Published:Updated:

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

Published:Updated:
இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

தியம் 2 மணிக்கு ஜென்னிக்குப் போன் செய்தாள் மது. “ஜென்னி, இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு சுவாதி அவார்ட் வாங்கற ஃபங்ஷன் இருக்கு. நான் உன் வீட்டுக்கு வர்றேன். அப்படியே சேர்ந்து போய்டுவோம்’’ என்றாள்.  

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

மதுவும், ஜென்னியும் விருது கொடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது மாலை 5.45 மணி ஆகியிருந்தது. இருவரும் அவரவர் சீட்டில் உட்கார்ந்தனர்.

‘‘என்ன ஜென்னி, உன்னோட ஜாப் எப்படி இருக்கு?” என்றாள் மது.

“சூப்பரா இருக்கு. ஆனா, இதோட பத்து கம்பெனி மாறிட்டேன். இப்பதான் சுவாதியோட கம்பெனியில ஜாயின் பண்ணினேன். நீகூட டப்பர்வேர் புராடெக்ட் எடுத்து பிசினஸ் பண்றேன்னு சொன்னியே” என்றாள் ஜென்னி.

மது சிரித்துக்கொண்டே, “அது என்னோட ஃபர்ஸ்ட் பிசினஸ். அதுக்குப்பிறகு நிறைய ஜாப் ட்ரைப் பண்ணினேன். ரெண்டு, மூணு பிசினஸ் பண்ணினேன். எதுவுமே சரியா வரலை. இப்போதைக்கு ஏதோ ஒரு ஜாப் போயிட்டிருக்கேன். நீ நல்லா படிச்சு அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ணி, இப்ப நல்ல ஜாப், நல்ல லைஃப்ன்னு செட்டில் ஆயிட்ட. நான் அரியர்ஸ் வச்சு,  கிளியர் பண்ணி டிகிரி வாங்கினேன், அதனாலதான் இப்ப அல்லாடிகிட்டிக்கேன்” என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!ஜென்னி சிரித்துக்கொண்டே, “அப்படி பார்த்தா, நம்ம சுவாதி கூடதான் ஒழுங்கா படிக்கல. உன்னமாதிரி அரியர்ஸ் வச்சா. அவ எப்படி இப்ப சிறந்த பெண் தொழிலதிபர் விருது வாங்கற அளவுக்கு வந்துருக்கா” என்றாள்.

மது கொஞ்சம் யோசித்துவிட்டு, “அதுதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. அதைப்பத்தி அவகிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக் கணும்ங்கற ஆர்வத்துலதான் வந்திருக்கேன்” என்றாள்.   

நிகழ்ச்சி தொடங்கியது, விருதுகள்  வாங்கியவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விருதினைப் பெற்றுக்கொண்டபின் தனது அனுபவத்தைச் சொன்னாள் சுவாதி. விழா முடிந்ததும் சுவாதி, மது, ஜென்னி மூவரும் டின்னருக்குச் சென்றனர்.

மது ஆர்வத்துடன் கேட்டாள். “சுவாதி, நீயும் என்னையப் போலவே அரியர்ஸ் வச்சு படிச்ச. ஆனா, நீ எப்படி இந்தளவுக்கு பிசினஸ்ல சக்சஸ் பண்ணி விருது வாங்கினே?” என்று கேட்டாள். 

சுவாதி விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தாள். “ நானும் உன்னை மாதிரிதான். பெரிய அளவுக்கு மார்க் எடுக்கலை. காலேஜ் முடிஞ்சபிறகு வேலை தேடினேன். சரியா கிடைக்கலை. பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினேன்.  அதிலயும் பெயிலியர்தான். அப்புறம் மேரேஜ் ஆயிடுச்சு. ஆனாலும், எனக்கிருந்த ஆர்வம் குறையலை. திரும்பவும் சின்ன சின்னதா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினேன். எல்லாமே பெயிலியர் ஆயிடுச்சு. 

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

ஏன் நம்மால வெற்றி பெற  முடியலை, ஏன் நம்மால வாழ்க்கையில ஜெயிக்க முடியலைன்னு யோசிச்சேன். என்ன விஷயங்களை நான் மாத்திக்கணும், என்ன விஷயங் களை நான் கத்துக்கணும்னு ஒரு லிஸ்ட்டைத்  தயார் செஞ்சேன். நான் சராசரியான வாழ்க்கையை வாழணுமா, இல்ல அதுக்கும் மேல சாதிக்கணுமான்னு முதல்ல முடிவு செஞ்சேன். 

அதுக்கப்பறமும் நான் செஞ்ச பிசினஸ் சக்சஸ் ஆகல. அதுக்கான காரணத்தை பலரும் பல விதமா  சொன்னாங்க. ஆனா, எனக்கு என் கணவர் சப்போர்ட் இருந்ததால, என்னால துணிஞ்சு அடுத்தடுத்து முயற்சி செய்ய முடிஞ்சுது. இந்த விருதும் எனக்குக் கிடைச்சுது” என்று முடித்தாள்.

“வெறும் உழைப்பு மட்டும் பத்தாது. வெற்றி அடைய நிறைய யோசிச்சு, அதை பிளான் பண்ணி,  ஆரம்பிக்கணும்ன்னு புரியுது” என்றாள் மது.

“அதுமட்டுமல்ல மது. ஜென்னி மாதிரியான ஆளுங்களுக்கு இன்டெலிஜன்ஸ் எப்பவுமே அதிகமா இருக்குமாம்; ஆனா, அவங்க எப்பவும் ரிஸ்க்  எடுக்கத் தயங்குவாங்கன்னு ஒரு ரிசர்ச் சொல்லுது. அதனால அவங்களோட கேரியர்ல சக்சஸ் இருக்கும். ஆனா, நம்மை மாதிரி சராசரி ஆளுங்க ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டாங்க. காரணம், நமக்கு வேற ஆப்ஷன் எதுவும் இல்லை. தவிர, அதுலதான் நமக்கு  சந்தோஷம் அதிகமா இருக்கும்” என்றாள் சுவாதி.

‘‘அப்ப, தோல்வி வந்தா நாம தயங்கி நிக்கக்கூடாதுன்னு சொல்றியா சுவாதி?’’ என்று கேட்டாள் மது.

“கரெக்ட், ஒரு விஷயத்தை நாம சரியா புரிஞ்சுக்கணும். ஒண்ணு, ரெண்டு பெயிலியர் வந்தா, அடுத்து நாம யோசிக்க வேண்டியது, இந்த உலகத்துல என்ன இருக்கு, இந்த மக்களுக்கு என்ன தேவை, அதை  நாம எப்படி அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்க்கறது என்கிறதைப் பத்தி  யோசிக்கணும். மக்களைப் புரிஞ்சுக்கிறதுக்கு முயற்சி பண்ணணும். அப்ப நமக்கு இந்த உலகத்துல நாம ஜெயிக்கிறதுக்கான விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும். சக்சஸ் சுலபமா வந்து சேர்ந்துடும்” என்று முடித்தாள் சுவாதி.

 இந்தச் சம்பவத்திலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா? 

வெற்றி என்பது இவர்கள் மட்டும்தான் பெற முடியும்; இவர்கள் எல்லாம் பெற முடியாது என்றெல்லாம் இல்லை. அதை யார் வேண்டுமானாலும் பெறலாம். இதற்கு எமோஷனல் இன்டலிஜென்ஸ் சொல்லும் நான்கு விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1. தன்னைப் பற்றிய புரிந்துகொள்ளல் (Self Awareness) - நம்மை நாம் எந்தளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறோம்.

2. சுய நிர்வாகம் (Self Management) - நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று புரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவது.

3. சமூகம் பற்றிய புரிந்துகொள்ளல் (Social Awareness) இந்தச் சமூகத்துக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்வது

4. உறவு நிர்வாகம் (Relationship Management) - சமூகத்தின் தேவைக்கு ஏற்ற மாதிரி தொடர்ந்து செயல்பட்டு, நமக்கான விஷயங்களை மற்றவர்களிடமிருந்து பெறுவது. நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதன்மூலம், மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு வழங்குவதன் மூலமே  வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

இன்டலிஜென்ஸ் என்பது நீங்கள் பிறக்கும்போதே உங்களிடம் எவ்வளவு இருந்ததோ, அதே அளவுதான் கடைசி வரைக்கும் இருக்கும். ஆனால், எமோஷனல் இன்டலிஜென்ஸை நீங்கள் இந்த உலகத்தைப் புரிந்துகொள்வதன் மூலமாகவும், நிறையப் புத்தகங்களைப் படிப்பதன்  மூலமாகவும், மக்களிடம் பழகுவதன் மூலமாகவும் எவ்வளவு வேண்டுமானாலும்  அதிகரித்துக்கொள்ளலாம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் நீங்கள் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்தாலும் பரவாயில்லை, நிறைய அரியர்ஸ் வைத்து டிகிரி வாங்காமலே கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தாலும்  பரவாயில்லை.

ஆனால், நீங்கள் இந்த எமோஷனல் இன்டலிஜென்ஸை மட்டும் அதிகரித்துக்கொண்டு உங்களை மாற்றிக்கொண்டால், கண்டிப்பாக நீங்கள் சாதனையாளராக ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

(காலம் வெல்லும்)

படங்கள் : ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 20 - வெற்றிக்குத் தடையில்லை!

கவர்னர் பதவியை மறுத்த    ரகுராம் ராஜன்!

பே
ங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னராக நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார் என சமீபத்தில் வாட்ஸ்அப் களில் ஒரு தகவல் வைரலாக வலம் வந்தது. ஆனால், இந்தத் தகவல் தவறானது. பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜனின் பெயரைப் பரிசீலனை செய்யலாம் என ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை கருத்துத் தெரி வித்திருந்தது மட்டுமே உண்மை. ஆனால், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என ரகுராம் ராஜன்  சொல்லியிருப்பதன் மூலம், இந்த வாட்ஸ்அப் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் இந்தியாவுக்கு வாங்க ரகுராம்ஜி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism