Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ற்ற நாள்களைப் போலவே, அன்றும் முதல் ஆளாக 18-வது மாடியில் இருக்கும் அலுவல கத்துக்கு ஆதித்யா சென்றார். இண்டிஸ்கேப்பும், எடியாஸ் (eTIOS) அலுவலகங்களும் ஒரே கட்டடத்தில் இருந்தாலும் வெவ்வேறு தளங்களில் இயங்கிவந்தன. தளத்துக்கு ஒன்று என ஆதித்யாவுக்கு இரண்டு ஆடம்பரமான கேபின்கள் இருந்தன.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

சந்தீப்பை அவர் போன் மூலம் தொடர்பு கொள்ள சில முறைகள் முயற்சி செய்தபோது ஸ்விட்ச் ஆஃப் என்கிற செய்திதான் மறுமொழி யாக வந்தது. சந்தீப்பின் மனைவி நடாஷா அவளுடைய பெற்றோரைப் பார்க்க டெல்லிக்குச் சென்றிருந்தாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆதித்யா தனது கேபினுக்குச் செல்லும்முன், வழக்கம்போல ரெஸ்ட்ரூம் சென்றார். செல்லும் வழியில் சந்தீப்பின் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்தார். லைட்டை அணைப்பதற்கு மறந்து விட்டுப் போயிருக்கலாம் என்று நினைத்து அவர் ரெஸ்ட்ரூம் செல்ல நினைக்க, அப்போது அவர் பார்த்த காட்சியால் அப்படியே உறைந்துபோனார்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15



‘`சந்தீப்...?” என அதிர்ச்சியுடன் சத்தமாகக் கூப்பிட்டபடி அவரது கேபினுக்குள் நுழைந்தார் ஆதித்யா. சந்தீப் அங்கே தரையில் உட்கார்ந்திருந் தார். அவருடைய தலைமுடி தாறுமாறாகக் கலைந்துகிடந்தது. ‘`சந்தீப், இங்க என்ன செய்றீங்க?’’ எனக் கேட்டார்.

சந்தீப் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்துப் பதறிப்போன ஆதித்யா, சந்தீப்பின் தோள்பட்டையைத் தட்டியபடி, ‘‘ஆர் யு ஒகே?’’ என்று கேட்டார். சந்தீப்பிடம் குடிப் பழக்கம் உண்டு. ஆனால், இப்போது அவர் மூச்சு விடும்போது ஆல்கஹால் வாசனை எதுவும் வரவில்லை.

‘`எல்லாமே நாசமாகிவிட்டது. என்ன நடக்கிற தென்றே தெரியவில்லை’’ என்றார் சந்தீப். ‘`என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் ஆதித்யா.

‘`டவுன்ஸ்வில்லே விளையாட்டை நாம லாஞ்ச் பண்ணி ஒரு வாரம் ஆச்சு. அந்த விளையாட்டு இன்னும் டேக்-ஆஃப்கூட ஆகலை. நான் ராத்திரி பூரா இங்கேயிருந்து எம்.எ.யு-யை அனலைஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். நேற்று வரைக்கும் 23,000-தான் ஆகியிருக்கு. ஆனா, `மாஃபியா டான்ஸ்’ முதல் வாரத்திலேயே இரண்டு லட்சம் எம்.எ.யு-யைத் தாண்டிருச்சு. பீக்கான நேரத்தில இதுவே 25 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கு. `டவுன்ஸ் வில்லே’ ஒரு பேரழிவு’’ என்றார்.

இந்த நம்பர் எல்லாம் உண்மை யிலேயே அச்சுறுத்தக்கூடியதாகத் தான் இருந்தது. 23,000 எம்.எ.யு-தான் என்றால் அது `வாஷ் அவுட்’ என்பதில் சந்தேகமில்லை. இந்த அளவுக்குக் குறைவான
பயன்பாட்டாளர்களைக் கொண்டிருக்கும் ஆன்லைன் விளையாட்டைத் தொடர்வது முடியாத காரியமாகும். இதை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் ஆகும் செலவு, அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானத்தைவிட மிக மிகக் குறைவாகும். விளம்பரதாரர்களும் நாளடைவில் விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலை  வந்தால், நிலைமை இன்னும் மோசமாகும். காரணம், என்ன வாக இருந்தாலும், சந்தீப்பின் இந்த நிலைமை தொடர விடப் போவதில்லை என்று முடிவெடுத்தார் ஆதித்யா.

‘`சந்தீப், நீங்கள் வீட்டுக்குப் போங்கள். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டபின் மீண்டும் வாருங்கள். அதன்பின், என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம். கண்டிப்பாக நமக்கு ஒரு வழி கிடைக்கும்’’ என்றார் ஆதித்யா.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

‘`எனக்குத் தெரியல ஆதித்யா. நான் ஒருபோதும் இப்படி இருந்ததில்லை. முதலில் அந்த ராக்பேங்க் டீல் நமது கையை விட்டுப்போனது. இப்போது டவுன்ஸ்வில்லே. எதனால் இப்படி விஷயங்கள் தப்பா போயிட்டிருக்குன்னு எனக்குத் தெரியல’’ என்றி புலம்பினார் சந்தீப்.

‘`இதுதான் வாழ்க்கை, சந்தீப். இந்த மாதிரி கண்ராவி எல்லாம் நடக்கும். நாம்தான் அதற்கான வழியைக் கண்டுபிடிச்சு, சுத்தம் செஞ்சுட்டு நகர்ந்து போய்க் கிட்டே இருக்கணும்’’ என்றார்.

சந்தீப்  தலையசைத்துக் கொண்டே அவரது ரூமை நோக்கிச் சென்றார். அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சோர்வு தெரிந்தது. அவர் தனது பேக்கை எடுத்துக் கொண்டு, ‘`நான் மதியம் வருகிறேன். கேம் டிசைனர்ஸ் எல்லோரையும் கூப்பிட்டிருக் கிறேன். இந்தக் குழப்பதை எப்படிச் சரிசெய்வது என்று பார்ப்போம். ஆதித்யா’’ என்றார்.

ஆதித்யா புன்னகையுடன், ‘`கண்டிப்பாக, சந்தீப்’’ எனக் கூறினார். சந்தீப் அங்கிருந்து சென்றபின், ஆதித்யா, ‘`நாம் சரிசெய்ய வேண்டும்’’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். 
 
காலையில் அலுவலகத்தி லிருந்து எப்படிச் சென்றாரோ, அதே தூக்கக் கலக்கத்துடன் மத்தியானம் அலுவலகத்துக்கு வந்தார் சந்தீப். கண்டிப்பாகத் தோல்வியடையும் என்கிற நிலையில் இருந்த கேம்மை அவர் தாங்கிக் கொள்வது என்பது பெரிய விஷயம். இண்டிஸ் கேப்பின் எதிர்காலமே இந்த டவுன்ஸ்வில்லே கேமை நம்பியிருந்தது. கேமின் வெற்றி மேல் `பெட்’ கட்டியதுபோல, முதலீட்டாளர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குப் பணத்தை முதலீடு செய்திருந்தார்கள். அத்துடன் இது ஒரு கெளரவப் பிரச்னையாகவும் இருந்தது. உலகத்தி லிருக்கும் பத்து மிகப் பெரிய கேமிங் நிறுவனங் களில் இன்டிஸ்கேப்பும் ஒன்றாக இருந்தது. இப்போது இதற்கு உயிர் தரவில்லையெனில் நிலைமையே மாறிவிடும்.

சந்தீப் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது வருண், ஆதித்யாவின் அறையிலிருந்தான்.

‘`ஹாய், வருண், நேற்றிரவு பார்ட்டி எப்படி யிருந்தது?’’ என்று சிரிப்பதற்கு முயற்சி செய்துகொண்டே சந்தீப் கேட்டார். ‘`குட், சார். நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க’’ என்றான் வருண்.

சந்தீப், ஆதித்யாவைப் பார்த்தார். ‘`கேம் டிசைனரெல்லாம் இங்க இருக்காங்களான்னு பார்க்கிறேன். நாம் அவங்களையெல்லாம் சந்திச்சு அடுத்து என்ன பண்ணலாம்ங்றதை முடிவு செய்யலாம்’’ என்றார்.

‘`அவங்க எல்லாம் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வந்த பிறகு என்னைக் கூப்பிடுங்க’’ என்றார் ஆதித்யா. சந்தீப் தலையசைத்துவிட்டு, வருணைப் பார்த்து ‘`நீயும் ஏன் எங்களோட மீட்டிங்க்ல கலந்துக்கக் கூடாது?” என்று கேட்டார்.

அரைமணி நேரத்துக்குப்பிறகு ஆதித்யா, வருணுடன் கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் நுழைந்து மேசைக்கு நடுவில் சென்று உட்கார்ந்தார். வருண் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டான்.

ஆதித்யா நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘`நாம நினைச்ச மாதிரி டவுன்ஸ்வில்லே பிரபல மாகல. இந்த கேம்ல நாம நிறைய முதலீடு செஞ்சிருக்கோம். இண்டிஸ்கேப்பைப் பொருத்த வரையில், இது `மேக் ஆர் ப்ரேக்’ கேம். 23,000 எம்.எ.யு என்பது ஒரு எண்ணிக்கையே இல்லை. என்ன நடந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?’’ எனக் கேட்டார்.

‘`மக்கள் இன்னும் `மாஃபியா டான்ஸ்’தான் விளையாட்றாங்க. அவர்கள் டவுன்ஸ்வில்லே-வை விளையாடத் தொடங்கினால், அதற்கு மாறி விடுவார்கள் என்று நம்பினோம்’’ என சந்தீப் கூறினார். ‘`நாம் இண்டிஸ்கேப்.காமின் முகப்புப் பக்கத்தில் டீசர் விளம்பரம் வைத்திருந்தோம். அதோடு சிலரை விளையாடிப் பார்க்க ஆதித்யா அழைத்திருந்தார். எம்.எ.யு-க்களில் பெரும் பாலானவை நமது முகப்புப் பக்க ப்ளக்-இன் மூலம் வந்தவைதான். சில கூகுள் ஆட்ஸ் வழியாக வந்தன. நம்முடைய முகப்புப் பக்கத்திலிருந்து அதிகமானோர் மாறுவார்கள் என நாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகக் கணித்திருந்தோம்.’’ 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

‘`முகப்புப் பக்க டீசரை எத்தனைபேர் க்ளிக் செய்திருக்கிறார்கள் என நாம் தெரிந்துகொள்ள முடியுமா?”

‘62 ஆயிரம்.’’

‘`ஹ்ம்ம்ம்ம்...’’ ஆதித்யா அமைதியாக இருந்தார். ‘`அவர்கள் எல்லோரும் எம்.எ.யு-ஆக மாறியிருந்தால்கூட மாஃபியா டான்ஸினுடைய முதல் வார எண்ணிக்கையான இரண்டு லட்சத்தைவிடக் குறைவுதான்.’’

‘`உண்மைதான்’’ சந்தீப் தலையாட்டினார். அது சந்தீப்புக்கும், ஆதித்யாவுக்குமான உரையாடலாக உருவெடுத்து வந்தது. அங்கிருந்த மற்றவர்கள் இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

‘`அப்படியென்றால் உங்களுடைய ஹூக் வேலை செய்யவில்லை. முகப்புப் பக்கத்தில் உன்னுடைய டீசரை க்ளிக் செய்தவர்களின் எண்ணிக்கையான 62,000 என்பது குறைந்த எண்ணிக்கைதான். அதை நீங்கள் அதிகரிக்க வேண்டும். உங்களுடைய கேமை அதிக வாடிக்கை யாளர்கள் பார்க்குமாறு செய்ய வேண்டும். உங்கள் கேம் விளையாடி அனுபவப்பட்டால் அவர்கள் அதைத் தொடர்ந்து விளையாடக்கூடும். அவர்கள் அனுபவப்படவே இல்லையெனில், அவர்கள் எப்படி ஆக்டிவ் உபயோகிப்பாளர்களாக மாறுவார்கள்?”

‘`ஒப்புக்கொள்கிறேன். புரமோஷன்ஸ் ஒரு பிரச்னையாக இருக்கிறது. புரமோஷனில் எந்தப் பகுதி வேலை செய்யவில்லை என நாம் ஆராய வேண்டும்’’ என்று சந்தீப் கூறினார்.

‘`நமது விளம்பரச் செலவை நாம் அதிகரிப்போம். இணையம் முழுவதும் நம்முடைய கேம் தெரியும்படி செய்வோம்.”

சந்தீப் கவலையோடு அவரைப் பார்த்தார். ‘`ஆதித்யா, இந்த கேமுக்கென்று 25 மில்லியன் டாலர் பட்ஜெட் வைத்திருக்கிறோம். அதில் 18 மில்லியன் டாலர் கேம் வடிவமைப்பு, ஸ்பெஷல் எஃபெக்ட், எக்ஸிக்யூஷன் மற்றும் ஹோஸ்ட்டிங் செய்வதற்கு செலவாகிவிட்டாது. உலகம் முழுவதும் பல்வேறு ஆன்லைன் போர்ட்டல்களில் புரமோஷன் செய்வதற்கான நான்கு மில்லியன் டாலரை ஏற்கெனவே `கமிட்’ செய்திருக்கிறோம். நம்மிடம் மிச்சமிருப்பது அதிகமில்லை.’’

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வருண் திடீரென்று பேசத் தொடங்கினான். ‘`மாஃபியா டான்ஸ் அறிமுகப்படுத்தும்போது நமக்குப் போட்டியாக யாருமில்லை. ஆன்லைன் கேம் புதுமையாக இருந்த நேரம். மக்களுக்கு உற்சாகமாக இருந்தது. இப்போது இருப்பதைவிட ஆன்லைனில் விளம்பரம் செய்வதற்கான செலவு குறைவாக இருந்தது. இந்த மாற்றத்தை நீங்கள் கவனித்தீர்களா? எல்லாம் மாறிவிட்டன. நான் மாஃபியா டான்ஸ் விளையாடியிருக்கிறேன். அதை விளையாட ஆரம்பித்த மறுவினாடியே அந்த விளையாட்டுடன் ஒன்றிப்போய் விட்டேன்’’ என்றான்.

‘`வருண், இதையெல்லாம் தெளிவாகச் சொல்ல முடியாது’’ என்றார் சந்தீப். வருணின் குறுக்கீட்டை அவர் விரும்பவில்லை.

‘`உண்மைதான், சார். ஆனால், ஓர் உள்ளுணர்வால்தான் கேம் விளையாடப்படுகிறது. விளையாடக்கூடியவரின் நரம்பை அது தொட வேண்டும். ஹூக், புரமோஷன்ஸ், விளம்பரங்கள் எல்லாம் எங்கே வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ, அங்கே இடம்பெறுமாறு வைக்கவேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள் விசிட் செய்யும் தளங்களில் அவை இடம்பெற வேண்டும். நான் இணையத்தைக் கடந்த சில நாள்களாகப் பயன்படுத்தி வருகிறேன். மாஃபியா டான்ஸ் விளையாடுவதற்காக இண்டிஸ்கேப்.காம் இணையத்துக்குச் செல்லும் போதுதான் டவுன்ஸ்விலே விளம்பரத்தைப் பார்த்தேன். அது தவிர்த்து வேறெந்த வலைத்தளத்திலும் பார்க்கவில்லை’’ என்றான்.

‘`நீ என்ன சொல்ல வர்ற வருண்...?” - சந்தீப்பின் குரலில் ஒரு எரிச்சல் தெரிந்தது.

‘`வெயிட், வெயிட்’’ அவர்கள் இருவருக்குமிடையில் ஆதித்யா குறுக்கிட்டார். அனைவருக்கும் மத்தியில் இருவருக்கிடையிலான வாக்குவாதத்தை அவர் விரும்பவில்லை. அவர் டிசைனர்கள் பக்கம் திரும்பி, “கேம் டிசைன்மீது எந்தக் குறையும் இருப்பதாகத் தெரிய வில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு தெளிவு கிடைத்தபின் நாங்கள் உங்களை மீண்டும் சந்திக்கிறோம்’’ என்றார்.

அங்கிருந்து எல்லோரும் சென்றபின், அவர் வருண் பக்கம் திரும்பி, `’யாருக்கு முன்னால் என்ன பேசுகிறோம் என்பதில் நீ கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

‘‘ஸாரி, டாட். நீங்கள் கருத்துகளைக் கேட்கிறீர்கள் என்று நினைத்தேன். இனி என் வாயை மூடிக்கொண்டிருப்பேன்’ என்றான்.

‘`பரவாயில்லை. நீ என்ன சொல்ல நினைக்கிறாய்?”

 (பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

இயற்கை விவசாயத்துக்கு மாறும்  ஆந்திரா!

மிழகத்தில்  இயற்கை விவசாயம் கடந்த பத்தாண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சிகண்டு வருகிறது. குறைவான செலவில், நிறைய விளைச்சலைத் தரும் இந்த இயற்கை விவசாயத்தைத் தனது மாநிலத்தில் தீவிரமாகக் கொண்டு வருவதற்காக ஆந்திர அரசாங்கம் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ஆந்திராவில் இப்போது 1.63 லட்சம் பேர் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை வருகிற 2024-க்குள் 60 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டி ருக்கிறது ஆந்திர அரசாங்கம். இனி இந்தியா முழுக்க இயற்கை விவசாயம்தான் என்கிற நிலை இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை!