Published:Updated:

ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா
பிரீமியம் ஸ்டோரி
ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

Published:Updated:
ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா
பிரீமியம் ஸ்டோரி
ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

“எனக்குள் இருந்த ஃபேஷன் ஆர்வம்தான் என்னைத் தொழில்முனைவரா மாத்திச்சு. நிறைய உழைப்பு, அதைவிட ஆர்வமும் தேடலும்தான் இன்னிக்குப் பலருக்கும் வேலை கொடுக்கிற அளவுக்கு என்னை உயர்த்தியிருக்கு” - உற்சாகமும் புன்னகையுமாகப் பேசுகிறார் ஆயிஷா. சென்னை அசோக் நகரில் ‘ஆயிஷ் எத்னிக்ஸ் மற்றும் ஆயிஷ் பியூட்டி கேர்’ ஷோரூம்களை நடத்திவருபவர். லட்சங்களில் முதலீடு செய்து, தனது உழைப்பால் இன்று கோடிகளில் வருமானம் ஈட்டிவருகிறார். 

ஆரம்பம் ரூ.5 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1 கோடி! - அசத்தும் ஆயிஷா

“என் பூர்வீகம் சென்னைதான். சின்ன வயசுலருந்தே ஃபேஷன்ல ஆர்வம் அதிகம். எத்திராஜ் காலேஜ்ல பி.காம் படிச்சுட்டு  இருந்தப்ப, எனக்கான டிரஸ்ஸை நானே வெரைட்டியாத் தயார் பண்ணிப்பேன். நாளடைவில் ஃப்ரெண்ட்ஸ் பலருக்கும் டிரஸ் தயாரிச்சுக் கொடுத்தேன். படிச்சது ஈவ்னிங் காலேஜ்ங்கிறதுனால, காலையில ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிக்கப் போனேன். அப்ப, அசோக் நகர்ல ஒரு பொட்டிக் ஷாப் விலைக்கு வந்துச்சு. அஞ்சு லட்சம் முதலீட்டில் அதை வாங்கி, படிச்சுக்கிட்டே பிசினஸ்லயும் களமிறங்கினேன்.

‘எடுத்ததுமே பெரிய அளவில் பிசினஸ்  பண்ணாதே’னுதான் பலரும் சொன்னாங்க. ஆனா, நம்பிக்கையோடு தொழில்ல கவனம் செலுத்தினேன். நல்ல வளர்ச்சி கிடைச்சது. வேலையாள்களுடன் சேர்ந்து, நானும் கட்டிங், ஸ்டிச்சிங், பேக்கிங்னு எல்லா வேலையும் செய்வேன். அப்பவே மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. படிப்பு முடிச்சதுமே கல்யாணமாகிடுச்சு’’ என்றவர், 2007-ல் முழு நேர பிசினஸில் களம் இறங்கியிருக்கிறார்.

‘‘என் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததைப் பார்த்துட்டு, கூடுதலா ரெண்டு யூனிட் ஆரம்பிச்சேன். `பெண்களுக்காக பியூட்டி ஸ்பா ஒண்ணை ஏன் ஆரம்பிக்கக்கூடாது’ங்கிற ஐடியாவும் அப்ப வந்தது. உடனே மலேசியாவுக்குப் போய் அழகுக்கலைப் பயிற்சிகளை எடுத்துக்கிட்டு வந்தேன். என் டிரஸ் ஷோரூம்லேயே பியூட்டி கேர் அண்டு ஸ்பாவையும் தொடங்கினேன். எல்லாம் நல்லபடியா போயிட்டு இருந்துச்சு” என்பவரை, 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. 

“மெஷின், ஆடை, அழகுசாதனப் பொருள்னு கிட்டதட்ட 35 லட்ச ரூபாய்க்கு நஷ்டம். டெக்ஸ்டைல் பிசினஸ்ல இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் சிலர், இந்தத் தொழிலைவிட்டே போயிட்டாங்க.  `பொருள் போகட்டும்... ஆனா, அனுபவத்தை விட்டுடக்கூடாது’ன்னு மறுபடியும் களம் இறங்கினேன். என் பிசினஸுக்காக லோன் வாங்கியிருந்தேன். ஆனா, வெள்ளத்தினால இன்ஷூரன்ஸ் கிடைக்கிறதுல சிரமம் ஏற்பட்டுச்சு.

மறுபடியும் வங்கியில கடன் கேட்டேன். புது மெஷின் வாங்கி பிசினஸை ஆரம்பிச்சேன். துணி தைக்கிறதுல ஆரம்பிச்சு தொழிலாளர்கள்கூட இணைஞ்சு நானும் இரவுபகலா வேலை பார்த்தேன். இடையே வர்தா புயல், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரின்னு நிறைய பிரச்னைகளை அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதையெல்லாம் சமாளிச்்சேன்.  இப்ப பத்து பேருக்கு வேலை கொடுக்கிறேன். நிறைய ஆஃபர்ஸ் கொடுக்கிறேன். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ற கலெக்‌ஷன், மனநிறைவான சேவை... இதெல்லாம் கஸ்டமர்ஸை தொடர்ந்து என் பக்கம் ஈர்க்க வைக்குது. இதுக்காக உழைச்சதை வார்த்தைகளில் விவரிக்கிறது கஷ்டம்” என்றபடி புருவத்தை உயர்த்தும்  ஆயிஷா, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக டேர்ன்ஓவர் செய்கிறார்.

“வெளிநாடுகளுக்கும் என் தயாரிப்புகளை ஏற்றுமதி பண்றேன். இப்ப பிசினஸ் சிறப்பா போயிட்டு இருக்கு. அடுத்த புது முயற்சியா ஹெர்பல் காஸ்மெடிக்ஸ் பொருள்கள் விற்பனை யையும் தொடங்கப்போறேன். எவ்வளவோ பிரச்னைகளும் சவால்களும் வந்தப்பகூட... ஒருபோதும் பிசினஸ் வேண்டாங்கிற எண்ணம் எனக்கு வந்ததில்லை. பிசினஸில் உள்ள சவால் களைப் பார்த்து பின்வாங்கினா, ஜெயிக்க முடியாது. ‘நிச்சயம் முடியும்’ங்கிற நம்பிக்கை மட்டும்தான் இப்பவரை அஸ்திவாரமா இருக்கு” என வெற்றி ரகசியம் சொல்லி முடித்தார்ஆயிஷா.

- கு.ஆனந்தராஜ்

படம் :  செ.விவேகானந்தன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism