Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 52

பிட்காயின் பித்தலாட்டம் - 52
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - 52

பிட்காயின் பித்தலாட்டம் - 52

யுஎஸ்ஏ/இந்தியா

சீ
யட்டிலில் இருந்த டவுன்ஹவுஸின்முன் வருண் சென்ற டாக்ஸி நின்றது. அவன் 50 டாலர் நோட்டை எடுத்து டிரைவரிடம்  தந்தான். அது கட்டணத்தைவிட 20 டாலர் அதிகம், ஆனாலும் அவன் அதைக் கவலைப்படவில்லை. அன்றைக்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். வீடு சுத்தமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக வேறு யாரும் அங்கு வசிக்கவில்லை என்பதால், ஒரு மாதிரியான வாசனை வந்தது.  

பிட்காயின் பித்தலாட்டம் - 52

வராந்தாவில் பேக்கைப் போட்டுவிட்டு, கீழ்தளத்துக்கும், மேல்தளத்துக்கும்  சென்றான். வீட்டின் பின்பக்கம் செல்வதற்கென்று இருந்த கதவைத் திறந்து கொண்டு அங்கே சென்றான். சத்தம் போடாமல் அமைதியாகத் தோட்டத்தில் நடந்தான். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவன் ஊஞ்சலை நெருங்கி, கைகளை விரித்துப் பாயத் தயாரானான். கடைசி சில அடிகள் கடினமாக இருந்தன. மூச்சை லேசாக அடக்கிக் கொண்டு ஊஞ்சலில் இருந்தவரின் மீது பாய்ந்து புல்வெளியில் விழுந்தான். இருவரும் புல்வெளியில் சிறிது நேரம் உருண்டனர்.

அவனுடைய கைகள் அவளுடைய முகத்தை மறைத்திருந்த முடிகளை எல்லாம் நீக்கியது. அவன் புன்னகைக்க, அவள் சிரித்தாள். இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டனர்.

‘`ஏன் இவ்வளவு நாட்கள் ஆயிற்று?” அவள் கேட்டாள்.

‘`நான் எந்த வேலைக்காகப் போனேனே, அது முடிவதற்குத் தாமதம் ஆகிவிட்டது’’ என்றபடி வருண் தலையாட்டிவிட்டு, க்ளோரியாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

தொழில்நுட்பத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர அவன் ஸ்டான்ஃபோர்டுக்கு வந்த நாள்களை நினைத்துப் பார்த்தான். க்ளோரியா அப்போது இளங்கலை படித்துக்கொண்டிருந்தாள். நண்பன் ஒருவனின் விருந்தில் அவன் அவளைச் சந்தித்தான். அவளுடைய நேர்மைக்கும், அழகுக்கும் அவன் அடிமையானதுபோல, அவனது தீவிரமான நடத்தைக்கும், எதிலும் வெற்றி பெறவேண்டுமென்கிற உறுதிக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் அவள் அடிமையானாள். அவர்களுடைய வாழ்க்கை ஒருவரையொருவர் சுற்றிவந்தது. ஒவ்வொரு நாளும் சந்தித்தார்கள். டின்னருக்கும், பப்புக்கும், படங்களுக்கும்…. சென்றார்கள்.
 
தனது தந்தையான ஜில்லியன் டானினால் பாலியல் தொல்லைக்கு ஆளான நிகழ்வை அவள் வருணிடம் சொல்லி அழுதாள். ஜில்லியன் டான் ஒரு மிருகம் என்றாள். நிக்கி பயணத்தில் இருந்த போது இது நடந்ததாகக் கூறினாள். அமெரிக்க ஜனாதிபதியின் புதிய சீஃப் ஆஃப் ஸ்டாஃப் மைக் ஹென்ரிக்ஸ் என அறிவிக்கப்பட்டதைக் கேட்டு கோபமடைந்த ஜில்லியன், நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆத்திரத்தில், க்ளோரியாவை அன்றிரவு முழுவதும் அவளைப் பலாத்காரம் செய்திருக்கிறார்.  

பிட்காயின் பித்தலாட்டம் - 52

அதைக் கேட்ட வருண் ஆத்திரப்பட்டான். அவன் போலீசில் புகார் கொடுக்க நினைத்தான். ஆனால், க்ளோரியா அதற்குச் சம்மதிக்கவில்லை. அதிகார வட்டாரத்தில் ஜில்லியன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அவள் கூறினாள். அவர் செனட்டர் என்பதுடன், ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார். எனவே, அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லி வருணைத் தடுத்தாள்.

அதற்குப்பிறகு அவன் ஒரு திட்டம் போட்டான். தான் தத்து எடுத்து வளர்க்கும் மகளிடமே முரட்டுத்தனமாக நடந்துகொண்டவரின் பின்னணி இன்னும் மோசமாக இருக்கும் என நினைத்தான். அவை என்னவாக இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்ள விரும்பினான்.

அவன் மனதில் பழிவாங்கும் எண்ணம் இருந்ததால், ஜில்லியனைப் பின்தொடரத் தொடங்கினான். அதற்காக அவன் ரியோ வரைக்கும்கூட சென்றான். அங்கேதான் அவனுக்குத் தான்யா அறிமுகமானாள். அவளிடம் பேசியபோதுதான் தான்யா, மாள்விகாவின் மகள்  எனத் தெரிந்துகொண்டதுடன் அப்பாவினுடைய பழைய அலுவலகப் பணியாளர் என்பதும் தெரியவந்தது.

ரியோவிலிருந்து திரும்பியவுன் அவன் ஹூக்கரைத் தொடர்புகொண்டான் அப்போது அவளும் ஜில்லியனைத் தொடர்ந்து கொண்டிருந் தாள். அவனுடைய திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பலன் தர ஆரம்பித்தது. ஜில்லியனைத் தன்பக்கம் இழுப்பதில் ஹூக்கர் வெற்றி பெற்றாள். கலிஃபோர்னியாவிலிருக்கும் ஹோட்டலில் அவர்கள் சில முறை சந்தித்துக் கொண்டனர். அப்போதுதான் ஜில்லியன் அவளை ஸ்டான்ஃபோர்டு விடுதிக்கு அழைத்தார்.

அவளை யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் அழைத்துச் செல்வது அவ்வளவு சிரமமாக இல்லை. அந்த விடுதியில் தங்கியிருந்த தான்யா ஷேகலுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஒரு சந்திப்பின்போது, ஹூக்கர் ஒரு `பக்’கை அங்கே வைக்க, அதன் மூலம் அங்கு நடைபெறும் உரையாடலை வருண் கேட்டு வந்தான்.  

பிட்காயின் பித்தலாட்டம் - 52

அறையில் நடப்பதை `பக்’-கின் மூலம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தவுடன் ஜில்லியன்தான் பிட்காயினின் பிதாமகன் என்றும், மெய்நிகர் உலகில் அவர் பெயர் சதோஷி நிகாமோட்டோ என்பதையும் தெரிந்துகொண்டான். அத்துடன் அவருக்கும், தான்யவுக்குமான உறவு மோசமாகி வருவதும் தெரியவந்தது. அவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டனர். பிட்காயின் திட்டத்தில் அவருக்கும் கிடைக்கும் ஆதாயத்தை அவரது குழுவினருடன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதற்காகத் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்தனர். அவர்களுக்கிடையே நடந்த உரையாடலில் க்ளோரியா அவருடைய வளர்ப்பு மகள் என்று தான்யாவிடம் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சொல்லிச் சொல்லி க்ளோரியாவுக்கும், நிக்கிக்கும் எதிராக அவரது மனதில் நஞ்சை வார்த்து வந்திருக்கிறாள். ஜனாதிபதியின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆக முடியாத ஆத்திரத்தை க்ளோரியா மீது பாலியல் தொல்லை தந்தால் நிக்கியும் அவரை விட்டுவிட்டு சென்றுவிட வேண்டுமென்றுகூட தான்யா நினைத்தாள். இந்தப் பொறுப்பிலிருந்து அவர் விடுபட்டால் தன்னிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்பது அவளது எண்ணமாக இருந்தது. காரணம், எதுவாக இருந்தாலும், க்ளோரியாவின் நிலைக்கு தான்யாவும் ஒருவகையில் காரணம் என அவன் நினைத்தான்.

நிக்கி சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள். வருண் அனைத்து ஆதாராங்களையும் சேகரித்தபின், ஆத்திரத்தில் இருந்த நிக்கி ஜில்லியனை எதிர்கொண்டாலும் அவர் நடைமுறைவாதியாக இருந்தார். அவருடைய அனைத்து பிட்காயின் சொத்துக்களையும் தனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன் ஜனாதிபதியிடம் பிட்காயின் சம்பந்தமாக அவர் செய்த வேலைகளையெல்லாம் சொல்லிவிடுவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் மிரட்டினார். ஜில்லியன் மற்றும் அவருடைய வளர்ப்பு மகள் பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. ஏனெனில் அது க்ளோரியாவின் வாழ்க்கையைப் பாதிக்கும் என நினைத்தார்.

ஜில்லியனை ஒருவழியாக முடித்துவிட வேண்டுமென்று மைக் தீர்மானித்தார். அதற்கு உதவி கேட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளை அணுகினார். உமர் ஃபாரூக் அதற்குமுன் வந்தாலும் அதற்கான விலை அதிகமாக இருந்தது. போலி கார்டுகளை வைத்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது குறித்த திட்டத்தைக் கூறியதுடன், அதற்கான ஆதரவையும், யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்வதையும் இதற்கு ஈடாகக் கேட்டான்.

அப்போதுதான் வருண் தானாக உதவி செய்ய முன் வந்தான். அவனுடைய அப்பா அவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவருடைய பி.பி.ஓ நிறுவனம் என்.ஒய்.ஐ.பி-ன் கார்டுகளை ப்ராசஸ் செய்துவருவது அவனுக்குத் தெரியும். ஆதித்யா பிசாசின் மறுபிறப்பு என்றும், அவரைப் பழி வாங்குவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்றும் அவனுடைய அம்மா அவனை உசுபேத்தி விட்டார். வருணும், உமருடன் இணைந்து        என்.ஒய்.ஐ.பி வாடிக்கையாளர்களின் விபரங்களைத் திருடுவதும், சிஸ்டத்தை ஹேக் செய்து அவர்களுடைய கிரெடிட் வரம்பை உயர்த்துவதும் அடங்கியிருந்தது. பிற்பாடு, ஜெர்மனியைச் சேர்ந்த ரெட் ஆர்மி குழுவின் உதவியுடன் ஜில்லியனைத் தீர்த்துக் கட்டினார்.

வருண் இந்தியாவுக்கு வந்தான். போதைப் பொருள்களை வாங்கும் வழிதெரிந்திருந்த ஹோட்டல் வெயிட்டர் லியோன் டிசூசாவுடன் நட்பு பாராட்டினான். லியோனுக்கும், தான்யாவுக்கு ஒரு சந்திப்பை ஏற்படுத்தியதுடன், அவனும் தான்யாவைச் சந்தித்தபின் தலைமறை வானான். செய்யாத குற்றத்துக்காக, தானாகவே சிறைக்குச் சென்றான். நைஜீரியர்கள் சம்பந்தப் பட்ட கலவரம் இதற்கு உதவியது. அவன் சிறைக்குச் செல்லவேண்டுமென்பதற்காக தானாகவே போதைப்பொருள் சம்பந்தமாக நடந்த சண்டையில் ஈடுபட்டான். பொருத்தமான நேரத்தில் ஆதித்யாவை அழைத்தால் அவரும் தன்னை விடுவித்து அவருடன்  சேர்த்துக் கொள்வார் என்பதைத் தெரிந்து வைத்திருந்தான்.

பிட்காயின் பித்தலாட்டம் - 52மாட் மெட்ஸ்கரின் இந்திய வருகையின் போது மாள்விகா வீட்டில் நடந்த அதிகாரப்பூர்வமான விருந்துக்கு கேட்டரராக வந்தது லியோன். கோவா மாநிலத்து கைவினைப் பொருள்களை விற்பதற்காக வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பகுதியைக் கொடுக்குமாறு அவன் கேட்க, தான்யாவும் அதற்கு சம்மதித்தாள். விருந் தாளிகள் (அவர்கள் எல்லாம் NYIB – யைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள்) வாங்கிய பொருள்களுக்கு கார்டு மூலம் பணம் செலுத்தும்போது கார்டின் மேக்னடிக் துண்டில் இருக்கும் தகவல்களை அவன் கொண்டு சென்றிருந்த கார்டு ஸ்கிம்மர் மூலம் சேகரித்துக் கொண்டான். ஸ்கிம் செய்த கார்டுகளில் ஐந்து கார்டுகளை வருண் தெரிவு செய்து அவை குறித்த விபரங்களை உமருக்கு ஏ.டி.எம் கொள்ளைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைத்தான்.

தான்யா பிறந்தநாளின் போது, அவள் நன்கு குடித்து விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு மிகப் பெரிய டெடி பியரைப் பரிசாகக் கொடுக்கும் தருணத் தில் கார்டு ஸ்கிம்மரில் அவளுடைய கைரேகை படும்படி பார்த்துக்கொண்ட அவன் அந்த கார்டு ஸ்கிம்மரை அவளுடைய அலமாரியிலேயே வைத்துவிட சி.பி.ஐ சோதனை யிட்டபோது அது அவர்களது கையில் சிக்கிக் கொண்டது. ஏ.டி.எம் ஸ்கேமில் அவளை மாட்ட வைப்பதற்கு ஸ்கிம்மரில் இருந்த தான்யாவின் கைரேகையே போதுமான ஆதாரமாக இருந்தது.

இதற்கிடையில், பிட்காயின் திட்டத்தில் ஜில்லியனின் கூட்டாளிகளாக இருந்தவர்களைச் சமாளிப்பதற்கு நிக்கி தயாரானார். கூட்டாளிகளில் ஒருவனான ஜப்பானியன் இறந்துவிட்டான் என்பது அவருக்குத் தெரியும். இந்தியாவில் வருணின் திட்டம் வெற்றியடைந்தால் தான்யா செயலிழந்துவிடுவாள். விடுபட்டுப்போன ஆள் ஜோஷ். எனவே, அவர் உமரிடம் ஏ.டி.எம் கொள்ளைக்கு அவனை பயன்படுத்திக் கொள்ளு மாறு கூறினார். ஜில்லியனின் பிட்காயின்கள் குறித்து ஏதாவது பிரச்னை ஏற்படும்போது அவனை வழிக்குக் கொண்டுவருவதற்கு அவன் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உபயோகமாக இருக்கும் என நினைத்தார்.

கொள்ளை நடந்த நாளன்று, ஏ.டி.எம் கொள்ளையில் ஜோஷ் ஈடுபட்டிருக்கிறான் என்பதை நிரூபிக்க உதவும் வகையில் ஃபோட்டோ க்ராஃபிக் ஆதாரத்தைச் சேகரிப்பதற்காக நிக்கி கஃபேக்குச் சென்றார். கொள்ளையடிப்பும் திட்ட மிட்டபடி நடந்து முடிந்தது. திட்டமிட்டபடி ஏடிஎம்-களி லிருந்து பணம் எடுக்கப்பட்டது.

இந்தியாவில், முதலில் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி, மாள்விகா வீட்டில் நடந்த விருந்தின் போது மாள்விகாவின் வாசபி பாட்டி லுக்குப் பதிலாக ஹெம்லாக் விதை தடவிய வாசபி பாட்டிலை வைத்தான்.

விருந்தின்போது, மாள்விகா சில கொட்டைகளை எடுத்தபின் வேறு யாரும் அந்தத் தட்டிலிருந்து அதை சாப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக அதை அங்கிருந்து அப்புறப் படுத்தினான். அதேபோன்ற வாசபிக் கொட்டைகள் தான்யா வீட்டிலும் இருந்ததைப் பார்த்த காவல் துறையினர் அவன் நினைத்தது போலவே, தான்யா மீது குற்றச் சாட்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். கபீர் வாசபிக் கொட்டைகளுடன் எதிர்கொண்டபோது, தான்யா ஆச்சரியப்பட்டா லும்கூட அவளால் தனது குற்றமற்றதன்மையை நிரூபிக்க முடியவில்லை. 

(முற்றும்)

ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்