Published:Updated:

கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரம்! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரம்! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரம்! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

பிரீமியம் ஸ்டோரி

ப்ஷன் வர்த்தகம் (Trading) என்பது பங்குச் சந்தையில் ஏற்கெனவே பரபரப்பாக நடப்பதுதான். இதனை கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் மட்டும் அறிமுகம் செய்த எம்.சி.எக்ஸ்,  தற்போது வேறு சில கமாடிட்டிகளிலும் அறிமுகம் செய்திருக்கிறது. 

கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரம்! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஆப்ஷன் வர்த்தகத்தின் சூட்சுமம் என்ன வெனில், விலை ஏறும் என்று நாம் நம்பும்போது கால் ஆப்ஷனை வாங்கவேண்டும்; விலை இறங்கும் என்று நாம் நம்பும்போது புட் ஆப்ஷனை வாங்க வேண்டும். அதாவது, நாம் எதிர்பார்த்த திசையில் விலை தொடர்ந்து நகர்ந்தால், லாபம் கூடிக்கொண்டே போகும். நாம் எதிர்பார்த்த திசைக்கு எதிர்திசையில் விலை நகர்ந்தால், நாம் கட்டிய பிரீமியத்தின் மதிப்புக் குறைந்து, நஷ்டம் ஏற்படும். அப்படி நஷ்டம் என்று வந்தால், நாம் கட்டிய பிரீமியத் தொகை மட்டுமே போகும். இதுதான் ஆப்ஷன் வர்த்தகத்தில் உள்ள சிறப்பம்சம். அந்த வகையில், எம்.சி.எக்ஸ் வருகிற 15-ம் தேதி முதல் சில்வர், குரூட் ஆயில், ஜிங்க் மற்றும் காப்பர் ஆகிய நான்கு கமாடிட்டிகளில் செபியின் அனுமதியுடன் தொடங்குகிறது.   

கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரம்! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்



பங்குச் சந்தையில் ஆப்ஷன் வியாபாரம் செய் வதற்கும், கமாடிட்டியில் ஆப்ஷன்ஸ் வியாபாரம் செய்வதற்கும் பொதுவான சில விஷயங்கள்  உண்டு. இந்த இரண்டிலுமே நமக்குத் தேவையான ஒரு ஸ்ட்ரைக் பிரைஸைத் தேர்வுசெய்து, அதற்கு உண்டான பிரீமியத்தைக் கட்டலாம். நாம் நினைக்கும் திசை நோக்கி அது நகர்ந்தால், கட்டிய பிரீமியத்தின் மதிப்பு உயர்ந்து, லாபம் கிடைக்கும். நினைக்கும் திசைக்கு எதிராக நகர்ந்தால், பிரீமியம் மதிப்புக் குறைந்து நஷ்டம் வரும். 
 
ஆனால், சில வித்தியாசங்களும் உண்டு. பங்குச் சந்தையில் கேஷ் மார்க்கெட் விலையானது அடிப்படை விலையாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரத்திற்கு, கமாடிட்டி ஃப்யூச்சர் விலை அடிப்படை விலையாக எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, எக்ஸ்பைரி நாள் செட்டில்மென்டுக்கு ஃப்யூச்சர்ஸ் விலையே எடுத்துக்கொள்ளப்படும். 

கமாடிட்டியில் ஆப்ஷன் வியாபாரம்! - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பங்குச் சந்தையில் எக்ஸ்பைரி தினம் அன்று (எடுத்துக்காட்டாக 31.5.2018) சந்தை முடியும்வரை (மாலை 3.30) ஆப்ஷனில் வியாபாரம் செய்யலாம். ஆனால், கமாடிட்டியில் டெலிவரி இல்லாத பொருள்கள் என்றால், எக்ஸ்பைரி நாளுக்கு இரண்டு நாள்கள் முன்பாகவே ஆப்ஷன் வியாபாரம் முடிவுக்கு வரும். எடுத்துக்காட்டாக, 31.5.2018 (வியாழக்கிழமை) எக்ஸ்பைரி தினம் என்றால், 29.5.18 (செவ்வாய்கிழமை)அன்றே முடிவுக்கு வரும். டெலிவரி கொடுக்கும் வசதி உள்ள கோல்டு, சில்வர் போன்றவற்றுக்கு டென்டர் பிரீயடுக்கு, இரண்டு நாள்கள் முன்பே ஆப்ஷன் வியாபாரம் முடிவுக்கு வரும்.

‘‘எக்ஸ்பைரிக்கு இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறதே, அதிலும் பங்குகொள்ள என்ன செய்ய வேண்டும்?’’ என்று நீங்கள் கேட்கலாம்.  இதற்கு நாம் ஒரு வேண்டுகோள் விண்ணப்பம் தரவேண்டும். அப்படித் தந்தால், உங்கள் ஆப்ஷன் பொசிஷன், ஃப்யூச்சர்ஸ் பொசிஷனாக மாற்றப் படும். அடுத்த இரண்டு நாள்களில் அது வழக்கம் போல் ஃப்யூச்சர்ஸ் பொசிஷனாகப் பாவித்து, நீங்கள் முடிவுக்குக் கொண்டுவரலாம். அல்லது எக்ஸ்சேஞ்சே முடிவுக்குக் கொண்டுவரும்.

நம் ஆப்ஷன் வியாபாரம் முடிவுக்கு வரும் நாளில் அது லாபத்தில் உள்ள ஸ்ட்ரைக் பிரைஸாக (ITM) இருந்தால், அந்த ஸ்ட்ரைக் பிரைஸுக்கும், ஃப்யூச்சர்ஸ் பிரைஸுக்கும் உள்ள இடைவெளியை நம் கணக்கில் வரவு வைப்பார்கள். Close To The Money (CTM) என்ற சொல்லும் கமாடிட்டி ஆப்ஷனில் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்ஷன் டிரேடிங் என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது. அதை நன்கு புரிந்துகொண்டு செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்பதை இதில் இறங்குவதற்கு முன்பு நன்கு புரிந்துகொள்வது அவசியம். பிரீமியம் தொகை குறைவு, அதுதானே போகப்போகிறது என்று நினைக்காமல், இதைச் சரியாகப் புரிந்துகொண்ட பின்பே வர்த்தகம் செய்ய இறங்குவது நல்லது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு