Published:Updated:

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!
முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

பிரீமியம் ஸ்டோரி
முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.  குறிப்பிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இங்கு பார்ப்போம். 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 10.11% அதிகரித்து ரூ.15,160.90 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.13,768.60 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 37.74% அதிகரித்து ரூ.2,483.50 கோடியாக உள்ளது. எபிட்டா (EBITDA) 34.3% அதிகரித்து ரூ.4,014.30 கோடியாக உள்ளது.நான்காம் காலாண்டில் இந்தப் பங்கின் இ.பி.எஸ் 4 ரூபாயிலிருந்து 4.13 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் நிகர விற்பனை முடிந்த மார்ச் காலாண்டில் 11.54% குறைந்து, ரூ.20.92 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.23.65 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் 26.29% குறைந்து ரூ.1.87 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கின் இ.பி.எஸ் 1.68 ரூபாயிலிருந்து 1.24 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

டாடா மெட்டாலிக்ஸ்

டாடா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 8.74% அதிகரித்து ரூ.593.80 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.546.06 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 17.75% அதிகரித்து ரூ.64.35 கோடியாக உள்ளது. எபிட்டா 13.95% குறைந்து, ரூ.83.70 கோடியாக உள்ளது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 21.61 ரூபாயிலிருந்து 25.48 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 10.85% அதிகரித்து, ரூ.245.66 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.221.60 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 9.4% அதிகரித்து ரூ.60.62 கோடியாக உள்ளது. எபிட்டா 9.47% அதிகரித்து, ரூ.79.55 கோடியாக உள்ளது. பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் பங்கின் இ.பி.எஸ் 3.76 ரூபாயி லிருந்து 4.11 ரூபாயாக அதிகரித்து
உள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

டி.சி.பி பேங்க்

டி.சி.பி பேங்க்கின் நிகர வட்டி வருமானம், நான்காவது காலாண்டில் 14.1% அதிகரித்து ரூ.300.87 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர வட்டி வருமானம் ரூ.263.7 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 50.02% அதிகரித்து ரூ.96.33 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 30.87% அதிகரித்து ரூ.185.28 கோடியாக உள்ளது. டி.சி.பி வங்கி பங்கின் இ.பி.எஸ் 2.08 ரூபாயிலிருந்து 3.11 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

மைண்ட்ட்ரீ

மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 25.64% அதிகரித்து, ரூ.1,839.40 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,464.00 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 8.89% அதிகரித்து ரூ.198.40 கோடியாக உள்ளது. எபிட்டா 4.99% அதிகரித்து ரூ.309.30 கோடியாக உள்ளது. மைண்ட்ட்ரீ பங்கின் இ.பி.எஸ் 11.12 ரூபாயிலிருந்து 12.08 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

டாடா ஸ்பாஞ்ச் அயன்

டாடா ஸ்பாஞ்ச் அயன் நிறுவனத்தின் நிகர விற்பனை, நான்காவது காலாண்டில் 4.34% அதிகரித்து ரூ.254.07 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.243.50 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 47.82% குறைந்து, ரூ.24.37 கோடியாக உள்ளது. எபிட்டா 46.44% குறைந்து ரூ.39.24 கோடியாக உள்ளது. டாடா ஸ்பாஞ்ச் அயன் பங்கின் இ.பி.எஸ் 30.33 ரூபாயிலிருந்து 15.82 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 9.8% அதிகரித்து, ரூ.10,362 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருமானம் 19.4% அதிகரித்து, ரூ.1.54 லட்சம் கோடியாக உள்ளது. நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் 51.6 சதவிகிமும், டிஜிட்டல் வர்த்தகம் 61.6 சதவிகிதமும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 

முக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்!

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட்

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 7.5% அதிகரித்து, ரூ.227.73 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.211.87 கோடியாக இருந்தது.இந்த  நிறுவனத்தின் மொத்த பிரீமியம்  வருவாய் ரூ.3,527.89 கோடியாக உள்ளது. மொத்த உள்நாட்டு பிரீமியம் வருமானம் 19.1% அதிகரித்து, ரூ.3,485 கோடியாக உள்ளது.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு