Published:Updated:

இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

நீங்களும் செய்யலாம்சாஹா - படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்

இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

நீங்களும் செய்யலாம்சாஹா - படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

ஏ.சி அறைகளுக்கு ரூம் ஸ்பிரே அடிக்கலாம். ஏ.சி வசதியில்லாத வர்களுக்கு ஊதுவத்திகளும் சாம்பிராணிப் புகையும்தான் வாச வாய்ப்புகள். அவற்றிலிருந்து கிளம்பும் நறுமணப் புகை, பூச்சி விரட்டியாகவும் செயல்படும் என்பது கூடுதல் நன்மை.

எத்தனை காஸ்ட்லியாக ஊதுவத்தி வாங்கி ஏற்றிவைத்தாலும், பக்கத்து வீட்டிலிருந்தும் எதிர் வீட்டிலிருந்தும் வீசும் வாசம் ஸ்பெஷலாகத் தோன்றும். ‘என்ன ஊதுவத்தி வாங்குவாங்களோ... எங்கே வாங்குவாங்களோ... என்னமா மணக்குது!’ என்று நினைக்கத் தோன்றும்.

‘`உங்க வீட்டுலயும் தினம் தினம் ஒரு வாசனையில ஊதுவத்தியை மணக்கச் செய்யலாம். வருஷத்தின் 365 நாள்களுக்கும் காலையில ஒண்ணு, சாயந்திரம் ஒண்ணு... இப்படி விதவிதமா மணக்கச் செய்ய லாம். அந்த ஊதுவத்திகளை நீங்களே தயாரிக்கலாம்’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் விஜயலட்சுமி. ஊதுவத்தி மட்டுமன்றி, மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகைகளைக் கொண்டு கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்வதிலும் இவர் நிபுணர். வாழ்விடத்தை வாசத்துடன் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார் இவர்.

இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

ஊதுவத்திக்கு ஏழு வகையான மூலப் பொருள்கள் தேவை. அனைத்தும் கெமிக்கல் விற்பனை செய்கிற கடைகளில் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு கிலோ அளவுக்குத்தான் கொடுப்பார்கள். பெரும்பாலும் இந்த மூலப் பொருள்களைத் தரம்வாரியாகப் பிரித்து வைத்திருப்பார்கள். அதற்கேற்ப விலையும் வேறுபடும். பிசினஸாகச் செய்ய விரும்புவோர், தரமான பொருள் களைப் பயன்படுத்துவதே சிறந்தது.

ஊதுவத்திகளிலும் கிளிட்டர் கலர்கள் வந்துவிட்டன. கோல்டு, சில்வர் என அது உங்கள் விருப்பம். அதற்கேற்ப சென்ட்டையும் மாற்றிக்கொள்ளலாம். ஒரே ஒரு சென்ட்டை மட்டும் உபயோகித்துச் செய்யலாம்; ஒன்றுக்கு மேலான சென்ட் வகைகளைக் கலந்தும் செய்யலாம். இப்போது ஆயிரக்கணக்கான சென்ட் வகைகள் வந்துவிட்டன. மல்லிகை, மரிக்கொழுந்து சென்ட்டுகளின் விலை கொஞ்சம் அதிகம். இரண்டு கிலோ ஊதுவத்திகள் செய்ய 120 முதல் 150 ரூபாய் வரை முதலீடு தேவை. குச்சிகளின் எண்ணிக்கையையும் இதில் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

கம்ப்யூட்டர் சாம்பிராணிக்குப் பத்து வகையான மூலப் பொருள்கள் தேவை. வாசனை எதுவும் கலக்க மாட்டோம். சாம்பிராணியின் வாசம்தான் இதில் ஸ்பெஷல். மூலிகைகள் கலந்த கம்ப்யூட்டர் சாம்பிராணிதான் இப்போது ட்ரெண்டில் இருக்கிறது. உதாரணத்துக்கு வேப்பிலை, துளசி, என நம் தேவைக்கேற்ப மூலிகைகளைக் கலந்து செய்யலாம்; மஞ்சள்தூள் கலந்தும் செய்யலாம். இதற்கு 120 ரூபாய் முதலீடு தேவைப்படும். விரல் தடிமன் அளவு கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கான மோல்டுகள் கடைகளில் கிடைக்கும். கப் வடிவ மோல்டு வேண்டுமானால் பட்டறையில் ஆர்டர் கொடுத்துச் செய்துதான் வாங்க வேண்டும்.

லாபம்? விற்பனை வாய்ப்பு?

ஊதுவத்திகளைப் பொறுத்தவரை, போடுகிற முதலீட்டைப் போல இரு மடங்கு லாபம் எடுக்க முடியும். சென்ட் கலக்காமல் வெறும் ஊதுவத்திகளை மட்டும் தயாரித்து மொத்த வியாபாரக் கடைகளுக்கு விற்பனைக்குக் கொடுக்கும் வாய்ப்பும் உண்டு.

கம்ப்யூட்டர் சாம்பிராணியில் இரு மடங்கு லாபம் கிடைக்கும். சாதாரண சாம்பிராணியா, மூலிகை கலந்த ஸ்பெஷல் சாம்பிராணியா என்பதைப் பொறுத்து விலையில் மாற்றம் செய்யலாம். அட்டைப் பெட்டிகளில் அடுக்கி, சாம்பிராணியை ஏற்றிவைக்கும் குட்டித் தட்டுப் போன்றவற்றுடன் கொடுக்கலாம். வெறுமனே சாம்பிராணிகளை கவரில் பேக் செய்தும் கடைகளில் மொத்தமாகக் கொடுக்கலாம்.

இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்! - விஜயலட்சுமி

கடன் வசதி?

இரண்டு கிலோ ஊதுவத்திக்கும் சாம்பிராணிக்கும் சேர்த்து அதிகபட்சமாக 300 ரூபாய்தான் முதலீடு தேவை. மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்போருக்கு உள்கடன் வசதிக்கு வாய்ப்புண்டு.

பயிற்சி?

நாம் வாங்கும் சாம்பிராணி, சில நேரம் ஏற்றிவைத்ததும் உதிர்ந்துபோவதைப் பார்த்திருப் போம். கலவை நுணுக்கம் தெரியாமல் செய்யும் போதுதான் அப்படி ஏற்படும். அதற்கும் வாசனை போகாமலிருப்பதற்குமான சூட்சுமங்கள் பயிற்சி யில் கற்றுத் தரப்படும். 800 ரூபாய் கட்டணத்தில் சென்னை மற்றும் மதுரையில் ஒரே நாள் பயிற்சியில் ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிப்பைக் கற்றுக் கொள்ளலாம்.