காட்சிப் பிழை தெரியும். ‘இருக்கு, ஆனா இல்ல’ என்கிறமாதிரி பொய்த் தோற்றம் தரும் காட்சிப் பிழைகளை நம்பி, பல சமயங்களில் நாம் ஏமார்ந்திருப்போம். ஆனால், உறுதிப் பிழை (Confirmation bias) என்றால் என்ன?

உளவியலும், நிதி நிர்வாகமும் சேர்ந்த பிஹேவியரல் ஃபைனான்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டும் மனப் பிழைகள் வரிசையில் முதன்மை யானது உறுதிப் பிழை. வாரன் பஃபெட்டின் குரு என்று அறியப்படும் பெஞ்சமின் க்ரஹாம், “முதலீட்டாளரின் முதல் மற்றும் முக்கிய எதிரி அவரேதான்” என்று சொல்லியிருக்கிறார். அப்படி நம் மனதைக் கோணலாகச் செயல்பட வைத்து, நம்மையே வீழ்த்தும் பிழைதான் இந்த உறுதிப் பிழை.

உதாரணமாக, நாம் ஒரு கம்பெனியின் பங்கு சிறந்ததோ என்று யோசிக்கும்போதே, அதுவே உண்மையில் சிறந்தது என்பதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்தி, மற்ற பங்குகள் பக்கம் நம் கண்ணைத் திருப்பவிடாமல் செய்யும் வல்லமை இந்தப் பிழைக்கு உண்டு. இதனால் நல்ல வாய்ப்புகள் தட்டிப்போவது மட்டுமன்றி, சுமாரான பங்குகளே நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.

பொதுவாக, நம்மைப் பற்றி நமக்கு ஒரு உயர்ந்த அபிப்பிராயம் இருக்கும்; ‘எனக்கு முதலீட்டு முறைகள் எல்லாம் அத்துப்படி; எனக்குக் கிடைக்கும் தகவல்களும் ரொம்ப ஸ்பெஷல்’ என்று நாம் முழுமையாக நம்புகிறோம். ‘ஒருமுறை நான் முடிவு பண்ணீட்டேன்னா, அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’ என்பதெல்லாம் வெறும் பன்ச் டயலாக் அல்ல; முழுக்க முழுக்க உளவியல் உண்மை. இவை எல்லாம் உறுதிப் பிழையின் வெளிப்பாடுகள்.

முன்முடிவுகளால் விளையும் தவறுகள்

இன்றைய தேதியில் நமக்குக் கிடைக்கும் தகவல்களுக்கு ஓர் அளவேயில்லை. பேப்பர், புத்தகங்கள், டிவி போதாது என்று போன், வாட்ஸ் அப், ட்விட்டர், யூட்யூப் என்று தகவல்கள் பேரருவியாகக் கொட்டுகிறது. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து தெளியவேண்டிய மனது, அறிவைத் துணைகொள்ளாமல், தனக்குப் பிடித்த தகவல்களை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்து, தான் செய்வதெல்லாம் சரி என்ற முடிவுக்கு வருகிறது. உதாரணமாக, நாம் ஒரு பங்கினை வாங்கிய காரணத்திலேயே அந்தப் பங்கு தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தேடித் தேடிப் படிக்கிறோம். ஆனால், வேறு பல நிறுவனங்கள் தொடர்பான நல்ல செய்திகளைப் படிக்காமல் காற்றில் பறக்கவிடுகிறோம்.

உருவாகும் பிம்பம்

டாக்டர் ஒருவர், நோயாளிக்கு வந்திருப்பது இன்ன நோயாகத்தான் இருக்கும் என்று பார்த்த மாத்திரத்திலேயே முன்முடிவுக்கு வருவதும், நீதிபதி ஒருவர், வாத பிரதிவாதங்களைக் கேட்கும்முன்னரே குற்றவாளி பற்றி ஒரு பிம்பத்தை மனதில் உருவாக்கிக்கொள்வதும் தவறான முடிவுகளுக்கு அடிகோலும். அதேபோல், சரியான ஆய்வு மற்றும் தகவல்கள் இல்லாமல், தன்னிச்சையாக முதலீட்டை மேற்கொள்ளும் ஒருவர், மீண்டும் மீண்டும் அந்த முதலீடு பற்றிய நல்ல தகவல்களையே படித்து, தான் செய்தது சரி என்று தன்னையே ஏமாற்றிக்கொள்கிறார்.

சுயமதிப்பின் விலை

இப்படிச் செய்வதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதுதான் நம் சுயமதிப்பு. நாம் செய்த ஒரு முதலீடு தவறு என்று தெரியும்பட்சத்தில் நம் மீதான நமது சுயமதிப்பு குறைந்துபோகிறது. ஆகவே, நம் தவற்றை ஊர்ஜிதப்படுத்தும் எந்தவொரு தகவலையும் நம் மனம் விரும்புவதேயில்லை. அதனால்தான் ஒரு மோசமான பங்கின் விலை குறைந்து நஷ்டம் என்னும் எல்லைக்குள் நுழைந்தாலும், நாம் விற்று வெளியேற விரும்புவதில்லை. லாபம் தரும் சந்தோஷத்தைவிட நஷ்டம் தரும் வலி அதிகம் என்பதால், காலம் கடத்துகிறோம். மறுபடி பழைய விலைக்குக் கண்டிப்பாகத் திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் அதிக நஷ்டத்தைச் சந்திக்கிறோம்.

அறிவைத் துணைகொள்ளாத நடத்தை

ஒருவேளை, அதிர்ஷ்டவசமாக நம் முதலீடு நல்ல லாபத்தைக் கொடுத்தால் நம் மனம் கள் குடித்த குரங்காகிவிடுகிறது. பொருளாதார வெற்றிகள் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை அதிகரிக்கும் என்பது விஞ்ஞானம் நிரூபித்த உண்மை. இந்த ஹார்மோன் நமது தன்னம்பிக்கையை அதீதமாக உயர்த்துவதுடன், மேலும் மேலும் ரிஸ்க்குகளையும் எடுக்க வைக்கிறது. நமக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தை நம் திறமை என்று நம்ப ஆரம்பிக்கிறோம். நம்மைப் பற்றிய நம்பிக்கை கொடிகட்டிப் பறப்பதில் நமக்கு ஆலோசகர்களே தேவையில்லை; நம் மூளையே போதும் என்று தவறான முதலீடுகளில் நுழைகிறோம்; நமது முடிவுகளைத் தீர்மானிக்க அறிவைத் தூண்டாமல், அவசரப்படுத்தும் மனதிற்கு அடிமையாகிறோம். நாம் நம்பும் முதலீடுகள் பற்றி சரியான ஆய்வுகளைச் செய்யாமல், நம் திறமை பற்றி மனம் கூறும் வெற்று சவடால்களை மட்டுமே நம்பி இறங்குகிறோம்.

காலப்போக்கில், நம் போர்ட்ஃபோலியோ பரவல்தன்மையை (Diversification) இழக்கிறது. இதனால் வரக்கூடிய ரிஸ்க்குகளை நம் மனதால் சரியாக எடை போடமுடிவதில்லை. (மனதிற்குத் தான் கணக்குப் பாடம் வராதே!) முடிவில் நஷ்டமடைந்து பங்குச் சந்தை ஒரு ரிஸ்க் நிறைந்த படுகுழி; இதில் இறங்கியதே தவறு என்று விரக்தி அடைகிறோம். இங்கு ரிஸ்க் பங்குச் சந்தையில் இல்லை; அறிவைத் துணை கொள்ளாத நமது நடத்தையில்தான் உள்ளது.

தீர்வுகள்

இத்தனை விளைவுகளை ஏற்படுத்தும் இந்த உறுதிப் பிழையிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? முதலில் “பங்குச் சந்தை ஒரு கடல்; அதில் தேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவு; நம் உள்ளுணர் வெல்லாம் இங்கு எடுபடாது; அறிவு செய்யும் விரிவான ஆய்வு மட்டுமே உதவும்” என்ற ஞானம் தேவை. இரண்டாவதாக, நம் மனதுக்கு உவப்பில்லாத விஷயங்களுக்கும் சரிசமமான அளவு முக்கியத்துவம் தந்து கவனிப்பதன் மூலம் அறிவைத் தூண்டவேண்டியது அவசியம்.

மூன்றாவதாக, மனது இடைவிடாது எழுப்பும் கூக்குரல்களுக்கு செவி சாய்க்காமல், அறிவின் உதவியுடன் நன்கு ஆராய்ந்தபின்பே செயலில் இறங்கவேண்டும். புகழ்பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் பீட்டர் லின்ச் சொல்வதுபோல், நம் உணர்வுகளைப் புறக்கணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களைக் கடைப்பிடித்தால் உறுதிப்பிழை மட்டுமல்ல, வேறு பிழைகளையும் தவிர்க்க இயலும்.

(பணம் பெருகும்)

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்