Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17
பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

மிகவும் கேஷூவலான உடையணிந்திருந்த ஜோஷ் கானெலி, மிட்லாண்ட் கஃபேயைச் சென்றடைந்தார். அந்த நேரத்தில் கஃபேயில் கஸ்டமர்கள் அதிகமாக இல்லை. குறிப்பிட்ட ஒரு டேபிளுக்கு முன் உட்கார்ந்து, காத்திருந்த நேரத்தில், சிலர் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறிது நேரத்தில் வெயிட்டர் வந்தார். 

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

`உங்களுக்காக என்ன கொண்டுவரட்டும், மிஸ்டர் கானெலி?”

இதைக் கேட்ட ஜோஷ் கலவரமடைந்தார். இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும்?

`நீங்கள் மிஸ்டர் கானெலிதானே?” என்று கேட்டுவிட்டு வெயிட்டர் சிரித்தான். மூலையில் இருந்த டேபிளுக்கு முன்னால் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் தனது மெலிந்த உருவத்துக்கு கோட்டும், மணல் நிறத்திலிருந்த முடியை மறைத்துத் தொப்பியும் அணிந்திருந்தார். அவர் சுமார் 20 நிமிடங்களாக அங்கு உட்கார்ந்திருந்தார். ஆனால், அவர் தனக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார் என்று வெயிட்டர் சொல்லும் வரை ஜோஷுக்குத் தெரியவில்லை. ஜோஷ் அந்தச் சீட்டை நோக்கி நடந்துசென்றார். வேறெதற்கும் காத்திருக்காமல் ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

‘`ஜோஷ் கானெலி. தொழில்நுட்ப நிபுணர். காட்டன் ட்ரையலின் (Cotton Trail) அட்மின். ஹேக்கிங் செய்வதில் ஆல்-ரவுண்டர். வெல்கம்!”

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17அந்த மனிதர் தனது தொப்பியை எடுத்தபோது, அவரது முகத்தை ஜோஷ் பார்த்தான். அவருக்குக் குறைந்தது 60  வயதிருக்கும். அவரது தோலில் அங்கங்கே புள்ளிகள் இருந்தன. அவரது உருவத்தைப் பார்த்தால், அமெரிக்கர் போலத் தோன்ற வில்லை. ஒருவேளை, ஐரோப்பியராகவோ அல்லது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவராகக்கூட இருக்கலாம்.

‘‘என்னைப் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள நல்ல ஹோம் வொர்க் செய்திருக்கிறீர்கள்’’ என்று ஜோஷ்  சொல்ல, ‘‘செய்யத்தானே வேண்டும். என் வேலையைச் செய்ய நான் ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கும்போது’’ என்றார்.

‘`வேலையா?”

‘`யெஸ். அது குறித்த விவரங் களைப் பிறகு சொல்கிறேன்… அதற்குமுன் ஒரு டீமை உடனடி யாக உருவாக்க வேண்டும்?’’

‘`டீம்... எதற்கு..?’’

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

`இருபதுபேர் கொண்ட ஒரு டீம். உன் வயதையொத்தவர்களாக இருப்பது நல்லது. அவர்கள் நீ நம்பக்கூடியவர்களாக இருக்கலாம்.  அல்லது உன்னோடு கடந்த காலத்தில் நட்புடன் இருந்தவர் களாக இருக்கலாம். முடிந்தால், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த வர்கள், எந்தவித ரிக்கார்டும் இல்லாதவர்கள். நோ ட்ராக்ஸ், நோ ஹிஸ்டரி. ஸ்டான்ஃபோர்டில் நீ இருந்தபோது இருந்த மாணவர்கள் அமைப்பில் இருந்தவர்களாக இருந்தால்கூட போதும். இந்த டீமை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும்?”

‘`ஒரு மாதமாகும்.’’

‘`நீண்ட காலமாக இருக்கிறது.’’

‘‘உங்கள் எதிர்பார்ப்பு என்ன?’’

‘`இரண்டு வாரங்கள்..?”

`கஷ்டம். நம்பகமான டீமை உருவாக்க அவகாசம் தேவை.’’

‘`ஆனால், அது என்னிடம் இல்லை.’’

‘`குறைந்தபட்சம் மூன்று வாரங் களாவது கொடுங்கள். அதற்கும் கீழே என்றால் முடியாது.’’
 
வயதானவர் சிரித்தார்.

‘`சரி, மூன்று வாரங்கள். இதுதான் டீல். இப்போதிருந்து மூன்று சனிக்கிழமைகள். கஃபே திறப்பதற்குமுன் இதே இடத்தில் நான் உங்களை 10.30 மணிக்குச் சந்திப்பேன். நீங்களும், உங்கள் டீமும் இங்கே இருக்க வேண்டும். நீங்கள்  என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சந்திக்கும்போது சொல்கிறேன். பெரிய பேக்பேக்ஸ் (backpacks) கொண்டுவரும்படி அனைவரிடமும் சொல்லி விடுங்கள்’’ என்றார். 

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

‘`இதில் எனக்கென்ன கிடைக்கும்?’’

‘`மொத்தத் தொகையில் உனக்கு 10%.’’  

ஜோஷ் அவரை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே ‘`நான் உங்களை எப்படி நம்புவது?” என்று கேட்டான்.

‘`சரி, இன்று 1 லட்சம் பிட்காயின்களை நான் உனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன். ஒவ்வொரு பிட்காயினும் 2 டாலர் மதிப்புக்கொண்டது. நீ என்னை நம்ப  அதுபோதுமா?” என்று கேட்டார்.

‘`நான் என்னுடைய பிட்காயின் பப்ளிக் கீ-யை TOR மெயில் மூலமாக அனுப்புகிறேன். மூன்று வாரங்களில் மீண்டும் சந்திப்போம்’’ என்று ஜோஷ் சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

மும்பை

கார்ப்பரேட் பேங்கிங் டீமுடனான நீண்ட மீட்டிங்கை முடித்துவிட்டு, அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பியிருந்தார் மாள்விகா. தனது பணியாளர்களுடன் நாள் பூராவும் மீட்டிங் வைத்து நடத்துவது மாட்-ன் வழக்கம். இந்த மீட்டிங்கிற்கு மாள்விகாவை அவர் அழைக்க வில்லை. இருந்தாலும்கூட, கடைசி நிமிடத்தில் அழையா விருந்தாளியாக அந்தக் கூட்டத்தில் நுழைந்தார் மாள்விகா. 

மீட்டிங் முழுவதும் அவர் மாள்விகாவை தவிர்த்ததோடு, அவர் கூறிய யோசனைகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. இது என்.வொய்.ஐ.பி-யில் தினசரி நடக்கும் வழக்கமாக இருந்து வந்தது. மாள்விகாவிற்கான முக்கியத்துவம் வேகமாகக் குறைய ஆரம்பித்தது அவரைக் கடுமையாகப் பாதித்தது. பிராந்திய அலுவலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மாட் திகழ்ந்தார்.

அன்றைக்கு மாள்விகா, மாலை நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து நேரம் செலவிடுவதை மாள்விகா எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருப்பதுண்டு.

மாள்விகா தனது அபார்ட்மென்டிலிருக்கும் பாத் டப்பில் படுத்துக்கொண்டு அனைத்து எதிர்மறைச் சிந்தனைகளையும் மறக்க நினைத்தார். அவரை எப்போது சந்தித்தாலும் தன்னைச் சிறப்பாக `பிரசன்ட்’ செய்துகொள்வதில் மாள்விகா சிரத்தை எடுத்துக்கொள்வதுண்டு.

அதேநேரத்தில், வருணின் போன் அடித்தது. அவன் அதைப் பார்த்து, புன்னகைத்து அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தான்.  

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

‘`ஹாய் வருண், அடுத்த வார இறுதியில், சனிக் கிழமை அம்மாவுக்குப் பிறந்தநாள். அதுக்காக நான் ஒரு கிஃப்ட் வாங்கணும்.’’

‘`நான் உன்னை மாலுக்குக் கார்ல கூட்டிட்டுப் போனா, நீ அங்கே உங்க அம்மாவுக்காக ஷாப்பிங் பண்ணுவ, இல்ல?”

‘`என்னை இவ்வளவு மோசமானவள்னு நீ எப்படி நினைக்கலாம்? ஒரு `போரான’ வேலை செய்யும்போது உன்னோடயும் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாமேன்னு நினைச்சேன்’ என்று தான்யா பதில் சொன்னாள்.
 
‘`நான் வர்றேன், ஸ்வீட் ஹார்ட்!”

‘`க்ரேட்! நான் உன்னை இன்னும் ஒரு மணி நேரத்தில தாஜ் ஹோட்டல் ஷாப்பிங் ஆர்கேட்ல பார்க்கிறேன்.”

ஒரு மணி நேரத்துக்கும் குறை வான நேரத்தில், வருண் கேட்வே ஆஃப் இண்டியாவின் அருகிலிருக் கும் தாஜ்மஹால் ஹோட்டலை அடைந்து அங்கேயிருந்த வாலேட்டிடம் கார் சாவியைத் தரும்போது, தான்யாவை அங்கிருந்த லாபியில் பார்த்தான்.

‘`ஷாப்பிங் போறதுக்கு முன்னால ஒரு காபி குடிக்கலாமா?’’ என அவன் கேட்க, அவள் சம்மதித்தாள். இருவரும் பூல்சைடில் இருக்கும் காபிஷாப் நோக்கிச் சென்றார்கள்.

‘`நான் உன்னைக் கூப்பிட்டப்ப நீ என்ன செஞ்சுட்டு இருந்த?”

‘`டாட் ஒரு புது கேம் லாஞ்ச் பண்ணியிருக்கார். அதைபத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.’’

‘`புது கேம்?”

`ம்ம்ம்ம்ம்… டவுன்ஸ்விலே. இண்டிஸ்கேப் அதை ரொம்பவும் நம்பியிருக்காரு. எப்படி அது உருவாகுதுன்னு பார்க்கணும். அது இன்னும் அவ்வளவா டேக் ஆஃப் ஆகாததினாலா நான் அதுல சில மாற்றங்களைச் செய்றதுக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்கேன். ஃபேஸ்புக்கைச் சேர்ந்த வங்களோட நான் கான் காலில் இருந்தேன். நாங்க அவங்ககிட்ட ஒப்பந்தமொன்று பேசிக் கொண்டிருக்கிறோம்.’

‘‘என்ன டீல்?”

‘`அப்படியும், இப்படியும் ரொம்பநேரம் பேசினபிறகு, நான் அப்பாவையும், சந்தீப்பையும் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துமாறு சம்மதிக்க வச்சதோட ஒரு பிரத்யேக உடன்படிக்கையையும் உருவாக்கச் சொல்லியிருக்கேன். அடுத்தவாரம் ஃபேஸ்புக்கில இருந்து எங்களை மீட் பண்றதுக்கு வர்றாங்க. அதுக்காக சில பேக்ரவுண்ட் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்.’’

காபி குடித்து முடித்துவிட்டு, மாலில் எல்.வி.கடையை நோக்கிச் சென்றார்கள். நீண்ட நேரமாகப் பார்த்து, பரிசோதித்தபின் தான்யா ஒரு பேக்கை அவள் அம்மாவுக்காகத் தேர்வு செய்தாள். 

மா்ள்விகா குளித்த முடித்துத் துவட்டிக் கொண்டபின் கடிகாரத்தைப் பார்த்தார். அது இரவு மணி 7-யைக் காட்டியது. அவரை இன்னும் ஒரு மணிநேரத்தில் பார்க்க வேண்டும். அவருடைய வார்ட்ரோப்பில் இருந்த சேகரிப்பிலிருந்து பிரகாசமான ஆரஞ்ச் நிற சேலையை உருவி, அதை ஐந்து நிமிடத்தில் தன் உடம்பில் சுற்றிக் கொண்டார். அடுத்த 15 நிமிட ஒப்பனைக்குப்பிறகு அவர் கிளம்பத் தயாரானார்.

அவரைப் பார்க்கப்போகும் நேரங்களில் வீட்டிலிருந்து கிளம்புவதற்குமுன் அவருக்கு போன் செய்து அவர் `ஃப்ரீயாக’ இருக்கிறாரா என உறுதி செய்துகொள்வது வழக்கம். வழக்கம் போல அன்றும் போன் செய்தபோது அது அடித்துக்கொண்டே இருந்தது. அவர் அதை எடுக்கவில்லை.

மாள்விகா இரண்டுமுறை முயற்சி செய்தபின், அவர் திரும்பக் கூப்பிடும் வரை காத்திருக்கலாம் என முடிவுசெய்தார். அவருடைய அழைப்புகளை அவர் எப்படியும் பார்த்துத்தானே ஆகவேண்டும்.

டிவியை ஆன் செய்து ஏதேதோ சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தார் மாள்விகா. ஒரு சேனலில் பிரேக் இன் நியூஸைப் பார்த்து அதிர்ந்தார். ‘`டி.வி. சுப்பாராவ், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது’’ என அறிவித்தது அந்தச் செய்தி.
 
மாள்விகா அதிர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந் தார். ‘‘வாட் தி ஹெல்? இது எப்படி நடக்க முடியும்? நான் செய்துகொண்ட அனைத்து சமரசங்கள் வீணானதா? இவ்வளவு நாள் அவர் சொல்லி வந்ததெல்லாம் என்னாச்சு?’’

அவரிடம் அதைக் கேட்டே ஆகவேண்டும்.

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17

“நம்ம தொகுதி எம்எல்ஏ பண்ணின ஊழல் வெளில வந்திடுச்சாமே?”

“ஆமா, நம்ம தொகுதியில பங்குச் சந்தை கட்டிக்கொடுத்ததாச் சொல்லி இரண்டு கோடி ரூபாய் சுருட்டியிருக்கார்!”

-தெ.சு.கவுதமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு