Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் டிரேடர்களுக்கு ஏதுவான விலை நகர்வைக் கொண்டுள்ளது. பெரும்பான்மை யான நேரங்களில் ஒரு திசையில் நகர்வதைப் பார்க்க முடிகிறது. அதாவது, ஏற்றம் என்று வரும்போது தொடர்ந்து சில நாள்கள் ஏறுவதும், இறக்கம் என்று வந்தால், அதுவும் தொடர்ந்து சில நாள்கள் இறங்குவதும் நிகழ்கிறது.  அதனால்தான் இது டிரேடர்களுக்கு அதிக வியாபார வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய கமாடிட்டியாக உள்ளது.
   
முந்தைய வாரம் சொன்னது... “மென்தா ஆயிலின் முந்தையத் தடைநிலையான 3125 தற்போது முக்கிய ஆதரவாக மாறலாம். மேலே 1380 உடனடித் தடை நிலை. அதற்கு மேலே 1396 என்பது மிக வலிமையான தடை நிலை.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில் ஓரளவுக்குத் தங்கத்தைப் போலவே ஒரு வாரம் ஏற்றம், அடுத்த வாரம் இறக்கம் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது.   முந்தைய வாரத்தில் மென்தா ஆயில் ஏற்றத்தின் பாதையில் இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாள்கள் விலை ஏறியே முடிந்து வந்தது. அதற்கு அடுத்த வாரம் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்துவந்தது. அதன்பின் விலை ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.  சென்ற வாரம் திங்களன்று ஆரம்பத்திலேயே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 3125-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்தது. திங்களன்று 1347 என்ற நிலையில் சற்றே உயர்ந்து துவங்கினாலும், அடுத்து அந்த நாள் முழுவதும் ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வந்தது என்றே சொல்லலாம்.  நாம் கொடுத்திருந்த 1325 என்ற எல்லையை உடைத்து இறங்கியது மட்டுமல்லாமல்,  இன்னும் கீழே வலிமையாக இறங்கி  1279 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொட்டு,  அதன் அருகிலேயே 1280 என்ற புள்ளியில் முடிந்தது.

செவ்வாயன்று ஒரு கேப்டவுனில் துவங்கி, அதாவது 1274-ல் துவங்கி, பின் மெள்ளமெள்ள ஏறி அதிகபட்சமாக 1314 என்ற எல்லையைத் தொட்டது. ஒரு பலமான இறக்கம் தடுக்கப் பட்டதாக எடுத்துக்கொள்ள லாம். அதன்பின் புதனன்று 1314 என்ற புள்ளியிலிருந்து ஏற்றத்தைக் கொடுத்து அதிக பட்சமாக 1348 என்ற புள்ளி யையும் தொட்டது. ஆனால், முடியும்போது சற்றே இறங்கி 1338-ல் முடிந்துள்ளது.   ஆனாலும், அடுத்து வந்த நாள்கள் இந்த ஏற்றத்திற்குத் துணை போகவில்லை.  வியாழனன்று 1327-ல் துவங்கி 1294-ல் முடிந்தது.  வெள்ளியன்று அந்த இழப்பை மீட்டு 1324-ல் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் தற்போது 1280 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே 1340 தடை நிலை ஆகும்.  இதை உடைத்தால் நல்ல ஏற்றம் வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன்

காட்டன் விலையானது, கடந்த ஐந்து முதல் ஆறு வாரங்களில் கணிசமான அளவிற்கு உயர்ந்தும், இறக்கம் வரும்போதும் கணிசமான அளவிற்கு இறங்கியும் வியாபாரம் ஆகி வருகிறது.  அதாவது ஒரு அகண்ட இடைவெளியில் வியாபாரம் ஆகி வருகிறது. கீழே 20340 என்ற எல்லையைப் பல மாதங்களாக ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 21000 என்ற எல்லையை மிகப்பெரிய தடை நிலையாகவும் கொண்டுள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் கடந்த வாரம் இறங்கினாலும், 20580 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த எல்லை தக்கவைக்கப்பட்டால் ஒரு ஏற்றம் வரலாம். மேலே 20840 என்பது உடனடித் தடை நிலையாகும்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன் சென்ற வாரம்,  திங்களன்று வலிமையான இறக்கத்தில் இருந்தது. நாம் கொடுத்த ஆதரவு எல்லை 20580-ஐ உடைத்து இறங்கி, குறைந்தபட்சப் புள்ளியான   20350-ஐ தொட்டது.  இருந்தாலும் முடியும்போது 20500-ல் முடிந்து உள்ளது. அடுத்த நாள் 20470 என்ற புள்ளியில் துவங்கியது ஒரு கேப் டவுன் என்றும் சொல்லலாம். அதன்பின் நன்கு இறங்கி, முந்தைய நாளின் குறைந்தபட்சப் புள்ளி யான 20350 என்ற புள்ளிக்கு அருகில் இறங்கி மீண்டும் ஏறி உள்ளது.  அடுத்து புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று இறக்கம் அவ்வப்போது வந்தாலும் மெள்ள மெள்ள ஏறி முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? தற்போது 20620 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும்,  உடைத்தால் முக்கிய ஆதரவான 20350 வரையும் இறங்கலாம்.  மேலே 21000 என்பது மிக வலிமையான தடை நிலையாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism