நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது!”

ஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது!”

ஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது!”

‘சுந்தரம் ஃபாசனர்ஸ்’ சுரேஷ் கிருஷ்ணா!

‘‘ஆட்டோ துறை இனிவரும் காலத்தில் நல்ல வளர்ச்சி காணும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆட்டோ தொடர்பாக நாங்கள் தயாரிக்கும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் நன்கு விற்பனையாகின்றன. இந்தத் துறை இன்னும் வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு’’ - சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் 2017-18-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவினை வெளியிட்டுப் பேசிய அந்த நிறுவனத்தின் கெளரவத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா இப்படிச் சொன்னார்.

ஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது!”

கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதற்கு முந்தைய நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 15.7% அதிகரித்துள்ளது. வரிக்குப் பிந்தைய நிகர லாபம் 16.5% உயர்ந்து அதாவது, ரூ.315 கோடியிலிருந்து ரூ.367 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்டுவருவது குறிப்பிடத் தகுந்த விஷயமாகும். இதனைத் தொடர்ந்து கடந்த நிதியாண்டில் 460% டிவிடெண்ட் (ஒரு பங்குக்கு ரூ.4.60) தந்துள்ளது இந்த நிறுவனம்.  

சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவினை வெளியிட்டு அவர் மேலும் சொன்னதாவது...

நீண்ட காலமே நோக்கம்


‘‘தொழிலில் எங்கள் நோக்கமே நீண்ட காலத்துக் கானதுதான். குறுகிய காலத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது. தொழில் வளர்ச்சி 25 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோம். இப்போதிருந்து 25 ஆண்டுகள் கழித்துத் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கிறோம்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்குமுன்பு, உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனமாக நாங்கள் இருந்தோம். இப்போது, ஒரு இன்ஜினீயரிங் கம்பெனியாக நாங்கள் வளர்ந்திருக்கிறோம். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு உதிரிப்பாகங்களை நவீனத் தொழில் நுட்பத்தைக்கொண்டு மிகத் துல்லியமாகத் தயாரித்துத் தருகிறோம். இதனால்தான் எங்கள் ஏற்றுமதி கடந்த ஒரு நிதியாண்டில் ரூ.1,044 கோடி யிலிருந்து ரூ.1,144 கோடியாக உயர்த்தியிருக்கிறது. 

இதுவரை இல்லாத நம்பிக்கை


கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில் நிறுவனத்தை நடத்திவருகிறேன். என்  வாழ்நாளில் நான் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சிக்கான நம்பிக்கையை நான் இப்போது பார்க்கிறேன். 1991-க்குப்பிறகு, தொழில் துறையில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. தொழில் தொடர் பான அனுமதிகளைப் பெற முன்பு மாதத்துக்கு ஒருமுறை டெல்லி செல்ல வேண்டியிருக்கும். இப்போது அப்படியொரு நிலைமை இல்லை. இந்த வளர்ச்சியை எல்லாம் பார்க்கும்போது, நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகம்கூட எனக்குச் சிலசமயம் ஏற்படும்.  இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

சீனத் தொழிற்சாலை

எங்களது சீனத் தொழிற்சாலை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அங்கு எங்கள் வரு மானம் ரூ.250 கோடியை எட்டியுள்ளது. சீனாவில் தொழில் தொடங்கி நடத்த வேண்டும் என்றால், நீங்கள் உண்மையிலேயே ‘சீரியஸான பிளேயராக’ இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். தொழில் விஷயத் தில் சீன அரசின் நடவடிக்கைகள் நன்றாக உள் ளன. அங்குள்ள பணியாளர்கள் நல்ல உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாம் போன்ற எல்லைப் பிரச்னைகள் வரும், போகும். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் சீனாவைக் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.

ஆட்டோமேஷன் தேவையா?

எங்கள் நிறுவனத்தில் சில பிரிவுகளில் ஆட்டோமேஷனைக் கொண்டு வந்திருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, பணியாளர்களுக்கு வேலை தந்து, அவர்கள்மூலம் உற்பத்தியைப் பெருக்கவே விரும்புகிறேன். நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், இன்னும் அதிக பணியாளர்களுக்கு வேலை தருவதாகத்தான் இருக்கும். ஆனால், என் வாடிக்கையாளர்கள் ஆட்டோமேஷனை வலியுறுத்தினால், அதைக் கொண்டுவர நான் தயங்கியதில்லை. நமக்கு எல்லா இடங்களிலும் ஆட்டோமேஷன் தேவை யில்லை. அதேசமயம், ஆட்டோமேஷனே கூடாது என்றும் நான் சொல்லமாட்டேன்.

மாறும் தொழில்நுட்பம்

3டி பிரின்டிங் போன்ற நவீனத் தொழில்நுட்பத் தால் கார் தயாரிப்பில் பெரிய மாற்றங்கள் வரும் என்கிறார்கள். அப்படி எதுவும் உடனடியாக நடந்துவிடாது என்று நம்புகிறேன். காருக்குத் தேவையான சில பாகங்கள் இரும்பிலிருந்து செய்யாமல், பிளாஸ்டிக்கிலிருந்து செய்யலாம். கார் இன்ஜினை இன்னும் சிறிய அளவில், அதிக சக்திகொண்டதாக மாற்றலாம். ஆனால், இன்ஜின் தயாரிக்கும் அடிப்படைத் தொழில்நுட்பம் என்றும் மாறாது. இன்னும் பத்து ஆண்டுகளில் நம்மிடம் இருக்கும் மொத்த கார்களில் 20 - 30% எலெக்ட்ரிக் கார்களாக இருக்கலாம். மற்ற கார்கள் பெட்ரோல், டீசலில் ஓடுகிற கார்களாகவே இருக்கும்.

பெயர் மாற்றம் தேவையில்லை

சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் பெயரை  மாற்றுவதினால் என்ன ஆகிவிடப் போகிறது? நாம் தயாரிக்கும் பொருள் வாடிக்கையாளர்களிடம் திருப்தியை ஏற்படுத்தும் விதத்தில் நல்ல தரத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்’’ என்று பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொன்னார் சுரேஷ் கிருஷ்ணா.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தை மிகத் திறமையாக நடத்திவந்த சுரேஷ் கிருஷ்ணாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!

- ஏ.ஆர்.குமார்

படம்: பா.காளிமுத்து

ஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது!”

சுந்தரம் ஃபாசனர்ஸில் புதிய தலைமுறை!

சு
ந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக வழிநடத்திவந்த சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இப்போது 81 வயது. தனது நிறுவனத்தைத் தனது வாரிசுகளான புதிய தலைமுறையிடம் தந்துவிட்டு, கெளரவத் தலைவராக ஆகியிருக்கிறார் அவர்.

சுரேஷ் கிருஷ்ணாவின் மகள் ஆரத்தி கிருஷ்ணா, 2006-ம் ஆண்டிலேயே இந்த நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்பு இணை நிர்வாக இயக்குநராகி, தற்போது இந்த நிறுவனத்தின் எம்.டி-யாக ஆகியிருக்கிறார்.  சுரேஷ் கிருஷ்ணாவின் மூன்றாவது மகளான அருந்ததி கிருஷ்ணா, கடந்த 2013-ல் இந்த நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநராகப் பதவியேற்றார். தற்போது இந்த நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக ஆகியிருக்கிறார்.இந்தப் புதிய தலைமுறையின் நிர்வாகத்தில் சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனம் இன்னும் சிறப்பான வெற்றிகளைப் பெறும் என்பதில் சந்தேகமி்ல்லை.