தங்கம் (மினி)

தங்கத்தைப் பற்றி சென்ற வாரம் நாம் சொன்னபோது, தங்கத்தின் ஏற்றம் தற்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்றும், டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, டிரெண்ட்லைனை உடைத்து இறங்கியுள்ளது என்றும், இனி இறங்குமுகமாக மாறியுள்ளதை யும் குறிப்பிட்டிருந்தோம். ஆம், தங்கம் தற்போது டவுன்டிரெண்டில்தான் உள்ளது.

ஆனால், 20.02.2019-லிருந்து அதாவது, 34000 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு தொடர்ந்து இறங்கிய தங்கம், 07.03.2019 அன்று குறைந்தபட்சப் புள்ளியாக 31800-ஐ தொட்டது. ஏறக்குறைய 2200 புள்ளிகள் இறங்கிய நிலையில், இனி ஒரு புல்பேக் ரேலிக்குத் தயாராவதுபோல் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது…

“தங்கம், மார்ச் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், ஏப்ரல் கான்ட்ராக்ட்டுக்கு மாறுகிறோம். தங்கம் தொடர்ந்து இறங்கிவரும் நிலையில், 32750 என்பது ஆதரவு ஆகும். ஒருவேளை, ஒரு புல்பேக் ரேலி வந்தால், 33240 என்ற எல்லையில் தடுக்கப்படலாம்.”

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 32750 என்ற புள்ளியை வலிமையாக உடைத்தது. அத்துடன் மட்டும் அல்லாமல் மிகவும் பலமாகவும் இறங்க ஆரம்பித்தது.

சென்ற வாரம் திங்கள், செவ்வாய், புதன் என்று தொடர்ந்து இறங்கியது. சென்ற வாரம் நாம் சரியான நேரத்தில்தான் வாசகர்களுக்கு எச்சரிக்கை தந்திருந்தோம். பிறகு கடந்த வாரம் வியாழனன்று 31800 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு ஒரு டோஜியை உருவாக்கியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் நல்ல இறக்கத்திற்குப்பிறகு டோஜியை உருவாக்கிய நிலையில், ஒரு புல்பேக் ரேலி வரலாம். தற்போது 31800 என்பது ஆதரவாகவும், மேலே 32310 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் நாம் சொன்னது...

“வெள்ளி வலுவாக இறங்கியுள்ள நிலையில், 39360 மிக முக்கிய ஆதரவு ஆகும். மேலே 40440 என்பது, ஒரு புல்பேக்ரேலி வந்தால் தடுக்கப்படும் இடம் ஆகும்.”

வெள்ளியும், தங்கத்தைத் தொடர்ந்து பலமான இறக்கத்தில்தான் உள்ளது. இத்தனை பெரிய இறக்கத்திற்குப் பிறகு, ஆறுதலான புல்பேக் ரேலி வரலாம். சென்ற வாரம் சொன்னது…

வெள்ளி நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 39360 என்ற எல்லையை மிக வலிமையாக உடைத்து இறங்கிய நிலையில், தினமும் புதிய பாட்டத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தது. கடந்த வாரத்தின் வியாழக்கிழமை வரை புதிய பாட்டத்தை உருவாக்கி வந்த வெள்ளி, வாரத்தின் கடைசி நாள் அன்று மேலே திரும்ப முயற்சி செய்கிறது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி தற்போது 37900 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 38520-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் நாம் சொன்னது…

“கச்சா எண்ணெய் தற்போது 4140 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படுகிறது. தாண்டினால், பெரிய ஏற்றம் வரலாம். கீழே 3980 உடனடி ஆதரவு ஆகும்.”

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த ஆதரவான 3980-ஐ உடைத்துள்ளது. அதன்பின் மிக வலுவாக இறங்கி 06.30.19 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 3893-ஐ தொட்டது. அதன்பின் அடுத்த நாள், சிறிய புல்பேக் ரேலி வந்தது. ஆனாலும், வாரத்தின் கடைசி நாள் அன்று மீண்டும் பலமாக இறங்க ஆரம்பித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

கச்சா எண்ணெய் முக்கிய ஆதரவை உடைத்துள்ள நிலையில் மேலே முந்தைய ஆதரவு எல்லையான 3980 தற்போது தடை நிலையாக மாறுகிறது. கீழே ஆதரவான 3850-ஐ உடைத்தால் பலமான இறக்கம் வரலாம்.

காப்பர் (மினி)

சென்ற வாரம் நாம் சொன்னது…

“காப்பர் தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், உடனடித் தடைநிலை 472 ஆகும். கீழே 461 முக்கிய ஆதரவு நிலை ஆகும்.”

காப்பருக்கு நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 461-ஐ உடைத்து 448 வரை இறங்கியுள்ளது. முக்கிய ஆதரவுக்கு அருகில் உள்ளது; உடைத்தால் இன்னும் ஒரு பலமான இறக்கம் வரலாம்.

இனி என்ன செய்யலாம்?

காப்பர் 446 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக்கொண்டுள்ளது மேலே 452 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகக் கொண்டுள்ளது.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in