மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

திட்டமிடத் தவறுவது தோல்வியடையத் திட்டமிடுவதற்குச் சமம். சரியான திட்டமிடுதலால் நீங்கள் எந்த ஒரு கடினமான இலக்கையும் அடைய முடியும். இது உங்கள் வேலை தொடர்பான இலக்குகளுக்கும் பொருந்தும். ஏனென்றால் நீங்கள் வேலை தேடும்போது நிறைய பிரச்னைகளையும் சவால்களையும் சந்திக்க நேரலாம். அவற்றை சமாளிக்கவும் வெற்றி பெறவும் உங்களை தயார்ப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு திட்டமிடுவது மிகவும் உதவும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

நீங்கள் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி வருட மாணவரா? நீங்கள் சந்திக்கும் தவிர்க்க முடியாத குழப்பம், மேலே படிப்பதா இல்லை வேலைக்குப் போவதா என்பதாகவே இருக்கும். மேல்படிப்புக்கு உங்கள் குடும்ப பொருளாதார சூழல் தடையாக இல்லாதபட்சத்தில் இந்த குழப்பம் இன்னும் அதிகமாகும். பொதுவாக கலை மற்றும் அறிவியல் துறைகளில் நல்ல வேலை கிடைக்க குறைந்தபட்சம் பட்டமேற்படிப்பு படித்திருப்பது அவசியம். மேற்படிப்புக்காக இரண்டு வருடம் செலவிடுவதை நேர விரயம் என்று பார்க்காமல் பிற்கால வளர்ச்சிக்கான முதலீடாக பாருங்கள். அது மட்டும் இல்லாமல் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில்கூட தற்போது ஆராய்ச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது. முன்னணி நிறுவனங்களான கூகுள், ஐ.பி.எம்., இன்ஃபோசிஸ் போன்றவை டாக்டர் பட்டம் பெற்றவர்களை தேர்ந்தெடுக்க விரும்புகின்றன. அதனால், ஆராய்ச்சித் துறையில் முனைவர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

அதே சமயம் மேலாண்மை துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இளநிலை பட்டப்படிப்பு முடித்து 2-3 வருடங்கள் வேலை பார்த்தபின் எம்.பி.ஏ. சேர்வது நல்லது. ஏனெனில், ஐ.ஐ.எம். போன்ற முதன்மைக் கல்வி நிறுவனங்கள் வேலை அனுபவம் உள்ள மாணவர்களுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை தருகின்றன.

ஸோ, உங்கள் குழப்பத்துக்கு விடை கிடைத்ததா? நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது உங்கள் வேலை தேடுதலுக்கு அவசியமான தகவல்களை சேகரிப்பது. உங்களில் எத்தனை பேர் செய்தித்தாள் மற்றும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் போன்ற பத்திரிகைகளை தவறாமல் படிக்கிறீர்கள்?

##~##
ஏனெனில், எந்த வேலைகளுக்கு காலியிடங்கள் இருக்கிறது? அந்த வேலைகளுக்கான அடிப்படை தகுதிகள் என்ன? ஜாப் மார்க்கெட்டில் எந்த வேலைகளில் அதிக தேவை உள்ளது? அரசுத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க நீங்கள் இந்த பத்திரிகைகளை தவறாமல் வாசிப்பது அவசியம்.

இது தவிர, வேலைவாய்ப்பு இணையதளங்களிலும் தகவல்களை பெறலாம். இந்த இணையதளங்களில் பதிவு செய்வதால் நிறைய குப்பை இ-மெயில்கள் வந்தால்கூட இது வேலைவாய்ப்பு தொடர்பான டிரெண்டை தெரிந்துகொள்ள உதவும். நீங்கள் குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த வேலைகளை தேடுபவராக அந்த துறை சார்ந்த இ-குரூப்களில் உறுப்பினராவது உங்களுக்குப் பயன் தரும்.

உதாரணத்திற்கு, யாகூ, ஜீ-மெயில் போன்ற இணையதளங்களில் ஐ.டி. மற்றும் ஹெச்.ஆர். ஜாப்ஸ் போன்ற இ-குரூப்கள் நிறைய உள்ளன. இதில் சேர்வதால் வேலை வாய்ப்பு செய்திகள் மட்டுமில்லாமல் அத்துறை சார்ந்த உள்ளூர் நபர்களின் தொடர்பும், புதிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் கிடைக்கும். அதேபோல வேலை வாய்ப்பு கண்காட்சிகளுக்குச் செல்வதும் நல்லது.

வெறும் வேலை பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்வது அவசியம். ஹெச்.ஆர். மேனேஜராக வரவிரும்புகிறவர்களில் சிலரை அண்மையில் நான் இன்டெர்வியூ செய்தபோது அவர்களுக்கு நம் குடியரசுத் தலைவரின் பெயர்கூட தெரியவில்லை. காரணம், செய்தித்தாள்களை படிக்காததே.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

திட்டமிடுதலில் அடுத்த நிலை உங்கள் திறன்களை வளர்த்து கொள்வது. அடிப்படை தகுதிகளோடு நின்று விடாமல் கூடுதல் திறன்களையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கணினி அறிவு, மொழி அறிவு இவை இரண்டும் மிக முக்கியமான வேலைத்திறன்கள். கணினியில் எம்.எஸ். ஆபீஸ் போன்ற அடிப்படை அறிவு மட்டும் போதாது; உங்கள் துறை சார்ந்த பேக்கேஜ்களை படிப்பது மிக அவசியம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மொழி அறிவை பொறுத்தவரை ஆங்கில அறிவு ஒரு அடிப்படை திறன் மட்டுமே. எனவே, மூன்றாவதாக மற்றொரு உலக மொழியை கற்பது கூடுதல் வாய்ப்பை தரும். சீனம் போன்ற மொழிகளுக்கு தற்போது பிஸினஸ் உலகில் மவுசு கூடிவருவது புதிய செய்தி. இந்தி கற்றால் வடமாநிலங்களில் எளிதில் வேலை கிடைக்கும்.  

மேலாண்மை துறைச் சார்ந்த பகுதிநேர பட்டயப் படிப்புகள் போட்டிச் சூழலில் உங்களை தனித்து காட்டும். இவை தவிர,

1. உங்கள் துறை சார்ந்த பேரவைகளில் உறுப்பினர் (Professional bodies) ஆவது.

2. கல்லூரி விடுமுறை நாட்களை உங்கள் துறை சார்ந்த அல்லது மேலாண்மை சார்ந்த Internship Program-ல் செலவிடுவது.

3. உங்கள் கடைசி வருட புராஜெக்டை ஒப்புக்காக இல்லாமல் முழு மனதுடன் சிறப்பாகச் செய்வது. (ஏனெனில், பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் உங்கள் புராஜெக்ட்க்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.)

4. உங்கள் தலைமைப் பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் கல்லூரி மாணவ நிகழ்ச்சிகளில் தலைமைப் பொறுப்பேற்பது போன்ற விஷயங்களும் முக்கியம்.

ஓய்வு நேரத்தில் பயனுள்ள புத்தகங்கள் வாசிப்பது, இசை, விளையாட்டு போன்றவற்றில் செலவிடுவதன் மூலம் நேர்முகத் தேர்வில் இவற்றை உங்கள் தனித் திறன்களாக காண்பிக்க உதவும்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ரு கம்பெனியின் நிர்வாகத்தைச் சட்ட விதிமுறைகளுக்குள் நடத்த திறமையான கம்பெனி செக்ரட்டரி தேவை. அதிகரித்து வரும் நிறுவனங்களுக்குத் தேவையான அளவுக்கு நிறைய செக்ரட்டரிகள் கிடைப்பதில்லை. இதற்கு எங்கு படிக்க வேண்டும்? வேலைவாய்ப்பு எப்படி? என விளக்கமாகச் சொல்கிறார் 'லா லேப்ஸ் அண்ட் லேர்ன் லேப்ஸ் கன்சல்டன்சி’ நிறுவனத்தைத் தொடங்கிய ஏ.என்.எஸ்.விஜய்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

''நான் சி.எஸ். படிக்க வேண்டும் என நினைத்தபோது இதற்கென பயிற்சி வகுப்புகள் இல்லாமல் சிரமப்பட்டேன். அதனால் நானும் எனது தோழி திவ்யாவும் 2008-ல் சி.எஸ். படிப்புக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கினோம். இந்த படிப்பில் சேர பிளஸ் டூ பாஸ் செய்திருக்க வேண்டும். வணிகவியல் அல்லது அறிவியல் குரூப்பை பிளஸ் டூ-வில் பாடப் பிரிவாக எடுத்துப் படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். சி.எஸ். பவுன்டேஷன் புரோகிராம் - நான்கு பாடங்கள், சி.எஸ். எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் - ஆறு பாடங்கள், சி.எஸ். புரொஃபஷனல் புரோகிராம் - எட்டு பாடங்கள் என மொத்தம் 18 பேப்பர்கள் படிக்க வேண்டும். இந்த படிப்பை முடிக்க மொத்தம் 27 மாதம் ஆகும்.  

பி.காம். முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் லெவலான எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் படிக்கலாம். மற்ற இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் நிலைக்குப் போகலாம். முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் எனில் அக்கவுன்ட்ஸ் மற்றும் வரி (டேக்ஸ்) பேப்பர்கள் படிக்கத் தேவையில்லை. பி.எல். முடித்தவர்கள் பொது சட்டப் படிப்புகள் படிக்கத் தேவையில்லை.

இந்த மூன்று லெவல்களையும் முடித்த பின்பு 15 நாட்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் அல்லது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனி பதிவாளராக பயிற்சி எடுக்க வேண்டும். இவை அனைத்தும் முடிந்து கம்பெனி செக்ரட்டரிஷிப்பாக பதிவு செய்துகொண்ட பிறகே கம்பெனிகளில் வேலை பார்க்க ஆரம்பிக்கலாம்.

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஷிப் ஆஃப் இந்தியாவின் (ஐ.சி.எஸ்.ஐ.) அலுவலகங்கள் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் இருக்கிறது. இதன் கிளை அலுவலகங்கள் மற்ற ஊர்களிலும் இருக்கிறது. இந்த படிப்பை  சொந்தமாகவும் படிக்கலாம் அல்லது ஐ.சி.எஸ்.ஐ. அங்கீகரித்துள்ள மையங்கள் மற்றும் தனியார் மையங்களிலும் படிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடைபெறும்.

நிறுவனத்தின் மூலதனம் ஐந்து கோடிக்கு மேல் எனில் அந்த நிறுவனம் முழுநேர கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும். பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் கம்ப்லையன்ஸ் ஆபீஸர் என்ற பெயரில் சி.எஸ். படித்த ஒருவரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். படிப்பு முடிந்தபிறகு கம்பெனி செக்ரட்டரியாக பணிபுரிபவர்களுக்கு மாதம் அடிப்படை ஊதியமே 25,000 ரூபாய்!

-பானுமதி அருணாசலம்
படம் : சொ.பாலசுப்ரமணியன்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!