Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் மினி

முந்தைய வாரம் தங்கத்தில் வாங்கி விற்பவர்களுக்குத் தங்கமான வாரமாக இருந்தது என்று கூறினேன்.  சென்ற வாரம் அதற்கு மாறாக விற்று வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான வாரமாக அமைந்தது.

சென்ற இதழில் சொன்னது... “தங்கம் 31575 என்ற உடனடித் தடைநிலையை உடைத்தால் மீண்டும் மிகப்பெரிய ஏற்றம். உடனடி ஆதரவு 31340 ஆகும்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம், நாம் கொடுத்திருந்த தடையைத் தாண்ட முடியாமல் கீழ்நோக்கி திரும்பி பலமாகவே இறங்கி உள்ளது. சென்ற வாரம் திங்களன்று 31450 என்ற எல்லையில் துவங்கி ஏறி, 31544 வரை சென்று 31496-ல் முடிந்தது. முக்கியத் தடை நிலையான 31575-ஐ தாண்ட முடியாமல் திணறியது. கீழே ஆதரவான 31340-ஐ செவ்வாயன்று உடைத்தது. செவ்வாயன்று 31425 என்ற புள்ளியில் துவங்கி, சற்றே ஏறி 31499 வரை சென்று, ஏற முடியாமல் பலத்த இறக்கத்தைச் சந்தித்தது. அன்று குறைந்தபட்ச விலையாக       31172-ஐ தொட்டது.

அடுத்து புதனன்றும் வலிமையான இறக்கத்திற்கு உள்ளானது; குறைந்தபட்சமாக 30941-ஐ தொட்டது. வியாழனன்றும் இறக்கம் தொடர்ந்து குறைந்தபட்சப் புள்ளியாக 30852-ஐ தொட்டு, பிறகு மீண்டு, ஒரு சுத்தியல் அமைப்பைத் தோற்றுவித்துள்ளது.  எனவே, தங்கத்தின் இறக்கம் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  வெள்ளியன்று இந்த ஆதரவைத் தக்கவைக்க முயற்சி நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்



இனி என்ன நடக்கலாம்? தங்கம் நல்ல இறக்கத்திற்குப் பின்பு 30850 என்ற எல்லையை ஆதரவாக எடுத்துள்ளது. மேலே முக்கியத் தடை நிலையாக 31180 உள்ளது.

வெள்ளி மினி

வெள்ளியின் விலை நகர்வு என்பது தங்கத்தைப் பின்பற்றுவதாக சில வாரங்கள் நடந்தாலும், சென்ற வாரம் தங்கத்தைவிட சற்றே வேகமாக நகர்ந்துள்ளது என்று சொல்லலாம். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற இதழில் சொன்னது... “தங்கம் நான்கு வருட உச்சத்தைத் தொடும்போது, வெள்ளி ஒரு வருட உச்சத்தைத் தான் தொட முயன்று வருகிறது. இருந்தாலும் 40800 என்ற தடையைத் தாண்டினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம்.  கீழே 39800 என்பது முக்கிய ஆதரவு நிலை ஆகும்.’’

வெள்ளியானது சென்ற வாரம் கொடுத்திருந்த இரண்டு எல்லை களுக்கு நடுவில் சுழன்றது என்று சொல்லலாம். சென்ற வாரம் திங்களன்று மேலே கொடுத்து இருந்த தடை நிலையான 40800-ஐ தாண்ட முடியாமல் கீழே இறங்கத் தொடங்கியது. புதனன்று இறக்கத்தைத் தடுத்து நிறுத்தி ஏறி முடிந்தது. புதனன்று நாம் கொடுத்திருந்த ஆதரவான 39800-ஐ உடைத்து இறங்கினாலும், அந்த நாள் முடியும்போது ஏறி 39992 என்ற புள்ளியில் முடிந்ததால், நாம் கொடுத்த ஆதரவு தக்கவைக்கப்பட்டுள்ளது. அடுத்து வியாழனன்று தங்கம் இறங்கியும், வெள்ளி ஏறியும் முடிந்துள்ளன.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி 39850 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு ஏற முயற்சி செய்கிறது.  இந்த ஏற்றம் 10350 என்ற எல்லையில் தடுக்கப்படலாம். உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம்.

கச்சா எண்ணெய் மினி

சென்ற வாரம் சொன்னது… ‘‘கச்சா எண்ணெய் 4897 என்ற எல்லையை வலிமையான தடை நிலையாகக் கொண்டுள்ளது.  மிக முக்கிய ஆதரவு 4600 ஆகும். மேலே 4897 உடைக்கப்பட்டால், மிகப் பெரிய ஏற்றங்கள் தொடர்ந்து வரலாம்.’’

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடை நிலையான 4897-ஐ தாண்ட முடியாமல் இருந்து கொண்டிருக்கிறது. கீழே இறங்கும்போதெல்லாம் நாம் கொடுத்த ஆதரவான 4600 தொடாமல் மீண்டு எழுந்துள்ளது.  திங்களன்று குறுகிய நகர்வில் இருந்த கச்சா எண்ணெய், செவ்வாயன்று பலமாக ஏறினாலும், 4897-க்கு அருகில் 4894-ஐ தொட்டு இறங்கியது. வியாழ னன்றும் 4899-ஐ தொட்டு மீண்டும் இறங்கி, தடை நிலைக்கு அருகில் வியாபாரம் ஆகி வருகிறது.

இனி என்ன நடக்கலாம்? மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் ஜூன் மாத கான்ட்ராக்டை எடுக்கவேண்டும்.  தற்போது 4925 என்பது முக்கியத் தடை நிலையாகவும், கீழே 4800 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism