Published:Updated:

விவசாயிகள் எதிர்ப்பால் ரீஃபைனரி திட்டத்தைக் கைவிட்ட மகாராஷ்டிர அரசு!

இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மகாராஷ்டிராவிலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அல்போன்சா மாந்தோப்புகள், முந்திரித் தோப்புகள் மற்றும் மீன் வள ஆதாரங்களுக்குப் பாதிப்பு வருமென்ற அச்சத்தின் காரணமாக விவசாய நிலத்தை ஒப்படைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் எதிர்ப்பால் ரீஃபைனரி திட்டத்தைக் கைவிட்ட மகாராஷ்டிர அரசு!
விவசாயிகள் எதிர்ப்பால் ரீஃபைனரி திட்டத்தைக் கைவிட்ட மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆயில் நிறுவனங்களும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரேபியாவின் அரம்கோ நிறுவனமும் இணைந்து 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை மகாராஷ்டிராவில் நிறுவுவதற்குத் திட்டமிட்டிருந்தன. ஆனால், இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மகாராஷ்டிராவிலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அல்போன்சா மாந்தோப்புகள், முந்திரித் தோப்புகள் மற்றும் மீன் வள ஆதாரங்களுக்குப் பாதிப்பு வருமென்ற அச்சத்தின் காரணமாக விவசாய நிலத்தை ஒப்படைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து, ரத்னகிரி மாவட்டம், நானார் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் நிறுத்தப்படுவதாக மகாராஷ்டிர முதல்வர் தெவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு வராத பகுதிக்கு இந்தத் திட்டம் மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். 

விவசாயிகள் எதிர்ப்பால் ரீஃபைனரி திட்டத்தைக் கைவிட்ட மகாராஷ்டிர அரசு!

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்காக நிலம் கையகப்படுத்துவதை சிவசேனா கட்சியும் கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க அரசோடு சிவசேனா கூட்டணி அமைப்பதையடுத்து, நிலம் கையகப்படுத்துவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாளொன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் என்றும், இதன்மூலம் 1,50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தி ரத்னகிரி ரீஃபைனரி & பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.