கூகுள், வால்மார்ட், சாஃப்ட்பேங்க், அலிபாபா போன்ற உலகின் முக்கியமான நிறுவனங்கள் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துவந்தாலும் உலகின் முக்கியமான முதலீட்டாளாரான வாரன் பஃபெட் இந்திய நிறுவனங்களில் இதுவரை முதலீடு செய்ததில்லை. இந்தியாமீது உலகின் முக்கிய நிறுவனங்கள் கவனம் செலுத்திவந்தாலும் வாரன் தற்போதுதான் தன்னுடைய கவனத்தை இந்தியாமீது திருப்பி இருக்கிறார்.

இவருடைய பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் இந்தியாவின் முக்கியமான ஸ்டார்ட்அப் நிறுவனமான பேடிஎம்-ல் ரூ.2,500 கோடியை முதலீடு செய்திருக்கிறது. இந்த முதலீட்டைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,000 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பேடிஎம் நிறு வனத்தில் 3 முதல் 4% பங்குகள் தற்போது வாரன் பஃபெட்டின் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் வசம் உள்ளது.

எப்படி நடந்தது?

வாரன் பஃபெட்டின் நிறுவனம் பேடிஎம்-ல் முதலீடு செய்திருந்தலும், வாரன் பஃபெட் இதில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, வாரன் பஃபெட்டை நேரில்கூட சந்திக்கவில்லை. சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கும் மார்க் செவார்ட்ஸ் (Mark Schwartz), பேடிஎம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

இவரைச் சந்திப்பதற்காக விஜய் சேகர் சர்மா கனடா சென்ற போது, பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் உயரதிகாரிகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து விஜய் சேகர் சர்மா, பேடிஎம் இயக்குநர்கள் ரவி அடூஸ்மல்லி மற்றும் மார்க் செவார்ட்ஸ் பெர்க்ஷையர் நிறுவனத்தின் தலைமையகமான ஒமஹாவுக்குச் சென்றனர்.

அங்கு பெர்க்ஷையர் நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரி டோட் கோம்ப்பைச் சந்திக்க, ஒரு மணி நேரம் எனத் திட்டமிட்டிருந்தாலும் மூன்று மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடந்தது.

வழக்கமாக எந்தவொரு சந்திப்பு நடந்தாலும், பவர் பாயின்ட் பிரஷன்டேஷன் இருக்கும். ஆனால், இந்த சந்திப்பில் லேப்டாப்கூட திறக்கவில்லை என விஜய் சேகர் சர்மா சொல்லியிருக் கிறார். மூன்று மணி நேரமும் இந்திய ஸ்டார்ட் அப் மற்றும் பேமென்ட் துறை எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்துப் பொதுவான உரையாடல் நடக்க, அதன்பிறகு தான் இந்த முதலீட்டுக்கான யோசனை பிறந்திருக்கிறது.

ஏன் முக்கியத்துவம்?

வாரன் பஃபெட் மீண்டும் இந்தியாவில் கால்பதிக்கும் முதலீடு இது என்பதால் மட்டுமே இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றுவிட வில்லை. (கடந்த 2011-ம் ஆண்டு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பொதுக் காப்பீட்டுப் பிரிவில் கார்ப்பரேட் ஏஜென்டாக பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் இருந்தது. ஆனால், இந்தக் கூட்டணி 2013-ம் ஆண்டு முறிந்துவிட்டது). பொதுவாக வாரன் பஃபெட் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் எப்போதும் முதலீடு செய்யமாட்டார். மற்றும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங் களிலும் அபூர்வமாகவே அவர் முதலீடு செய்வார்.

ஆனால், பேடிஎம் என்கிற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததுடன், அந்த நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தையில் இன்னும் பட்டியலிடப்பட வில்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

கடும் போட்டி

நம் நாட்டில் ஆன்லைன் பேமென்ட் பிரிவில் ஏற்கெனவே கடும் போட்டி இருக்கிறது. கூகுள், வாட்ஸ்அப், யுபிஐ ஆகிய செயலிகள் தவிர, வங்கிகளின் பிரத்யேக செயலிகளும் உள்ளன. இந்தக் கடும் போட்டியை மேலும் பர பரப்பாக்கியிருக்கிறது வாரனின் வருகை.

பேடிஎம் நிறுவனத்தில் கூடுதல் தொகையை முதலீடு செய்ய பெர்க்ஷையர் நிறுவனம் முன்வந்தாலும், குறைந்த தொகையே பெற்றுக்கொண்டி ருப்பதாக விஜய் சேகர் சர்மா சொல்லியிருக்கிறார். பெர்க்ஷையர் வசம் 10,860 கோடி டாலர் தொகை ரொக்க மாக இருக்கிறது. இந்தத் தகவல் இந்திய ஸ்டார்ட்அப்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

- வாசு கார்த்தி

பேடிஎம் - அதிகரிக்கும் நஷ்டம்!

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நஷ்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2016-ல் இந்த நிறுவனம் அடைந்த நஷ்டம் ரூ.1,535 கோடி ஆகும். 2016-ல் இந்த நஷ்டம் ரூ.899 கோடியாகக் குறைந்தாலும், 2017-ல் மீண்டும் ரூ.1,604 கோடி என்கிற அளவுக்கு நஷ்டம் உயர்ந்துள்ளது. என்றாலும், ஒன்97 கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.10,560-லிருந்து ரூ.58,585-ஆக உயர்ந்துள்ளது.