Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ண்டிஸ்கேப் நிறுவனத்துடன் பிசினஸ் பேச  தனது குழுவினரை அழைத்து வந்திருந்தார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர். அவர்கள் சில நிமிடங்களில் வருண், சந்தீப்புடன் ஆதித்யா வந்தார். வருண் மேசையின் மையப் பகுதியை நோக்கிச் சென்றான். அவன் கணினியின் யூ.எஸ்.பி போர்ட்டில் (USB port) பென் டிரைவை நுழைத்து பவர்பாயின்ட் ஃபைலை திறந்தான். அதிலிருந்த ஒரேயொரு ஸ்லைடில் மூன்று முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

‘‘1. ஃபேஸ்புக்கின் வழக்கமான விளம்பரக் கட்டணத்திலிருந்து 50% கழிவில் 20 மில்லியன் டாலர் மதிப்புக்கான விளம்பரம் ஃபேஸ்புக்கில் செய்யப்படும்.

2. ஒரு வருடத்துக்கு கேமிங்கிற்காக ஃபேஸ்புக்குடன் பிரத்யேகமான ஒப்பந்தம். அந்தக் காலகட்டத்தில் வேறெந்த கேமிங் நிறுவனமும் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யக் கூடாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -183. கேம் விளையாடுவதற்குக் கட்டணம் வசூலிக்கும்பட்சத்தில் கேம் விளையாடக்கூடிய வர்கள் செலுத்தும் கட்டணத்தில் 30%  ஃபேஸ்புக் கிற்கு அளிக்கப்படும். அதற்குப் பதிலாக, அதே மதிப்பிற்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அது அனுமதிக்க வேண்டும். உதாரணமாக, இண்டிஸ் கேப் வாடிக்கையாளர்களிடமிருந்து வருடத்துக்கு 20 மில்லியன் டாலரைக் கட்டணமாகப் பெற்றால், அதிலிருந்து 6 மில்லியன் டாலரை ஃபேஸ்புக்கிற்கு வழங்க வேண்டும். அதற்கு ஈடாக, ஃபேஸ்புக் ஆறு மில்லியன் டாலர் மதிப்புக்கு, அதுவும் முதலாவது அம்சமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணத்தில், இண்டிஸ்கேப்பை இலவசமாக விளம்பரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

இதில் உடன்பாடு என்றால், முதல் வருடம் இண்டிஸ்கேப்பின் மூலம் 25 மில்லியன் டாலர் ஃபேஸ்புக்கிற்கு வருமானம் கிடைக்கும் என உறுதியளிக்கிறோம்’’ என்று வருண் கூறினான். ஆதித்யாவும், சந்தீப்பும் எதுவும் பேசவில்லை.

வருண் தொடர்ந்து, ‘`இதில் நேரடி விளம்பரம் மூலம் 10 மில்லியன் டாலரும், வருமானப் பகிர்வு மூலம் 15 மில்லியன் டாலரும் அடங்கும். மூன்று வருடத்தில், இதன் கூட்டு மதிப்பு 125 மில்லியன் டாலராக இருக்கும் என்று  நம்புகிறேன்’’ என்றான்.

ஃபேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய சக அதிகாரிகளுடன் கலந்து பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறினார்கள். அவர்கள் சென்றபிறகு, ‘`உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா?” என்று சந்தீப் சத்தம் போட்டார். வருண் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது, சந்தீப்புக்கு மேலும் எரிச்சல் ஊட்டியது.

‘`அங்கிள், தயாரிப்புச் செலவெல்லாம் சேர்த்து நாம் இந்த கேமிற்காக ஏற்கெனவே 20 மில்லியன் டாலருக்கு மேல் செலவழித்துவிட்டோம் ஆனால், குறிப்பிடத்தக்க அளவுக்கு உபயோகிப்பாளர்கள் இல்லை’’ என்றான் வருண்.

‘`அதற்காக... இப்படிச் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது?’’

‘`முதலாவதாக, இந்த ஏற்பாட்டின் மூலம் நாம் ஒரே சமயத்தில் 600 மில்லியன் உபயோகிப்பாளர்களை சென்றடைய முடியும். ஃபேஸ்புக்கால் ஈர்க்கப்பட்டவர்கள் அதில் எதுவும் புதிதாக இருந்தால், கண்டிப்பாக முயற்சி செய்து பார்ப்பார்கள். இன்றைக்கு அனைவரும் இந்த கேமை இலவசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் மிகவும் பிரபலமான ஆனால், லாபம் ஈட்டாத நிறுவனமொன்றை நடத்திவருகிறோம். நாம் நம்முடைய விளம்பரதாரர்களிடம் சென்று சுமார் 600 மில்லியன் வாடிக்கையாளர்களால் – இன்னும் இரண்டு வருடத்தில் இது ஒரு பில்லியனைத் தொடும் என ஃபேஸ்புக் எதிர்பார்க்கிறது. இந்த கேமை விளையாடமுடியும் என்று சொன்னால் அவர்கள் பணத்தோடு வந்து நம் அலுவலகக் கதவைத் தட்டுவார்கள். அந்த நேரத்தில் நாம் விளம்பரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இது ஃபேஸ்புக்கிற்கு நாம் கொடுக்க வேண்டிய 10 மில்லியன் டாலரில் பெரும்பகுதியைக் கொடுப்பதற்கு உதவும்’’ என்று சொல்லிவிட்டு சிறிது நிறுத்தினான். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

‘`இரண்டாவதாக, முழுவதும் இலவசமாகக் கொடுக்கக்கூடிய நமது கேமை பிரீமியம் கேமாக மாற்ற வேண்டும். ஒரு நிலை யிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்லக்கூடிய வாடிக்கையாளர் களிடம் இதற்கென்று ஒரு சிறு கட்டணத்தை நாம் வசூலிக்கலாம். இப்போது 50 நிலைகளைக் கொண்டிருக்கும் `டவுன்ஸ் விலே’யை 75-ஆக அதிகரிக்கச் சொல்லி நம்முடைய வடிவமைப் பாளர்களிடம் கேட்டுக்கொள்ள லாம். இதன் மூலம் நமக்கு சுமார் 25 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கலாம். 

அதுபோல, ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலர் மதிப்பு விளம்பரம் செய்வதற்கான இடம் கிடைப்பதால், அதன்மூலம் `டவுன்ஸ்விலே’ மட்டுமல்லாமல் `மாஃபியா டான்ஸ்’ மற்றும் நம் முடைய சில பழைய கேம்களை யும் விளம்பரம் செய்ய பயன் படுத்திக்கொள்ளலாம். அவற்றை யெல்லாம் நாம் ஃபேஸ்புக்கு இணக்கமாக மாற்றி மறு அறிமுகம் செய்யலாம். அதனால் கிடைக்கக் கூடிய வருமான வாய்ப்பைக் கவனத்தில்கொள்ளுங்கள். ஃபேஸ்புக்குடன் ஆன பிரத்யேக ஒப்பந்தத்தின் மூலம் சந்தையை மதிப்பீடு செய்வதுடன், குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு சமூக ஊடகத்தில் மற்ற கேம்கள் போட்டி போடுவதையும் இது தடுத்து நிறுத்திவிடும். அவர்கள் விழித்தெழும்போது நாம் நீண்ட தூரம் சென்று உலகத்திலேயே தலைசிறந்த கேமிங் நிறுவனங்களில் ஒன்றாகி இருப்போம்’ என்றான்.

ஆதித்யாவும், சந்தீப்பும் வருண் சொல்வதை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார்கள். அன்று மாலை பிராந்திய இயக்குநர் ஆதித்யாவை அழைத்து எழுத்து மூலம் புரபோசலை அனுப்புமாறு கூறினார். அதிலிருந்து சில நாள்களிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது.

நியூயார்க்

அந்தக் காலை வேளையில் ஜோஷின் நெற்றிக் கோடுகளின் சுருக்கம் அதிகமாக இருந்தது. அவர் 20 பேர் கொண்ட ஒரு குழுவை மிகவும் கவனமாக ஒருங்கிணைத்திருந்தார், அவர்களில் பெரும்பாலனவர்கள் அவர் தலைமையில் இயங்கிவந்த மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும், கடைசி நேரத்தில் அதில் ஒருவன் வரவில்லையென கூறிவிட்டான். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

அதிகாலை நான்கு மணிக்கு தனது அறையில் மேலும்கீழுமாக நடந்துகொண்டிருந்த ஜோஷுக்கு ஒரு பொறி தட்டியது. அவரோடு ஃப்ளாட்டில் இருக்கும் ஸ்டான் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த ஒரு மெக்ஸிகன். அவனுக்கென்று ஒரு நிலையான வருமானம் இல்லை. அவனை சமாதனம் செய்து இந்தக் குழுவில் ஒருவனாகச் சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. நாம் செய்யும் வேலை அவனுக்குத் தெரியக்கூடாது என்பதால். அது குறித்து ஸ்டானிடம் இவர் கேட்க வில்லை. ஆனால், இப்போது அவருக்கு வேறு சாய்ஸ் இல்லை. ஸ்டானை அவர் சமாதானப்படுத்திக் குழுவில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டார். காரியத்தைச் செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டிருந்தது. சனிக்கிழமை காலை நேரம், மிட்லாண்ட் கஃபேக்கு அந்த வயதானவரும் ஜோஷும் ஒரே நேரத்தில் போய்ச் சேர்ந்தனர்.

‘‘குழு தயாராக இருக்கிறது. இவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று இப்போது சொல்ல முடியுமா?” ஜோஷ் கேட்டார்.

தனது காலடியில் கிடந்த பேக்கைக் குனிந்து எடுத்த அந்த வயதானவர் அதிலிருந்து தோலினால் ஆன ஒரு ஃபோல்டரை எடுத்து அதைத் திறந்து ஜோஷின் முன்னால் மேஜையில் திறந்து வைத்தார். அதிலிருந்து ஹோட்டல் க்ராண்ட்டின் அறைச் சாவிகளை போன்றிருந்த கார்டுகளை எடுத்து ஜோஷிடம் நீட்டி, ‘`இதோ, இங்கே’’ என்றார்.

ஜோஷுக்கு அது ஆச்சர்யமாக இருந்ததோடு ஆர்வத்தையும் தூண்டியது. ‘‘இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.

அவருடைய தயக்கத்தை அறிந்துகொண்ட வயதானவர், “இவையெல்லாம் ஹோட்டல் அறைச் சாவிகள் இல்லை, மிஸ்டர். கானெலி. இந்த கார்டுகளில் ஐந்து வெவ்வேறு சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்கான குறியீடுகள் இருக்கின்றன. ஏ.டி.எம்-மிலிருந்து பணத்தை எடுக்க இவை உதவும். இந்த கார்டின் பின்புறம் அதற்கான பின்னும் (PIN) எழுதப்பட்டிருக்கிறது’’ என விளக்கினார்.

ஜோஷ் கார்டைத் திருப்பிப் பார்த்தார்.

‘`இந்த இருபது பேரையும் ஒரு டீமுக்கு இரண்டு பேர் வீதம் இருக்கிற மாதிரி பத்து டீமா பிரிக்க வேண்டும். ஒவ்வொரு டீமுக்கும் ஐந்து கார்டு களைக் கொடுக்க வேண்டும். நியூயார்க் நகரெங்கிலும் இருக்கக்கூடிய ஏ.டி.எம்-களுக்கு அவங்க போய் இந்த கார்டுகளை உபயோகித்துப் பணத்தை எடுக்கவேண்டும். ஒவ்வொரு வித்ட்ராயலும் சரியாக 2000 டாலர்கள் இருக்க வேண்டும். ஒரு டீமுக்கு 5 கார்டுனா, ஒரு  ஏ.டி.எம்-முக்கு 10,000 டாலர். சாயங்காலம் 4 மணிவரை எத்தனை ஏ.டி.எம்–க்கு அவர்கள் போக வேண்டுமோ, போகலாம்’’ என்றார்.

‘‘எந்தவொரு கார்டிலும் பணம் இல்லாமல் போகாதா? அந்த அக்கவுன்ட்டுக்கு என்று  உள்ள எல்லாத்தையும் எடுத்துவிட்டால், பணம் இல்லாமல் போய்விடடும் இல்லையா? அப்போது என்ன செய்வது?’’

‘‘ஏ.டி.எம் முடிவில்லாமால் பணத்தைக் கொடுக்கும். அது குறித்த நடவடிக்கைகளை நாங்கள் முன்பே செய்துவிட்டோம். அரை மணி நேரத்துக்கு முன்பாக, பேங்கிங் சிஸ்டத்தை எங்க டீம் ஹாக் பண்ணி ஒவ்வொரு கார்டுக்குமான வித்ட்ராயல் அளவை 1.5 மில்லியன் டாலருக்கு அதிகரித்துவிட்டார்கள். அதனால உங்களுக்கு எந்தவொரு பிரச்னையும் இருக்காது. பேங்க் இந்த `ஓட்டையை’க் கண்டுபிடிச்சு `அடைக்கிறதுக்குள்ள’ நாம் இதைச் செய்தாக வேண்டும்’’ என்றார்.

‘`நீங்க அதை உண்மையிலேயே செஞ்சீங்களா?” என்று கேட்டுக் கொண்டே ஜோஷ் சிரித்தார். அவர் கார்டுகளையும், அந்த வயதானவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘`அந்தப் பணத்தைக் கொண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 

‘`அதுக்குத்தான் நாங்க உங்களை வைத்தி ருக்கிறோம். உங்க டீமிடமிருந்து பணத்தைச் சேகரித்த பின் என்ன செய்ய வேண்டுமென்கிற வழிகாட்டுதலுக்கு நீங்கள் காத்திருக்கணும். நாங்க அதை என்ன செய்யணும்னு சொல்வோம். நீங்க வேகமாக இயங்கினால் அதிகப் பணத்தைச் சேகரிக்கலாம். அப்படி சேகரிக்கப்படும் மொத்தப் பணத்தில் 10% உங்களுக்கு, அது போல டீமில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 5% கிடைக்கும் என்பதை நான் நினைவுபடுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன்” என்றார்.

‘‘அவ்வளவுதானா, இல்லை இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா?’’ எனக் கேட்டுக்கொண்டே தனது குழுவினருக்கு வழிமுறைகளைக் கூறுவதற்காக அங்கிருந்து எழுந்தார்.

‘`முதலில் மன்ஹாட்டனிலிருக்கும் ஏ.டி.எம்-களுக்குச் செல்லுங்கள். அவைதான் அதிக மதிப்புள்ள டாலர்களைக் கொண்டிருக்கும். எனவே, அங்கிருந்து பேக்கைத் தூக்கிக்கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்வது எளிதாக இருக்கும். மேலும்…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.

`மேலும்…?”

`’ஏடிஎம்–ல் இருக்கும் சி.சி.டி.வி-யில் அகப் படாமல் இருக்குமாறு உங்கள் குழுவினரிடம் கூறவும். அவர்கள் ஏ.டி.எம் லாபி அல்லது அது இருக்கும் இடத்திற்கு அருகில் செல்லும் முன்பு ஹூடிஸை (hoodies) இழுத்துவிட்டு, முகத்தை மறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். அவர்களை கேமரா படம்பிடித்து விடாமால் பார்த்துக் கொள்வது அவசியம். அப்படி யாராவது பிடிபட்டுவிட்டால், யாரும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடாது. அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாவார்கள்’ என்றார்.

ஜோஷ் தலையாட்டிவிட்டு எழுந்து வெளிக்கதவை நோக்கிச் செல்லும்போது அவர் ஒரு கணம் உறைந்து போய்விட்டார். மூலையில் உட்கார்ந்து உள்ளூர் பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தவர் இவருக்கு அறிமுகமானவராக இருந்தார்.

அவர் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என ஜோஷ் அவருடைய ஜாக்கெட்டிலிருந்த ஹூடின் உதவியால் தனது முகத்தை மறைத்துக்கொண்டு வேகமாக அந்த கஃபேயிலிருந்து வெளியேறினார். அவருடைய குழுவினர் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

30 நிமிடங்களுக்குப்பின், பத்து டீம்களுக்கும் என்ன செய்யவேண்டுமென்று சொல்லப்பட்டது. அவர்களும் நியூயார்க்கிலிருக்கும் ஏ.டி.எம்-களை கொள்ளையடிக்கப் புறப்பட்டனர்.

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18

ரூ.13 லட்சம் தேர்தல் செலவு செய்த எம்.எல்.ஏ-கள்!

ட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவழிக்கலாம் எனத் தேர்தல் கமிஷன் அதிக பட்சத் தொகையை நிர்ணயம் செய்திருந்த போதிலும், அதைவிடக் குறைவான தொகையைச் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டியிருக்கிறார் கள் பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள். ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று நிர்ண யிக்கப்பட்ட போதிலும்  கேரளாவில் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் ரூ.19.64 லட்சமும், தமிழகத்தில் ரூ.13.36 லட்சமும் மட்டுமே செலவு செய்தி ருப்பதாகச் சொல்லியிருக் கிறார்கள். இந்தக் கணக் கெல்லாம் உண்மை யானதுதானா என்பது இந்த எம்.எல்.ஏ-களுக்கு மட்டும் தான் தெரியும்!