Published:Updated:

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

பனை ஓலை விசிறி முதல் ஃபாரின்ஏ.சி வரை...

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

பனை ஓலை விசிறி முதல் ஃபாரின்ஏ.சி வரை...

Published:Updated:
அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

ந்து ரூபாய் மதிப்பு கொண்ட கடுகில் துவங்கி, காய்கறிகள், கட்டுமானப் பொருள்கள், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பர கார்கள் வரை விற்பனை ஆகும் ராமநாதபுரத்தின் வணிக மையமாகத் திகழ்வது சாலைத் தெரு. 

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

“ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளைத் தங்களின் ஆட்சி அதிகாரத்தில் வைத்திருந்த வர்கள் சேதுபதி மன்னர்கள். அவர்கள் ஆட்சிபுரிந்த அரண்மனையான ராமலிங்க விலாசத்தினை மையமாகக் கொண்ட ராமநாதபுரம் நகர் பகுதி, காலப்போக்கில் பரவலாக விரிவடைய தொடங்கியது. மன்னராட்சி முடிந்து மக்களாட்சி துவங்கி பல ஆண்டுகள் வரை ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகர் மதுரையில்தான் இயங்கி வந்தது. 83-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத் தலைநகராக உருவாக்கப்பட்டது. இந்த அனைத்துக் காலகட்டத்திலும் ராமநாதபுரத்தின் வியாபாரப் பகுதியாகப் பரிணமித்து வருவது சாலைத் தெரு ஆகும்.

நூறு ஆண்டுகளுக்குமுன் சேதுராஜன் பேட்டை என்று அழைக்கப்பட்ட பகுதி, இன்று நாடார் பேட்டையாகவும், பேட்டை வீதி என்றழைக்கப்பட்ட பகுதி சிகில்ராஜ வீதியாகவும், கோட்டை வாசல் விநாயகர், முருகன் கோயில் பகுதிகள் காய்கறி, மிளகாய் வத்தல் கமிஷன் மண்டிகளாகவும் மாறிவிட்டன.

ஆயிரம் அடி நீளமும், நானூறு அடி அகலமும் கொண்ட போர் வீரர்களின் கவாத்து மைதானம் தங்க வணிகம் நடைபெறும் காசுக் கடை பஜாராகத் திகழ்கிறது. ஆலன் என்ற ஆங்கிலேயர் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) நடத்திய  இடம், ஆலங்கச்சேரி என்று பெயர் மருவி, தற்போது அலங்காச்சேரி தெரு என்று அழைக்கப்படுகிறது’’ என்கிறார் வரலாற்று ஆர்வலர் ‘வைகிங்’ கருணாநிதி.

முன்பெல்லாம் திருமண சீர் வரிசை, கட்டுமானப் பொருள்கள், நல்ல ஆடைகள், வாகனங்கள், தங்க ஆபரணங்கள் என எல்லாவற்றையும் மொத்தமாக வாங்க வேண்டும் எனில், ராமநாதபுரத்து மக்கள் மதுரைக்குத்தான் செல்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக அந்த வரலாற்றை மாற்றிய பெருமை ராமநாதபுரத்தின் வியாபாரக் கேந்திரமாகத் திகழும் சாலைத் தெருவுக்கு உண்டு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

அண்ணா சாலை என நகராட்சியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், படித்தவர் களும், பாமரர்களும் கூறும் அடை யாளம் சாலைத் தெரு என்பது தான். கிழக்கே ராமேஸ்வரம் தொடங்கி, வடக்கில் திரு வாடானை, ஆர்.எஸ். மங்கலம் மேற்கே பரமக்குடி, தெற்கே சாயல்குடி, கடலாடி என இந்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தங்களுக்குத் தேவை யான ஊசி முதல் கார் வரை வாங்குவதற்குத் தேர்வு செய்யப் படும் இடம் இந்தச் சாலைத் தெருதான். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை இந்தப் பகுதியில் வணிகம் நடக்கும்  என்கிறார்கள்.  

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

ராமநாதபுரத்தின் அடையாள மாகத் திகழ்வது காரம் நிறைந்த குண்டு மிளகாய். இதற்கெனத் தனி மண்டிகள் அதிகளவில் உள்ளன என்கிறார் ராமநாதபுரம் வர்த்தக சபைத் தலைவர் ஜெகதீசன்.

‘‘சாலையோரம் சாக்கு விரித்து கடலை, காய்கறிகள், பழங்கள், பூ, பூண்டு, பனங்கிழங்கு, கீரை, நவதானியப் பொருள்கள், மிளகாய், காலணிகள், ரிப்பன், ஸ்டிக்கர் பொட்டு, சேஃப்டி பின், விளையாட்டுப் பொருள்கள், செல்போன்கள், சார்ஜர்கள், இடுப்பு பெல்டுகள், அழகுசாதனப் பொருள்கள் என எல்லாவற்றையும் கூறுகட்டி விற்கும் சாலையோர வியாபார இடமாக உள்ள சாலைத் தெருவில் யானைத் தந்தம், புலிப்பல் தவிர, எல்லாப் பொருள்களையும் வாங்க முடியும்.

சாலைத் தெருவிலும், அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கண்ணாடி மாளிகைகளுக்குள் தொங்கும் தங்க ஆபரணங் களையும், தரையில் கொட்டி வைக்கப்பட்டிருக் கும் மீன்களையும் ஒரே இடத்தில் வாங்க முடியும்’’ என்றார் இங்கு பெட்டிக்கடை நடத்திவரும் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி.

சாலைத் தெரு அபிராபி ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் சுதா, ‘‘ராமநாதபுரத்தில் தொழில் துவங்க வருபவர்களும், அரசுப் பணிக்கு வருபவர்களும் முதலில் ஒருவித அச்சத்துடனேயே வருவது வழக்கம். ஆனால், இங்கு வந்து விட்டால் அவர்கள் வேறு இடத்திற்குச் செல்ல விரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு இங்கு நல்ல வியாபாரம் நடக்கும்.   

அங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் இருப்பதால், இந்தப் பகுதியில் உள்ள வர்த்தக மையங்களில் எல்லா நாடுகளைச் சேர்ந்த எல்லாப் பொருள்களையும் வாங்க முடியும். பனை ஓலை விசிறியில் இருந்து ஃபாரின் ஏ.சி வரையிலும் இங்கு வாங்க முடியும்.

மேலும், ராமநாதபுரத்தின் ஸ்பெஷலான கருவாடு, மீன், பனை ஓலை பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள், கட்டில், மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், மங்கள விழாக்களுக்குத் தேவையான மலர் மாலைகள், மஞ்சள், குங்குமம், பொன் ஆபரணங் கள், பருத்தி துணி முதல் பட்டுச் சேலைகள் வரை இங்கு விற்பனை யாகி வருகிறது.

நகைக் கடைகள் நிறைந்த பகுதி காசுக்கடை பஜார் என அழைக்கப் படுகிறது. மின் சாதனப் பொருள் கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களை இங்கே ஒரே இடத்தில் வாங்கலாம். ரெடிமேட் ஆடைகளுக்கும், ஆபரணங்களுக்கும் தனித்தனி யாகப் பெரிய கடைகள் பல இங்கு உள்ளன. அலங்காரம் நிறைந்த ஹோட்டல்கள், பேக்கரிகள்  உள்ளிட்ட புதுமைகளோடு, தள்ளுவண்டி யில் விற்பனை யாகும் பாரம்பர்ய கம்பு, கேப்பைக் கூழ், பருத்திப் பால்  உள்ளிட்ட பழைமைக்கும் பெயர்போனது  இந்த வணிகச் சாலை’’  என்று ராமநாதபுரத்தின் பெருமை பேசுகிறார் அவர்.

ராமநாதபுரத்துக்குச் செல்கிற வர்கள் சாலைத் தெருவுக்கு ஒருமுறை சென்று பார்த்தால், அதன் சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் புரியும்!

 -இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

மனம் தேடும் அடைச்ச மிளகாய்! 

ரா
மநாதபுரம் என்றாலே மிளகாய்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குக் காரம் நிறைந்த மிளகாய் ரகங்கள் ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமப்புறப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. இவற்றைப் பாதுகாத்து, உரிய விலைக்கு விற்பனை செய்யும் வகையில் மிளகாய் வத்தல் சேமிப்புக் கிடங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் ‘அடைச்ச மிளகாய்’ என்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. காய்ந்த மிளகாயினைக் கீறி அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக மல்லி, சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவை கலந்த மசாலாப் பொடியினை மிளகாயினுள் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிட்டால், கொள்ளை ருசி. மினி அஞ்சரைப் பெட்டியாகத் திகழும் இந்த ‘அடைச்ச மிளகாய்’ ராமநாதபுரத்தின் ஸ்பெஷல். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism