Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

குயின்ஸ் நகரம், நியூயார்க். குளிர்காலத்தில் குளிர் நிறைந்த, அமைதியான ஒரு மாலை நேரம்.

குளிராக இருந்தாலும்கூட, ருத்ர பிரதாப் கோஷ் மூன்றாவது மாடியிலிருக்கும் அவருடைய  சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்டின் பால்கனியில் இருந்தார். அவர் வீட்டிற்குள் ஒருபோதும் புகை பிடித்ததில்லை. ஸ்டீல் சேரில் உட்கார்ந்திருந்தார். சேரின் பின்பக்கம் சுவற்றுடன் ஒட்டியிருக்க, அவர் தனது கால்களை பால்கனி கம்பியின் மேல் வைத்துக்கொண்டு, கையில் வைத்திருந்த பேப்பரில் கவனம் செலுத்தினார்.  அவர் வட்டம் போட்டிருந்த ஒரு விளம்பரத்தின் மீது அவரது கண்கள் பதிந்திருந்தன. அதில் கொடுக்கப்பட்டிருந்த  எண்ணுக்கு அவர் டயல் செய்தார்.  

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

‘`ஹாய், எனக்கு ஒரு பெட்ரூம் உள்ள அபார்ட்மென்ட் அல்லது ஸ்டூடியோ அபார்ட்மென்ட் வேண்டும். உங்களுடையதை நீங்கள் லீஸுக்குத் தரவிரும்புவதாக விளம்பரம் செய்திருக்கிறீர்களே!’’

- அவர் அங்கிருந்து காலி செய்துபோவதற்குச் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரால் அதிக நாள்களுக்கு ஒரே இடத்தில் இருப்பது கட்டுபடியாகவில்லை. எனவேதான் இந்த விசாரிப்பு.

‘`நீங்கள் கொஞ்சம் நேரத்துக்கு முன்பு கூப்பிட்டிருக்கலாம். இப்போதுதான் மலிவாகக் கொடுத்து முடித்தேன்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10`கூல்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அவருடைய அபார்ட்மென்டுக்குள் திரும்பிச் சென்று லேப்டாப்பை எடுத்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதை மீண்டும் அதற்கான பேக்கில் வைத்துவிட்டு, இன்னொரு மேக்புக்கை எடுத்தார். அவர் சில எழுத்துக்களைத் தட்டியபிறகு க்ரெயிக்ஸ்லிஸ்ட்- டைப் (Craigslist) பார்த்தார்.

அவர் சில ஸ்கிரீன்களைக் கடந்து இறுதியாக ஒரு ஸ்கிரீனில் நிறுத்திவிட்டு, மெயிலை எழுதத் தொடங்கினார். அவருடைய பின்னணி குறித்த விவரம் முழுவதையும் சொல்ல வேண்டுமா என ஒரு விநாடி யோசிக்க, அவருடைய விரல்கள் தட்டச்சு செய்வதை நிறுத்தியது.

ருத்ராவின் கல்வி குறித்த பின்னணி அபாரமானது. ஆனால், சமீபத்திய பின்னணி மிகவும் பிரச்னைக்கு உள்ளானது. கொல்கத்தாவில் இருக்கும் இண்டியன் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்டின் பட்டதாரி யான இவர், தன்னுடைய வாழ்நாளில் குறிப்பிடத்தக்க அளவிலான நாள்களைப் புள்ளியியல் துறை மற்றும் இயற்கை விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளிலும்,  செயல்பாடுகளிலும் கழித்திருந்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

மிகவும் புத்திசாலியான மாணவராக இருந்தபோதிலும்கூட, சமூக நியாயம் குறித்து மிகவும் வலுவான கருத்துகளைக் கொண்டவராக இருந்தார். இவர் இன்ஸ்டிடியூட்டில் இருந்த காலத்தில் KLO – Kamatpur Liberation Organization – என்கிற அமைப்பில் உறுப்பினராக இருந்தார்.

இது 1995-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஒரு கலகக்கார அமைப்பு. KLO–வின் ஒரே நோக்கம், வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருந்தது.

கூச் பேகார், ஜல்பைக்குரி, டார்ஜிலிங், மேற்கு வங்காளத்தி லிருந்து சில மாவட்டங்கள், அஸ்ஸாமில் இருந்து சில மாவட்டங்கள் என அனைத்தும் இணைந்து ஒரு தனிமாநிலத்தை உருவாக்க வேண்டுமென்பது அதன் விருப்பமாக இருந்தது.

காலப்போக்கில், இது ஒரு தீவிரவாத அமைப்பாக உருவானது. உல்ஃபா மற்றும் பக்கத்து நாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளின் உதவியுடன் KLO தனிமாநிலம் வேண்டுமெனக் கேட்டு அரசுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தது.  

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

KLO–வின் டாப் ஆறு போராளிகளில் ருத்ராவும் ஒருவர். இவர்கள் எல்லோருக்கும் வடகிழக்கில் இயங்கிவரும் தீவிரவாதக் குழுக்களின் மூலம் துப்பாக்கியை எப்படிக் கையாள்வது என்பது பற்றியெல்லாம் பயிற்சி கொடுக்கப்பட்டது. KLO–வின் முக்கியமான போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதில் பாகிஸ்தானின் இன்டர்சர்வீஸ் இண்டெலிஜென்ஸுக்கும் பங்கு இருந்தது.

2000–மாவது ஆண்டில் நடந்த ஊர்வலத்தின்போது கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இண்டியா (மாவோயிஸ்ட்) தலைவர் ஒருவரைக் கொலை செய்ததிலிருந்து நிகழ்வுகள் எல்லாம் ருத்ராவுக்கு எதிராக  மாறியது. அவர் எப்படியோ அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.

அதற்குப்பின் ஒருமுறைகூட அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வில்லை. அந்தக் கொலைக்குப்பிறகு நடந்த விசாரணையில் அவர் பெயர் அடிபடவில்லையென்றாலும், அவர் மனதை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

தொடர்ந்து அமெரிக்காவில் வசித்துவந்த அவர் முழு நேரமும் புள்ளியியல் சம்பந்தப்பட்ட வேலையைத் தொடரலாம் எனத் தீர்மானித்திருந்தார். அவருக்கிருந்த கல்வித் தகுதிக்கு ஸ்டான் ஃபோர்டுக்குள் நுழைவது ஒன்றும் கடினமாக இல்லை.

ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார்.  இந்தமுறை, ஸ்டான்ஃபோர்டில் வன்முறையற்ற மாணவ அணியிலிருந்து பிளவுபட்ட அணிக்குத் தலைமை தாங்கினார். இந்த அமைப்பு அதன் பெயருக்கும், பண்புக்கும் பொருந்தாத வகையில் முதன்முதலாக ஸ்டான்ஃபோர்டில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது. ஏறக்குறைய ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் மாணவர்கள் கடனில் குறிப்பிடத்தக்க அளவுக்கு விலக்கு அளிக்கவேண்டுமென்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்தப் போராட்டத்தின் விளைவாக, அந்த மாணவர் அமைப்பு முழுமைக்கும் தடை விதிக்கப்பட்டு பல மாணவர்களும் ருத்ராவும் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டனர்.

ருத்ராவுக்கு மாணவர் களிடத்தில் அதிகரித்துவந்த ஆதரவும், மாணவர்களை இன்ஃபுளூயன்ஸ் செய்வதில் இருந்த திறனும் பல்கலைக்கழக நிர்வாகத்தை அச்சமடையச் செய்தது. எந்தவொரு பிரச்னை என்றாலும் அவருக்கு மாணவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் இன்னொரு `பவர் சென்டர்’ இருப்பதை நிர்வாகம் விரும்பவில்லை.  

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டபிறகும், மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களுடன், தான் உருவாக்கிய ஆன்லைன் தளம் மூலம் ருத்ரா தொடர்பு வைத்திருந்தார்.

அவருடைய தினசரி வாழ்க்கைக்கு என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் தொடர்ந்து இடம்விட்டு இடம்மாறிக் கொண்டிருந்ததால், அபார்ட்மென்ட் கிடைப்பது கடினமாக இருந்தது. அவருடைய உண்மையான பெயரைச் சொல்லும்பட்சத்தில் யாராவது ஒருவர் அவர் குறித்த தகவல்களைத் தேடத் தொடங்கினால் அவருடைய பின்னணி எளிதாகத் தெரிந்துவிடும்.

வன்முறைப் போக்கு கொண்ட யாரும் வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். அதிலும் இந்தியர்கள் அமெரிக்காவில் வன்முறை செய்திருந்தால் வீடு கிடைக்கவே கிடைக்காது.

நாளடைவில் அதிகாரத்தில் இருந்த அவருடைய நண்பர்கள், ஆலோசகர் மூலமாக அவருக்கு ஒரு புது அடையாளம் கிடைத்தது. தெற்கு அமெரிக்கரைப்போல இருந்த அவரது தோற்றமானது அவருடைய உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொள்ள உதவியது.

கோஷ் என்பவர், ஜோஷ் ஆனார். அவர் அந்தப் பெயரால்தான் அறியப்பட்டார். அவரைப் பார்க்கும் யாரும் அவர் ஓர் இந்தியர் என்று சொல்ல மாட்டார்கள். ஜோஷ் கொனெலி (Josh Connelly) இப்போது ஓர் அமெரிக்கர்!

அவருடைய விரல்கள் மீண்டும் தட்டச்சு செய்ய ஆரம்பித்தன. அவர் மெயிலை அனுப்பி வைத்தார்:

‘`ஹாய், எனக்கு வயது 29. டெக்ஸன். நன்றாக ஒத்துப்போகக் கூடியவன், சுத்தமானவன். நான் கரன்சி டிரேடிங் செய்துவருவதோடு அவ்வப்போது தொழில்நுட்ப வேலையை ஃப்ரீலான்ஸாக செய்வதுண்டு. பெரும்பாலும் தனியாக இருப்பேன்.

பெரும்பாலான நேரத்தை வேலையில் செலவிடுவேன். ஆனால், வெளியே செல்வதும், அவ்வப்போது சோஷியலைஸ் செய்வதும் எனக்குப் பிடிக்கும்.

நான் சமீபத்தில் குயின்ஸ் பகுதிக்கு மாறினேன். விரைவில் ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். வாடகையும், இடமும் எனக்குப் பொருத்தமாக இருக்கிறது. வீடு  இன்னும் காலியாக இருந்தால், தயவுசெய்து நான் உங்களை அழைக்கத் தொலைபேசி எண்ணைக் கொடுக்கவும். நன்றி, ஜோஷ்.’’

ஒரு சில நிமிடங்களில் அவருக்குப் பதில் வந்தது.

‘‘உங்கள் விருப்பத்துக்கு நன்றி. நீங்கள் இங்கே வந்து எங்களைச் சந்திக்க முடிந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். அடுத்த இரண்டு நாள்களில் எப்போதாவது..? இந்த வாரத்தின் இறுதியில் கேத்தியும் (Cathy) நானும் விடுமுறைக்காக வெளியே செல்கிறோம். நன்றிகள் பல. வில்பெர்ட்.’’

அடுத்த சில நாள்களில், ஜோஷ் வில்பெர்ட்டின் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மென்டுக்குக் குடிபெயர்ந்தார். முன்பின் சந்தித்திராத ஸ்டானுடன் (Stan) அவர் அந்த அபார்ட்மென்டைப் பகிர்ந்துகொண்டார்.  
 
(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10

இந்திய ஃபண்ட்...  வெளியேறும் பிளாக்ராக்!

லகின் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழக்கூடியது பிளாக்ராக் நிறுவனம். இந்த நிறுவனம்  தன்னிடமிருந்த 40 சதவிகிதப் பங்குகளை தற் போது டி.எஸ்.பி குழுமத் திடம் விற்றிருக்கிறது.

டி.எஸ்.பி நிறுவனம் இதற்காக எவ்வளவு பணம் தந்தது என்கிற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. என்றாலும், சுமார் ரூ.5,000 கோடி அளவுக்குப் பணம் கைமாறியிருக்கலாம் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.இதற்கான பேச்சு வார்த்தை கடந்த  ஓராண்டு காலமாக நடந்துவந்த நிலையில், பிளாக்ராக்கின் 40% பங்கினை டி.எஸ்.பி நிறுவனம் இப்போது வாங்கியிருக்கிறது!