Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

- டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், இந்தியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 10535 புள்ளிகளுக்குக் கீழே சென்றதால், சந்தையில் சற்று அச்சம் நிலவியதைப் பார்த்தோம். அந்த அச்சம் திடீரென அதிகரித்தபோது, சந்தை அதற்கு எதிர்த்திசையில் திரும்பியது. இதற்குமுன், தேர்தல் முடிவுகள் குறித்த அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், சந்தை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தமுறை, டவ் ஜோன்ஸ் குறியீட்டின் சரிவினால்  அந்த நிலை ஏற்பட்டது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் மீண்டும் கரடிச் சந்தை மனநிலைக்குத் திரும்பியதாக காணப்பட்டனர்.

சந்தை தொடர்ந்து மேல்நோக்கிய நிலையைத் தக்கவைத்துக்கொண்ட நிலையில், கடந்த ஐந்து வாரங்களில்  நிஃப்டி சில நூறு புள்ளிகள் வரம்புக்கு உள்ளேயே வர்த்தகம் நடந்தது. இது, அமெரிக்கச் சந்தைகளைக் காட்டிலும், நமது சந்தையின் செயல்பாட்டைச் சிறப்பாக ஆக்கியதுடன்,   குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு சிறப்பையும் உணர்த்தியது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிசம்பருக்கான மாதாந்திர கேண்டில் சார்ட்டில், ஓர் அழகான நீண்ட கீழிறங்கிய நிழலை உருவாக்கியிருப்பதால், அது நல்லது நடக்கும் என்று உறுதியளிப்பது போன்றே காணப்படுகிறது. இதை 11000 புள்ளிகளில் 62 சதவிகிதத்தையும் தாண்டி, ஒரு புல்லிஷ் பேட்டர்ன் உருவாகி, அது தொடரலாம் என்று கருதலாம். காலாண்டு சார்ட்கூட டோஜி பேட்டர்னைக் காட்டுவதால், வரவிருக்கும் மாதம் அல்லது அநேகமாக காலாண்டுக்காக ஏதோ பெரிதாக ஒன்றை ஏற்படுத்தப்போகிறது என்பது தெளிவாகிறது.

இங்கே ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். ஜனவரியிலும் சந்தையில் ஏற்றமான போக்கு நீடித்து, அது தொடரும்பட்சத்தில், இந்த பேட்டர்ன்களின் அடித்தளத்தைத் தொடர ஒரு புல்லிஷ் அறிகுறி இருக்கும். அதேபோல,  சரிவான போக்கு தொடர்ந்தாலும், 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட கரெக்‌ஷன் நீடிக்கும் என்பதற்கான அறிகுறியாக இருக்கும் என்பதால், அதுவும் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக இருக்கும். நீண்டகாலப் போக்குக்கான குறுக்குச் சாலையில் நாம் இருக்கிறோம் என்பதால், எச்சரிக்கையுடன் தொடர்வது அவசியமானது. வரவிருக்கும் வாரத்தில் நிஃப்டி 10500 புள்ளிகளைத் தாண்டி, கீழே செல்லாத வரை, மேல்நோக்கிய நிலையைத் தக்கவைப்பதற்காக நாம் வர்த்தகத்தைத் தொடரலாம்.

ஜோதி லேபாரட்டரீஸ் (JYOTHYLAB)

தற்போதைய விலை: ரூ.209.70

வாங்கலாம்


வாராந்திர சார்ட்டில் ஓர் எளிமையான சப்போர்ட் ட்ரென்ட்லைன் மூலம் நீண்டகால அளவில் பார்க்கையில், ஒவ்வோர் இறக்கமும் அடுத்ததாகப் பெரிய அளவிலான ஏற்றத்தைத் தருவது தெளிவாகத் தெரிகிறது. 2014-ம் ஆண்டில் இந்த நிறுவனப் பங்கு விலை மேலேறத் தொடங்கியதிலிருந்து இந்த மாதம் வரை இதே போன்ற போக்கு தொடர்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

2018, டிசம்பரில் இந்த ட்ரென்ட்லைனிலேயே பங்கு விலை இறக்கத்தைச் சந்தித்து மீண்டும் மேலேறியுள்ளது. தற்போது இந்த மீட்சியானது மிக நீண்ட அளவிற்கு மேலேறும் வாய்ப்பிருப்பதால், பலரும் வாங்குவதற்கு ஆர்வப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முந்தைய உச்சத்தைத் தாண்டவோ அல்லது அருகே செல்லவோ வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.194 வைத்து முதலீடு செய்யலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.230.

கிரைண்ட்வெல் நார்ட்டன் (GRINDWELL)

தற்போதைய விலை: ரூ.556.90

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை நீண்ட சரிவைக் கண்ட காலகட்டத்திலும்கூட பெரிய இழப்பைச் சந்திக்காத நல்ல தரமான நிறுவனப் பங்கு இது.  இப்போது மீண்டும் மேலேறி வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்ட்டில் பார்க்கும்போது, கடந்த ஆண்டில் நீண்ட காலமாக பெரிய மீட்சியில்லாமல், கிடைமட்டமான (sideways) போக்கிலேயே பயணித்துள்ளது.  தற்போது வாங்குபவர்கள் மீண்டும் அதிகரித்திருப்பதை வலுவான வாராந்திர கேண்டிலே நமக்குக் காட்டுகிறது. இந்தப் புதிய ஏற்றம் வேகமெடுக்கத் தொடங்குவதாகத் தெரிகிறது. இந்த ஏற்றம்  ரூ.650 என்ற அளவையும் தாண்டக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.525 வைத்து வாங்கலாம்.

கென்னமெட்டல் இந்தியா (WIDIA)

தற்போதைய விலை: ரூ.1085.00

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பொறியியல் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் கென்னமெட்டல். தற்போது அதன் பங்கு விலை புதிய உச்சத்தை நோக்கிச் செல்கிறது. வால்யூம் அதிகரிப்பு மற்றும்  ஏற்றப்போக்கால் பங்கு விலையும் உயர்கிறது. இந்தப் போக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.  நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு இது. ஸ்டாப்லாஸ் ரூ.900 வைத்து வாங்கலாம். வரவுள்ள 3-6 மாதங்களில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism