Published:Updated:

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!
பிரீமியம் ஸ்டோரி
டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!
பிரீமியம் ஸ்டோரி
டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!
டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

ஜி.மாறன்,
செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்


லாபகரமாகப் பிரித்து முதலீடு செய்வது (அஸெட் அலோகேஷன்) எப்படி என்பது குறித்த எனது கருத்துகளைத் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நாணயம் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறேன்.    

கடந்த 2018-ம் ஆண்டில் அஸெட் அலோகேஷன் குறித்து நான் விவாதித்தபோது, கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களைச் சொல்லியிருந்தேன்.     

1. 2012-ம் ஆண்டிலிருந்து தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டபோதிலும், 2018-ல் சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.

2. கூடிய விரைவில் வட்டி விகிதம் குறையும் என்பதால், குறுகியக் காலக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும்.    

3. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கட்டாய விற்பனையை மேற்கொள்ளும் அளவுக்கு டெவலப்பர்களை நெருக்குவதால், விற்காமல் கிடக்கும் வீடுகளை விற்கும் நிலைக்கு டெவலப்பர்கள் தள்ளப்படு கிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் விலை  மேலும் குறையக்கூடும்.   

4. தங்களது போர்ட்ஃபோலியோவில் 25% சரிவை ஜீரணித்துக்கொள்ள இயலாதவர்கள், அடுத்து ஒரு சரிவு ஏற்பட்டபின் வெளியேறுவதற்குப் பதிலாக இப்போதே முதலீட்டிலிருந்து வெளியேறி விடுங்கள்.   
       
நான் சொன்னது 2018-ம் ஆண்டில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

1. தங்கத்தின் விலை 5 - 8% வரையிலான ஒரு குறுகிய வரம்புக்குள்ளேயே ஏறி இறங்கியது. அதன் விலை வீழ்ச்சி அடைவது நின்றுபோனது.

2. ஆண்டின் தொடக்கத்தில் வட்டி விகிதங்களில் சரிவு ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பகுதியில் உயர்ந்தது. இதன்மூலம், பெரும்பாலான சந்தை பங்கேற்பாளர்களின் எண்ணத்தைத் தவறு என நிரூபித்தது.

3. நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து சரிந்ததால், குறைவான பரிவர்த்தனை களே நடந்தன.

4. ஆதாயமோ அல்லது இழப்போ ஏற்பட வில்லை என்று பங்குச் சந்தைக் குறியீடுகள் (Benchmark Indices) காட்டியபோதிலும், ஈக்விட்டி சந்தைகளில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2018-ம் ஆண்டை நாம் தொடங்கியபோது, 2017-ல் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறிப்பாக, ஸ்மால்கேப் / மிட்கேப் பங்குகளில் அதற்கும் கூடுதலாக வருவாய் ஈட்டிய ருசியில், முதலீட்டாளர்கள் பேராசையுடன் இருந்தார்கள். “எல்லோரும் அச்சத்துடன் இருக்கும்போது பேராசைப்படுங்கள்; எல்லோரும் பேராசையுடன் இருக்கும்போது அச்சத்துடன் இருங்கள்” என்று வாரன் பஃபெட் சொன்னதை நான் அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் நாம் ஏன் அச்சத்துடன் இருந்தோம். அதற்கான காரணங்களை “நாம் எது குறித்து அச்சப்பட வேண்டும்?’’ என்கிற தலைப்பின்கீழ் சொல்லி யிருந்தேன். அந்த நான்கு காரணங்கள் இவைதான்.

1. சந்தையின் ஒட்டுமொத்த நகர்வின் குறியீடு: நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவற்றின் நகர்வுகள் வங்கி, ஐ.டி மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளின் பங்கு மதிப்புகளைப் பொறுத்தே அமையும். மற்ற துறைகளில் ஏற்படும் அழுத்தம் அல்லது முன்னேற்றம் முன்னணிக் குறியீடுகளில் இடம்பெறுவதில்லை.

2. சந்தை ஏற்ற இறக்கம்: சந்தைகள் 2015/16 மற்றும் 2017 எனச் சில ஆண்டுகள் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்ததால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் ரிஸ்க் என்ற ஒன்றே இல்லை என்று கருதி, பங்குகளில் அதிக அளவு முதலீடு செய்யத் தொடங்கினார்கள்; அதுவும், அதிக ரிஸ்க்குகள் கொண்ட ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில்.

3. உள்நாட்டுப் பணப்புழக்கம்: அண்மைக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சொத்துகள் முதலீட்டாளர்களின் முதலீட்டை அதிக அளவு ஈர்த்தது இயல்பான ஒன்றுதான். இதில் பங்குகளின் மீதான முதலீடுதான் உள்நாட்டுப் பணவரத்துக்கு அதிக பங்களிப்பைக் கொண்டதாகத் திகழ்கிறது. சந்தை சரியத் தொடங்கினால், பங்குகளின் மீதான முதலீடு குறையலாம்.

4. அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் அண்மைக் கால வீழ்ச்சி: 2008-ன் தொடக்கத் திலிருந்து கடந்த ஆண்டு வரை அதாவது, பத்து ஆண்டுகளாக, அமெரிக்கச் சந்தைகளின் வீழ்ச்சி மும்மடங்காகி உள்ளது. செயற்கையாகக் குறைத்துவைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் குறைக்கப்பட்ட வரிகள் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் மிகவும் அதிகரித்துள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் இயல்புநிலைக்கு வரத் தொடங்கும்போது, சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து, அதன் தாக்கம் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீட்டில் வெளிப்படும்.

நான் சொன்ன நான்கு அச்சங்களில் மூன்று அச்சங்கள் 2018-ல் முக்கியமான விஷயங்களாக இருந்தன. சென்செக்ஸ், நிஃப்டி போன்ற பிரதானக் குறியீடுகள் பொதுவான சந்தை இறக்கத்திலிருந்து விலகியும், பங்குச் சந்தைகள் சமீபத்திய எந்தவொரு ஆண்டைக் காட்டிலும் 2018-ல் மிக அதிக ஏற்ற இறக்கத்துடனும் காணப் பட்டன. அத்துடன் அமெரிக்கச் சந்தைகளிலும் 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் கடும் சரிவைக் காண முடிந்தது. ஆனால், உள்ளூர் பணப்புழக்கம் தொடர்ந்து வலுவாக இருந்ததுடன், சந்தையின் சரிவு ஒரு வரம்புக்குள் இருக்க உதவியது. 

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

சுருக்கமாகச் சொல்வதானால், முதலீட்டாளர் களுக்குக் கடந்த 2018-ம் ஆண்டு, அனைத்து வகையான சொத்துகளிலுமே சிறப்பான ஆண்டாக அமையவில்லை.  ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகையான சொத்துமே ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கான வருவாயைத் தரும்  என்று எதிர்பார்ப்பது நியாயமானதல்ல. கடந்த 10/20/ 30 ஆண்டுக் கால வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்டதைப் பார்த்தால், ஒவ்வொரு காலண்டர் ஆண்டைக் காட்டிலும் 3/5 ஆண்டு சுழற்சியில் கணக்கிடும்போது சிறப்பான வருவாய் இருந்திருப்பது தெளிவாகப் புலப்படும். இதனால்தான்,  ஓராண்டின் போக்கைக் கணிப்பதற்குப் பதிலாக மூன்றாண்டுச் சுழற்சி அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்று சொல்கிறேன்.

அடுத்த மூன்றாண்டுகளுக் கான அஸெட் அலோகேஷனை எப்படி அமைத்துக்கொள்ளலாம் என்கிற ஆலோசனைக்குள் செல்லும்முன், பெரும்பாலான முதலீட்டாளர்களிடையே காணப்படும் முக்கியமான கேள்விகளைப் பட்டியலிடலாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும்  அதிகமான முதலீட்டாளர் களைச் சந்தித்துள்ளேன். அவர்கள்  கேட்ட கேள்விகளைக் கீழே தந்திருக்கிறேன்.

1. சர்வதேசப் பொருளாதார மந்தநிலை, வரவிருக்கும் ஆண்டு களில் தங்கத்தின் விலையை அதிகரிக்க வைக்குமா?

2. தற்போதைய கச்சா எண்ணெய் விலைவீழ்ச்சியால் அரசுகளின் கடன் சுமை குறைந்திருப்பதன் காரணமாக, வட்டி விகிதம் குறைந்து கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களைக் கவர்ச்சிகரமானதாக ஆக்குமா?

3. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாறினால் ரியல் எஸ்டேட் விலைகளில் ஏற்றம் காணுமா?

4. பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகப் புள்ளிவிவரங்கள் சொன்னாலும், அது உண்மையா என்கிற சந்தேகம் எழுகிறது. அது உண்மையானால்,  வளர்ச்சி என்பது எங்குதான் நடக்கிறது?

5. தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்தாலும்கூட, நமது பங்குச் சந்தைகள் சாதகமான வருவாயைக் கொடுக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். அவை நமது போர்ட்ஃபோலியோ அலோகேஷனை எப்படி அமைத்துக்கொள்வது என்கிற முடிவினை எடுக்க உதவும்.    

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

தங்கம்   

   முந்தைய ஆண்டுகளில் இது குறித்து பலமுறை  நாம் விளக்கியுள்ளபோதிலும், தங்கத்தில் முதலீடு செய்வதற்குமுன் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங் களை மனதில்கொள்வது முக்கியம்.

அ) கடந்த 5 ஆண்டுகளாக, சர்வதேச அளவில் தங்கத்தின் மதிப்பு 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால், இந்திய முதலீட்டாளர்களுக்கான இழப்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒருவேளை, வருடாந்திரப் பணவீக்கம் 5% என எடுத்துக்கொண்டால், அது நிச்சயம் மிகப்பெரிய இழப்புதான். 1991 முதல் 2001 வரைக்குமான ஆண்டுகளுக்கு இடையே, 10 ஆண்டுகளாக உள்நாட்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை  400 ரூபாய் என்ற அதே அளவிலேயே நீடித்தபோது, இதே போக்குதான் காணப்பட்டது.

ஆ) 2001 - 2012-ம் ஆண்டு களுக்கு இடையே தங்கத்தின் விலை கிராம் 400 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய்க்குச் சென்றது. அதாவது, 12 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) சொல்வதானால் இது 20%. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளிலும், அடுத்த 6 ஆண்டு களிலும் தங்கம் எந்த வருவாயும் தரவில்லை என்பதை மறக்கக்கூடாது.

2001 முதல் 2012-ம் ஆண்டுகளுக்கு இடையே அதிகமான தங்கத்தை சொத்தில் ஒரு வகையாகக் குவிப்பது முடிந்துபோன அத்தியாயமாகி விட்டது.  செயற்கையாகக் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள்,  ஊகத்தின் அடிப்படையில் வாங்கப் பட்ட இந்தச்  சொத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்படக் காரணமாக அமைந்தது.  ஆனால், முதலீட்டாளர்களின் வருவாய் துரத்தலும், இந்திய மற்றும் சீனாவின் நடுத்தர வருவாய் பிரிவினரிடையே  தங்க நகை வாங்கும் உண்மையான வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தான் தங்கத்தின் விலையை அதிகரிக்க வைத்தது.

இந்தியாவில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் தற்போது நடக்கிறது. அது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நீண்ட காலப் போக்குக்கான அறிகுறியாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் 34 வயதுக்கும் கீழே உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் பெண்கள். 20 முதல் 30 வயதுடைய இந்தப் பிரிவு பெண்கள், அவர்களுடைய முந்தைய தலைமுறை பெண்கள் வாங்கிய அளவுக்குத் தங்க நகைகளை வாங்கு வதில்லை. நுகர்வின் ஒரு அங்கமாக மொத்தமாகத் தங்க நகை வாங்குவது குறைந்துவருகிறது. இந்தியாவின் இளம் தலைமுறையினரின் இந்தப் போக்கு இன்னும் 20 ஆண்டுகளுக்கு இப்படியே இருக்கக்கூடும். எனவே, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் தேவையானது  அதிகரிக்காது  என்ற எதிர்பார்ப்பு நியாயமான தாகவே இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வு நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், (உலக அளவிலான தங்கத்தின் தேவையில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவுடையது) இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை குறைந்தால், அது உலகின் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அப்படி நடக்கும்பட்சத்தில் தங்கத்தின் விலை கட்டுக்குள்ளேயே இருக்கும்.

ஒருவேளை, வரவிருக்கும் ஆண்டுகளில், சர்வதேச நிதிச் சந்தைகள் பழைய பாதைக்குத் திரும்பினால், மத்திய வங்கிகள் தேவைக்கும் அதிகமான தங்கத்தை மீண்டும் வாங்கும்பட்சத்தில், நகைக்காக அல்லாத தங்கத்தின் தேவை அதிகரிக்கும். சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருவதாலும், வட்டி விகிதம் அதிகரிப்பதாலும் அடுத்த 2/3 ஆண்டுகளில் இது நடப்பதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, தங்கத்தில் 10% அளவுக்கு மிதமான ஒதுக்கீட்டைசெய்து  வைத்துக்கொள்ளலாம்.

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் இரண்டு விதமாக வருவாய் ஈட்டி லாபம் தருகிறது. முதலாவது,  கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் வட்டி மூலமான வருவாய். இரண்டாவது, வட்டி விகிதம் குறையும்போது நிதிப் பத்திரங்களின் விலை அதிகரிப்பு மூலம் கிடைக்கும் ஆதாயம். நிதிப் பத்திரங்களின் விலை, வட்டி விகிதத்துக்கு எதிராக தலைகீழாக மாறுவதால், எந்த ஒரு வட்டி விகித உயர்வும் நிதிப் பத்திரங்களின் விலையில் சரிவை ஏற்படுத்திவிடும்.

கடந்த ஆண்டு நான் சொன்னபடி, வட்டி விகிதத்தில் நீண்ட காலச் சரிவின் மத்தியிலேயே நாம் தொடர்ந்து இருக்கவேண்டும்.  கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்திதான். உலக அளவில் பணவீக்கத்தைத் தாண்டிய உச்சபட்ச வட்டி விகிதத்தைக்கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால்தான் வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு ரிசர்வ் வங்கியுடன் அரசாங்கம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகமாக வைத்திருப்பதற்கு ரிசர்வ் வங்கிக்குச் சில நியாயமான காரணங்கள் உள்ளபோதிலும், அடுத்த சில ஆண்டுகளில் குறைவான பணவீக்கம் மற்றும் குடும்பத்தினரின் சேமிப்புகளில் ஏற்படும் அதிகமான நிதி இழப்பு போன்ற காரணங்களால் இந்தியாவில் வட்டி விகிதம் குறையும் என்பதால், அதிக வட்டி விகிதம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும்.

ஆனால், வட்டி விகிதக் குறைவினால் பயனடையலாம் என்ற நோக்கத்தில் செய்யப்படும் குறுகிய கால முதலீடுகள் ஆபத்தாக அமையும். பெரும்பான்மையா னோர் எதிர்பார்த்தபடியே, 2018-ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டில் வட்டி விகிதங்கள் குறைந்து காணப்பட்ட அதே வேளை, ஆண்டின் இரண்டாம் பாதியில் கச்சா எண்ணெய் விலை  உயர்வு மற்றும் அரசாங்கம் வாங்கிய அதிக கடனுடன், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நிதிச் சிக்கல் போன்றவை ரிஸ்க்கின் அளவை மேலும் ஓர் அங்குலம் அதிகரித்ததால், அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக வட்டி விகிதம் அதிகரித்தது.

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் திடீரென அதிகரித்த மூலதனமும், அதற்கு அதிக வருவாய் தேவை இருந்ததாலும், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரிஸ்க்குகள் நிறைந்த நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் அதிக அளவு ரிஸ்க் எடுத்தன. ஐ.எல் & எஃப்எஸ்-ல் நடந்த ஊழல், சந்தையைப் பாதித்தபின், மற்ற பல வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நிதிச் சிக்கலில் சிக்கியதன் காரணமாக, அவற்றின் வருவாய் தரும் திறன் குறைந்துபோனது.

கிரெடிட் ரிஸ்க்குகள் இல்லாத ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் இருப்பது முக்கியமானது. முதலீட்டுக் காலத்தைப் பொறுத்தே வட்டி விகித ஆபத்து இருப்பதால், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது நல்லதாக இருக்கும். அதேசமயம், நிதிச் சிக்கலை ஏற்படுத்தும் கடன் ரிஸ்க்குகள் வருவாயில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

பங்குச் சந்தை

2017-ம் ஆண்டின் தொடக்கத் தில் அலோகேஷன் வியூகங்கள் குறித்து நாம் விவாதித்தபோது,  தீவிர முதலீட்டாளர்கள் போர்ட் ஃபோலியோவின் 70 சதவிகிதத்தைப் பங்குகளுக்காக ஒதுக்கலாம் என்றும், மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் 50% பங்குகளுக்காக ஒதுக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் லார்ஜ்கேப் பங்குகள் 30% வரைக்கும், மிட்கேப் பங்குகள் விலை அதற்கும் மேலாகவும் உயர்ந்தன.

2018 தொடக்கத்தில் பங்கு ஒதுக்கீட்டில் 20 சதவிகிதத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என நாம் ஆலோசனை சொல்லியிருந்தோம். 2018-ம் காலண்டர் ஆண்டில் லார்ஜ்கேப் பங்குகளில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டபோதிலும், வருவாய் எதையும் தரவில்லை. அதேபோன்று, ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் மிட்கேப் பங்குகள் விலை சாதாரணமாக 15 - 20% வரை சரிந்தன. 2018-ம் ஆண்டில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் போன்ற குறியீடுகளுக்கும் ஸ்மால், மிட்கேப் பங்குகளுக்கும் இடையேயான விலை மாற்றத்தை  வரைபடத்தில் காணலாம்.

2018-ம் ஆண்டில் பங்குகளின் மதிப்பு குறைந்து காணப்பட்ட போதிலும், தேர்தல் காரணமாக சந்தையின் ஏற்ற இறக்கப் போக்கு அதிகரித்ததால், கவலையுற்ற முதலீட்டாளர்களுக்குப் பங்கு களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு நாம் ஆலோசனை சொன்னோம்.    

அதிக வருவாய் கொடுக்கும் என்பதால், பங்குகள் மீதான முதலீட்டை அதிகப்படுத்துமாறு  எங்களைச் சொல்ல வைக்கும் அளவுக்கு எதெல்லாம் நம்பவைத்தது?

1. கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது: கடந்த காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் வருவாய் ஒற்றை இலக்க வளர்ச்சியை அடைந்திருந்தபோதிலும், வரவிருக்கும் ஆண்டில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதிக பயன்பாட்டுத் திறன், கடன் சுமை குறைவு போன்றவற்றினால்  லாப விகிதம் அதிகரித்ததைக் காலாண்டு முடிவுகளில் நாம் ஏற்கெனவே பார்த்திருந்தோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட துறைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஆண்டுக்கு 15 - 20%  வரை அல்லது அதற்கு மேலும்கூட  அதிகரிக்கலாம்.  கார்ப்பரேட் இந்தியாவில் வருவாய் வளர்ச்சி  ஒரு கட்டமைப்பான முன்னேற்றத்தில்தான் இருக்கிறது.

2.  பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி நடைமுறை: இவற்றின் பாதகமான விளைவுகள் ஏற்கெனவே தெளிவாகி உள்ள நிலையில், சில துறைகளில் சாதகமான விளைவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. உள்ளீட்டு வரிப் பலனைக் கொண்ட ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறை, அமைப்புசாரா தொழில் நிறுவனங்களை அதற்கு இணக்கமில்லாத வகையில் சிரமத்துக்குள்ளாக்கி விட்டது.  தொழில் நிறுவனங்கள் அமைப்புசாரா நிலையிலிருந்து அமைப்பு சார்ந்ததாக மெதுவாக, ஆனால் சீராக மாறி வருகின்றன. பட்டியலிடப் பட்ட நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் வடிவமைப்பிலிருந்து பெற்ற பலன்களைக் கொண்ட அமைப்பு சார்ந்தவையாகிக் கொண்டி ருக்கின்றன.

3.  உள்நாட்டு பணப்புழக்கத்திலிருந்து: இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களால்  செய்யப்படும் எஸ்ஐபி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்திருப்ப தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் காலாண்டுகளில் அதிகரித்திருப்பதாலும், பங்குகளுக்கான முதலீட்டு ஒதுக்கீடு இன்னும் அதிகமாகலாம். மாற்று முதலீட்டுக்கான வாய்ப்புகள் இல்லாததால், நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் செய்வதற்கான முதலீட்டு ஒதுக்கீடு இன்னும் அதிகரிக்கும்.

4. 2018-ம் ஆண்டில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குகளை மொத்தமாக விற்ற போதிலும்கூட, அதில் பாதி ஆதாயம் கருதியும், அனைத்து வளரும் நாடுகளிலும் கரன்சி மதிப்பில் காணப்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவும் விற்கப்பட்டன.

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

தற்போதைய நிலையில், பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் 2019-ம் ஆண்டில் முதலீடு செய்வதற்கு ஏற்றச் சந்தையாக மிக அதிகமானவர் களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளதாக ஆகிவிட்ட சூழ்நிலையிலும்கூட, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஈட்டும் திறன் மேம்பட்டிருப்பதால், அந்நிய முதலீட்டு நிறுவனங் கள் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரிக்கும்.

இந்தியா ஏற்கெனவே உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாகவும், வேகமான பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடாகவும் திகழ்கிறது. ஆண்டுக்கு 7.5% என்ற நமது பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் நாம் அளவில் ஐந்து  ட்ரில்லியனைத் தாண்டிவிடுவோம். இதன் மூலம் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான நமது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த 70 ஆண்டுகளில் நாம் உருவாக்கிய ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட (ஜி.டி.பி) அதிகமாக இருக்கும்.

அதேபோல, அடுத்த 10 ஆண்டுகளுக்கான கார்ப்பரேட் நிறுவனங்களின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், கடந்த 70 ஆண்டுகளில் அவை அடைந்ததைவிட அதிகமாக இருக்கும். இந்த நீண்ட கால வளர்ச்சியின் மிகப்பெரிய பயனாளி யாக இருக்கப்போவது, உள்நாட்டு நுகர்வோர் துறைதான். எனவேதான், உள்நாட்டு நுகர்வுத் துறையைக் குறிவைத்து பல்வேறு நிறுவனங்கள் வலுவான தொழில்களைக்  கட்டமைத்துள்ளன.

கட்டுமானப் பொருள்கள், நுகர்வோர் சாதனங் கள், சரக்குப் போக்குவரத்து, அழகுசாதனப் பொருள்கள், சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு, ஓட்டல் துறை, ஆரோக்கியப் பராமரிப்பு துறை போன்றவை இந்தியாவின் வேகமான வளர்ச்சியால் அதிகம்  பயனடையும் துறைகளாக உள்ளன.

இந்தத் தொழில்களைக் கொண்ட பலதரப்பட்ட பங்குகள் அடங்கிய போர்ட்ஃபோலியோ, வரவிருக்கும் ஆண்டுகளில் சராசரிக்கும் அதிகமான வருவாயைத் தரும்.

தேர்தல்கள் மற்றும் சர்வதேசப் பங்குச் சந்தையின் நிச்சயமற்ற நிலைகளால் இந்தியச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் அதேசமயத்தில், பலதரப்பட்ட பங்குகளிலும், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் தொடர்ந்து முதலீட்டைக் கொண்டிருக்கும் பங்கு முதலீட்டாளர்கள் அதன் பலன்களைப் பெறுவார்கள்.

எனவே, 2019 - 2021 வரையிலான அடுத்த மூன்றாண்டுகளுக்கு அஸெட் அலோகேஷனை அட்டவணையில் தந்திருக்கிறேன். அதன்படி உங்கள் முதலீட்டை அமைத்துக்கொள்ள முடியுமா என்று பாருங்கள்!

தமிழில்: பா.முகிலன்

ரியல் எஸ்டேட் எப்படி இருக்கும்?

ற்ற சொத்து வகைகளைப் போல் அல்லாமல், குறிப்பிட்ட காலத்தில் காணப்பட்ட துல்லியமான விலை விவரத்தை மதிப்பிடுவதற்கான நம்பகமான தகவல் நம்மிடம் இல்லை. மேலும், இடம், சுற்றியுள்ள பகுதிகள், அளவு போன்றவற்றைப் பொறுத்து ரியல் எஸ்டேட்டில் தனிநபரின் சொத்துகளின் விலை மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. விலையை மதிப்பிடுவதற்குக் கைவசம் இருக்கும் ஒரே நம்பகமான தகவல் என்ஹெச்பி (NHB) இண்டெக்ஸ்தான். இதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரங்களின் வீட்டு விலை மதிப்பிடப்படுகிறது. இந்த நகரங்களில் பெரும்பான்மை யானவற்றின் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முதல் 15% வரை கீழிறிங்கி உள்ளது. விலைச் சரிவைக் காட்டிலும் பரிவர்த்தனை எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 

டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

ரியல் எஸ்டேட் போன்ற எளிதில் பணமாக்கவியலாத சொத்து வகைகள்,   நிறுவனப் பங்குகள் போன்று எளிதில் பணமாக்கும் சொத்துவகைப் போன்றல்லாமல் நீண்ட கால சுழற்சி கொண்டவை. 5 ஆண்டுக் காலத்துக்கு விலையில் எந்த மாற்றமும் இல்லாத சொத்துக்கு அதன் தேய்மான மதிப்பு 50 சதவிகிதமாக இருப்பதால், அதன் ஆண்டு பணவீக்கம் 10 சதவிகிதமாக இருப்பது நல்லதாக இருக்கும்.
ரியல் எஸ்டேட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பெரும்பான்மை யான விலை சரிவானது, காலம் மற்றும் விலை வீழ்ச்சி மூலமாகவே ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் கூட ரியல் எஸ்டேட் விலைகள் 1996 முதல் 2002 வரை உயரவில்லை. ஆனால், அதற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் அவை 5 முதல் 7  மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஏராளமான சப்ளை, எளிமைப்படுத்தப்பட்ட நிதிப் புழக்கம், ரெரா போன்ற ஒழுங்குமுறைச் சட்டத்தின் தலையீடு போன்றவை காரணமாக தற்போதைய கரெக்‌ஷன் நீண்ட காலத்துக்குத் தொடரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism