Published:Updated:

ஷேரிங் ஸ்கூட்டர் சேவையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஓலா!

ஷேரிங் ஸ்கூட்டர் சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காக 100 மில்லியன் டாலரை (தோராயமாக ரூ.710 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஊபர் நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கும்விதமாக ஷேர் ஸ்கூட்டர் சேவையை விரிவுபடுத்திவருகிறது.

ஷேரிங் ஸ்கூட்டர் சேவையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஓலா!
ஷேரிங் ஸ்கூட்டர் சேவையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஓலா!

கார் ஷேரிங் நிறுவனமான ஓலா, கடந்த 2016-ம் ஆண்டு முதல், பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் குறுகிய தூரங்களுக்கான வோகோ (Vogo) ஷேர் ஸ்கூட்டர் சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த சேவை மூலம், வாடகைக்கு சைக்கிளைப் பயன்படுத்துவதுபோல் ஸ்கூட்டரையும் குறுகிய தூரங்களுக்குப் பயன்படுத்த முடியும். தற்போது இந்த ஷேரிங் ஸ்கூட்டர் சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காக 100 மில்லியன் டாலரை (தோராயமாக ரூ.710 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஊபர் நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கும்விதமாக ஷேர் ஸ்கூட்டர் சேவையை விரிவுபடுத்திவருகிறது.

இந்த 100 மில்லியன் டாலர் முதலீட்டின்மூலம் புதிதாக 1,00,000 ஸ்கூட்டர்களை களமிறக்கவுள்ளார்கள். ஓலா நிறுவனத்தின் 150 மில்லியன் வாடிக்கையாளர்களும் இந்த ஸ்கூட்டர் சேவையையும் இனி பயன்படுத்த இயலும். ஒன் டைம் பாஸ்வேர்ட் முறைப்படி இணையத்தின் மூலமாக இந்தச் சேவையைப் பயன்படுத்த இயலும். 

தற்போது பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் 200 மையங்களில் வோகோ ஷேரிங் ஸ்கூட்டர் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதுவரை 20 மில்லியன் கிலோமீட்டர் தூரங்களுக்கு இதன் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் முதலீடு செய்வதன்மூலம் இதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தவுள்ளார்கள். மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா மற்றும் ஸ்டெல்லரிஸ் வெஞ்ச்ஹர் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்த முதலீட்டுத்தொகை பெறப்பட்டுள்ளது.

ஓலா பெடல் என்ற பெயரில் வாடகை சைக்கிள் சேவைக்கான சோதனை முயற்சியையும் கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.