நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை 1,010 நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் விற்பனை முந்தைய ஆண்டிலிருந்து 17% அதிகரித்துள்ளது. நிகர லாபமும் 14% வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான முக்கிய நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகள் இனி...

இந்தியன் வங்கி
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் பேங்கின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 44% வீழ்ச்சி கண்டுள்ளது. வாராக் கடன் ஒதுக்கீடு 24% அதிகரித்து, ரூ.1,088 கோடியாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாம் காலாண்டில் மஹிந்திரா அண்டு மஹிந்திராவின் நிகர லாபம் 67% அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.
அதானி பவர்

அதானி பவர் நிறுவனத்தின் நிகர இழப்பு 825 கோடி ரூபாயாக உள்ளது. திரோடா மற்றும் கவாய் ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கும் நிலக்கரியின் அளவு குறைந்தது மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரிப்பால் வர்த்தகம் சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டது போன்றவற்றால் ஏற்பட்ட இழப்பே இதற்கு முக்கியக் காரணமாகும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க்
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பி.என்.பி) 940 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீரவ் மோடியின் ஊழல் மற்றும் வாராக் கடன்களால் ஏற்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சமாளிக்க, அதன் லாபத்திலிருந்து ஒதுக்கிவைத்த தொகையில் ரூ.5,135 கோடியை எடுத்து ஈடுகட்டியுள்ளது.
இதில் நீரவ் மோடியின் மோசடியால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மட்டும் ரூ.1,800 கோடி எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்தக் காலாண்டில் இந்த வங்கிக்கு ரூ.940 கோடிக்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்ச்
தொழில்நுட்ப நிறுவனமான போஸ்ச் நிறுவனத்தின் லாபம் 42.4% அதிகரித்து, ரூ.431 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.302-ஆக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.2,648 கோடியாக இருந்தது. இது கடந்த காலாண்டில் ரூ.3,212 கோடியாக இருக்கிறது.
கெயில் இந்தியா
இயற்கை எரிவாயு விநியோக நிறுவனம் கெயில் இந்தியாவின் லாபம் 23% அதிகரித்து, ரூ.1,259 கோடியாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ.15,431-ஆக இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 12% அதிகரித்து, ரூ.17,299 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததே இதற்குக் காரணம்.
எஸ்.பி.ஐ
தொடர்ந்து மூன்று காலாண்டு களாக நஷ்டம் கண்டுவருகிறது இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு 70% அளவுக்கு ஒதுக்கப்பட்டதன் காரணமாக, இந்த வங்கி முதலாம் காலாண்டில் ரூ.4,875 கோடியாக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்த வங்கி அடைந்த நஷ்டம் ரூ.2,005 கோடியாக இருந்தது. இந்த வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் 23% உயர்ந்தபோதிலும், இந்த வங்கி இவ்வளவு பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது!
- பா.முகிலன்