நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கத்தில் வியாபாரம் செய்வதற்கு இது சரியான வாரமாகவே அமைந்திருந்தது. தங்கம் நான்கு வருட உச்சத்தை நோக்கி நகர்கிறது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கடந்த இதழில் நாம் சொன்னது... “தங்கம் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், மேலே 31157 என்பதை தடைநிலையாகவும், கீழே 30850 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டு இயங்கி வருகிறது.’’

தங்கம், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31157-ல் தொடர்ந்து பல நாள்களாகத் தடுக்கப்பட்டு வந்திருந்தது. எப்போதுமே எந்தவொரு  எல்லையில் பலநாள்களாகத் தடுக்கப்படுகிறதோ, அந்த எல்லை உடைக்கப்பட்டு விலை ஏற ஆரம்பித்தால், அது மிகப் பலமான ஏற்றமாக இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் தங்கம் இதுவரை நாம் தந்த 31157 என்ற எல்லை உடைக்கப்பட்டது, பின்பு வலிமையாக ஏறத் துவங்கியது. 

கடந்த வாரம் திங்களன்று 31157-யை உடைத்து மேலே 31300 என்று உச்சத்தைத் தொட்டு, பின்பு கொஞ்சம் இறங்கி 31247-ல் முடிந்தது. அடுத்த நாள் ஒரு கேப் டவுனில் இறங்கியது, கரடிகள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டி, 31075 என்ற விலை வரை கீழே இறங்கியது.  ஆனால், முடியும்போது தொடங்கிய இடத்திற்கு வந்து 31200 என்ற எல்லையில் முடிந்தது. அதன்பின் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் மெள்ள ஏறினாலும், வெள்ளியன்று கரடிகள் ஓரங்கட்டப்பட்டு, தங்கம் முழுவீச்சில் ஏற ஆரம்பித்தது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? தங்கம் 31575 என்ற உடனடித் தடைநிலையை உடைத்தால் மீண்டும் மிகப் பெரிய ஏற்றம். உடனடி ஆதரவு 31340 ஆகும்.

வெள்ளி (மினி)

வெள்ளி இந்த முறை தங்கத்தின் விலைநகர்வை அப்படியே பின்பற்றி ஏறியது என்று சொல்லலாம்.சென்ற இதழில் சொன்னது... ‘‘வெள்ளி வலிமை யான ஏற்றத்திற்குப் பிறகு, 39780 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. இதை உடைத்தால் நன்கு ஏறலாம். உடனடி ஆதரவு 39050 ஆகும்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் வெள்ளி 39780 என்ற தடையை உடைத்து, பின் மிக வலிமையாக ஏறி, 40071 என்ற எல்லை வரை ஏறியது. இந்த நிலைக்கு மாறாக, செவ்வாயன்று கீழே 39553 வரை இறங்கியது.

காளைகளுக்கும், கரடி களுக்கும் இடையே நடந்த இந்தச் சண்டை புதனன்று காளைகளுக்குச் சாதகமாக மாறி, உச்சமாக 40283-யைத் தொட்டது. அதன்பின் வியாழனன்று தொடர்ந்து ஏறி உச்சமாக 40500-யைத் தொட்டது.  இப்படி ஒவ்வொரு நாளும் வெள்ளியானது புதிய உச்சத்தைத் தோற்றுவித்து, வெள்ளியன்றும் மிக பலமாக ஏறியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் நான்கு வருட உச்சத்தைத் தொடும் போது, வெள்ளி ஒரு வருட  உச்சத்தைத்தான் தொட முயன்று வருகிறது.  இருந்தாலும், 40800 என்ற தடையைத் தாண்டினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம்.  கீழே 39800 என்பது முக்கிய ஆதரவு நிலை ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘கச்சா எண்ணெய்யிலிருந்து காளைகள் மெள்ள வெளியே வருகிறார்கள். எனவே, ஆதரவு எல்லையான 4450 உடைத்தால், நன்கு இறங்கலாம். மேலே 4620 இன்னும் வலுவான தடைநிலை ஆகும்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய், உச்சத்தில் டிஸ்ட்ரிபியூஷன் மோடில் இருந்ததே, அக்யூமிலேஷன் மோடாகவும் மாறலாம் என்பதைக் கச்சா எண்ணெய் நிரூபித்துள்ளது.  மேல் எல்லையான 4620-யை உடைத்து வலிமையாக ஏறி, 4684 என்ற உச்சத்தை உருவாக்கியது. 

பின்பு ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று மாறி மாறி நகர்ந் தாலும், கடைசியில் வலிமையாக நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  கடந்த விழாயனன்று வலிமையாக ஏறி 4897 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு ஒரு ஷூட்டிங் ஸ்டாராக முடிந்துள்ளது, கரடிகள் மீண்டும் சந்தையில் இறங்கி யிருப்பதையே இது காட்டுகிறது. 

கச்சா எண்ணெய் 4897 என்ற எல்லையை வலிமையான தடை நிலையாகக் கொண்டுள்ளது. மிக முக்கிய ஆதரவு 4600 ஆகும்.  மேலே 4897 உடைக்கப்பட்டால், மிகப் பெரிய ஏற்றங்கள் தொடர்ந்து வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : https://bit.ly/2rBkmDw