ல கோடி இந்தியர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கப்போவது ஓய்வூதியம்தான்.  ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் ஓய்வூதியம் வரையறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் வேலை செய்யும்காலத்தில் இந்தியாவைவிட அதிக வரி செலுத்தினாலும், அவர்கள் ஓய்வு பெறும்போது வாழ்க்கைச் செலவு மற்றும் மருத்துவச் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றை அரசாங்கமே கொடுத்துவிடும். ஆனால் இந்தியாவில், சாதாரண மனிதனுக்கு சமூகப் பாதுகாப்பு (Social Security) என்பது இதுவரை முறைப்படுத்தப்படவில்லை.

பணம் பழகலாம்! - 20

அதில் ஒரு சிறிய மாறுதல் 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பி.எஃப்.ஆர்.டி.ஏ (PFRDA – Pension Fund Regulatory and Development Authority) என்ற ஓய்வுக்காலக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அரசால் நிறுவப்பட்டது. ஓய்வுக்கால நிதித்துறையை புரமோட் செய்வதும், வளர்ப்பதும், அதைச் சீரமைத்துக் கட்டுப்படுத்துவதுமே இந்த அமைப்பின் நோக்கம். ஆரம்பத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது, இன்றைய தினத்தில் அனைத்துக் குடிமகன்களுக்கும் சேவையை வழங்கிவருகிறது. இந்த சிஸ்டம் என்.பி.எஸ் (NPS – National Pension System) என அழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 20


மக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு  50,000 ரூபாய் வரை வரிவிலக்கு அளித்துள்ளது. தனிநபர்களின் வருமானத்துக்கு  2.5 லட்சம் ரூபாய் வரை வரியில்லை. அதற்கு மேல் பி.பி.எஃப், டேக்ஸ் சேவிங் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் (செக்‌ஷன் 80C) முதலீடு செய்யும்போது 1.5 லட்சம் ரூபாய்க்கு வரியில்லை. அதற்கு மேலும் வரிவிலக்கு வேண்டுமென்றால் என்.பி.எஸ்-ல் முதலீடு செய்யும்போது [செக்‌ஷன் 80CCD (1B)] 50,000 ரூபாய் வரை கூடுதல் வரி சேமிப்பு கிடைக்கும். இந்த வரி சேமிப்பிற்காகவே பலர் இத்திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள்.

என்.பி.எஸ் எவ்வாறு வேலை செய்கிறது?

சம்பாதிக்கும் காலத்தில் ஒரு தொகையைத் தொடர்ந்து என்.பி.எஸ் கணக்கில் சேமித்து வாருங்கள். உங்களின் ஓய்வுக்காலத்தில் நீங்கள் இதுவரை சேர்த்த பணத்திலிருந்து மாதாந்திர பென்ஷன் பெற்றுக்கொள்ளலாம். ஆக மொத்தத்தில் உங்களின் ஓய்வுக்காலத்தின் போது தலைநிமிர்ந்து நிற்கலாம்.

எல்லாம் ஓகே... என்.பி.எஸ் கணக்கை எப்படித் தொடங்குவது என்பதுதானே உங்கள் கேள்வி... பதில் அடுத்த வாரம்!

-வரவு வைப்போம்...