Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!

செளரப் முகர்ஜி
நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ்
(Marcellus Investment Managers)

புத்திசாலித்தனம் என்பது வெறுமனே காரணகாரியங்களைப் பகுத்தறியும் திறன் மட்டுமல்ல. நாம் இருக்கிற சூழ்நிலையில் எவையெல்லாம் அத்தியாவசிமான காரணகாரியங்களோ அவற்றை சமயோசிதமாக நினைவுகூர்ந்து அவற்றில் முக்கியக் கவனம் செலுத்துவதுமேயாகும்!

– டேனியல் கன்ஹிமேன் எழுதிய ‘திங்கிங் ஃபாஸ்ட் அண்டு ஸ்லோ’ புத்தகத்திலிருந்து.

  கணிக்கும் திறனுக்கு உதவும் நினைவுத்திறன்

ஹென்றி மொலாய்சன் என்பவருக்கு அவருடைய 16 வயதில் வலிப்பு நோய் ஏற்பட்டது. அதன்பின்னர் அவருக்கு அடிக்கடி வலிப்பு வந்தது. அதற்குக் காரணமாக அவருடைய மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்துகொண்டார். அதற்குப்பின் வலிப்பு வரவில்லை. ஆனால், ஒரு பக்கவிளைவு உண்டானது. அவருக்கு முழுமையாக நினைவுத்திறன் போய்விட்டது. அதாவது, அந்த அறுவை சிகிச்சை முடிந்தபின்னால் நடக்கும் எதையும் அவரால் நினைவில்கொள்ள முடியாது போனது.

இந்த நிலை ஆராய்ச்சியாளர்களுக்குப் பல விஷயங்களை அறிவுறுத்துவதாக இருந்தது. அவருக்கு புதிய எந்த விஷயத்தையும் நினைவில் கொள்ள முடியாததால் எதிர்காலம் என்பதைப் பற்றி அவரால் கற்பனை செய்யவே முடியவில்லை. ‘‘அவரிடம் நாளைக்கு நாம் கடற்கரைக்குச் சென்றால் எப்படியிருக்கும்?’’ என்று கேட்டால், ‘‘நான் நீலநிறத்தைப் பார்ப்பேன்’’ என்பதைத்தான் பதிலாகச் சொல்வார். (தி ப்ரைன்: ஸ்டோரி ஆஃப் யூ எனும் புத்தகத்திலிருந்து).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹென்றியின் பிரச்னையில் எதைச் சொல்கிறது என்றால், மூளை என்பது வெறுமனே விஷயங் களை பதிவு செய்துவைத்துக்கொள்வதற்காக மட்டுமல்ல, எதிர்காலம் குறித்துக் கணிப்பதற் காகவும் என்பதையே. கோவாவிற்கு ஜூலை மாதம் போகலாமா என்று நினைத்தால், உடனே நான் ஏற்கெனவே கோவாவிற்குச் சென்றது, கோவா குறித்துக் கேட்டது, படித்தது, டி.வி-யில் பார்த்தது மற்றும் ஜூலை மாத மழை போன்ற பலவிஷயங்களும் சேர்ந்து ஜூலையில் கோவா எப்படியிருக்கும் என்பதைக் கற்பனைக்குக் கொண்டுவருவதுதான் மூளையின் வேலை.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!

   நினைவுத்திறனே நாம் உணருவதற்கு உதவுகிறது

ரயிலிலோ அல்லது விமானத்திலோ பயணம் செய்யும்போது நம்முடன் பயணிக்கும் ஒரு நபரை, இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே – என்கூடப் படித்தவர் போல் இருக்கிறாரே என்று நினைக்கிறோம் இல்லையா? இத்தகைய பார்த்து உணர்தல் என்பதற்கு நினைவு சக்தி அவசியம் தேவைப்படுகிறது. ஒரு நாளில் பலமுறை நாம்  பார்த்து உணரும் வேலையைச் செய்கிறோம்.

நிக் சேட்டர் என்பவர் எழுதிய ‘மைண்ட் இஸ் ப்ளாட்’ எனும் புத்தகத்தில் பின்வரும் விஷயங் களைக் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய மூளை ஒரு நேரத்தில் ஒரு வார்த்தை, முகம், ஒரேமாதிரி இருக்கும் விஷயங்கள் (pattern) போன்றவற்றைக் கிரகிக்கவல்லது. இவை அனைத்தையும் ஒரே சமயத்தில் செய்யும்போது தான் கணிப்பு என்பது நடக்கிறது. கையில் உள்ள விஷயங்களை வைத்துக்கொண்டு நாம் ஏற்கெனவே கொண்டிருக்கும் நினைவுகளை எடுத்துவந்து ஒப்பிட்டுப் பார்த்து சொல்ல முயலும்போது மூளைக்கு எந்தெந்த விஷயங்களை ஞாபகத்தில் இருந்துகொண்டுவர வேண்டும் என்பது கொஞ்சம் கடினமானதாகவே இருக்கிறது. அதிலும் அதிவேகமாக அந்த வேலையைச் செய்யவேண்டும்.

ஸ்டாக்கில் இருக்கும் அனைத்து நினைவு களையுமே அலசி ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும். இதனாலேயே ஏற்கெனவே நாம் அதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது செய்த நடைமுறைகளை எடுத்துவந்து பொருத்திப் பார்க்க மூளை முயலுகிறது. இதனால் பெரும்பாலான விஷயங்களை நாம் தற்சமயம் கணிக்க முயலும்போது, ஏற்கெனவே எப்படிக் கணித்திருக்கிறோமோ, அதை அஸ்திவாரமாகக் கொண்டே தற்போதைய கணிப்பு இருக்கிறது.

   இதிலிருந்து என்ன தெரிகிறது?

உலகத்தை நாம் ஒருபோதும் புதிதாகப் பார்க்க முயல்வதேயில்லை. நாம் இப்போது பார்த்துச் செய்யும் கணிப்புகள் எல்லாம் ஏற்கெனவே செய்த கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது. நம்முடைய நினைவுத்திறன் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதால், அதனைச் சுலபத்தில் திசைதிருப்பி விடலாம்.

இரண்டு கார்கள் மோதிக்கொள்ளும் வீடியோவைக் காண்பித்து இந்த கார்கள் இடித்துக்கொள்ளும்போது என்ன வேகத்தில் சென்றிருக்கும் என்று கேட்டால் கிடைக்கும் விடையும், இந்த கார்கள் டமால் என்று மோதி நடந்த பயங்கர விபத்தின்போது என்ன வேகத்தில் சென்றிருக்கும் என்ற கேள்விக்கும் இரண்டு விதமான விடைகள் கிடைக்கும் என்பதை அமெரிக்க பேராசிரியர் ஒருவர் ஆய்வின் மூலம் கண்டறிந்து வெளிப்படுத்தினார். இதில் இரண்டாவது கேள்விக்கு, அதிக வேகம் என்றே அனைவரும் சொல்வோம். ஏனென்றால், மூளை நாம் பார்த்த கேள்விப்பட்ட கோரவிபத்துக்களை அடிப்படையாகக்கொண்டே உத்தேசிக்க எத்தனிப்பதால் இந்தவித பதிலை நாம் சொல்ல முற்படுகிறோம்.

அடுத்தவர்கள்தான் நம்முடைய மூளையில் சாயம் பூசமுடியும் என்று நினைக்காதீர்கள். நம் மூளைக்கு நாமே சாயத்தை பூசிக்கொள்வதில் வல்லவர்கள். நாம் ஒருசமயம் சந்தித்த ஒரு நபர் (அவருக்கென்ன, சந்தோஷமாக இருக்கிறார் என்று நாம் நினைத்துக்கொண்டவர்) பிற்காலத்தில் அவர் ஏதோ ஒரு பிரச்னையில் இருக்கிறார் என்று நமக்குத் தெரியவரும்போது, அன்றைக்கே நினைத்தேன். சந்தோஷாமாத்தான் இருக்கிற மாதிரி தெரிந்தது. ஆனாலும், அவர் முழிச்ச முழி சரியில்லை என்று நினைப்போம் இல்லையா? அதுதான் நமக்கு நாமே சாயம் பூசிக்கொள்வது! 

   ஞாபக சக்தியும் புத்திசாலித்தனத்தின் அங்கமே

டேனியல் கன்ஹிமென் புத்திசாலித்தனம் என்பது ஆழமான சிறப்பு படிநிலைகளைக் கொண்ட நினைவுத்திறனே என்கிறார். இதைப் புரிந்துகொள்ள பின்வரும் உதாரணம் உதவும். பின்வரும் மூன்று வாக்கியங்களைப் படித்தபின்னர் மூன்றாவது வாக்கியம் சரியா, தவறா என்று சொல்லுங்கள்.

‘‘முதலைகள் பாலூட்டிகள். பாலூட்டிகள் குட்டிபோடும். எனவே, முதலைகள் குட்டி போடும்.”

மூன்றாவது வாக்கியம் தவறு. ஏனென்றால் முதல் வாக்கியமே தவறு என்பதால். உங்களை மூன்றாவது வாக்கியத்தில் கவனம் செலுத்த சொல்வதன் மூலம் உங்கள் கவனத்தை முதல் வாக்கியத்திலிருந்து வெற்றிகரமாகத் திரும்பி விடுகிறது.

வெகுசிலரே முதல் வாக்கியமே தவறு என்பதை சட்டென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுமே விலங்கியல் புலிகளாகவோ அல்லது பள்ளியில் சொல்லிக்கொடுத்த அனைத்தையும் அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு முதலைகள் பாலூட்டிகள் இல்லை; அவை ஊர்வன வகையைச் சேர்ந்தவை என்பதைக்கூட பட்டென்று சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இதுபோல் நினைவில் இருந்து சட்டென ஞாபகப்படுத்திச் சொல்ல முடிவது அவசியமாக இருத்ததாலேயே ஞாபகசக்தியும் ஒரு புத்திசாலித்தனமே என்கிறார் கன்ஹிமென்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி!

  முதலீட்டில் இதன் தாக்கங்கள்

ஞாபக சக்தி தன்னுடைய உணர்வு, கணிப்பு, புத்திசாலித்தனம் என்ற எல்லா அவதாரத்தின் வழியாகவுமே முதலீடு செய்வதற்கு மிகவும் உதவுகிறது. ஞாபக சக்தியின் நெகிழ்வுத்திறனின் காரணமாகவே நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. நான்குவிதமாக இந்த விஷயத்தை நாம் எச்சரிக்கையுடன் கையாள முயலலாம்.

1. நிறுவனங்களுடன் நடக்கும் மீட்டிங்குகளில் எதைப் பேசினார்கள், எதைக் கேட்டோம் என்பதையெல்லாம் தாண்டி எந்தவிதமான உணர்வில் நாம் இருந்தோம் என்பதையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இது பல ஆண்டுகளுக்குப்பிறகு நாம் இந்த விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, நம்முடைய முடிவை சரிபார்த்துக்கொள்ள உதவும். ‘‘எனக்கு அப்பவே தெரியும் இது சூப்பராக வருமென்று, இது சரிப்படாதுன்னு உள்ளுணர்வு சொல்லுச்சு’’ என பிற்காலத்தில் நாம் பூசும் சாயங்கள் வெளுக்க இது வெகுவாக உதவும்.

2.  சி.இ.ஓ-கள், இண்டஸ்ட்ரி குருக்கள் போன்ற வர்கள் சொல்லிப் பங்குகளை வாங்குவதும் விற்பதும் கூடாது. ஏனென்றால், இவர்கள் நம்  மூளைக்குச் சாயம் பூசிவிட வாய்ப்புள்ளது. அதனாலேயே இதுபோன்றவர்களின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்வது அறவே கூடாது.

3. ஒரு நல்ல குழுவாக இருந்து சிந்தித்து கலந்துபேசி முதலீடு செய்யவேண்டும். அந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அனுபவம் கொண்டிருக்கக் கூடாது. ஐ.ஐ.எம்-ல் படித்த ஐந்துபேர், மும்பையில் பிறந்து வளர்ந்து ஆடிட்டர்களாகப் பட்டம் பெற்ற பத்துபேர் போன்றவர்கள் இணைந்து முதலீடு செய்வதற்கான திட்டங்களைத் தீட்டினால் அவர்களுடைய அனுபவம் ஒரேமாதிரியானதாக இருந்துவிட வாய்ப்புள்ளது. மாறாக, பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பல்வேறுவிதமான படிப்பு களையும், அனுபவத்தையும் கொண்டவர்கள் இணைந்து ஒரு குழுவாகச் செயலாற்றினால் அது சிறப்பாக இருக்கும்.

4. ஞாபக சக்தியின் துணைகொண்டு முதலீடு எனும் கைவினைகளைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் நபராக நாம் படித்த ஆண்டு அறிக்கைகள், பங்கேற்ற கூட்டங்கள் போன்ற வற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டும் அவ்வப்போதைய சூழ்நிலைகளில் உள்ளுணர்வு எப்படி இருந்தது என்பதை நினைவில் கொண்டுமே நாம் செயலாற்றவேண்டும்.

ஒரு போர்ட்ஃபோலியோவின் வெற்றி என்பது சுமார் 80% அளவு இதனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

(முதலீடு தொடரும்)