Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ஹோட்டல் நிர்வாகத் தினரால் மாள்விகாவின் உடல் வேகவேகமாக ஒரு வேனில் வைக்கப்பட்டு அங்கிருந்து பத்து நிமிடத் தூரத்தில் பாந்த்ராவில் இருக்கும் லீலாவதி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

தான்யாவும் அந்த வேனில் இருந்தாள். வருணும் அதில் செல்ல முயற்சி செய்தான். ஆனால், இடம் போதவில்லை என்பதால், அவனுடைய காரில் லீலாவதி ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்து சென்றான். தான்யா அங்கு சென்று சேருவதற்குமுன் தான் போய் சேர்ந்துவிட முடியும் என நினைத்தான்.

வேனைத் தொடர்ந்து ஆதித்யா தன்னுடைய காரில் சந்தீப்போடும், சுவாமியோடும் படுவேக மாகச் சென்றார். அப்போது காரில் கடும் அமைதி நிலவியது. வருண், கோவா சிறைச் சாலையில் இருந்த சமயத்தில் உதவி கேட்ட போது இந்த மாதிரித்தான் அவர் காரை ஓட்டிச் சென்றார். அதற்குப்பிறகு இந்த வேகத்தில் ஓட்டிச் செல்வது இப்போதுதான்.

காரில் அதுவரை நிலவிவந்த அமைதியை சுவாமியின் போன் கலைத்தது. அவர் போனின் திரையைப் பார்த்தார். தனக்குள்ளாகவே, ‘`இவர் ஏன் இப்போது கூப்பிடு கிறார்?” எனக் கேட்டுக் கொண்டார். அவர் அந்த அழைப்பை நிராகரித்த போது அதே நம்பரிலிருந்து 16 `மிஸ்டு கால்’ வந்திருப்பது தெரியவந்தது. உடனே அந்த எண்ணுக்கு போன் செய்து, ‘`என்ன ஆச்சு, ஏன் 16 ‘மிஸ்டு கால்’கள்..?’’ அவர் கர்ஜித்தார்.

போனில் பேசியவர், பேசப் பேச சுவாமியின் முகம் வெளுத்தது. அதைப் பார்க்கும்போது அவர் ஏதோ ஆவியைப் பார்த்து விட்டாரோ என்பது போலத் தோன்றியது. சந்தீப், பின்னால் திரும்பி சுவாமியின் முகத்தைப் பார்த்தார் அதில் லட்சக் கணக்கான மாற்றங்களைக் காணமுடிந்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

‘`வாட்?” சுவாமி போனில் கத்தினார். ‘`ஆர் யூ சீரியஸ், எப்படி அது நடந்தது?”

‘`நாம் என்ன நடவடிக்கை எடுத்தோம்?”

சுவாமி நீண்ட நேரம் மெளனமாக இருந்து கவனமாகக் கேட்டுக்கொண்டு வந்தார்.

அதன்பின், ‘`ஹ்ம்ம்ம்ம்ம், இது ஒன்றும் சரியானதாகப்படவில்லை. நான் உங்களை மீண்டும் கூப்பிடு கிறேன்’’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தார். அவர் அழைப்பைத் துண்டித்தவுடன் சந்தீப், ‘`என்ன ஆச்சு?” எனக் கேட்டார். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20‘`எங்களுடைய ஃப்ராட் ப்ரடிக்‌ஷன் சிஸ்டம் ஐந்து கார்டுகளை பிக்அப் செய்திருக்கிறது, அந்த கார்டுகளை உபயோகித்து வெளிநாட்டில் பலமுறை பணம் எடுத்திருக்கிறார்கள்.’’ 

`எவ்வளவு எடுத்திருக்கிறார்கள்?’’

‘`5 மில்லியன் டாலர்.’’

‘`வாட்? 5 மில்லியனா...? பெரிய தொகையாச்சே’’ என்றார்.

‘`இதைவிட அதிகமாகக்கூட இருக்கலாம். அவர்கள் சிஸ்டத்தின் உதவிகொண்டு இந்த கார்டுகளைச் செக் செய்து பார்த்தபோது, ஃப்ராடு நடப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக கார்டுகளினுடைய வித்ட்ராயல் அளவு கன்னா பின்னாவென்று அதிகமாக்கப் பட்டிருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, சிஸ்டத்தை யாராவது ஹேக் செய்திருக்க வேண்டும் அல்லது உள்ளாள் ஒருவரின் வேலையாக இது இருக்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவினர் இதை ஒரு நளினமான ஹேக்கிங் வேலை என நினைக்கிறார்கள்” என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

சந்தீப்பின் முகம் வெளிறிப் போனது. அவர் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என்பதைச் சொல்வது சிரமமாக இருந்தது. அவர் ஆதித்யாவைப் பார்த்தார். ஆதித்யாவோ நேரே பார்த்துக் கொண்டிருந்தார். இவர்கள் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை.

‘`ஆதித்யா!” சந்தீப் கூப்பிட்டார்.

பதில் எதுவும் இல்லை. அவர் ஆதித்யாவின் முகத்தைக் கவனமாகப் பார்த்தார். திறந்திருந்த அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் அவர் கன்னத்தில் வழிந் திருந்தது. அவர் ஓர் உள்ளுணர்வால் வண்டியை ஓட்டிக் கொண்டிருந் தார். அவர் காரை `க்ராஷ்’ செய்து விடுவாரோ என சந்தீப் பயந்தார். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

‘`ஆதித்யா...’’ அவர் மீண்டும் அழைத்ததுடன் அவருடைய தோள்பட்டையை உலுக்கினார். ‘`ஆதித்யா, ஆர் யூ ஓகே?” திடீரென்று முழித்ததுபோல அவர் சுயநினைவுக்கு வந்தார். அவர் பிரேக்கை அவசரமாக அழுத்த, பலத்த சத்தத்துடன் கார் நின்றது. ஆதித்யா தனது சீட்டில் உட்கார்ந்திருந்தபடியே கைகளைத் தலையில் நீண்ட நேரம் வைத்திருந் தார். இறுதியாக, சந்தீப் ‘`ஆதித்யா, நமக்குப் பிரச்னை ஏற்படும் என நினைக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு அவரைப் பார்த்தார்.

சுவாமி என்ன சொன்னார் என்பதைக் கேட்காததால், எல்லா வற்றையும் அவர் மீண்டும் கூறினார். கவலையுடன் இருந்த ஆதித்யா சுவாமி பக்கம் திரும்பி, ‘‘என்ன சொல்கிறீர்கள்?” என்று பயத்துடனும், மன உளைச்சலுடனும் கேட்டார்.

‘`ஆமாம், ஆதித்யா, என்னாலேயே இதை நம்ப முடியவில்லை’’ என்றார். ஆதித்யா, சந்தீப்பைப் பார்த்தார். ‘`ஆனால், என்.ஒய்.ஐ.பி-யின் கார்டு செயல்பாடு எடியாஸ்-க்கு (eTIOS) அல்லவா அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

யு.எஸ்.ஏ

துணிச்சலான ஏ.டி.எம் திருட்டு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெட்ஸ் (Feds) அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் உடனடியாகப் பொருளாதாரக் குற்ற விசாரணைப் பிரிவை செயலில் ஈடுபட வைத்தார்கள். அமெரிக்காவிலேயே இந்த அளவுக்கான ஏ.டி.எம் திருட்டு அதுவரை நடந்ததில்லை.

இந்த நிகழ்வின் அடித்தளம் என்ன என்பது தெரியும் வரை  எஃப்.பி.ஐ இதுகுறித்த தகவல் எதையும் வெளியிட விரும்பவில்லை. இருந்தாலும், இந்தியாவில் இருக்கும் என்.ஒய்.ஐ.பி-யின் கிளையானது இதுகுறித்த செய்தியை வெளியிட ஆரம்பித்ததால், எஃப்.பி.ஐ-யும் வேறுவழியின்றி அறிக்கையொன்றை வெளியிடும்படி ஆயிற்று.

இந்தத் திருட்டு எப்படி நடந்திருக்குமென்று ஊகிக்க அவர்களுக்கு அதிக நேரம் ஆகவில்லையென்றாலும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்த  தகவல்கள் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஏ.டி.எம்-களில் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் வீடியோப் பதிவுகள், இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த எந்தத் தகவலையும் கொண்டிருக்க வில்லை. எஃப்.பி.ஐ-யைப் பொறுத்தளவில் அவர்களுக்குத் தெரியவந்த தெல்லாம் இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் பேக்பேக் (backpack) வைத்திருந்தார்கள் என்பதும், தலையை மூடியிருந்தார்கள் என்பதும்தான். 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

அன்றைக்கு சிறிது நேரம் கழித்து, எஃப்.பி.ஐ அறிக்கையொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் நிதி சம்பந்தப்பட்ட ஃப்ராடைத் தடுப்பதற்கு எஃப்.பி.ஐ எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘`எஃப்.பி.ஐ–யின் `பொருளாதாரக் குற்றங்கள் விசாரணைப் பிரிவு’ இந்த வழக்கைக் கையாண்டு வருகிறது. இது தொடர்பாக சில துப்புகள் எங்களுக்குக் கிடைத்திருப்பதால், குற்றம் செய்தவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என நம்புகிறோம்’’ என, கையெழுத்திடப்பட்ட அறிக்கையை செய்தித் தொடர்பாளரான பெண்மணி ஒருவர் படித்தார். 

இந்த அறிக்கையை எஃப்.பி.ஐ-யின் இணையதளத்தில் டோனி படித்துக் கொண்டிருக்கும்போது ஏட்ரியன் உள்ளே நுழைந்தார். ‘‘நீங்கள் இதைப் பார்த்தீர்களா?” என்று கேட்டுக்கொண்டே ஒரு பெரிய பீசா துண்டை எடுத்தார்.

‘`இந்த மாதிரியான விஷயமெல்லாம் ஏன் அமெரிக்காவில் மட்டும் நடக்கிறது?” என்று கேட்டார் டோனி.

‘`நான் சொன்னதைக் கேட்டீர்கள் இல்லையா, இதை இங்கே செய்வது எளிதானது” என்றார் ஏட்ரியன்.

‘`உலகத்திலேயே தொழில்நுட்ப அளவில் முன்னேறிய நாடு நமது நாடு. இல்லையா?”

‘`நாம் நம்மை அப்படி அழைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், பரிவர்த்தனைகளின் நடைமுறைப் பாதுகாப்பில் அமெரிக்கா எந்த அளவுக்குப் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பது உலகத்துக்குத் தெரியாது. டெபிட் கார்டில் உபயோகப்படுத்தப்படும் மேக்னடிக் ஸ்ட்ரிப் (magnetic strip) தொழில்நுட்பம் ஐம்பதாண்டு காலப் பழைமையானது. அந்த ஸ்ட்ரிப்பில்  உபயோகிப்பாளர் பற்றிய தகவல்கள் இருக்கும்; அதை காப்பி செய்வது அல்லது திருடுவது மிகவும் எளிதானதாகும். நீங்கள் கார்டைக் கடையில் உபயோகிக்கும்போது, கடைக்காரர் அதை `டேட்டா ஸ்கிம்ம’ரில் ஸ்வைப் செய்யும்பட்சத்தில் அதிலிருக்கும் அனைத்து டேட்டாகளும் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுவிடும். உங்களிடம் அந்த டேட்டாக்கள் இருந்தால் நீங்கள் மேக்னடிக் கார்டு ரைட்டரை உபயோகித்து – சில ஹோட்டல்கள் அவர்களது கீ கார்டுகளில் குறியீட்டைப் பதியச் செய்வதுபோல – பழைய கிரெடிட் கார்டு, ஹோட்டல் கீ, டிரைவிங் லைசென்ஸ் போன்ற எந்தவொரு கார்டிலும் தகவலைப் பதியச் செய்து, அதை செயல்பட வைக்க முடியும். கார்டு ரைட்டரின் விலை 200 டாலருக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. பின்னை (Pin) வைத்து, புது கார்டை ஆக்டிவேட் செய்துவிட்டால், எந்தவொரு ஏ.டி.எம்-மிலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுப்பது சாத்தியமாகிவிடும்’ என்றார் ஏட்ரியன்.

‘`அவர்களுக்கு எப்படி பின் கிடைத்தது?” என மிகவும் குழம்பிய நிலையிலிருந்த டோனி கேட்டார்.

‘`வழக்கமாக இந்தக் கார்டுகளை விநியோகிக்கும் போது, அது பின்னுடன் வரும். ஆனால், திருடர் கள் ஃப்ராடு செய்வதற்கான கார்டுகளை உருவாக்கும்போது, பின் அரிதாகவே அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

‘`ஆனால், அவர்களால் எப்படி 2.5 மில்லியன் டாலர்களை எடுக்க முடிந்தது? இது இவ்வளவு எளிதாக இருந்தால், ஏன் இது தினமும் நடக்க வில்லை?”

‘`எப்போதுமே ரிஸ்க் இருக்கிறது, டோனி.   எஃப்.பி.ஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, ஃப்ராடு செய்தவர்கள் கார்டு குறித்த தகவல்களைத் திருடியதுடன் வங்கியினுடைய கார்டு சிஸ்டத்தையும் ஹேக் செய்து ஒவ்வொரு கார்டுக்கு மான வித்ட்ராயல் வரையறையையும் அதிகரித்திருக்கிறார்கள். நிதி சார்பான சேவை வழங்கும் இந்த பிரமாண்டமான நிறுவனங்களின் `ஃபயர்வாலை’ உடைப்பதொன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. அவர்கள் சிஸ்டத்தில் ஒரு வீக் லிங்க் இருந்தாலொழிய - சேவை வழங்குபவர் அவரது சிஸ்டத்தை அணுகமுடிவ துடன், உள்ளுக்குள்ளும் காம்ப்ரமைஸ் ஆகக்கூடும் – இது சாத்தியமில்லை.  சேவை வழங்குபவரின் சிஸ்டத்தை ஹேக் செய்ததன் மூலம் வங்கி யினுடைய டேட்டாவையும் ஃப்ராடு செய்தவர்களால் அணுக முடிந்திருக்கிறது’ என்றார்.

`உள்ளே இருக்கக்கூடிய ஒருவரே உதவியிருந்தால்..?” பீசாவின் கடைசித் துண்டை எடுத்துக்கொண்டே டோனி கேட்டார்.

அப்போது ஏட்ரியனின் போன் அடித்தது. அது ராபர்ட் ப்ரிக். ஏட்ரியன் பேசுவதற்காக போனை எடுத்தபோது அவர், ‘‘நீங்கள் மிகவும் திறமையான அதிகாரிகள் என நினைத்து, ஜில்லியன் டான் வழக்கை விசாரிக்க உங்களிடம் கொடுத்தேன்’’ எனச் சத்தமாகப் பேசினார்.

‘`நாங்கள் முயற்சி செய்கிறோம், ராபர்ட். சாத்தியமான அனைத்துக் கோணங்களிலிருந்தும் விவரமாக விசாரணை செய்துவருகிறோம்’’ என்றார். ‘‘ஏட்ரியன், உங்கள் குழுவுக்கு எந்தத் திறமையும் இல்லை’’ என்று கத்திவிட்டு போனை பாதியிலேயே `கட்’ பண்ணினார்.

ஒவ்வொரு நாளும் டானின் வழக்கு சம்பந்தமாக மேலதிகாரிகளிடமிருந்து வரக்கூடிய அழுத்தம் அதிகரிப்பதை நினைத்து வருத்தப்பட்டார் ஏட்ரியன். 

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20

150 பில்லியனைத் தொட்ட ஜெஃப் பேஜோஸ்!

வீன காலத்தின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் அமேசான் அதிபர் ஜெஃப் பேஜோஸ். அவருடைய நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 150 பில்லியன் டாலரைத் தொட்டிருக்கிறது. கடந்த வாரம் அமேசான் நிறுவனத் தின் ஒரு பங்கின் விலை 1,841.95 டாலரைத் தொட்டதன் விளைவாக, 150 பில்லியன் டாலரை அவர் தொட்டிருக்கிறார்.  ஆனால், இந்தப் பெருமை நீடிக்கவில்லை. அன்றைய தினம் அந்தப் பங்கின் விலை 1,822 டாலராகக் குறைந்ததால், 150 பில்லி யன் டாலர் என்கிற மதிப்பும்  குறைந்தது. இன்னும் சில மாதங்களில் மீண்டும் 150 பில்லியன் டாலர் என்கிற மதிப்பை ஜெஃப் பேஜோஸ் அடைவார் என்பதில் சந்தேகமில்லை!