ஷேர்லக் ஏற்கெனவே நம்மிடம் சொல்லியபடி சரியாக ஆறு மணிக்கு வந்து சேர்ந்தார். அவர் உள்ளே வந்தவுடன், நம் டேபிள் மீது இருந்த கோவை கான்க்ளேவ் பற்றிய இரண்டு பக்க அறிவிப்பை எடுத்துப் படித்துப் பார்த்தார். ‘‘பலே, கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் நடத்தினீர்கள். இப்போது ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் கோவையில் நடத்தப்போகிறீரா? சூப்பர், இதில் பேசவிருக்கும் பேச்சாளர்களின் பட்டியலைப் பார்த்தால், எனக்கே அவசியம் கலந்துகொள்ள வேண்டும் போல இருக்கிறதே! கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வாசகர்கள் இந்த கான்க்ளேவ்-ல் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்றவருக்கு, இஞ்சி டீயை நாம் கொடுக்க, அதைப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஐ.டி.பி.ஐ பங்குகளை எல்.ஐ.சி வாங்குவது எந்த அளவில் இருக்கிறது?

“நிதிநிலையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஐ.டி.பி.ஐ வங்கியை மீட்க, அந்த வங்கியின் பங்கில் 51% அளவுக்கு முதலீடு செய்ய, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஒப்புதல் அளித்துள்ளது. அதே சமயம், தற்போதைய விதிமுறை களின்படி, இன்ஷூரன்ஸ் நிறுவனம், பட்டியலிடப்பட்ட வங்கியின் 25 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை வாங்கினால், அதனை ‘ஓப்பன் ஆஃபர்’ மூலம் மட்டுமே வாங்க முடியும். அப்படி இல்லையென்றால், செபியிடம் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும். செபி அப்படிச் சிறப்பு அனுமதி அளிக்காததால், ‘ஓப்பன் ஆஃபர்’ மூலம் மேற்கூறிய அளவுக்கான பங்குகளை வாங்க எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது.

தற்போது ஐ.டி.பி.ஐ வங்கியின் 10.82 சதவிகிதப் பங்குகளை எல்.ஐ.சி-யும், மத்திய அரசு 80.96 சதவிகிதப் பங்குகளையும் வைத்துள்ளது. இந்த நிலையில், இந்த ஓப்பன் ஆஃபரில் மத்திய அரசு பங்கேற்காது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8.22 சதவிகிதப் பங்குதாரர்கள் இதில் பங்கேற்கலாம்.”

எல்.ஐ.சி ரூ. 12,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதே?

“ஐ.டி.பி.ஐ வங்கிப் பங்குளை வாங்கத் தேவையான நிதியைத் திரட்ட எல்.ஐ.சி நிறுவனம் ரூ.12,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளது. எல்.ஐ.சி-யின் இந்த நடவடிக்கை புத்திசாலித் தனமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தற்போது நஷ்டத்தில் இயங்கினாலும், ஐ.டி.பி.ஐ வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் எதிர் காலத்தில் புத்துயிர் பெற்றால், அப்போது அவற்றின் மீதான தற்போதைய முதலீடு, நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும்.

எல்.ஐ.சி நிறுவனம் பெரும்பாலும் புளூசிப் பங்குகளில் தான் முதலீடு செய்யும். வரும் நாள் களில் பங்குச் சந்தைகளில் கரெக்ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால்தான் எல்.ஐ.சி நீண்ட நாள்களாக வைத்துள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்று லாபம் பார்த்துள்ளதாகச் சொல்கிறார்கள்.”

ஜூன் காலாண்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கி உள்ளனவே?

“சந்தை எதிர்பார்ப்புகளைத் தாண்டி, இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ், 2018 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.7,340 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 23.46 சதவிகித வளர்ச்சி ஆகும். பங்கு ஒன்றுக்கு 4 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதாக டி.சி.எஸ் அறிவித்துள்ளது.

ஆனால், இன்ஃபோசிஸ் நிகர லாபம் 4% மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த நிறுவனப் பங்கு, பட்டியலிடப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதைக் கொண்டாடும் வகையில், ஒரு பங்குக்கு ஒரு போனஸ் பங்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கியின் நிகரலாபம் 23.81% உயர்ந்து, ரூ.1036 கோடியாக உள்ளது.”

எமர்ஜிங் மார்க்கெட்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளனவே?

“2018-ம் ஆண்டில் எமர்ஜிங் மார்க்கெட்களில் சிறப்பான செயல்பாடுகளில், இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை முன்னணி இடத்தைப் பிடித்து உள்ளன. ரூபாய் மதிப்புச் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நீடிக்கும் நிதிப் பற்றாக்குறை போன்ற பாதகமான சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கூடிய ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் டி.சி.எஸ் உள்ளிட்ட சில புளூசிப் பங்குகள்தான் இதற்கு உதவி செய்து உள்ளன.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சென்செக்ஸ் 6.5 சதவிகிதமும், நிஃப்டி 4 சதவிகிதமும் உயர்ந்த நிலையில், அதுவே எமர்ஜிங் மார்க்கெட்களில் அவற்றை முன்னணி இடத்துக்குக் கொண்டு செல்லக் காரணமாக அமைந்தது. கடந்த ஜூன் மாதத்திலிருந்தே எமர்ஜிங் மார்க்கெட்களில் சிறப்பான செயல்பாடு கொண்டதாக இந்தியச் சந்தைகள் திகழ்ந்தன. அதேசமயம், சீனா, பிரேசில் மற்றும் தென் கொரியா போன்ற இதர முக்கிய வளரும் சந்தைகள் 11.19% சரிவடைந்துள்ளன.”

டி.சி.என்.எஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வருகிறதே?

“டி.சி.என்.எஸ் குளோத்திங் நிறுவனம், ஜூலை 18-ம் தேதி, பொதுப் பங்கு வெளியீடான ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்ட உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 1.57 கோடி பங்குகளை விற்கவுள்ளது. ஜூலை 20-ம் தேதியுடன் ஐ.பி.ஓ முடிவடைகிறது. பங்கு ஒன்றின் விலை 714 - 716-ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஜூலை 20 -ம் தேதி ஐ.பி.ஓ நிறைவு பெறுகிறது.”

சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் என மார்க் மோபியஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாரே?

‘‘அமெரிக்கா - சீனா இடையேயான டிரேட் வார் மற்றும் எமர்ஜிங் மார்க்கெட் பங்குகள் 10% அளவுக்கு வீழ்ச்சியடைவது போன்றவையெல்லாம் இந்த ஆண்டின் மிக மோசமான நிகழ்வுகளாக இருக்காது. மாறாக, சர்வதேச அளவில் விரைவிலேயோ அல்லது சற்றுத் தாமதமாகவோ நாம் நிதி நெருக்கடியை எதிர்கொள்வது நிச்சயம் என்று ஃப்ராங்க்ளின் டெம்பிள்டனின் முதலீட்டு ஆலோசகராக இருந்த மார்க் மோபியஸ் கூறியுள்ளார். ஏனெனில், பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த வட்டியிலான கடன்களை நம்பியே இருப்பதால், அவை உண்மையிலேயே நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியது வரும்.

டாலர் மதிப்பு அதிகரிப்பு மற்றும் மோசமான வர்த்தகச் சூழலுடன் சேர்த்து இந்த ஆண்டு எமர்ஜிங் மார்க் கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் மேலும் மோசமான நிலைக்குச் செல்லக்கூடும் என மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார்.”

டாடா குழும கம்பெனிகளின் பங்குகள் விலை அதிகரித்துள்ளதே?

“டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சைரஸ் மிஸ்ட்ரி, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து, டாடா குழும கம்பெனிகளின் பங்குகள், விலை உயர்ந்தன. ஒரேநாளில் ட்ரென்ட் ரோஸ் 4.58%, டாடா குளோபல் பீவரேஜஸ் 3.07%, வோல்டாஸ் 2.44%, டாடா மெட்டாலிக்ஸ் 2.72% டாடா கம்யூனிகேஷன்ஸ் 2.11 %, டாடா பவர் 2.09% உயர்ந்தன. இவை தவிர, டாடா மோட்டார்ஸ், டாடா இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன், டாடா எலெக்ஸி, டாடா காபி, டாடா கெமிக்கல்ஸ், டாடா ஸ்பாஞ்ச் ஐரோன், டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்ட்ரா ஆகிய பங்குகளும் முடிவில் உயர்ந்து காணப்பட்டன. அதேசமயம், டி.சி.எஸ், டைட்டன் ஆகிய பங்குகள் சரிவடைந்து காணப்பட்டன.”

ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தின் சந்தை மூலதனம் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதே?

“ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தின் சந்தை மூலதனம் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. டாடா குழுமத்துக்கு அடுத்தபடியாக ஹெச்.டி.எஃப்.சி குழுமம்தான், இந்தியாவின் இரண்டாவது கார்ப்பரேட் நிறுவன மாகத் திகழ்கிறது. கடந்த செவ்வாய்க் கிழமையன்று பங்குச் சந்தை வர்த்தகம் முடிவடைந்தபோது ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தின் சந்தை மூலதனம் ரூ.10.07 லட்சம் கோடியைத் தொட்டது.”

சென்செக்ஸ் புள்ளிகளின் புதிய உச்சம் குறித்து அனலிஸ்ட்கள் எச்சரித்துள்ளனரே?

“வியாழக்கிழமை (ஜூலை 12) சென்செக்ஸ் 282.48 புள்ளிகள் உயர்ந்து 36548.41-ல் நிலைகொண்டது. இது இதுவரைக்கும் இல்லாத புதிய உச்சமாகும். இந்த நிலை நீடிக்குமா என அனலிஸ்ட்கள் சந்தேகம் கிளப்பி இருக்கிறார்கள். சந்தையை மோசமாக்கும் மேக்ரோ காரணிகளுக்கும், மேம்படுத்தும் காரணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கச்சா எண்ணெய் விலை, சர்வதேச வர்த்தகப் போர் தீவிரமடைவது, வளர்ந்த நாடுகளில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் போன்ற வெளிக்காரணிகள், நிதிநிலைமை, வருவாய் வளர்ச்சி மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் போன்ற உள்நாட்டுக் காரணிகள்தான் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்.

எனவே, ஆபத்தான இந்தக் காரணிகள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அனலிஸ்ட்கள் எச்சரித்துள்ளனர்” என்ற ஷேர்லக், மழை கோட்டையும், தொப்பியையும் மாட்டிக்கொண்டு புறப்பட்டார்.

லோதா டெவலப்பர்ஸ் ஐ.பி.ஓ: செபி ஒப்புதல்!

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான லோதா டெவலப்பர்ஸ் ரூ.5,500 கோடிக்குப் புதிய பங்குகளை (ஐ.பி.ஓ) வெளியிட, செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குமுன்னர் ரியல் எஸ்டேட் துறையில் டி.எல்.எஃப் நிறுவனம், 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிட்ட நிலையில், தற்போது லோதா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு, அந்தத் துறையில் இரண்டாவது மிகப் பெரிய ஐ.பி.ஓ வெளியீடாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே லோதா டெவலப்பர்ஸ் தவிர, ஷாகுன் பாலிமர்ஸ் மற்றும் தினேஷ் இன்ஜினீயர்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஐ.பி.ஓ வெளியிட செபி ஒப்புதல் அளித்துள்ளது.