Published:Updated:

வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!

வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!
பிரீமியம் ஸ்டோரி
வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!

சித்தார்த்தன் சுந்தரம்

வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!

சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!
பிரீமியம் ஸ்டோரி
வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!

மாஹா, அமெரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதி யிலிருக்கும் மாநிலமான நெப்ராஸ்காவில் இருக்கும் ஒரு சிறுநகரம். வழக்கமாகத் தூங்கி வழிந்துகொண்டிருக்கும் இந்த நகரம் வருடத்தில் இரண்டுமுறை மட்டும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். முதலாவது, இங்கு ஆண்டுதோறும் நடக்கும் `காலேஜ் வோர்ல்டு சீரிஸ்’ என அழைக்கப்படும் பேஸ்பால் டோர்ன்மென்ட். இந்தப்  போட்டிக்கு சுமார் மூன்று லட்சம் ரசிகர்கள் இந்த நகரத்துக்கு வருவார்கள். இரண்டாவது, வாரன் பஃபெட்டைத் தலைவராகக்கொண்டு இயங்கிவரும் `பெர்க்‌ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway)’ நிறுவனம் நடத்தும் வருடாந்திரப் பங்குதாரர்கள் பொதுக்கூட்டம்.  

வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!

கடந்த மே  3 முதல் 5-ம் தேதி வரை இந்த நிறுவனத்தின் 39-வது வருடாந்திரப் பங்குதாரர்கள் கூட்டம் இங்கு நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து சுமார் 40,000 பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் வழக்கம்போல நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபெட்டும் (87 வயது), துணைத் தலைவர் சார்லி முங்கரும் (Charlie Munger, 94 வயது) கலந்துகொண்டனர். வாரன், மற்ற 12 இயக்குநர்களையும் (இதில் பில்கேட்ஸும் ஒருவர்) கூட்டத் தினருக்கு அறிமுகப்படுத்தியபின் பங்குதாரர்களிடம் பேசியதுடன், அவர்களது கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். அவற்றில் முக்கியமான அம்சங்கள் இனி...

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்

‘`அமெரிக்காவும் சீனாவும் நீண்ட காலத்துக்கு உலகின் சூப்பர் பவர்களாக இருக்கப்போகின்றன. 1970-களில் அமெரிக்காவின் ஏற்றுமதி, இறக்குமதி அதன் ஜி.டி.பி-யில் 5 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இப்போது இறக்குமதி 15 சதவிகிதமாகவும், ஏற்றுமதி 12 சதவிகிதமாகவும் இருந்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கிடையே பதற்றம் இருக்கவே செய்யும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!ஆனால், வர்த்தகத்தைப் பொறுத்த வரையில், எனக்கும் லாபம் - உனக்கும் லாபம் என்கிற (win-win situation) சூழலே இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு நாடு கொஞ்சம் அதிகமாக வெற்றி பெறவேண்டும் என நினைக்கும்பட்சத்தில் அது பிரச்னையாக மாறும். `8’ ல் முடியும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனக்கு 88 வயதாகப் போகிறது. சீனாவைப் பொறுத்தவரை, `8’ ஒரு ராசியான எண் ஆகும்.  

பிட்காயின் வகை க்ரிப்டோ கரன்சிகள்


க்ரிப்டோ கரன்சிகளின் முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும். அதற்கென்று ஒரு `இயல்பான மதிப்பு (Intrinsic value)’ இல்லை. இதுவும் தங்கம் போல, ஒரு `உற்பத்திச் சொத்து’ இல்லை (not a productive asset). அதாவது, க்ரிப்டோ கரன்சியின் மதிப்பு என்பது ஒருவர் அதை வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்க விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது. அத்துடன், தனக்கு விசேஷ அறிவு அல்லது திறமை இருப்பதாகத் தவறாக நினைத்துக்கொண்டிருப்பவர் களுக்கும், சாதாரணத் திறமை கொண்ட வர்களுக்கும் மட்டுமே இது கவர்ச்சியாகத் தெரியும்.

பாலினச் சமத்துவம்

பெர்க்‌ஷயர் குழுமத்தில் இருக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். இப்போது சுமார் ஆறு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருக்கிறார்கள். பொதுவாக, கடந்த காலங்களில் பெண்களுக்கு நியாயமான முறையில் பொறுப்புகள் கொடுக்கப்பட வில்லை. ஆனால், இதையே நாம் சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

ஆப்பிள் பை-பேக்

ஆப்பிள் நிறுவனத்தில் எங்கள் பங்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். 2017-ம் ஆண்டு இறுதியில் 28.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்திருந்தோம். தற்சமயம் 40.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறோம். ஆப்பிள் நிறுவனம் சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்ளத் திட்டமிட்டிருப்ப தாக அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் சுமார் 5% எங்களிடம் இருக்கிறது. நாளடைவில் இது 6 அல்லது 7 சதவிகிதத்தைத் தொடக்கூடும். பொது வாக, நாங்கள் எல்லா `பை-பேக்’ திட்டங்களையும் ஆமோதிப்பதில்லை. ஆப்பிள் நிறுவனம் நல்ல விலையில், கையகப்படுத்தலுக்கான இலக்கைக் கண்டறியுமா என்பது சந்தேகமாகவே  இருக்கிறது.

ஏன் மைக்ரோசாஃப்டில் முதலீடு செய்யவில்லை?

மைக்ரோசாஃப்டில் நாங்கள் முன்பு முதலீடு செய்யாதது எங்களது `முட்டாள்தனம்’தான். நாளடைவில் பில்கேட்ஸுடன் நட்பு வளர்ந்ததோடு, அவர் பெர்க்‌ஷயரில் ஒரு இயக்குநராகவும் ஆனபின் அதில் முதலீடு செய்வதில்  இன்னும் அதிகமாகத் தள்ளியே இருக்கிறோம்.

சீனா குறித்துப் பேசிய வாரன் பஃபெட், இந்தியா குறித்து ஒரு வரிகூட இந்தக் கூட்டத்தில் பேசவில்லை. இந்தக் கூட்டத்திலும் தனக்குப்பின் பெர்க்‌ஷயர் குழுமத்தின் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதை பஃபெட் அறிவிக்கவில்லை!

கேண்டி தயாரிக்கும் எலான் மஸ்க்

போ
ட்டி நிறுவனங்களிடமிருந்து சந்தைப் பங்கையும், நீண்டகாலத்துக்கான லாபத்தையும் பாதுகாக்கக்கூடிய திறனைக் கொண்ட போட்டி அதிகமில்லாத நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வதை (moat investing) குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவரும் வாரனை டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் வாரன் பங்குதாரர்களிடம், ‘`எலான் எப்போதும் அவரது நிறுவனத்தை மேம்படுத்தவும், சந்தை நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் உழைப்பார். தொழிலின் சில பிரிவுகளை எலான் தலைகீழாக மாற்றவும் கூடும். ஆனால், கேண்டி (candy) வணிகத்தைப் பொருத்தளவில் (இது அதிகப் போட்டி நிறைந்த தொழிலாகும்) அவர் எங்களோடு போட்டியிடமாட்டார் என நினைக்கிறோம்’’ என்று பதில் சொல்ல, அதற்கு எலான், ‘‘நான் கேண்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க விருக்கிறேன்; அது உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்’’ என நக்கலாக ட்வீட் செய்தார். எலானின் ட்வீட்டை பின்பற்றுவர்கள் இது கிண்டலாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கையில், ‘`நான் இந்த விஷயத்தில் சூப்பர், சூப்பர் சீரியஸ்’’ என ட்வீட் செய்திருக்கிறார். இனிவரும் நாள்களில் கேண்டி தயாரிப்பில் எலான் இறங்குவாரா என்று பார்ப்போம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism