பொட்டீக்குகளில் சேலையோ, சல்வாரோ வாங்கச் செல்வார்கள். சாதாரண காட்டனாக இருக்கும். விலையோ சில ஆயிரங்களாக இருக்கும். `சாதாரண காட்டனுக்கா இந்த விலை?' என்று கேட்டால், அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்துக்கும் டிசைனுக்கும்தான் அவ்வளவு பணம்' என்பார்கள். உண்மைதான்... கைவேலைப்பாடுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எல்லோராலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து இப்படி வாங்க முடியுமா? நாமே கற்றுக்கொண்டு செய்தால்?

‘`ஓவியத்திறமையோ, கைவேலைகளில் முன் அனுபவமோ தேவையில்லை. ஆர்வமும் கற்பனைத் திறனும் இருந்தால் போதும். நீங்களும் டிசைனராகலாம்'' என்கிறார் ராணி பொன்மதி. இயற்கை சார்ந்த வாழ்வியலுக்காகவே ஐ.டி வேலையை உதறியவர். உணவு, உடை, உறைவிடம் என எல்லாவற்றிலும் இயற்கையை வரித்துக்கொண்டவர். இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி, உடைகளில் ஸ்டென்சில் மற்றும் ரோலர் பெயின்ட்டிங் முறையில் டிசைன்கள் செய்கிற ராணி பொன்மதி, ஆர்வமுள்ளவர் களுக்கு வழிகாட்டுகிறார்.

``ஃபேப்ரிக் பெயின்ட்டிங்கில் முக்கியத் தகுதி வரைய தெரிஞ்சிருக்கிறது. ஆனா, ஸ்டென்சில் அண்டு ரோலர் பெயின்ட்டிங் செய்ய அந்தத் தகுதி தேவையே இல்லை. உங்களுக்கு என்ன டிசைன் பிடிக்குதோ அதை அப்படியே உங்க உடைகளில் கொண்டுவரலாம். ஒரே டிசைனை மறுபடி மறுபடி உபயோகிக்கப் போறீங்கன்னாலும் ஒவ்வொரு முறையும் புதுசா வரைய வேண்டியதில்லை. ஒரு முறை வரைஞ்சதையே எத்தனை முறை வேணாலும் பயன்படுத்திக்கலாம். ஸ்டென்சில் பெயின்ட்டிங் மட்டுமோ, ரோலர் பெயின்ட்டிங் மட்டுமோ செய்யலாம். இரண்டையும் சேர்த்துச் செய்யறபோது இன்னும் ஸ்பெஷலா மாறிடும் உங்க உடைகள். டிசைன் பண்ணத் தெரியாதேனு கவலையே வேண்டாம். கோலம் போடத் தெரியும்னா, அதுகூட இந்த பிசினஸுக்கான திறமைதான்...'' - நம்பிக்கையளிக்கிறது ராணி பொன்மதியின் பேச்சு.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

தேவையான துணி, நேச்சுரல் டை எனப்படும் இயற்கைச் சாயங்கள் (இது ரெடிமேடாகவும் கிடைக்கும். நாமே தயாரித்தும் பயன்படுத்தலாம்), ஸ்டென்சில்ஸ், ரோலர்ஸ், சின்னப் பலகைகள்.

5,000 ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸைத் தொடங்கலாம். முதலில் துப்பட்டாவில் பெயின்ட் செய்து அவற்றை மட்டுமே விற்கலாம். பிறகு டாப்ஸ், சல்வார், சேலை என அடுத்த கட்டத்துக்கு நகரலாம்.

முழுக்க முழுக்க கைகளால் மட்டுமே செய்கிற வேலைப்பாடு இது. மெஷினோ, வேறு கருவிகளோ தேவையில்லை. பெரியளவில் இட வசதியும் தேவை யில்லை. துப்பட்டாவை விரிக்கிற அளவுக்கு இடம் இருந்தால் போதும். சேலைகளுக்குச் செய்கிறபோது சேலையை மடித்து டிசைன் செய்யலாம்.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

இதை இரண்டு விதங்களில் செய்யலாம். வாடிக்கையாளர்களிடம் துணிகளை வாங்கி டிசைன் மட்டுமே செய்து கொடுப்பது ஒரு வகை. இன்னொன்று நாமே துணி வாங்கி, டிசைன் செய்து அப்படியே விற்பது அல்லது தைத்து விற்பது. தைத்து விற்பது என்றதும் தையல் தெரியாதே, தையல் மெஷின் இல்லையே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். டிசைன் செய்த துணியை நமக்குத் தெரிந்த டெய்லரிடம் கொடுத்துத் தைத்து வாங்கிக்கொள்ளலாம். டிசைனுக்கான கட்டணத்துடன் தையல் கட்டணத்தையும் சேர்த்து வாங்கலாம்.

அரைமணி நேரத்தில் ஒரு டாப்ஸுக்கு டிசைன் பண்ணலாம். 200 ரூபாய் செலவாகிறது என்றால் அதற்கு 400 ரூபாய் கட்டணம் வாங்கலாம். இரட்டிப்பு லாபம் தரும் பிசினஸ் இது. பொட்டீக், ரெடிமேட் கடைகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஆர்டர் பிடிக்கலாம். பெரிய பொட்டீக்குகளில் நேச்சுரல் டை செய்யப்பட்ட உடைகளுக்கென்றே தனிப் பிரிவுகள் இருப்பதைப் பார்க்கலாம்.

கடன் வசதி?

ஆரம்பத்தில் உங்களிடம் உள்ள துணிகளைக் கொண்டே ஆரம்பிக்கலாம். அக்கம்பக்கத்துப் பெண்கள் சேர்ந்தும் ஆரம்பிக்கலாம். மகளிர் குழுக்களில் இருப்பவர்களுக்கு உள்கடன் வசதி பெறும் வாய்ப்பு உண்டு.

பயிற்சி?

ஒருநாள் பயிற்சியில் ஸ்டென்சில் மற்றும் ரோலர் பெயின்ட்டிங் செய்வதற்கு, துணிகளைத் தேர்வு செய்கிற முறை, பெயின்ட்டிங் செய்வதற்கு முன் துணியைத் தயார்படுத்துவது எப்படி, பெயின்ட்டிங் செய்த
துணியைப் பராமரிப்பது எப்படி, பிசினஸ் தொடங்குவதற்கான ஏ டு இஸட் ஆலோ சனைகள் என எல்லாவற்றையும் 1,000 ரூபாய் கட்டணத்தில் கற்றுக்கொள்ளலாம்.

சாஹா - படங்கள் : ப.சரவணகுமார்