Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

Published:Updated:
BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

40,000 கோடி ரூபாய்க்கு மேல்  தற்போது நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குத் தோலினால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன. இது, வருகிற 2014-25-ல் ரூ.70,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  இந்தத் துறையில் சீனா, வியட்நாம், பங்களா தேஷ் ஆகிய நாடுகள் நமக்குக் கடும் போட்டி தந்து வருகின்றன!

BIZ பாக்ஸ்

7,77,000 கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தைக் கையிருப்பாக வைத்திருக்கிறது வாரன் பஃபெட்டின் தலைமையிலான பெர்க்‌ஷையர் ஹைத்வே நிறுவனம்.  இந்த நிறுவனத்திடம் எக்கச்சக்கமாகப் பணம் குவிந்துள்ள நிலையில், புதிய தொழில் முதலீடுகளுக்குக் குறைவான வாய்ப்புகளே உள்ளதால், தனது நிறுவனத்தின் பங்குகளைத் திரும்ப வாங்குவது என்கிற முடிவை எடுத்திருக்கிறார் வாரன் பஃபெட். இந்தப் பங்குகளை என்ன விலைக்குத் திரும்ப வாங்குவது என்பது குறித்த முடிவை இந்த நிறுவனத்தின் தலைவரான வாரன் பஃபெட்டும், துணைத் தலைவரான சார்லி முங்கரும் முடிவெடுக்கவிருக்கிறார்கள்.  இப்போதுள்ள தொழில் சூழலில் ஆப்பிள் உள்படப் பல்வேறு நிறுவனங்கள் பங்குகளைத் திரும்ப வாங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களின் வழியில் பெர்க்‌ஷையரும் இப்போது நடக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

BIZ பாக்ஸ்

23% & 67% கடந்த ஜூன் மாதத்தில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் வருமானமும், லாபமும் அதிகரித்திருக்கும் நிலையில், மகிழ்ச்சியாக இருக்கிறார் ஆனந்த் மகேந்திரா.   ஜி.எஸ்.டி வரியானது நடைமுறைக்கு வந்தபின், வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. மூலப்பொருள்களின் விலை குறைந்திருப்பதும் இந்த நிறுவனத்தின் லாபம் உயர்ந்ததற்கு ஒரு முக்கியக் காரணமாகும். இந்த நிறுவனத்தின் ட்ராக்டர் விற்பனை கடந்த ஜூலையில் 20% அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் 32% உயர்ந்துள்ளது.

BIZ பாக்ஸ்

165 நாடுகளுக்கு இ-விசா வசதியைக் கொண்டு வந்திருக்கிறது இந்திய அரசாங்கம். இ-விசா அளிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த 2014-ல் 44 நாடுகளாக இருந்தன. அது இப்போது 165-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2015-ல்  5,15,417 இ-விசாக்களை அளித்த மத்திய அரசாங்கம், 2017-ல் 19,01,309 இ-விசாக்களை அளித்திருக்கிறது.

BIZ பாக்ஸ்

10,360,00,00,000 அளவுக்கு (1.48 பில்லியன் டாலர்) கடந்த முதலாம் ஆண்டில் லாபம் பார்த்திக்கிறார் சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் சி.இ.ஒ மசயோசி சன். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்றதன் காரணமாக, சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் லாபம் 49% உயர்ந்துள்ளது. சாஃப்ட்பேங்க் அடைந்துள்ள லாபத்துக்கு மட்டுமே அந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.4,000 கோடியை ஒதுக்கியிருக்கிறார் அவர். இந்த நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் சுமார் 6,000 கோடி முதலீடு செய்து, நஷ்டம் அடைந்திருக்கிறது. எனவே, இந்த நிறுவனம் வரி எதுவும் கட்டாமலே இருந்துவிடுமோ எனப் பலரும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்!

BIZ பாக்ஸ்

32,000 கோடி ரூபாயைக் கடந்த 2017-18-ம் ஆண்டில் மோசடிகள்மூலம் இழந்திருக்கின்றன இந்திய வங்கிகள். கடந்த ஆண்டு ரூ.23,930 கோடியை மட்டுமே இழந்த வங்கிகள், இந்த ஆண்டு ஏறக்குறைய ரூ.8,000 கோடியைக் கூடுதலாக இழந்திருக்கிறது. இதில் பொதுத் துறை வங்கிகளில் பங்கு 29,246 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டில் இது 19,529 கோடி ரூபாய்தான். கடந்த 2013-14-ல் பொதுத் துறை வங்கிகள் இழந்த தொகை வெறும் ரூ.10,170 கோடி மட்டுமே!

BIZ பாக்ஸ்

12 ஆண்டுகள் பெப்சிகோ நிறுவனத்தின் சி.இ.ஒ பதவியிலிருந்த இந்திரா நூயி வருகிற அக்டோபரில் அந்தப் பதவியிலிருந்து விலகுகிறார் இந்திரா நூயி. அவர் இந்த நிறுவனத்தில் மொத்தம் 24 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறார்.  சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திரா நூயி, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தபின், கொல்கத்தாவில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் எம்.பி.ஏ படித்தார். உலக அளவில் அதிகாரம் வாய்ந்த பெண்களின் பட்டியலில் பலமுறை இடம்பெற்றிருக்கிறார். 62 வயதான இந்திரா நூயி, இந்தப் பதவியிலிருந்து விலகுவதை யடுத்து, பெப்சிகோ நிறுவனத் தின் சி.இ.ஒ ஆகிறார் ரமோன் லகுவர்டா!

BIZ பாக்ஸ்

1,11,00,000 விவசாயிகள் இ-நாம் (E-NAM) திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுக்க ஏறத்தாழ 16 மாநிலங்களிலிருந்து விவசாயிகள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தாங்கள் விளை விக்கும் விளைபொருள் களை ஆன்லைன் மூலம் நல்ல விலைக்கு உதவுவதுதான் இந்த இ-நாம் திட்டமாகும்!

50,000 கோடி ரூபாயை மத்திய அரசாங்கத்துக்கு டிவிடெண்ட்-ஆகத் தர முடிவு செய்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.    2017 ஜூனில் ரூ.30,559 கோடியை டிவிடெண்ட்-ஆகத் தந்தது. கடந்த ஆண்டைவிட இப்போது 63% அதிகமாக டிவிடெண்ட் தந்திருக்கிறது ரிசர்வ் வங்கி!

BIZ பாக்ஸ்

2022-ல் 100 கிகா வாட் மின்சாரத்தைச் சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்ய மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாத முடிவில் 21.65 கிகா வாட் மின்சக்தியை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. ‘‘நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கை அடைவதுடன், அதைவிடக் கூடுதலான சூரிய மின்சக்தியை நாம் உற்பத்தி செய்வோம் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார் மத்திய மின் உற்பத்தி அமைச்சகம்.

8,512 கோடி ரூபாய் கடந்த ஜூலையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடாகி யிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.23.05 லட்சம் கோடி முதலீடாகியிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ரூ.19.96 கோடி முதலீடாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15.5% அதிகமாகும். கடந்த ஜூலையில் முதலீடான தொகையில்  ரூ.7,950 கோடி கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்களுக்குச் சென்றிருக்கிறது.

BIZ பாக்ஸ்

940 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் நஷ்டம் கண்டிருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க். ‘‘முறைகேடு செய்து வாங்கப்பட்ட கடன், வங்கியின் லாபத்தைப் பெருமளவில் தின்று தீர்த்துவிடுகிறது’’ என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் இந்த வங்கியின் தலைவர் சுனில் மேத்தா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism