Published:Updated:

ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி ஜெயிப்பது எப்படி? - சென்னையில் பயிற்சி வகுப்பு

ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி ஜெயிப்பது எப்படி? - சென்னையில் பயிற்சி வகுப்பு
ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி ஜெயிப்பது எப்படி? - சென்னையில் பயிற்சி வகுப்பு

இன்றைய இளைஞர்கள் கனவுத் தொழிலாக இருக்கிறது ஸ்டார்ட் அப். படித்த இளைஞர்கள் முன்பெல்லாம் ஏதோ ஒரு பிசினஸைத் தொடங்கி, ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், இன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒரு ஸ்டார்ட் அப்-பைத் தொடங்கி ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பயிற்சி வகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள https://bit.ly/2TmJ8qT என்கிற லிங்கினை க்ளிக் செய்யுங்கள்.

இளைஞர்களின் மனம் கவர்ந்த விஷயமாக ஸ்டார்ட் அப்கள் மாறியதற்குக் காரணம், குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புதான். பத்து ஆண்டுகளுக்குமுன்பு சில கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு லட்சம் கோடி ரூபாய்க்குமேல். சில கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட ஓலா நிறுவனம், இன்றைக்குப் பல பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்டதாக உயர்ந்திருக்கிறது. குறுகிய காலத்தில் அதிகபட்ச லாபம் தரவல்ல ஸ்டார்ட் அப்கள் வித்தியாசமான பிசினஸ் சிந்தனை கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது. 

ஸ்டார்ட் அப் என்கிற வார்த்தை இன்றைக்குப் பலருக்கும் தெரிந்தாலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை எப்படித் தொடங்க வேண்டும், இதற்கான தொழில்களைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ஸ்டார்ட் அப்களுக்கான நிதி உதவியைப் பெறுவது எப்படி என்பது போன்ற பல விஷயங்களை எடுத்துச் சொல்வதற்காக நாணயம் விகடன் YNOS Venture Engine நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்டார்ட் அப் பேசிக்ஸ்’ என்கிற ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பை வருகிற 31.3.2019 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறது.

இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தவிருக்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யின் நிர்வாகவியல் துறைப் பேராசிரியரும், YNOS Venture Engine நிறுவனத்தின் ஸ்தாபகருமான டாக்டர் அ.தில்லை ராஜன். இவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துறையில்  இந்தியாவிலேயே குறிப்பிடத்தகுந்த சிந்தனையாளர். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருபவர். இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வென்ச்சர் ஃபண்டிங் முதலீடு குறித்து ஆண்டுதோறும் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருபவர். இவர் எழுதிய ‘‘FUEL FOR START-UPS - Perspectives on Indian Venture Capital Industry’’ புத்தகம் ஸ்டார்ட் நிறுவனங்களை நடத்த விரும்பும் இளைஞர்களுக்கான கையேடாக இருக்கிறது.

நாணயம் விகடனும் YNOS Venture Engine-ம் இணைந்து நடத்தும் இந்த ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பில், ஸ்டார்ட் அப்களைப் புதிதாகத் தொடங்க விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஏற்கெனவே பிசினஸ் ஈடுபட்டிருப்பவர்கள், எதிர்காலத்தில் பிசினஸ் தொடங்கி நடத்த நினைப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள https://bit.ly/2TmJ8qT என்கிற லிங்கினை க்ளிக் செய்யுங்கள். 

சென்னையில் கிடைக்கும் மிக அரிய இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

- ஆகாஷ்