பொருள்களை உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் வெளியில் தெரியவே இரண்டு வருடங்கள் ஆகிவிடும். புதிய உத்திகளுடன் கடலை மிட்டாய்களில் தொழில் செய்ய அதிகமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் எதையுமே மக்கள் விரும்பும்படி உற்பத்தி செய்வது முக்கியமான ஒன்று’’ என்று முடித்தார் அவர்.

முன்பு ஏதோ ஒரு நிறுவனம் தயாரிக்கும் கடலை மிட்டாயை வாங்கிச் சாப்பிடுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு கடலை மிட்டாயிலும் பிராண்டுகள் வந்துவிட்டன. எனவே, தரமான கடலை மிட்டாய் தயாரித்தால், நல்ல தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

(மதிப்புக்கூடும்)

-துரை.நாகராஜன்

படங்கள்: வீ.சிவக்குமார்.