Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 20

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 20

Published:Updated:
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?

சென்னையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாவதற்கும், பெரிய அளவில் வளர்வதற்கும் ஏற்ற சூழல் உள்ளதா, சென்னையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப்கள் என்னென்ன விஷயங் களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என சென்னை ஐ.ஐ.டி-யின் மேலாண்மைத் துறை பேராசிரியர் தில்லை ராஜனிடம் கேட்டோம். இவர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர். 

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?

ஸ்டார்ட்அப்களுக்கு அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்குகிறதா?

‘‘முதலில் மத்திய அரசு மட்டும்தான் ஸ்டார்ட்அப்களுக்காக உதவி செய்து வந்தது. தற்போது பல்வேறு மாநில அரசு களும் ஸ்டார்ட்அப்களுக்காக உதவ முன் வந்துள்ளன. இன்று 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஸ்டார்ட்அப்களுக்கென பிரத்யேகமாக பாலிசிகள் வைத்திருக் கின்றன. மத்திய அரசின் விவசாயத் துறை, ஜவுளித் துறை, சமூகநலத் துறை போன்றவை ஸ்டார்ட்அப்களோடு இணைந்து செயல்பட்டு, சமூக மாற்றங்களுக்கான பணிகளை ஸ்டார்ட் அப்களிடம் ஒப்படைக்கின்றன. ஸ்டார்ட் அப்களை சமூக வளர்ச்சிக்காகப் பயன் படுத்த முடியும் என்பதை அரசாங்கங்கள் உணர்ந்ததன் விளைவுதான் இது.”

இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் தமிழக ஸ்டார்ட்அப்களின் நிலை என்ன?


“தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் ஸ்டார்ட்அப்கள் இயங்கு கின்றன. திருச்சி, கோவை போன்ற நகரங் களில் மிகக் குறைந்த அளவில்தான் ஸ்டார்ட்அப்கள் இருக்கின்றன. பிற மாவட்டங்களில் சுயதொழில் முனைவர்கள் நிறையபேர் இருக்கின்றனர்; ஆனால், ஸ்டார்ட் அப்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம், சென்னையின் தொழில்நுட்ப வளர்ச்சிதான். தொழில் நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்கள் அனைத்துமே சென்னையில்தான் இயங்கு கின்றன. இதுபோன்ற ஸ்டார்ட்அப்களுக்கு வளர்ச்சி அதிகம். மிகக் குறைந்த ஆண்டு களிலேயே டெக்னாலஜி ஸ்டார்ட்அப்கள் நன்கு வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளன. இதுபோன்ற ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய நிறைய முதலீட்டாளர்கள் உள்ளனர். ஆனால், விவசாயம், உணவு, தொழில் துறை போன்றவை சார்ந்து இயங்கும் ஸ்டார்ட் அப்களுக்கு குறைவான முதலீட்டாளர்களே இருக்கின்றனர். திருச்சி, கோவை போன்ற நகரங்களில் இயங்கிவரும் பிற துறை சார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு இதனால்தான் அதிக முதலீடு கிடைப்பதில்லை. மேலும், இசை, உணவு, ஹெல்த்கேர் எனப் பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப்கள் இயங்கினாலும், அவை அத்தனையும்  தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இயங்கும். எனவேதான், தமிழக ஸ்டார்ட்அப்களின் தலைநகரமாக சென்னை இருக்கிறது.”

சென்னையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்று சந்திக்கும் சவால்கள் என்னென்ன?

“டெல்லி, மும்பை போன்ற நகரங்களை ஒப்பிடும்போது இங்கே நிர்வாகச் செலவுகள் மிகவும் குறைவு. இது பெரிய ப்ளஸ். அதேசமயம், சரியான திறமைகளைக் கண்டறிவது இங்கே கடினமான விஷயமாக இருக்கிறது. பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களுடன் ஒப்பிட்டால், இங்கு திறமையான வர்களுக்குப் பற்றாக்குறை இருக்கிறது. மேலும், பிற பகுதிகளில் இருந்து இங்கே வேலைக்காக வருபவர்கள் மிகவும் குறைவு. ஆனால், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் நிறைய பேர் வேலைக்குக் கிடைப்பார்கள்.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரமா சென்னை?

தற்போது ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக ஹைதராபாத் இருக்கிறது. காரணம், அந்த மாநில அரசு இதற்காக அளிக்கும் முக்கியத்துவம்தான். ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்ற நகரம் என்றே ஹைதராபாத்தைக் குறிப்பிடு கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இவையெல்லாம் நடப்பதில்லை. சென்னையில் இருக்கும் ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சி இங்கிருக்கும் பல்கலைக்கழகங்கள், தனியார் முதலீட்டாளர்களால் நடந்தது தான். இதில் மாநில அரசின் பங்கு மிகவும் குறைவு. அந்த வகையில், தமிழக அரசும் ஸ்டார்ட்அப்களை இங்கே வரவைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். சென்னை ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற நகரம் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும். அரசின் ஒத்துழைப்பைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சென்னை நகரம் ஸ்டார்ட் அப்களைத் தொடங்கவும், நடத்தவும் சிறந்த இடம்தான்.”

இருந்தும் இங்கே நிறைய ஸ்டார்ட் அப்கள் தொடர்ந்து தோல்வி அடைகின்றனவே?

“தோல்வியடையும் ஸ்டார்ட் அப்கள் சென்னையில்தான் அதிகம் என்று சொல்ல முடியாது. மற்ற நகரங்களோடு ஒப்பிடும்போது, இந்த விகிதம் சென்னையில் குறைவு. இருந்தாலும், இங்கு தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்கள் தோல்வியில் முடிவதற்கு சில காரணங்கள் உண்டு.

முதலாவது, சரியான பிசினஸ் மாடல் இல்லாதது; ஒரு நிறுவனத்தின் பிசினஸ் மாடல் வாடிக்கையாளர்களுக்கும், சந்தைக்கும் ஏற்ற வகையில் இல்லையெனில், அது வெற்றி பெறுவது கடினம். எனவே, சரியான பிசினஸ் மாடலைக் கண்டு பிடித்துவிட்டால், முதலீடுகளுக்கோ, நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கோ பிரச்னை இருக்காது.

இரண்டாவது, போதுமான கால அளவு; ஒரு புதிய ஸ்டார்ட்அப் சந்தையில் நிலைக்க வேண்டுமென்றால், அதற்கு சில காலம் தேவைப்படும். அந்தக் காலஅளவு இங்கிருக்கும் நிறைய நிறுவனங்களுக்குக் கிடைப்பதில்லை.
 
மூன்றாவது காரணம், இங்கிருக்கும் முதலீட்டாளர்களின் தன்மை. சென்னையில் இருக்கும் நிறைய முதலீட்டாளர்கள் பாரம்பர்ய நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள். அவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் களில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.

உதாரணமாக, பெங்களூரில் ஒருவர் டெக் ஸ்டார்ட்அப் தொடங்குகிறார் என்றால், அவரால் இரண்டு வருடங் களுக்குள் ஆரம்ப முதலீட்டைத் திரட்டிவிட முடியும். ஆனால், சென்னையில் சராசரியாக மூன்று ஆண்டுகள் தேவைப்படும். அதேபோல, பெங்களூரில் கிடைக்கும் முதலீட்டை விடவும், இங்கிருக்கும் நிறுவனங்களுக்கு முதலீடு குறைவாகவே இருக்கும்.’’

ஒரு ஸ்டார்ட்அப்பைத் தொடங்குவதற்கு முன்பு, ஒருவர் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் என்னென்ன?

“சமீப காலமாக ஏஞ்சல் முதலீட்டாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இன்னொரு புறம் ஸ்டார்ட்அப்களும் அதிகரித்து வருகின்றன. இவர்கள் இருவருக்கும் பாலமாக இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்கள் இருக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டைத் திரட்டுவதுதான் இவர்களின் பணி.

ஆனால், இதில் இருக்கும் ரிஸ்க்கின் காரணமாக சமீப காலமாக ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு ஸ்டார்ட் அப்பிற்கு ஆரம்பத்தில் சராசரியாக இரண்டு கோடி வரை பணம் தேவைப்படும். உதாரணத்திற்கு, ஒரு பெரிய நிறுவனத்திற்கு ரூ.15 கோடி ரூபாய் தேவை என்று வைத்துக்கொள்வோம். ஸ்டார்ட்அப்களுக்காக ஒரு கோடி ரூபாய் திரட்டுவதற்கான பணிச்சுமையும், இந்த நிறுவனத்திற்கு 15 கோடி ரூபாய் திரட்டுவதற்கான பணியும் ஒன்றுதான். எனவே, ஸ்டார்ட்அப்களுக்கு அவர்கள் முன்னுரிமை தருவதில்லை. மேலும், ஆரம்ப காலத்தில் ஒரு முதலீட்டாளரிடம் செல்வதற்கு முன்பு ஸ்டார்ட் அப்பின் மதிப்பு, நிறுவனத்தின் விரிவான திட்டங்கள் பற்றியெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும். இதுவும் பலருக்குத் தெரிவதில்லை.

அடுத்த சிக்கல், சரியான முதலீட்டாளரைக் கண்டறிவது. ஒரு நிறுவனத்திற்கு முதலீடு வாங்கவேண்டுமென்றால், பல நூறு முதலீட்டாளர்கள் நம் முன்னால் இருப்பார்கள். அவர்களில் சரியானவர்களைக் கண்டறிந்து ஐடியாவைச் சொன்னால்தான் முதலீடு கிடைக்கும்’’ என ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதில் இருக்கும் பல்வேறு சிக்கல்களைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் பேராசிரியர் தில்லை ராஜன்.

புதிதாக ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குகிறவர்கள், இந்த விஷயங்களைக் கருத்தில்கொள்வது நல்லது!

- ஞா.சுதாகர்,

படங்கள்: ப.பிரியங்கா

ஸ்டார்ட்அப்களுக்கு வழிகாட்டும் புதிய நிறுவனம்!

ஸ்
டார்ட்அப் நிறுவனங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பேராசிரியர் தில்லை ராஜன் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். தொழில்நுட்பத்தின் துணையுடன் தொழில்முனைவருக்கு சரியான முதலீட்டாளரைப் பரிந்துரைப்பதுதான் இதன் நோக்கம். ‘‘எங்கள் இணையதளம் மூலமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர் வெகுஎளிதில் ஒரு சரியான முதலீட்டாளரைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்குமுன்பு செய்யவேண்டிய காரியங்கள் குறித்தும் ஆலோசனை அளிக்கிறோம். டெக்னாலஜி துணையுடன் செயல்படுவதால், இந்தியாவில் எங்கிருந்து ஸ்டார்ட்அப் தொடங்கினாலும், எங்களால் உதவமுடியும். https://www.ynos.in/ என்ற முகவரியில் இதுகுறித்த விவரங்களைக் காணலாம்” என்கிறார் அவர்.