Published:Updated:

காபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ? - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்

காபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ? - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ? - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்

பங்குச் சந்தை

‘‘வாரன் பஃபெட் நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி, நல்ல பலன் அடைகிற மாதிரி, அவருடைய நிறுவனத்தின் சி.இ.ஓ-களைத் தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறார். சி.இ.ஓ-களைத் தேர்வு செய்தபின் அவர்கள் செயல்பாட்டில் தலை யிடாமல் நல்ல பலன் அடைகிறார். வாரனின் சி.இ.ஓ-கள் ஒவ்வொரும்  அவரவரே அவரவருடைய நிறுவனத்தின் நிர்வாகத்தை வழிநடத்திக்கொள்ள வேண்டியதுதான். 

  மிகவும் இலகுவான மாதாந்திர அறிக்கைகளைத் தவிர, வேறு எந்த அறிக்கையையும் அவர்கள் பஃபெட்டுக்கு அளிக்கத் தேவையில்லை. வேறெந்த மீட்டிங்குகளோ, போன்கால்களோ கிடையவே கிடையாது. கம்பெனியின் மதிப்பைத் தொடர்ந்து கணக்கிடுதல், வருமானம் குறித்த எதிர்பார்ப்பு அறிக்கையை வெளியிடுதல், ஊடகங்களுடன் தொடர்பிலிருத்தல் என்ற எந்த விஷயமும் கிடையவே கிடையாது’’ – ராபர் பி மைல்ஸ் என்பவர் எழுதிய ‘தி வாரன் பஃபெட் சி.இ.ஓ – சீக்ரெட்ஸ் ஃப்ரம் தி பெர்க்‌ஷயர் ஹாத்வே மேனேஜர்ஸ்’ (2001) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகம் இது.

சி.இ.ஓ என்பவர் பொய்யராகவும் இருக்கக் கூடாது; ஹீரோவாகவும் இருக்கக்கூடாது என்கிறீர்கள். அப்படியென்றால் சி.இ.ஓ என்பவர் எப்படித்தான் இருக்கவேண்டும்?

காபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ? - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே நான் எழுதியிருந்த கட்டுரைகளில் பொய்யரும் ஆகாது, ஹீரோவும் ஆகாது என்று சொல்லியிருந்தேன். அப்படியானால், யார்தான் சரியான சி.இ.ஓ என்று பலரும் கேட்டுள்ளனர். நல்ல சி.இ.ஓ-வுக்கான குணாதிசயம்தான் என்ன?

பீட்டர் ட்ரக்கர் என்னும் மேனேஜ்மென்ட் குரு சொன்ன குணாதிசயங்கள் சிறப்பானதாக உள்ளன. 1967-ம் ஆண்டில் வெளியான ‘தி எஃபெக்டிவ் எக்ஸிக்யூட்டிவ்’ எனும் பீட்டர் ட்ரக்கரின் புத்தகத்தில் சி.இ.ஓ-களின் நற்பண்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.

‘‘சிறப்பான சி.இ.ஓ, தலைவராக எல்லாம் இருக்க வேண்டியதில்லை. என்னுடைய 65 ஆண்டு கால கன்சல்டிங் அனுபவத்தில் ஒவ்வொரு சி.இ.ஓ-வும் ஒவ்வொரு மாதிரியாகவே இருந்தனர். அவர்களுடைய ஆளுமை, மதிப்பீடுகள், பலம், பலகீனம் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, எது அவர்களைச் சிறந்த சி.இ.ஓ-வாக ஆக்கியது என்று பார்த்ததில், எட்டு விஷயங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.

என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர் களாக இருந்தார்கள். நிறுவனத்திற்கு எது சிறந்தது என்று கேட்பவர்களாக இருந்தார்கள். செயல்படுத்த வேண்டிய நடைமுறைத் திட்டத்தை அவர்கள் எப்போதும் கையில் வைத்திருந்தார்கள். அவர்கள் எடுத்த முடிவிற்கு அவர்களே பொறுப்பு என்று ஒப்புக்கொள்ளும் குணம் உடையவர்களாக இருந்தார்கள். மற்றவர்களிடத்தில் விஷயங்களைக் கொண்டு செல்ல பொறுப்பேற்றுக் கொள்பவர் களாக இருந்தார்கள். எல்லா விஷயங்களிலும் பிரச்னையைக் காட்டிலும் வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பதைப் பார்ப்பவர் களாகவே இருந்தார்கள். ஆக்கப்பூர்வமான மீட்டிங்குகளை நடத்தும் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். நான் என்பதைவிட நாம் என்று சொல்லும் தன்மையைக் கொண்டிருந்தார்கள்.

காபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ? - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்

இவற்றில் முதல் இரண்டும் அவர்களுக்குத் தேவையான அறிவைத் தருவதாக இருந்தது. அடுத்த நான்கும் அவர்களுடைய அறிவைப் பயனுள்ள நடவடிக்கையாக மாற்ற உதவியது. கடைசி இரண்டும் மொத்த நிறுவனத்தில் இருப்பவர்களும் பொறுப்புடனும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க உதவியது.’’ ட்ரக்கர் சொன்னவற்றிலிருந்து ஆறு குணாதிசயங்கள் கொண்டவர்கள் நல்ல சி.இ.ஓ எனச் சொல்லலாம். அவை...

1. நிறுவனத்திற்குத் தேவையான தொடர்புடைய அனுபவம்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை நடத்துவது கொஞ்சம் கடினமே. முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வகிக்க சி.இ.ஓ-களிடம் கொடுப்பதால் அவர்கள் அதே போன்ற நிறுவனத்தை ஏற்கெனவே நிர்வகித்த அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வேளை, புதிய சி.இ.ஓ புரமோட்டர்களின் மகன் அல்லது மகளாக இருந்தால், அந்த நிறுவனத்தி லேயே பணியமர்த்தப்பட்டு திறமை வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. தொழில்ரீதியாக ஏற்படும் மாறுதல்களைத் தெரிந்து, அதற்கேற்ப நடக்க வேண்டும்

நிதித் துறையில், நிர்வாக வியலில் என்னென்ன மாற்றங்கள் புதிதாக வந்துள்ளன என்பதை யெல்லாம் தெரிந்துகொண்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒரு நல்ல சி.இ.ஓ என்பவர், அவர் இருக்கும் துறையில் உற்பத்திச் செலவு களில் உலக அளவில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது  என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் மனமாற்றத்தினாலோ அல்லது பொருளாதார மாறுதலாலோ ஒட்டுமொத்த சந்தையின் வியாபார அளவு எந்த அளவு மாறியிருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தான் தலைமை வகிக்கும் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களிலோ அல்லது வழங்கும் சேவைகளிலோ புதுமையையும், தயாரிக்கும் முறையில் புதுமையையும் உணர்ந்தும் இருக்க வேண்டும். இந்த விஷயங்களில் திறமையைக்கொண்டிருக்கும் சி.இ.ஓ-கள் இயல்பாகவே நிறைய விஷயங்களைப் படிப்பவர்களாகவும் தொழில்ரீதியான கேள்விகள் பலவுக்கும் விடை தேடுபவர்களாகவும் இருப்பார்கள்.

3. பரவலாக்கப்பட்ட அதிகாரம்

எந்தவொரு சி.இ.ஓ-வுக்கும் அந்த நிறுவனத்தில் நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றிலும் மேலான திறமை இருக்காது என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் மார்கெட்டிங் மற்றும் பிசினஸ் டெவலப்மென்டில் சிறந்த திறமை கொண்டவராக இருந்தால், அந்தப் பிரிவில் மட்டும் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏனைய பிரிவான மனிதவளம் மற்றும் நிதி போன்ற துறைகளில் அதிகாரத்தைப் பிரித்து பரவலாக்கி, பலரை வைத்துத் திறம்பட வேலை பார்ப்பார். அதை விட்டுவிட்டு மார்க்கெட்டிங் மட்டுமே தெரிந்த கில்லியான ஒரு சி.இ.ஓ நிறுவனத்தின் எல்லாப் பிரிவிலும் மூக்கை நுழைத்து ஒரு சூப்பர்மேன் போல் செயல்பட்டால் அது வெற்றிக்கு வழி வகுக்காது.

4. புத்திசாலித்தனமான முதலீட்டு ஒதுக்கீடுகள் 

ஒரு நிறுவனம் முதலீட்டைத்  தனது செயல் பாட்டுக்கு எப்படி ஒதுக்கிறது என்பது மிக மிக முக்கியம். அதிலும் புராஜெக்ட் களுக்கும், புதிய தொழிலில் இறங்குவதற்கும் எவ்வாறு நிதிகளை ஒதுக்குகிறது என்பது மிக மிக முக்கியம். ஒரு சி.இ.ஓ-விடம் நூறு கோடிக்கு புதிய புரா ஜெக்ட்டைப் போட்டிருக் கிறீர்களே, அதனுடையை ஐ.ஆர்.ஆர் என்ன, எப்போது பிரேக் ஈவன் ஆகும், அந்த விரிவாக்கம் நிறுவனத்தின் ஆர்.ஓ.சி இதனால் எப்படிப் பாதிப்படையும் என்கிற கேள்விகளைக் கேட்டதற்கு ‘‘எனக்கு ஐ.ஆர்.ஆர் மறந்து விட்டது’’ என்றார். மூன்று, நான்கு வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என்றால், அது கவலை அளிக்கும் பதில்தான்.

5. தார்மீகரீதியான நேர்மை

 சி.இ.ஓ ஒரு மிகப் பெரிய நியாயஸ்தராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும், தார்மீகரீதியான நேர்மையுடன் செயல்படவேண்டும் என்பது அடிப்படை. ஐந்து சதவிகித வரிக்குப் பிந்தைய லாபம் கொண்டிருக்கும்  டெக்ஸ்டைல் மில்லின் சி.இ.ஓ., பிஎம்டபிள்யூ-7 சீரிஸ் காரில் தொழிற் சாலைக்கு சென்றுவருவதைவிட, 45 சதவிகித ஆர்.ஓ.சி.இ கொண்டிருக்கும் ஜுவல்லரி நிறுவனத்தின் சி.இ.ஓ ஹோண்டா அக்கார்டில் தொழிற்சாலைக்குச் செல்வதையே தார்மீக ரீதியான நேர்மை என்கிறோம். இவ்வாறு எளிமையாக இருப்பதன் மூலமே பணியாளர்கள் அனைவரையும் அரவணைத்துச்செல்ல முடியும்.   சி.இ.ஓ லண்டனில் பார்ட்டிக்குச் செல்ல அவருடைய ஊழியர்கள் லூதியானாவில் கஷ்டப்பட்டு முழுமனதுடன் நிறுவனத்திற்காக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நஷ்டம்தான் வரும்.

6. ஸ்கின் இன் தி கேம்

நிர்வாகத்திறன் குறைவாக இருக்கும் நாட்டில் சி.இ.ஓ-தான் அவருடன் இருக்கும் அத்தனை முதுநிலை பணியாளருக்கும் குருவாக இருக்கிறார். இந்தச் சூழலில் சி.இ.ஓ-வின் முதலீடு நிறுவனத்தில் நிறைய இருந்தால், முதுநிலைப் பணியாளர்கள் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற யோசிப்பார் கள். இதனாலேயே ஒரு குடும்பத்தினரால் நடத்தப்படும் நிறுவனங்கள், ஏனைய நிறுவனங்களைவிட அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இந்தியாவில் பல ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. ஓனர் சி.இ.ஓ என்ற முறையே சிறந்தது என்று வாரன் பஃபெட் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியிலேயே பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், சி.இ.ஓ, நியாயஸ்தராக, கடின முயற்சிகளைச் செய்யக் கூடியவராக, அவருடைய திறமையையும், திறமையின்மையையும் நன்கு உணர்ந்தவராக, அவருடைய நடத்தையும் சம்பளமுமே நிறுவனத் தின் லாபத்தையும் நஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.

கடந்த பத்து வருடங்களில் நாங்கள்  இதுபோன்ற 40 சி.இ.ஓ-களையே சந்தித்திருக் கிறோம். இந்த 40 சி.இ.ஓ-கள் நிர்வகிக்கும் நிறுவனங்களே நல்லதொரு போர்ட்ஃபோலி யோவில் பங்கெடுக்கத் தகுதியான நிறுவனங்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

(முதலீடு வளரும்)

- செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)