Published:Updated:

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?

ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?

ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

Published:Updated:
பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?

‘சவுண்டிங் போர்டு’ மீட்டிங் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலைதான் நடக்கும். அன்றும் அப்படித்தான் நடந்தது. அந்த த்ரி ஸ்டார் ஹோட்டலில் கொஞ்சம் பன் அல்வா, சுடச்சுட பஜ்ஜி, பில்டர் காபி குடித்து முடித்தபின், போர்டு ரூமில் இருக்கிறமாதிரி ஒரு பெரிய டேபிளைச் சுற்றி எல்லோரும் அமர்ந்தார்கள். எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தார் திருலோக்.

தேவராஜன் முதலில் பேச ஆரம்பித்தார். ஆண்டுக்கு ரூ.5 கோடி டேர்ன் ஓவர் என்கிற அளவில் அவரது அப்பா நடத்திவந்த பின்னலாடைத் தொழிலை இன்றைக்கு ஏறக்குறைய ரூ.20 கோடிக்கு உயர்த்திய திறமை தேவராஜனுடையது. அப்பா கற்றுத் தந்த பிசினஸ் நுணுக்கங்களைத் தொழிலில் சரியாகச் செயல்படுத்தியதன் விளைவு, பிசினஸ் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனாலும், சமீப காலமாக தேவராஜின் மனதை ஒரு கேள்வி அரித்துக்கொண்டிருந்தது.

‘‘சென்னையில் நான் படித்தபோது சில தொழில் அமைப்புகளில் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டதன்மூலம் பல பெரிய நிறுவனங் களை நடத்துபவர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் எல்லாம் நிறுவனம் தொடர்பான முக்கிய முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள். தினப்படியான வேலைகளை புரஃபஷனல்களே செய்துவிடுகிறார்கள். எனவே, அந்தத் தலைவலி யிலிருந்து தப்பித்து, வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த அவர்களால் முடிகிறது. நானும் எனது நிறுவனத்தை புரஃபஷனல்களிடம் ஒப்படைக்க லாமா?’’ என்று கேட்டார் தேவராஜன்.

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?

தேவராஜனின் இந்தக் கேள்வி ‘சவுண்டிங் போர்டு’ மெம்பர்கள் பலரிடம் இருந்ததால், அந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

‘‘எஸ்.எம்.இ-கள் எல்லோருமே தங்கள் நிறுவ னத்தை புரஃபஷனலாக ஆக்க விரும்புகிறார்கள். முதலில், நல்ல புரஃபஷனல்களைத் தேடிக் கண்டுபிடிக்க கஷ்டப்படுகிறார்கள். பிறகு, அந்த புரஃபஷனலோடு போராடுகிறார்கள்’’ என்று ஜோக் அடித்தபடி பேச ஆரம்பித்தார் திருலோக்.

‘‘முதலில், புரஃபஷனல் என்பவர் யார் என்று பார்ப்போம். உதாரணமாக, ஒரு கிரிக்கெட் டீமை பயிற்றுவிக்கும் ஒரு புரஃபஷனலை எடுத்துக் கொள்வோம். அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும்? பணம் சம்பாதிப்பதும், தன்னுடைய தொழில் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக ஆக்கிக் கொள்வதும்தான். வெறும் புகழ்ச்சிக்கோ அல்லது ஒரு குழுவின் / நாட்டின் பெருமையை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்பதோ அல்ல. அதாவது, உண்மையான புரஃபஷனல் என்பவர், தன் தொழிலைக் காதலிப்பாரே தவிர, தன் குழுவைக் காதலிக்க மாட்டார். இதுதான் முக்கியமான வித்தியாசம்!

இந்த வித்தியாசம், எந்த முடிவையும் விருப்பு வெறுப்பின்றி எடுக்கக்கூடிய திறமையைத் தருவது பாசிட்டிவ்வான விஷயம். ஆனால், ஓனர்ஷிப் என்பது இல்லை என்பதால், இலக்கை அடைந்தே ஆகவேண்டும் என்கிற வெறி இல்லாமல் இருப்பது நெகட்டிவ்வான விஷயம். இந்த இரண்டு விஷயங் களும் பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில், நிறுவனத்தின் நஷ்டம் குறைந்து லாபம் அதிகரிக்கும். 

ஆனால், தனது நிறுவனத்தின் நிர்வாகத்தை புரஃபஷனல்களிடம் விட்டுக்கொடுக்க, தொழிலை நடத்தும் பலருக்கும் மனம் வருவதில்லை. சமீபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு பிரச்னையைச் சொல்கிறேன். நடுத்தரமான அளவில் தொழிலைச் செய்துவரும் எஸ்.எம்.இ ஒருவர், தனது நண்பரின் நிறுவனத்திலிருந்து மூலப்பொருளை வாங்கி வந்தார். அவரே நிர்வாகத்தை நடத்துகிற வரை அது ஒரு பிரச்னையாக இல்லை. நிறுவனம் கொஞ்சம் வளர்ந்து, புரஃபஷனல்கள் கையில் நிர்வாகம் சென்றபோது, அது ஒரு பிரச்னையாக மாறியது. நண்பரின் நிறுவனத்திலிருந்து வரும் மூலப்பொருள் தரமானதாக இல்லை என்று வேறொரு நிறுவனத்தில் அதை வாங்கத் தொடங்கி னார்கள். இதுபற்றி அவருக்குத் தெரியவந்தபோது, அதில் அவர் தலையிட விரும்பவில்லை. பிறகு, நண்பரிடமிருந்து கடுமையான வார்த்தைகளுடன் வந்த கடிதத்தைப் படித்தபோதுதான், தான் எடுத்த முடிவு சரியா என்கிற கேள்வி அவருக்குள் எழுந்தது.

இந்த விஷயத்தில் தலையீடு செய்யலாமா, கூடாதா என்கிற ரீதியில் பார்ப்பதைவிட, எப்போது தலையீடு செய்யலாம் என்று பார்ப்பதுதான் முக்கியம். புரஃபஷனல்களிடம் நிர்வாகத்தைக் கொடுத்தபின், நீங்கள் அடைய விரும்பும் நோக்கத்தை உங்களால் அடைய முடிகிறதா, உங்கள் ஊழியர்கள், வாடிக்கை யாளர்கள், மூலப்பொருள் களை சப்ளை செய்கிற வர்கள், உங்களுக்குக் கடன் தந்தவர்கள் என எல்லோரும் உங்களால் நியமிக்கப்பட்ட புரஃபஷனல்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, உங்கள் தொழில் உங்கள் தலைமையில் கண்ட வளர்ச்சியைவிட புரஃபஷனல்களின் தலைமையில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லையென்றால், நீங்கள் புரஃபஷனல் களிடம் நிர்வாகத்தைக் கொடுக்கத் தயாரில்லை என்று அர்த்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா?

புரஃபஷனல்களிடம் நிர்வாகத்தைத் தருவதில் இருக்கும் மிகப் பெரிய ரிஸ்க், சரியான புரஃப ஷனல்களிடம் பொறுப்பைத் தருவதில் இல்லை. புரஃபஷனல்களிடம் நிர்வாகத்தைத் தர தொழிலதிபர்கள் தங்களைத் தயார் செய்துகொள்வதில்தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் நிகழும் மாற்றங் களையும், ஏற்றத் தாழ்வுகளையும் தாங்கிக்கொள்கிற மாதிரி பிசினஸ் இருக்க வேண்டும். காரணம், எந்த மாற்றமும் சில ரிஸ்க்குகளைக் கொண்டுவருவதுடன், அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி வரக் கொஞ்சம் கால அவகாசமும் வேண்டும்.

எனவே, ஒரு நிறுவனத்தை எப்போது புரஃபஷனல்களிடம் தருகிறோம் என்பது முக்கியம். முதலில், உங்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை புரஃபஷனல்களிடம் தந்துதான் ஆகவேண்டுமா என்று பாருங்கள். முக்கியமாக, தினப்படித் தொல்லைகளிலிருந்து தப்பிக்க நிர்வாகத்தை புரஃபஷனல்களிடம் தரக்கூடாது. இப்போது அடையும் வளர்ச்சியைவிட மிகப் பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்றால் மட்டுமே இந்த முடிவினை எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, புரஃபஷனல் களிடம் பொறுப்பினைத் தரும்போது, அந்தப் பொறுப்புக்கு உரிய அடிப்படையான விஷயங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். வாடிக்கையாளர் சேவை, மூலப்பொருள்கள் வாங்குவது, நிதி நிர்வாகம் என ஒரு நேரத்தில் ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு புரஃபஷனல்களிடம் தந்து பாருங்கள். இப்படிச் செய்யும்போது ஏதாவது தவறு நடந்தால், உடனே நீங்கள் தலையிட்டுத் தடுக்க உதவியாக இருக்கும்.

நாம் ஏற்கெனவே பார்த்த உதாரணத்தில், அந்தத் தொழிலதிபர் செய்தது சரிதான். காரணம், புரஃப ஷனல்களிடம் ஒருமுறை நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டால், அதில் தலையிடக்கூடாது. அது,  அவர்களின் அதிகாரத்தைக் குறைப் பதற்குச் சமமாகும். ஆனால், இந்த விஷயத்தில் அவர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கலாம். உதாரணமாக, மூலப் பொருள்களை நண்பரின் நிறுவனத்திடமிருந்து வாங்குவதை நிறுத்துவதற்குமுன், அவரை அழைத்து அந்தத் தகவலைச் சொல்லியிருக்கலாம். இதன்மூலம், தரமான பொருளைத் தர அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்தபட்சம், இரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்புக்கு பங்கம் வராமலாவது இருந்திருக்கும்.

சரியான புரஃபஷனல்களைச் சரியான பொறுப்புகளில் நியமித்து, அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியான விளைவு களைதான் உருவாக்குகிறதா என்பதைக் குறித்த காலத்துக்கொரு முறை ஆராயுங்கள். இதுதான் உங்கள் தொழிலை புரஃப ஷனல்களிடம் ஒப்படைப்பதற்கான சரியான தயார்படுத்து தலாகும்’’ என்று திரிலோக் சொல்ல, ‘சவுண்டிங் போர்டு’ மெம்பர்கள் எல்லோருமே தங்கள் கேள்விக்கான சரியான பதில் கிடைத்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்குக் கிளம்பினர்.

(தீர்வு கிடைக்கும்)

கேளுங்கள் சொல்கிறோம்!

நான் உற்பத்தி செய்யும் பொருளின் தரத்தை என்னால் 100% உறுதியளிக்க முடியும். ஆனால், தனித்துவமான பிராண்டிங் செய்யும் வழிமுறை தெரியாததால், பத்தோடு பதினொன்றாக இருக்கிறது என் தயாரிப்பு. தனித்துவமான பிராண்டிங்கிற்கு என்ன செய்ய வேண்டும்?

பி.மகேஷ், திருச்சி.


“பிராண்ட் என்பது ஒரு லோகோவோ, பெயரோ அல்லது ஒரு செய்தியோ அல்ல. நீங்கள் தயாரிக்கும் ஒரு பொருளானது வாடிக்கையாளர்களின் பிரச்னையை எப்படித் தீர்க்க உதவுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆரம்பிக்கிறது. அதைத் தெரிந்து கொண்டவுடன், அந்தத் தனித்தன்மையையொட்டி அது ஒரு பிராண்ட்டாக உருவாகத் தொடங்கும். அப்போது அதிக தரத்துடன் விலை வைத்து விற்க முடியும். ஆனால், நீங்கள் தயாரிக்கும் பொருள் மற்ற பொருள்களிலிருந்து எந்த வகையிலும் வித்தியாசப் படவில்லை எனில், அப்போது அந்தப் பொருளில் ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்றுதான் அர்த்தமே தவிர, பிராண்டில் இல்லை என்பது தெளிவாகிறது. நீங்கள் தயாரிக்கும் பொருள் 100% தரமானது என்று நீங்கள் சொல்வதைவிட, வாடிக்கையாளர்கள் சொல்ல வேண்டும். முதலில் தயாரிக்கும் பொருளின் தரத்தை உறுதிப்படுத்துங்கள். பிறகு அதை ஒரு பிராண்ட்டாக மாற, நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. அதுவே தன்னை ஒரு பிராண்டாக மாற்றிக்கொள்ளும்.’’

பிசினஸில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை navdesk@vikatan.com என்கிற மின்னஞ்சலுக்கு சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்!

உங்கள் பிரச்னைக்கு நாங்கள் பதில் தருகிறோம்!