பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகள் இங்கே...

கரூர் வைஸ்யா பேங்க்

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கரூர் வைஸ்யா பேங்கின் மொத்த வணிகம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.5,765 கோடி உயர்ந்து ரூ.1,06,402 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ.44,237 கோடி யிலிருந்து ரூ.48,141 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, மொத்த டெபாசிட் ரூ.56,400 கோடியிலிருந்து ரூ.58,262 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம், கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ரூ.555 கோடியிலிருந்து 4.32% வளர்ந்து ரூ.579 கோடியாக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ்

இந்த நிறுவனத்தின் புதிய வணிகம், 28% உயர்ந்து ரூ.480 கோடியிலிருந்து ரூ.610 கோடியாக உள்ளது. நிகர லாபம், கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.238.49 கோடியாக இருந்து, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 20.3% உயர்ந்து ரூ.286.98 கோடியாக உள்ளது. மொத்த பிரீமிய வருமானம், கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.5,636.6 கோடியாக இருந்து, தற்போது ரூ.6,840.5 கோடியாக உயர்ந்து உள்ளது. நிகர பிரீமிய வருமானம், ரூ.5,389.43 கோடியிலிருந்து ரூ.6,777.55 கோடியாக உயர்ந்துள்ளது.

கன்ஸாய் நெரோலாக்

கன்ஸாய் நெரோலாக் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 15.65% குறைந்து 121.99 கோடியாக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.144.63 கோடியாக இருந்தது. அதேவேளை, இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை, கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,287.89 கோடி யிலிருந்து 9.86% உயர்ந்து, ரூ.1,414.87 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர விற்பனை 10.7% உயர்ந்து, ரூ.1,286 கோடியாக உள்ளது.

ஆர்.பி.எல் பேங்க்

வட்டி வருமானம், வட்டிசாரா வருமானம் அதிகரிப்பின் காரணமாக இரண்டாவது காலாண்டில் ஆர்.பி.எல் பேங்கின் நிகர லாபம் 36% உயர்ந்து, ரூ.205 கோடியாக உள்ளது. ஆர்.பி.எல் வங்கியின் காசா டெபாசிட்டுகள், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 23.7 சதவிகிதமாக இருந்து, தற்போது 24.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிதி திரட்டும் செலவுகள் 6.4% என்ற அளவில் நிலையாக உள்ளது. கடன் மூலமான வருமானம் 10.6 சதவிகிதத்திலிருந்து 10.9 சதவிகிதமாக அதிகரித்து வங்கியின் லாபம் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி லாப வரம்பு 3.74 சதவிகிதத்திலிருந்து 4.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

பஜாஜ் ஃபின்சர்வ்

கேரள மழையினால் ஜெனரல் இன்ஷூரன்ஸ் வளர்ச்சிக் குறைவு காரணமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 0.83% மட்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.698 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.704 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வங்கி சாரா நிதிச் சேவை நிறுவன மான பஜாஜ் ஃபைனான் ஸின் நிகர லாபம் 54% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 38% உயர்ந்து ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது.

பெல்

வலுவான செயல்பாட்டு வருமானம் காரணமாக பெல் (BHEL) நிறுவனத்தின் நிகர லாபம் 60.43% வளர்ச்சியடைந்து ரூ.185.17 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில், நிறுவனத்தின் லாபம் ரூ.115.42 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டில் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, 6.34% அதிகரித்து ரூ.6,779.88 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மின் உற்பத்தி 1.7% அதிகரித்து ரூ.5,153 கோடியாக உள்ளது.

கோட்டக் மஹேந்திரா பேங்க்

கோட்டக் மஹேந்திரா வங்கியின் நிகர லாபம் 14.88% அதிகரித்து, ரூ.1,142 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.994.31 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர வட்டி வருமானம் 16.28% அதிகரித்து, ரூ.2,689.1 கோடியாக உள்ளது. வங்கிக் கடன் வளர்ச்சி 21.21 சதவிகித மாக உள்ளது. வங்கி வழங்கிய சிறு கடன் 27.77% வளர்ச்சியடைந்து ரூ.78,167 கோடியாக உள்ளது. இது மொத்தக் கடன் தொகையில் 42% ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் 16.82% அதிகரித்து ரூ.1,06,773 கோடியாக உள்ளது. வங்கி டெபாசிட் 24.24% அதிகரித்து, ரூ.2.06 லட்சம் கோடியாக உள்ளது. வங்கியின் வாராக் கடன் 2.17 சதவிகிதத்திலிருந்து 2.15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் 0.86 சதவிகிதத்திலிருந்து 0.81 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

லஷ்மி விலாஸ் பேங்க்

செப்டம்பர் 30 உடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் லஷ்மி விலாஸ் பேங்கின் வணிகம் ரூ.2,775 கோடி (5.30%) அதிகரித்து ரூ.52,387 கோடியிலிருந்து ரூ.55,162 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.21 கோடி அதிகரித்து, ரூ.151 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ.23,216 கோடியிலிருந்து ரூ.24,092 கோடியாக அதிகரித்துள் ளது. மொத்த டெபாசிட் 2017 செபடம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, ரூ.29,171 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர இழப்பு, 2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ.132.31 கோடியாக உள்ளது. இது 2018 ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ.123.87 கோடியாக இருந்தது.

மாருதி சுஸூகி

இரண்டாம் காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் லாபம் 9.8% குறைந்து ரூ.2,240.40 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.2,484.30 கோடியாக இருந்தது. விற்பனை எண்ணிக்கை 1.5% குறைந்து, 4,84,848- ஆக உள்ளது. நிகர விற்பனை 0.5% அதிகரித்து, ரூ.21,551.90 கோடியாக உள்ளது.

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 13.81% குறைந்து, ரூ.1,889 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 2018-19 முதல் காலாண்டில் ரூ.13,700 கோடியாக இருந்தது. இரண்டாவது
காலாண்டில் 4.9% அதிகரித்து ரூ.14,377 கோடியாக உள்ளது.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்