Published:Updated:

உங்களுக்கான போட்டியாளரை வெளியில் தேடாதீர்கள்... தொழில்முனைவோர் வெற்றிக்கு 12 டிப்ஸ்!

உங்களுக்கான போட்டியாளரை வெளியில் தேடாதீர்கள்... தொழில்முனைவோர் வெற்றிக்கு 12 டிப்ஸ்!

தொழில்முனைவோர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு சில சவாலான முயற்சிகளை எடுக்கும் துணிவு வேண்டும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ் இதுகுறித்து கூறும்போது, ``முயற்சி செய்து பார்த்தால்தான் சில உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். சில நேரம் தோல்வியில் முடிந்தாலும்கூட அதிலிருந்து நமக்கு அனுபவம் கிடைக்கும். முயற்சியே செய்யாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது" என்கிறார்.

உங்களுக்கான போட்டியாளரை வெளியில் தேடாதீர்கள்... தொழில்முனைவோர் வெற்றிக்கு 12 டிப்ஸ்!

தொழில்முனைவோர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு சில சவாலான முயற்சிகளை எடுக்கும் துணிவு வேண்டும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ் இதுகுறித்து கூறும்போது, ``முயற்சி செய்து பார்த்தால்தான் சில உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். சில நேரம் தோல்வியில் முடிந்தாலும்கூட அதிலிருந்து நமக்கு அனுபவம் கிடைக்கும். முயற்சியே செய்யாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது" என்கிறார்.

Published:Updated:
உங்களுக்கான போட்டியாளரை வெளியில் தேடாதீர்கள்... தொழில்முனைவோர் வெற்றிக்கு 12 டிப்ஸ்!

தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், காசை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்கள் குழப்பம் தீர்த்து, தெளிவாகத் திட்டமிட்டு தொழிலில் இறங்கி வெற்றிபெற இதோ சில எளிய, தீர்க்கமான யோசனைகள்...

நீங்கள் நம்பும் தொழிலைத் தேர்ந்தெடுங்கள்
எந்தத் தொழிலில் இறங்கினாலும் வெற்றிகரமான செயல்பாட்டுக்குச் சிறிது காலம் பிடிக்கும். அதுவரை உங்களுடைய தன்னம்பிக்கைதான் உங்களுக்குக் கைகொடுக்கும். எனவே, உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ள தொழிலில் ஈடுபடுங்கள். அதுதான் உங்களை சோர்வடையாமல் உற்சாகப்படுத்தும்.

உங்களுக்கு நீங்களே போட்டியாளர்
தொழில்முனைவோராகக் களத்தில் இறங்கிவிட்டால், உங்களுக்கான போட்டியாளரை வெளியில் தேடாதீர்கள். உங்களுக்கு நீங்களே போட்டியாளராகுங்கள். உங்களுடைய உற்பத்தியின் தரம், வேகம், வாடிக்கையாளர் எண்ணிக்கை என ஒவ்வொன்றிலும் உங்களுக்கு நீங்களே போட்டியாளராக மாறி வளர்ச்சியை எட்டுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பின்னோக்கிப் பார்த்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்களே அறிய முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களை நம்புங்கள்
ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் ஹென்றி ஃபோர்டு கூறும்போது, `ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது எனக் கருதுகிறீர்களா? அது சரியாகத்தான் இருக்கும். அதேபோல ஒரு விஷயத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என நீங்கள் நம்பினால், எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் மீறிச் செய்து முடிப்பீர்கள். செய்ய முடியாது எனத் தோன்றினால், சாக்குபோக்குச் சொல்லாமல் அந்தச் செயலைக் கைவிடுவது நல்லது' என்றார். எனவே, நம் உள்ளுணர்வு நம்பும் ஒரு செயலில் மட்டுமே துணிந்து இறங்க வேண்டும்.

இலக்கு வேண்டும்
டம்ளர் நிறுவனர் டேவிட் கார்ப் கூறும்போது, `உங்கள் தொழிலில் இலக்கைத் தீர்மானித்து செயல்பட வேண்டும்' என்றார். அதேபோல, `அந்த இலக்கில் எப்போதும் உறுதியோடும் தெளிவோடும் இருந்தால்தான் எட்ட முடியும்' என்றும் குறிப்பிடுகிறார். எனவே, அன்றைய நாளுக்கான இலக்கு, மாதத்துக்கான இலக்கு, ஆண்டுக்கான இலக்கு என இலக்குகளை வகைப்படுத்திவைத்து அதை நோக்கிச் செயல்பட்டால் வளர்ச்சி எளிதில் வசப்படும்.

ரிஸ்க் எடுங்கள்
தொழில்முனைவோர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு சவாலான சில முயற்சிகளை எடுக்கும் துணிவு வேண்டும். ``முயற்சி செய்துபார்த்தால்தான் சில உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். சில நேரம் தோல்வியில் முடிந்தாலும்கூட அதிலிருந்து நமக்கு அனுபவம் கிடைக்கும். முயற்சியே செய்யாமல் இருப்பதுதான் வருத்தத்துக்குரியது'' என்றார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ். எனவே, ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது.

சரியான நபர்களோடு பழகுங்கள்
உங்கள் தொழில்துறை என்னவோ, அதற்கான துறை சார்ந்த திறமைசாலிகளை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள். அவர்களோடு பழகுவதன்மூலம் உங்களது தொழில் முன்னேற்றத்துக்குத் தேவையான தகவல்கள், வாடிக்கையாளர்கள் வட்டம் எளிதில் கைகூடும். நிறைய நுட்பங்களைத் தெரிந்துகொள்ளவும் ஏதுவாக அமையும்.

உங்களுடைய திறனைக் கணக்கிடுங்கள்
உங்களுடைய திறன் என்ன என்பதை உணர்ந்து, ஒரு வேலையை உங்களால் எவ்வளவு நேரத்துக்குள் முடிக்க முடியும் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுங்கள். அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்க முடியும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற இது உதவும்.

சரியான குழுவை உருவாக்குங்கள்
தொழில்முனைவோராகக் களமிறங்கும்போது நீங்கள் தனியொருவராக இருக்கலாம். ஆனால், அதன் பின்னால் தொழில் வளர வளர உங்களுக்கென ஒரு பணியாளர் குழு அமையும். அந்தக் குழுவை நல்லவிதமாக அமைத்துக்கொள்வதும், பராமரிப்பதும் உங்களது முன்னேற்றத்துக்கு முக்கியம். திரைத்துறையில் சாதிக்கும் பலரும், தங்களுக்கான இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், எடிட்டர், ஒளிப்பதிவாளர், நடிகர் என ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு தொடர் வெற்றி பெறுவதைப் பார்த்திருப்போம். இதுவும் வெற்றிக்கான வழிகளில் ஒன்றே. 

நிதி ஆதாரத்தை உருவாக்குங்கள்
ஒருவர் தொழிலில் இறங்கியதும் கிடைக்கும் லாபத்தின் மூலம் பணவரவு ஏற்படுவது இயல்பு. ஆனால், அது குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும். அதற்கடுத்த கட்டமாக தொழிலை விரிவாக்கம் செய்வதாக இருந்தால் வங்கிக்கடன் பெறுவதற்கு முயல வேண்டும். தொழில் வளர்ச்சி சீராக இருப்பதற்கு நிதி ஆதாரம் தேவைக்கேற்ப இருப்பது முக்கியம்.

வாடிக்கையாளர் கருத்துகளைக் கேட்டல்
வாடிக்கையாளர்கள் பலவிதமாக இருப்பார்கள். பல்வேறு குறைகளைக் கூறுவார்கள். சிலர் ஆலோசனைகள் கூறுவதும் உண்டு. இவர்களிடமிருந்துதான் நம் தொழிலுக்கான சந்தை எதிர்பார்ப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எனவே, வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கேட்டு சில மாறுதல்களைச் செய்துகொள்வது, நம்மைத் திருத்திக்கொள்வது அவசியம்.

தொழில் சார்ந்த கல்வி
நான் ஈடுபடும் தொழில் சார்ந்த கல்வி நமக்கு அவசியம். அதுகுறித்த நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதன்மூலம் நமது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல, தொழில்சார்ந்த கண்காட்சிகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டும் நம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.

அறிவுரைகளைச் செயல்படுத்துங்கள்
இந்த உலகம் முழுக்க அறிவுரைகளால் நிறைந்துகிடக்கிறது. ஆனால், எவ்வளவுதான் அறிவுரைகள் கேட்டாலும் அவற்றைச் செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி கைகூடும். கிணற்றில் குதித்தால்தான் நீச்சலடிக்க முடியும் என்பதுபோல, கற்றவை அனைத்தையும் செயல்படுத்திப்பார்க்கும்போதுதான் வெற்றி நம் வசமாகும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism