ஆண்டுக்கு ஆண்டு அல்ல, மாதத்துக்கு மாதம், வாரத்துக்கு வாரம் பலவிதமான மாற்றங்களைக் கண்டுவருகின்றன தொழில்நுட்பங்கள் (Technological disruption). இதனால் தொழில் நிறுவனங்களை நடத்திவரும் தலைவர்கள் தினந்தோறும் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சவால்களை எப்படிச் சந்திப்பது, இந்தச் சவால்களை வெற்றிகொள்ள நம்முடைய அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், இது தொடர்பாக உலக அளவில் பெரும் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பது குறித்து, கடந்த வாரம் சென்னையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துச் சொன்னார் இந்தியாவின் மிகப் பிரபலமான மேலாண்மைக் கல்வி நிறுவனமான இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) பேராசிரியர் துரைசாமி நந்தகிஷோர். இவர் நெஸ்லே நிறுவனத்தில் பல ஆண்டுக்காலம் பணியாற்றி அதன் செயல் நிர்வாக இயக்குநராக இருந்தவர். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதன் சுருக்கம் இதோ...

குறையும் ஆயுள்காலம்

‘‘1960 முதல் 2010 வரையிலான ஐம்பது ஆண்டு களில் அமெரிக்காவின் பார்ச்சூன் 500 கம்பெனி களின் சராசரி ஆயுள்காலத்தை அலசி ஆராய்ந்து பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். 1960-களில் ஒரு தொழில் நிறுவனத்தின் ஆயுள் காலம் 60 ஆண்டுகளாக இருந்தது. 1980-ல் இது 36 ஆண்டுகளாகக் குறைந்தது. 2000-ல் 25 ஆண்டுகளாகக் குறைந்து, 2010-ல் ஒரு தொழில் நிறுவனத்தின் சராசரி ஆயுள்காலம் வெறும் 17 ஆண்டுகளாக மட்டுமே இருக்கின்றன. 2020-ல் இது இன்னும் எவ்வளவு குறைந்திருக்குமோ!

சார்லஸ் டார்வின் சொன்னபடி, கால மாற்றத்துக்கேற்ப எது தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அதுவே தப்பிப் பிழைக்கும். விலங்குகளுக்கு மட்டுமல்ல, பிசினஸ் நிறுவனங் களுக்கும் இது நூறு சதவிகிதம் பொருந்தும்.

இன்றைக்கு நம் எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால், செல்போன் அறிமுகமான காலத்தில், அதனைத் தயாரித்து விற்பதில் மிகப் பிரபலமாக இருந்த நிறுவனம் மோட்டோரோலா. 1990-களின் பிற்பகுதியில் உலக செல்போன் சந்தையில் ஏறக்குறைய 50% மோட்டோரோலா நிறுவனத்திடம்தான் இருந்தது. ஆனால், 12 மாதங்களில் நடந்த பல தொழில்நுட்ப மாற்றங் களை மோடோரோலா நிறுவனம் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு, செல்போன் சந்தையில் தனக்கிருந்த பங்கினைப் பரிதாபமாக இழந்தது. இன்றுவரை அந்த நிறுவனத்தில் இழந்ததைப் பெறவே முடியவில்லை.

டிரைவர் இல்லாத கார் வந்தால்...?

இன்னும் சில ஆண்டுகளில் டிரைவர் இல்லாமல் கார்கள் ஓடுவதை நாமே பார்க்கத்தான் போகிறோம். அப்படியொரு நிலை வந்தால் எனக்கென்ன என எந்தவொரு பிசினஸ்மேனும் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியாது. காரணம், அப்படியொரு நிலை வந்தால், பல ஆயிரம் டிரைவர்கள் வேலை இழக்க வேண்டி யிருக்கும். டிரைவர்கள் வேலையில்லாமல் போவதினால், பலவிதமான பொருள்கள் விற்பனையாவது குறையும். சாலையோர உணவகங்களில் சாப்பிட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அவற்றை இழுத்துமூட வேண்டியிருக்கும். டிரைவர்கள் இல்லாமல் கார் ஓடுகிற மாதிரி சாலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பிசினஸ் மாறும். லாஜிஸ்ட்டிக் நிறுவனங்களின் செலவு குறையும்.

ஆளில்லாத கார் என்கிற ஒரே ஒரு தொழில்நுட்ப மாற்றம்தான். ஆனால், எவ்வளவு பெரிய மாற்றங்களை பல்வேறு தொழில் களில் கொண்டு வருகிறது என்று பாருங்கள். எனவே, எந்தவிதமான தொழில்நுட்ப மாற்றத்தினாலும் என் பிசினஸுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எந்த மாற்றமும் ஏற்படாது என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது.

நம் அணுகுமுறை எப்படி?

பலவிதமான தொழில்நுட்ப மாற்றங்களால் நம் பிசினஸ் பாதிக்கப்படும்போது நம்முடைய அணுகுமுறை பொதுவாக, இரண்டு விதங்களில் இருக்கின்றன. ஒன்று, அந்த மாற்றங்களைக் கண்டு மிரண்டுபோய் நிற்பது. இரண்டாவது, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அடுத்த நிலைக்குச் செல்ல முயற்சி செய்வது. ஜப்பானியர்கள் இதனை ‘வெய் ஜி’ (Wei ji) என்கிறார்கள். எந்த மாற்றத்தையும் அது வரும் வேளையிலேயே அதைப் பற்றித் தெரிந்து கொண்டால், அதனைக் கண்டு மிரண்டுபோக வேண்டிய தேவை இருக்காது. அந்த நிலையில், எந்த மாற்றத்தையும் கடந்து செல்லும் தெளிவு நம்மிடம் இருக்கும்.

மாற்றங்களே வருக வருக...

மாற்றங்களைக் கண்டு நாம் ஓடி ஒளிந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. எந்தப் பயமும் இல்லாமல் அதை நேருக்கு நேர் சந்திக்க நாம் தயாராக வேண்டும். இந்த மாற்றத்தினை நாம் கடந்துவருவதற்கான பல்வேறு வழிகளில் எதனைத் தேர்வு செய்வது என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். எல்லா விதமான மாற்றங்கள் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டி யதில்லை. நம்முடைய தொழிலைப் பாதிக்கும் மாற்றங்களைப் பற்றி மட்டுமே கவனமாக இருந்தால் போதும். என்ன மாற்றங்கள் நம் தொழிலைப் பாதிக்குமோ, அந்த மாற்றங்களைக் கடந்து செல்லத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை நாம் பெறவேண்டும்.

நிறுவனத்தைத் தயார்படுத்துங்கள்

தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஒரு பிசினஸ்மேன் தன்னளவில் மட்டும் தயாரானால் போதாது; தன்னுடைய நிறுவனத்தையும், நிறுவன ஊழியர்களையும் தயார்படுத்த வேண்டும். இதற்கு நிறுவனத்தை நடத்தும் பிசினஸ்மேன்களே வழிகாட்டும் தலைவர்களாக மாறவேண்டும்.

மாறிவரும் தொழில்நுட்பம் குறித்து பயமுறுத்தாமல், அதை வெற்றிகரமாகக் கடந்து வருவதற்கான வழிமுறைகளை ஊழியர்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். இதுதொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களிடம் விளக்க வேண்டும். மாற்றங்களை நம்பிக்கையுடன் கடந்து வருவதற்கான கலாசாரத்தை ஊழியர்களிடம் உருவாக்க வேண்டும். இத்தனை நடவடிக்கைகளையும் எடுத்தால், நமது பிசினஸ் காலம் கடந்து நிற்கும்.

கதைசொல்லியாக மாறுங்கள்

தொழில்நுட்ப மாற்றங்களினால் ஏற்படும் சவால்களை ஊழியர்களிடம் எடுத்துச்சொல்லி, புரியவைக்க வேண்டுமெனில், நிறுவனத்தின் தலைவர்கள் மிகச் சிறந்த கதைசொல்லியாக மாறவேண்டும். இந்தக் கதை சொல்லல் கை (Hand), அறிவு (Head), மனம் (Heart) என மூன்று நிலை களிலும் இருக்க வேண்டும். மாற்றங்களைக் கடந்துவரத் தேவையான வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் தருவது முதல் நிலை. அந்த மாற்றங்கள் ஏன் வந்தன, அவற்றை எப்படிக் கடந்துவர வேண்டும் என்கிற அறிவுத் தெளிவினை ஏற்படுத்துவது இரண்டாம் நிலை. இந்த மாற்றங் களை நம்மால் நிச்சயம் கடந்துவர முடியும் என்கிற நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவது மூன்றாம் நிலை. இந்த மூன்று நிலைகளிலும் நிறுவனத்தின் தலைவரானவர் குறையில்லாமல் செயல்பட வேண்டும்.

உலகின் எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும், ஹீரோ, வில்லன், பிரச்னை, தீர்வு என நான்கு அம்சங்கள் இருக்கும். இந்த நான்கு அம்சங்களை நம்முடைய தொழிலில் சரியாக உருவகப்படுத்தி, எதிரிகள் யார், பிரச்னை என்ன, அதற்கான தீர்வு என்ன என்பதை ஊழியர்களிடம் விளக்கிச் சொன்னால், எந்தத் தொழில்நுட்ப மாற்றத்தையும் நம்மால் நிச்சயம் கடந்துவர முடியும்’’ என்று முடித்தார் துரைசாமி நந்தகிஷோர்.

சி.ஐ.ஐ-யின் ஓர் அங்கமான ‘75-ம் ஆண்டில் இந்தியாவுக்கான பணிக்குழு’ (Task Force on India@75) இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தி ருந்தது. இந்தக் குழுவின் தலைவரும், கோவை குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவருமான சங்கர் வானவராயர் சிறப்பாக நடத்தித் தந்தார். சென்னையின் வளர்ந்துவரும் பல பிசினஸ்மேன்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்!

- ஏ.ஆர்.குமார்