Published:Updated:

புதிய விதிமுறைகளால் அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனை தொடர்ந்து சரிவு!

புதிய விதிமுறைகளால் அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனை தொடர்ந்து சரிவு!
புதிய விதிமுறைகளால் அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனை தொடர்ந்து சரிவு!

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசாங்கம் கொண்டுவந்த திருத்தம், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே, கடந்த மூன்று நாள்களாக அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் விற்பனை பாதிப்படைந்துள்ளது. 

புதிய விதிமுறைகளால் அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனை தொடர்ந்து சரிவு!

புதிய விதிமுறைகளுக்கேற்ப இந்த நிறுவனங்கள், பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை இவர்களது தளத்தில் விற்பனைசெய்யக் கூடாது. எனவே, அத்தகைய பொருள்களை விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள். குறிப்பாக, அமேசான் நிறுவனம், க்ளவ்ட்டெய்ல், அப்பரியோ ஆகிய நிறுவனங்களில் 49%-51% என்ற விகிதங்களில் பங்குதாரராக இருந்தது. தற்போது, புதிய விதிமுறைகளின்படி அவற்றின் வழியாக விற்பனைசெய்வதை நிறுத்திவிட்டது.

அதேபோல அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் ஆன்லைன் தளங்களின் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவந்த பொருள்களும் தற்போது விற்பனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. மேலும், 25 சதவிகிதத்திற்கும் மேல் பிரத்யேகமாக விற்கப்பட்ட பொருள்களும், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் விற்பனையில் 25% அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

செல்போன் சேவைத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியபோது, மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த நிறுவனமும் அதிரடி இலவச அறிவிப்புகளுடன் நுழைந்து, சில முன்னணி தொலைபேசி நிறுவனங்களைக் காலிசெய்தது. தற்போது, முகேஷ் அம்பானியின் ஏஜியோ நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சூழலில், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களில் அரசியல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.