Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

‘‘நீங்கள் நேரம் என்கிற வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று வருண் பேச ஆரம்பித்தான்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

‘`நீ சொல்வதின் அர்த்தம் என்ன?” ஆதித்யா கேட்டார்.

‘`இந்த கேமை உலகளவில் பிரபலமாக்க நீங்கள் மில்லியன் கணக்கில் டாலர்களை முதலீடு செய்திருக்கிறீர்கள். `மாஃபியா டான்’ விளையாடும் எந்தவொரு கேமரும் இண்டிஸ்கேப்பின் விசிறிதான். நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் அவர்கள் செய்வார்கள். ஆனால், `மாஃபியா டான்’ விளையாடக் கூடிய கேமருக்கு `டவுன்ஸ்விலே’ ஒரு கேமே இல்லை. இந்த கேம் மிகவும் மென்மையானது. துப்பாக்கி இல்லை; கொடூரமான ரத்தக்களரி இல்லை. தொழில்நுட்ப ரீதியில், இது பிரமாதமான கேமாக இருக்கலாம் அது கேமர்களை ஈர்க்காது. இந்த இரண்டு கேம்களுக்குமான சந்தைகள் வித்தியாசமானது. ஆனால், இண்டிஸ்கேப்.காம் இணையதளத்துக்கு வந்து `மாஃபியா டான்’ விளை யாடிய கேமர்கள் `டவுன்ஸ்விலே’யையும் விளையாடு வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த 23 ஆயிரம் எம்.ஏ.யு.-கள்கூட (MAU) கூடிய விரைவில்  குறைந்துவிடும்’ என்றான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16



சந்தீப் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, ‘`நாங்கள் அனைத்துப் பிரபலமான இணையதளங் களிலும், செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்து வருகிறோம். அடுத்த வாரம், தொலைக்காட்சியில் நமது விளம்பரங்கள் வரவிருக்கின்றன. இதைத் தவிர, நாம் வேறென்ன செய்ய முடியும்?’’ என்றார்.

‘`டாட், இந்தியாவில் நீங்கள் எப்படி ஆபரேட் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு உபயோகிப்பாளனாகப் பேசுகிறேன். அமெரிக்காவில் கேமிங் கம்யூனிட்டி மிகவும் முதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறது. கேமிங் என்பது பல ஆண்டுகளுக்குமுன்பு விளையாடுவதற்கு எளிதான ‘ஆர்கேட் கேம்ஸ்’ என அழைக்கப்படும் Pacman, Pong ஆகியவற்றோடு ஆரம்பித்தது’’ என்றான்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

‘`ஆர்கேட் கேம்ஸ் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியும், வருண்”.

தன் தவறை உணர்ந்த வருண், ‘`உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். எப்போது போரும், யுக்தியும் (war and strategy) கொண்ட கேம்கள் வரஆரம்பித்ததோ, அப்போதே அது மிகவும் வன்மம்கொண்டதாக ஆகிவிட்டது. கேம்களும் சிக்கலானதாக மாறிவிட்டன. அதனால்தான் `மாஃபியா டான்’ இவ்வளவு பெரிய `ஹிட்’ ஆனது’’ என்றான்.

‘`அது நல்ல ஒரு கேம்தான்’’ என்று சந்தீப் முணுமுணுத்தார். ஆதித்யா, வருண் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துவதைக் கவனித்தார். 

‘`ஆனால், அவையெல்லாம் மாறிவருகின்றன. சோனி ப்லேஸ்டேஷன் (Sony PlayStation), நிண்டெண்டோ (Nitendo) போன்ற நிறுவனங்கள் சிக்கலான கேம்களை உருவாக்கி வரு கின்றன. நீங்கள் கேமர்களை சென்றடையவும், வெற்றிபெறவும் வேண்டுமெனில், அதைத் தனியாக (stand-alone) வைத்திருந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் சோனி அல்லது நிடெண்டோ வுடன் இணைந்து அவர்களுக்காக கேம்களை உருவாக்க வேண்டும்.’’

‘`ஆரம்பத்திலிருந்தே இந்த மாதிரியான பெரிய நிறுவனங் களுடன் `டை-அப்’ வைத்துக் கொள்ளக் கூடாது என்பது நம் நிறுவனத்தின் கொள்கையாக இருந்து வருகிறது. வருமானத்தில் 70 சதவிகிதத்தை சோனி அல்லது நிடெண்டோ எடுத்துக்கொள்ளும் போது அது நமது லாபத்தைப் பெரிதும் பாதிக்கும்’’ என சந்தீப் வாதத்தில் இறங்கினார். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

‘`நல்லது. ஆனால், மாஃபியா டான் சோனி பி.எஸ்.பி அல்லது நிடெண்டோ கருவிகளில் கிடைப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். யுகே, யுஎஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் நீங்கள் இன்று சென்றடந்திருப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக இருந்திருக்கும். இப்போது உங்களின் வருமானம் முழுவதும் இந்த கேமில் செய்யப் படும் விளம்பரங்களில் இருந்து தான் வருகிறது. இதுவும் மோசமான உத்தியாகும். நீங்கள் இவர்களோடு கைகோர்த்தி ருந்தால் விளம்பரங் களிலிருந்து வரும் வருமானம் 40 சதவிகிதமாக இருந்திருக்கலாம். அதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு வருமானம் அதிகமாக இருந்திருப்பதுடன், பிராண் டிங்கும் சிறப்பாக இருந்திருக்கும். ‘இண்டி ஸ்கேப்.காம்’மிற்கு கேம் விளையாட வாருங்கள்’ என்று எவ்வளவு காலம்தான் மக்களிடம் சொல்லிக் கொண்டேயிருக்க முடியும்? என்னைப் பொருத்தவரை, இது செத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழில் திட்டமாகும்’’ என்றான்.

‘`கேமிற்கான உரிமையாளர் கட்டுப்பாட்டை நாங்கள் கொடுக்க விரும்பவில்லை, வருண். சோனியும், நிடெண்டோவும் நம்முடைய படைப்பாற்றல் மீது பாதிப்பை ஏற்படுத்துவார்கள். அதை நாங்கள் விரும்பவில்லை’’ என்றார் சந்தீப். 

‘`இதுதான் உங்கள் முடிவென்றால், உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு ஆப்ஷன்தான். உங்களால் உங்கள் வாடிக்கையாளரைப் பெற முடிய வில்லையெனில், அவர்களைத் தேடி நீங்கள் போகவேண்டும்….. சமூக ஊடகம்’’

‘`நீ ஃபேஸ்புக்கைச் சொல்கிறாயா? ரப்பிஷ்’’ என்றுஆதித்யா கூறினார். அவருக்குச் சமூக ஊடகங்களின் மீது நம்பிக்கையில்லை.

‘‘ஆமாம்’’ வருண் தீர்மானமாகக் கூறினான். ‘`ஏன் ஒரே ஒரு கேமிங் நிறுவனம் மட்டும் அதில் விளம்பரம் செய்கிறது, மற்றவை செய்வதில்லை என்பதை எனக்கு ஓர் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது’’ என்றான்.

ஆதித்யாவுக்கும், சந்தீப்புக்கும் உலகத்தின் முன்னணி கேமிங் நிறுவனமான ஜைன்கா (Zynga) பற்றி நன்றாகவேத் தெரியும். அந்த நிறுவனம்தான் அதனுடைய கேமிங் பற்றி ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துவருகிறது.

‘`அது ஒரு யூஸ்லெஸ் கேம். அது சீக்கிரமே செத்துவிடும்’’ என்றார் சந்தீப்.

‘`நான் அப்படி நினைக்கவில்லை. தற்போது நீங்கள் உருவாக்கியிருக்கும் கேமின் வடிவம் ஃபேஸ்புக்குக்கு உபயோகமற்றது. இப்போது இருப்பதுபோல தனித்திருந்தால் அது ஃபேஸ்புக்குக்குச் சரிப்பட்டு வராது.  கடந்த ஆண்டின் முடிவில் (2013), ஃபேஸ்புக் 600 மில்லியன் உபயோகிப்பாளர்களைக் கொண்டிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 350 மில்லியன் உபயோகிப்பாளர்கள்தான் இருந்தார்கள். 600 மில்லியன் பேரில் ஒவ்வொருவரும் ஃபேஸ்புக்கை உபயோகிக்கும்போது, அவர்களில் பலர் உங்கள் கேமை விளையாடலாம். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்…. நீங்கள் பிரமாதமான `டவுன்ஸ்விலே’ கேமை அவர்களது கம்ப்யூட்டர் திரையில் தெரியும்படி வைத்து, `கம் டூட்…. இப்போது விளையாடு’ என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதைத் தான் ஜைன்கா அவர்களது `ஃபார்ம்ஸ்விலே’ கேமிற்கு செய்தார்கள். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

நீங்களும் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கேமை தொடர்ந்து இலவசமாகக் கொடுங்கள். ஆனால், அதை ஃபேஸ்புக்கில் உருவாக்குங்கள். ஃபேஸ்புக்கில் லாக்-இன் செய்தவுடன் ஒருவர் அதை விளையாடட்டும், அதை பகிர்ந்து கொள்வ தாக வைத்து, அவர்கள் அந்த கேமின் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டுமெனில் அவர்களது நண்பர்கள் அவர்களுக்காக விளையாட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குங்கள். அவர்கள் உண்மையான நண்பர்களோடு விளையாடட்டும்; அவர்களது ஸ்கோரை ஒப்பீடு செய்துபார்க்கட்டும். ஒருகட்டத்தை அவர்கள் முடித்தவுடன் ஆட்டோமேட்டிக்காக அடுத்த கட்டத்துக்கு அவர்கள் பதிவு செய்வதுபோல உருவாக்க வேண்டும். நமது நண்பர்கள் கேம் விளையாடிச் சந்தோஷப்படும்போது அதை நாம் விளையாடவில்லை என்றால் அதை இழக்க நேரிடும் என அவர்கள் நினைக்க வேண்டும். இன்றைக்கு ஒரு கேம் வெற்றி பெறுவதற்கான இறுதிக்குறிக்கோள்… மற்றவருடன் பகிர்ந்துகொள்வதுதான். எளிமையான வேலை, எல்லோரும் செய்யக்கூடியதுதான் இது.’’
 
‘‘இது வெற்றியடையும் என்று  நினைக்கிறீர்களா,  வாடிக்கையாளர் களுக்கான `நியூஸ்ஃபீடை’ நாம் ஸ்பேம் செய்கி றோம் என நினைத்து அவர்கள் வெறுப்படைய மாட்டார்களா?”

‘`இப்போதைக்கு வாடிக்கையாளர்களுக்கு வேறு ஆப்ஷன் எதுவுமில்லை. நீங்கள் ஸ்பேம் செய்வதால் அவர்கள் ஃபேஸ்புக்குக்கு வரமால் இருக்கப்போவதில்லை. இப்போதுதான் அவர்கள் ஃபேஸ்புக்கையே புரிந்துகொள்ள ஆரம்பித்திருக் கிறார்கள். இது இன்னும் சில வருடங்களுக்கு வேலை செய்யும். டாட், இதில் மிகவும் ஒழுக்கம் சார்ந்து இருக்க வேண்டுமென்பதெல்லாம் அவசியமற்றது. நீங்கள் சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை. நீங்கள் இதைச் செய்யவில்லை யென்றால் வேறு யாராவது ஒருவர் வந்து ஃபேஸ் புக்கில் இருக்கும் சாத்தியக்கூறுகளைத் தட்டி எழுப்பத்தான் போகிறார். அது ஏன் நாமாக இருக்கக்கூடாது, டாட்?” என்றான்.

ஆதித்யா, சந்தீப்பைப் பார்த்த போது சந்தீப்பின் முகத்திலிருந்த வெறுப்பு ஒரு நிமிடம்கூட மாறவில்லை.

‘`டாட்... நாம் கேமிலிருந்து பணம் சம்பாதிக்கத் தொடங்குவது அவசியம். வாடிக்கையாளர்கள் அதை ஃப்ரீயாக பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், டோக்கனை நாம் அவர்களிடம் விற்கலாம். அதை அவர்கள் கேமில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவர்கள் முன்னேறிச் செல்லும் போது அதற்குப் பணம் செலுத் தட்டும். அவர்களிடம் ‘சீட்ஸ்’-யை (Cheats) விற்பனை செய்யுங்கள், அதை உபயோகித்து அவர்கள் கேமின் நிலையை `ஷார்ட்-சர்க்யூட்’ செய்துகொள்ளட்டும். நாம் சமூக ஊடகம் வாயிலாகச் சென்றால், பல விஷயங்களைச் செய்யலாம்’ என்றான்.

‘`கேமிங் பற்றி உனக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரியும்?” ஆதித்யா கேட்டார்.

‘`நீங்கள் கற்பனை செய்வதைக் காட்டிலும் ஒரு பொருளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் களுக்குத்தான் அதிகம்  தெரிந்திருக்கும். நான் ஒரு அதிதீவிர கேமர். கேமிங் பற்றி அதன் டிசைனர்களைவிட எனக்கு ஆர்வம் அதிகம் தெரியும்’’. வருணின் அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவனிடமிருந்த ஆணவத்தைக் காட்டுவது போலத் தெரிந்தது.

‘`என் முதுகலைப்படிப்பின்போது, ஜைன்கா-வின் நிதிப் பிரிவில் மூன்று மாதங்கள் இண்டர்னாக இருந்தபோது அந்த நிறுவனத்தின் சி.எஃப்.ஒ-வுடன் நெருங்கி வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கேமிங்கில் சமூக ஊடகம் சம்பந்தமான அணுகு முறை அவர்களது நீண்டகாலத் திட்டத்தின் ஒருபகுதியாகும். ஏதாவது வைரலாக மாறினால், அது அவர்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும். அதனால்தான் அவர்கள் ஆரம்பத்திலேயே ஃபேஸ்புக்குடன் கைகோர்த்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிரத்யேக `டீலில்’ கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஜைன்கா இருக்கும் வரை வேறெந்த கேமிங் நிறுவனமும் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய முடியாது.’

சந்தீப்பின் முகம் சுருங்கியது. ‘`ஆமாம், ஜைன்கா, ஃபேஸ்புக்கோடு `படுக்கை’யைப் பகிர்ந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். ஆனால், இதை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும்கூட அது பற்றி நாம் ஏன் இப்போது பேசுகிறோம்?’’ - எரிச்சலோடு கேட்டார்.  

‘‘ஏனென்றால், நமது அதிர்ஷ்டத்துக்கான ஜன்னல் திறக்கக்கூடும். ஜைன்கா நடந்து கொள்ளும் விதத்தில் ஃபேஸ் புக்குக்கு அதிருப்தி ஏற்பட்டிருக் கிறது. அவர்கள் அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டார்கள். ஃபேஸ்புக் அவர்களைத் தூக்கியெறிய விரும்புகிறது. அப்படிச் செய்தால் அவர்கள் அதிக வருமானத்தை இழக்க நேரிடும். ஜைன்கா கொடுப்பதில் 75 சதவிகிதத்தை வேறெந்த நிறுவனமாவது கொடுக்க முன்வந்தால் அவர்கள் ஜைன்காவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வார்கள். அந்த `வேறு எந்த நிறுவனம்’ நாமாகக்கூட இருக்கலாம்.”

ஆதித்யா ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். வருணின் கருத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவனுக்கு கேமிங் பற்றிய ஆழ்ந்த அறிவு இருப்பதாக நினைத்தார். அவன் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்டால் எதிர்காலத்தில் அவனால் இண்டிஸ்கேப்பை வழிநடத்த முடியும். பிரச்னை என்னவெனில், அந்தக் காலத்து சந்தீப் போல இவன் இருப்பதே!

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16

ஆன்லைன் மோசடியில் சிக்கும் இந்தியர்கள்..!

ந்தியர்கள் ஆன் லைன் வழியாக நிதிப் பர்வத்தனைகளை மேற் கொள்வது அண்மைக் கால மாக அதிகரித்து வருகிறது. கூடவே, அவர்கள் மோசடி யில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது என எக்ஸ்பீரியன் (Experian) நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யும் இந்தியர்களில் 25% மோசடியில் சிக்கிக்கொள்வ தாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, டெலிகாம் (57%), வங்கிகள் (54%), சில்லறை வர்த்தகம் (46%) ஆகிய துறைகளில் அதிக மோசடியில் சிக்கியிருக் கிறார்கள். வங்கிகள் மற்றும் சில்லறை வர்த்தக நிறு வனங்களிடம் தங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இந்த மோசடிக்கு முக்கிய காரணம்.