Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ஃபோர்சீசன்ஸில் சனிக்கிழமை நடந்த மாள்விகாவின் பிறந்தநாள் பார்ட்டியில் வங்கித் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர். சி.இ.ஓ-க்கள், தொழிலதிபர்கள், ரெகுலேட்டர்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், செய்தித்தாளில் மூன்றாம் பக்கத்தில் இடம்பெறும் பிரபலங்கள் என அனைவரும் வந்திருந்தனர். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

பிறந்தாள் பார்ட்டி நடைபெறும் நாளன்று காலை வரை, பார்ட்டி பற்றிய தகவலை தான்யா ரகசியமாகவே வைத்திருந்தாள். ஆனால், அதன்பின் அவள் மாள்விகாவுக்கு அதுகுறித்துச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில், பார்ட்டிக்கு மாள்விகா உடையலங் காரம் செய்துகொள்ள வேண்டுமல்லவா?

என்.ஒய்.ஐ.பி-ல் (NYIB) சமீபத்தில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகளினால் மாள்விகா சிறிது சோர்ந்திருந்தார். இந்த பார்ட்டி அவரை பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று தான்யா நினைத்தாள். 

பார்ட்டிக்கு முதலில் வந்த சிலரில் ஆதித்யாவும் ஒருவர். வருண் ஏற்கெனவே அங்கு வந்து தான்யாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தான். ‘`எப்பவும்போல, கார்ஜியஸாக இருக்கிறாய், மாள்விகா!” என்றார் ஆதித்யா. மாள்விகாவும் சிரித்துக்கொண்டே அவரைக் கட்டியணைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19தொடர்ந்து விருந்தினர்கள் வந்தபடி இருந்தனர். இரவு பத்து மணி சுமாருக்கு சுவாமியும், சந்தீப்பும் ஒருசேர வந்தனர். அவர்களுடன் அவர்களது மனைவிகள் வரவில்லை. சந்தீப், தான்யாவிடம் சென்று, ‘`லுக்கிங் நைஸ்’’ என்றார். அவளும் புன்னகைத்தாள்.

‘‘ஓ, அது பெர்கின்னா (Birkin)*…?’’ (*செல்வந்தர் களும், பிரபலங்களும் உபயோகப்படுத்தும் கைப்பையின் பிராண்டின் பெயர்) தான்யா தன்னோடு வைத்திருக்கும் ஹெர்மேஸ் (Hermes) கைப்பையை அடையாளம் கண்டுகொண்டு சந்தீப் கேட்டதற்காக தான்யா சற்று சங்கடத்துடன் புன்னைகைத்தாள்.

ஆதித்யாவிடம் சுவாமி, ‘`நான் உங்களோடு பேசவேண்டும்’’ என்று சொன்னார். ஆதித்யா அவரோடு பாங்விட் ஹாலை ஒட்டியிருக்கும் மேல்மாடியின் திறந்தவெளிக்குச் சென்றார். அது அப்போது காலியாக இருந்தது.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

‘`ரீடெயில் பேங்கிங்கின் நடவடிக்கை களில் நேரடியாக ஈடுபட வேண்டுமென்று மாட் (Matt) விரும்புகிறார். பிராந்திய அலுவலகத்தில் இந்தப் பிரிவில்தான்  பல்வேறு தவறான நடவடிக்கைகளுக் காக அதிகக் கவனம் பெற்றுவருவ தாகவும், அதனால் அவரே இந்தப் பிரிவைக் கையாள விருப்பம் தெரிவிப்ப திருப்பதாகவும் மாட் குறித்த தனது புகாரைச் சொன்னார் சுவாமி.

‘`இதில் என்ன தப்பு? அவர் உங்களு டைய பாஸ். அவர் செய்ய விரும்பும் விஷயத்தை அவர் செய்வதற்கு அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது’’ என்றார்.

‘`தெரியும் ஆதித்யா. ஆனால், ரீடெயில் பேங்கிங் பிரிவுக்கென்று தனியான தலைமை தேவையில்லை என்று அல்லவா அவர் சொல்கிறார்?’’ என்றார்.  

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

‘`ரப்பிஷ், அவர் ஒரு வங்கியின் சி.இ.ஓ. அவருக்கு இந்த வேலையை எல்லாம் செய்வதற்கு எங்கே நேரமிருக்கும்?’’
 
‘`ரீடெயில் பேங்கிங்கிலிருந்து நான் வெளியேற வேண்டுமென அவர் நினைக்கிறார். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லாமல் எனக்கு ஒரு வேலை தேடித் தருவ தாகவும், எனக்கு அதில் விருப்பமா என்றும் கேட்கிறார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.  எல்லாவற்றுக்கும்  அந்த ராட்சஷி மாள்விகாதான் காரணம்.’’ 

‘‘பீ கேர்ஃபுல் சுவாமி. அவருக்குத் தரப்படும் பார்ட்டியில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். சுவாமி, அதைப் பற்றி பிறகு பேசலாம். இங்கே இருக்கக்கூடிய மற்றவர்கள் உங்களுடைய இந்த உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வார்கள், ஜாக்கிரதை.’’ யாரோ தங்களை நோக்கி வருவதை சுவாமிக்கு சைகை மூலம் தெரிவித்தார் ஆதித்யா. ‘`அவளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் உங்களைப் பார்க்கத்தான்...’’ என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்லத் தயாரானார் சுவாமி.  

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

‘‘சுவாமி, எங்கே போகிறார்கள்’’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. சுவாமி திரும்பிப் பார்த்தபோது,  மாள்விகா அவரை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஒருவழியாக தன்னை சமாளித்துக் கொண்ட சுவாமி,  ‘`ஹாய், மாள்விகா. பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்றார்.

‘`இது உங்கள் மனதிலிருந்து வருவதுபோல் இல்லையே! இதைச் சொல்வது சுவாமிதானா?” மாள்விகா அவரைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தார். சுவாமி பதிலெதுவும் சொல்ல வில்லை. ஆதித்யாதான் அவரை உஷார்படுத்தியிருந்தாரே! 

‘`பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டு, மாள்விகா மற்றவர் களைச் சந்திப்பதற்காக அங்கிருந்து நகர ஆரம்பித்தபோது, ஆதித்யாவைப் பார்த்துப் புன்னகைத்தார். அப்போதுதான் அங்கு நுழைந்துகொண்டிருந்த ரிசர்வ் வங்கியின் கவர்னரை வரவேற்பதற்காக மாள்விகா மலர்ந்ததொரு புன்னகையுடன் பாங்க்விட் ஹாலின் வாயிலை நோக்கிச் செல்வதைக் கவனித்தார்.

கவர்னர் மாள்விகாவை நோக்கி வந்துகொண்டிருக்கும்போது `மாட்’டைப் பார்த்தார். பார்த்தவுடன் நின்று அவர் பக்கம் திரும்பி ‘`ஹாய், மாட்” என்று சொன்னபடி, கவர்னரை நோக்கி அவர் செல்ல, மாள்விகா வந்து கொண்டிருப்பதை கவர்னர் உதாசீனப்படுத்தியது சுவாமியின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

மாள்விகாவின் முகம் சிவப்பாக மாறுவதைப் பார்த்து, `அவளுக்கு இது தேவைதான்’ என்று சுவாமி  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

பிறந்தநாள் பார்ட்டி அதன்பின் நீண்ட் நேரம் நடந்தது. நள்ளிரவுக்கு 15 நிமிடம் முன்பு பரபரப்பாக சில நடவடிக்கைகள் நடந்தன. யாருக்குமே அறிமுகமில்லாத சில மனிதர்கள் உள்ளே நுழைந்து அந்த ஹாலில் குறிப்பிட்ட சில இடங்களில் போய் நின்றுகொண்ட னர். அதன்பின் சில விநாடிகளில் நிதி அமைச்சர் உள்ளே வந்தார்.

அவர் வருகையை தான் எதிர்பார்க்கவில்லை என்பதை தான்யாவின் முகம் தெளிவாகக் காட்டியது. ‘அவர் எப்படி இங்கே...?’ என்று ஆதித்யாவும் குழம்பிப்போனார்.
 
மாள்விகா தானாக முன்வந்து, ‘`நான்தான் அவரை அழைத்திருந் தேன். இந்த பார்ட்டி பற்றி நீ காலையில் என்னிடம் சொன்ன வுடன், நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் அந்த நேரத்தில் மும்பையில்தான் இருப்பேன் என்றும், முடிந்தால் ஒரு பத்து நிமிடம் வந்துவிட்டுச் செல்வதாகவும் சொன்னார்’’ என்றார்.

தான்யா முகத்தைச் சுளித்துக் கொண்டே, ‘‘இதை என்னிடம் நீங்கள் முன்னாடியே சொல்லியிருக் கலாமே, அம்மா’’ என்றாள்.

‘`இட்ஸ் ஓகே, தனு. இந்தச் சின்ன விஷயத்துக்காக ஏன் அப்செட் ஆகிற?’’ என்று சொல்லிக் கொண்டே நிதி அமைச்சரை வரவேற்க வாயிலை நோக்கி மாள்விகா சென்று, அவரை மென்மையாக அணைத்துக் கொண்டார்.

‘`நான் உங்களுடன் தனியாக ஓரிரு நிமிடங்கள் பேசமுடியுமா, மிஸ்டர் மினிஸ்டர்?” என்று மாள்விகா தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். அவர்களிருவரும், ஆதித்யாவும் சுவாமியும் சில நிமிடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட அதே மேல்மாடியின் திறந்தவெளியை நோக்கிச் சென்றார்கள். ஹாலின் இன்னொரு பக்கம் இந்தத் திறந்தவெளி இருந்தது. இந்தப் பகுதிக்கும் ஹாலுக்கும் நடுவே ஒரு அடர்த்தி யான திரைச்சீலை இருந்தது.

இரண்டு நிமிடத்திற்குப்பிறகு ஹோட்டல் பரிமாறிபவர் தான்யாவை நோக்கி மாள்விகாவுக் கான விஸ்கி மற்றும் நொறுக்குத் தீனிகளுடனான ஒரு ட்ரேயுடன் வந்தார். மந்திரி வருவதற்குமுன் கேட்டிருந்ததால், ஒரு க்ளாஸ்தான் அதில் இருந்தது. பரிமாறுபவர்  தான்யாவையும், வருணையும் பார்த்தார். வருண் அவரிடமிருந்த ட்ரேயை வாங்கிக்கொண்டான்.

அந்தத் தருணத்தில் ஆர்.பி.ஐ கவர்னர் தான்யாவை அணுகி அவரை அந்த இனிமையான மாலை நேரத்திற்கு அழைத்தமைக் காகப் பாராட்டினார். அவருட னான இரண்டு நிமிட உரையாட லுக்குப்பின் தான்யாவின் கவனம் வருண் பக்கம் திரும்பியது. அவள் அவனிடமிருந்த ட்ரேயை வாங்கிக்கொண்டு மாள்விகாவும், நிதி அமைச்சரும் நின்று பேசிக் கொண்டிருந்த திறந்தவெளிக்குச் சென்றாள். அவளோடு வருணும் இருந்தான்.

திரைச்சீலை விலகியதைப் பார்த்தவுடன் அவர்களுக் கிடையேயான கலந்துரையாடலும் நின்றது. வருண் ட்ரேயிலிருந்த விஸ்கியை எடுத்து மாள்விகாவிடம் தந்துவிட்டு மந்திரியைப் பார்த்தான். ‘‘நான் உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும், சார்?” என்று கேட்டான்.

நிதி அமைச்சர் பதில் அளிக்கும் வரை மாள்விகா காத்திருக்காமல் ட்ரேயிலிருந்த நொறுக்குத் தீனி களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு, என்ன வேண்டும் என்று சொன்னார். வருணும், தான்யாவும் அதற்குத் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்கள். அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆனது, உரையாடல் முடிவதுபோலத் தெரியவில்லை.

‘`உன் அம்மா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?” தான்யாவிடம் வெறுப்புடன் கேட்டார் ஆதித்யா.  ‘`எல்லோரும்  அவருக்காகக் காத்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதை நீ அவரிடம் சொல்’’ என்றார்.

அப்போது நிதி அமைச்சர்  ஹாலுக்குள் திரும்பிவந்து ஆர்.பி.ஐ கவர்னரை நோக்கிச் சென்று சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார். அவர் ஒரு குழப்பத்திலிருப்பதுபோல இருந்தது. 

பார்ட்டிக்கு `மாஸ்டர் ஆஃப் தி செரிமனி’யாக இருந்தவர், பிறந்தநாள் நிகழ்வுக்கான நேரம் ஆரம்பமாக இருப்பதை அறிவித் தார். அந்த நேரத்தில் சுவாமியின் போன் அடித்தது. அவர் அதைப் புறக்கணித்ததுடன், போனை சைலண்ட் மோடில் போட்டார். அவரது அலுவலகத்திலிருந்து யாரோ அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தார்கள். 

எல்லோரும் மாள்விகாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். தான்யா ஹாலுக்கு வெளியேயிருந்த திறந்தவெளியில் போய்ப் பார்த்தாள். அங்கே மாள்விகா இல்லை.

திடீரென்று லைட்டுகள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட, இசை காதைப் பிளந்தது. ஹால் எங்கும் இருட்டு படர்ந்தது. கவுன்ட் டவுன் ஆரம்பமானது: டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ், ஃபைவ், ஃபோர், த்ரி, டூ, ஒன்... ஹாப்பி பர்த்டே டூ யூ, ஹாப்பி பர்த்டே டூ யூ, டியர் மாள்விகா! ஹாப்பி பர்த்டே டூ யூ…’’ என ஆடியோ சிஸ்டத்தில் பாட்டு பாடிக்கொண்டிருந்தது. சில லைட்டுகள் மீண்டும் உயிர் பெற்றிருந்ததாலும், ஹாலில் வெளிச்சம் மங்கலாக இருந்தது.

திறந்தவெளிப் பக்கம் இருக்கும் ஃப்ரென்ச் டோரை நோக்கி அனைவரின் பார்வையும் இருந்தது. திரைச்சீலை எப்போது விலகும், மாள்விகா எப்போது வருவார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

எதிர்பார்ப்புக்கு மாறாக, ஹாலின் கதவைத் திறந்துகொண்டு ஹோட்டலின் ஜெனரல் மேனேஜர் வந்தார்.  அவர் முகம் திகைப்பில் இருந்தது. அவர் அந்தக் கூட்டத்திலிருந்து தான்யாவைக் கண்டுபிடித்து, ‘`நீங்கள் என்னுடன் வாருங்கள், மேடம்’’ என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

‘`என்ன ஆச்சு, மிஸ்டர். கிருஷ்ணன்?”

‘`தயவுசெய்து என்னோடு வாருங்கள். போகும்போது சொல்கிறேன்’ என்றார்.

தான்யா கூட்டத்தைப் பார்த்து, யாரையோ தேடினாள். வருண் அவளை நோக்கி ஓடிவந்து, அவளுடைய பெர்கின் பேக்கைப் பிடித்து நின்றான். காத்திருந்த லிஃப்டை நோக்கி கிருஷ்ணா அவர்களை அழைத்துச் சென்றார். சில நொடிகளில் அவர்கள் ஹோட்டல் லாபியை அடைந்தார்கள். கிருஷ்ணா அதுவரை எதுவும் பேசவில்லை. அவர்களை அமைதியாக வெளியே அழைத்துச் சென்று அப்படியே ஓரிடத்தில் நின்றார்.

தான்யா, தனக்கு முன்னால் நிகழ்ந்திருந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோனாள். ஹோட்டலுக்குள் இருக்கும் நடைபாதையில், முகம் தரையைப் பார்த்திருக்க, ரத்தத்திற்கு நடுவே மாள்விகாவின் உயிரற்ற உடல் கிடந்தது. 34-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததால், இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவரின் உயிர் பிரிந்திருந்தது.

தான்யா, வருணின் பக்கம் திரும்பினாள். அவனுடைய சட்டையில் முகம் புதைத்துக் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவன், அவளை இறுக்கமாகப் பிடித்திருந்தான்.

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19

குறையும் செல்போன் வருமானம்: ஜியோ காரணமா?

செ
ல்போன்கள் மூலமான வருமானம் தற்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. தொலைபேசித் துறையைப் பொறுத்தவரை, ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருமானமே முக்கியமானது. இந்த வருமானம். 2015-ல் 123 ரூபாயாக இருந்து, 2017-ல் 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த 2013-ல் ஒருவர் 51 எம்பி-யைப் பயன்படுத்தினார். அதுவே 2017-ல் 1945 எம்பி-யாக உயர்ந்தி ருக்கிறது. செல்போன் மூலமான வருமானம் குறையக் காரணம், ஜியோ நிறுவனமே என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்குவதே இதற்குக் காரணம் என்கிறார்கள்!