இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் சந்தை நல்லவிதமாகவே தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே அந்த மகிழ்ச்சி நீடித்தது. அன்றைய தினம் நிஃப்டி 11000 புள்ளிகளை நெருங்கியதால், இன்னொரு பக்கமிருந்து பங்குகளை விற்பவர்கள் திடீரெனத் தோன்றினார்கள். கர்நாடகத் தேர்தல் முடிவில் பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தினால் ஏற்பட்ட அரசியல் காரணத்தால், பங்குகள் விற்கப்பட்டன.

ஏற்கெனவே சில நேரங்களில் இத்தகைய நிலையை நாம் எதிர்கொண்டிருந்ததைக் காட்டிலும், தற்போது பங்குகளின் விற்பனை போக்கு அதிகமாகவே இருந்தது. மேலும், இது டெய்லி சார்ட்டில் ஒரு ஷூட்டிங் ஸ்டார் பேட்டர்னை உருவாக்கியதோடு, அதற்கு அடுத்த நாள் வர்த்தகம் ஆரம்பித்தபோதே சரிவான பேட்டர்னையும் உருவாக்கியது.

அடுத்து வந்த இரண்டு தினங்களிலும் கரடியின் பிடியிலேயே சந்தை இருந்ததோடு, வாரத்தின் முடிவில் நிஃப்டி அதன் உச்சத்திலிருந்து 300 புள்ளிகளை இழந்தது. இது வீக்லி சார்ட்டில், 78.6% ரீட்ரேஸ்மென்ட் லெவலிலிருந்து எதிர்திசையாகச் சென்று ஒரு லாங்க் ரேஞ்ச் பார் ஏற்பட வழி வகுத்ததோடு, வருகிற நாள்களில் மேலும் சரிவை ஏற்படுத்தலாம்.

பேங்க் நிப்ஃடி கிட்டத்தட்ட 27000 புள்ளிகள் வரை வேகமாக முன்னேறிய பின்னர், நிஃப்டியை போன்றே வெள்ளிக் கிழமை வரை 1000 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்தது. இங்கேயும்கூட ஒரு பேரிஷ் கேண்டில் பேட்டர்ன் உருவாகியது.

தனியார் வங்கிகளின் பங்குகள் இன்னமும் நியாயமாக நன்றாகவே விற்பனையாகிக் கொண்டிருப்பதால், பேங்க் நிஃப்டி இன்னும் அதிகமாக இறங்காமல் இருக்கிறது. ஆனாலும், நீண்ட கால முதலீட்டுக்கு ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகளின் பங்குகளை வாங்கினால் மட்டுமே மேலும் சரிவடையாமல் இருக்கும்.

மேக்ரோ பிரச்னைகள் தொடர்ந்து பங்குச் சந்தையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. கச்சா எண்ணெய், பேரல் ஒன்றுக்கு 80 டாலர் வரை உயர்ந்திருப்பது எப்படிப் பார்த்தாலும் கெட்ட செய்திதான். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் 68 என்ற அளவுக்குச் சரிந்துள்ளது. நிலைமையை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் விதமாகவே சர்வதேசப் பிரச்னைகளும் தெரிகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது சம்பாதிப்பதற்கான சீஸன் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்பதே யதார்த்தமான நிலையாக இருக்கிறது என்பதோடு, சந்தைகள் இன்னும் சில சரிவுகளைச் சந்திக்கும்; அல்லது ஒரு ஏற்ற இறக்கம் இல்லாத நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, வாசகர்கள் இவற்றுக்கு ஏற்ப தங்களது பொசிஷன்களை வைத்துக் கொள்ள வேண்டும். பங்குகளின் முன்னேற்றப் போக்கு குறைந்து, அதன் ஏற்ற இறக்கப் போக்கும் குறைந்துவிடும். எந்தப் பங்குகளைத் தேர்வுசெய்வது என்பது இன்னும் கடினமான முயற்சியாக இருக்கும் என்பதோடு, ஒட்டுமொத்த லாபமும் குறையக்கூடும். எனவே, வரும் வாரத்தில் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு உங்களின் வியாபார அணுகு முறையை அமைத்துக்கொள்ளுங்கள்.

எண்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ் (ENDURANCE)

தற்போதைய விலை: ரூ.1265.50

வாங்கலாம்

இந்த ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனப் பங்கு, பட்டியலிடப்பட்டவுடன் நல்ல போக்கு காணப்பட்டது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாகப் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தப் பங்குகளை வாங்குவதும் விற்பதும் தொடர்ச்சியாக இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. இனி இந்தப் பங்கின் விலையானது மேலேறுவதற்குத் தயாராக இருக்கிறது. கடந்த கால உயர்வான ரூ.1,350 வரை எட்டக்கூடும். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம்.

ஓரியன்ட் ரிஃப்ராக்டரீஸ் (ORIENTREF)

தற்போதைய விலை: ரூ.180.25

வாங்கலாம்

ஆட்டோமொபைல் துறையுடன் சேர்ந்து கட்டுமானம் மற்றும் மூலதனப் பொருள்கள் துறை மீண்டும் வளர்ச்சிக்குத் திரும்பியுள்ளது. அதுபோல எஃகு உற்பத்தியும், அதனை வாங்கிப் பயன்படுத்தும் நாடுகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகக் கடந்த மார்ச் காலண்டில் இதன் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. இதன் எதிரொலியாகப் பங்கின் விலை அதிகரித்தது.

மேலும், இதன் போக்கு சார்ட் பேட்டர்னிலும் எதிரொலிக்கிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.165 என வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை ரூ.195 - 200 வரை செல்லும் என எதிர்பார்க்கலாம்.

வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் (WELENT)

தற்போதைய விலை: ரூ.184.60

வாங்கலாம்

இது வெல்ஸ்பன் குழுமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். அண்மைக் காலமாக ரியல் எஸ்டேட் பங்குகளுக்குச் சந்தையில் நல்லதொரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த இரண்டு வாரங்களாகப் பங்கு விலை வேகமாக அதிகரித்ததுடன், இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது. விலையேற்றம் மேலும் தொடர்ச்சியாக ஏறுவதுபோலவே தெரிகிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.172 வைத்துக்கொள்ளவும். புதிய உச்சமாக ரூ.205 வரை பங்கு விலை உயரக்கூடும்.

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.